செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளில் இனவிருத்தி மேலாண்மை

முன்னுரை

இனப்பெருக்கத்திற்கு ஆடுகளை தேர்வு செய்யும் முறை

DSC_3629
DSC_8198 rams

 

  • இரண்டு பல் வயதுடைய ஆடுகளை வாங்க வேண்டும்.
  • அகன்று விரிந்து இருக்கும் முதுகு மற்றும் அகண்ட பின்பகுதி கொண்ட ஆடுகள் சிறந்தவை. நன்கு திரண்ட வளர்ச்சி, மிருதுவான மடி, அதிகம் மேயும் தன்மை மற்றும் தாய்மை குணம் நிரம்பிய பெட்டை ஆடுகளாக இருக்க வேண்டும்.
  • குறைந்த பால் கொடுக்கும் தன்மை, சிறிய தாடை, உடைந்த பற்கள், பாதிப்புள்ள காம்புகள் மற்றும் கடினமான மடி உள்ள பெட்டை ஆடுகளை இனப்பெருக்கத்திற்கு தேர்வு செய்யக் கூடாது.
  • அகன்ற பின்புறம் சிறந்த இனப்பெருக்கத் திறனை காட்டும். மேலும் குட்டி ஈன்ற பின் நல்ல திரட்சியான மடி உருவாகும் தன்மைiயும் காட்டுகிறது.
  • தேர்வு செய்யப்படும் கிடாக்கள் நல்ல உடல் திறனையும், வளர்ச்சி அடைந்ததாகவும், உறுதியான கால்கள் மற்றும் குறைபாடுகள் இல்லாமலும் இருக்க வேண்டும்.
  • சிறந்த பொலித்தன்மை உடைய கிடாவாக இருக்க வேண்டும்.
  • இரண்டு விரைகளையும் உடைய கிடாவாக இருத்தல் வேண்டும்.
  • ஆடுகளை வாரசந்தைகளில் வாங்குவதை விட சிறந்த பண்ணைகளிலிருந்து அல்லது நல்ல முறையில் வளர்த்து வரும் விவசாயிகளிடமிருந்து வாங்குவது நல்லது.
  • இரண்டு அல்லது மூன்று குட்டிகளை போடும் அடுகளை வாங்க வேண்டும்.
  • மிருதுவான பளபளப்பான தோல் கொண்ட ஆடுகளை தேர்வு செய்ய வேண்டும். இது ஆட்டின் உடல் நலத்தைக் காட்டும்.
  • அகன்ற முதுகுப்புறமும் விலா எலும்பும் அதிக தீவனத்தை எடுக்கும் தன்மையை காட்டுகிறது.
  • ஈன்ற குட்டிகளை காக்கும் தாய்மை குணம் நிரம்பியதாகவும், நன்கு பால் கறக்கும் திறனுடையதாகவும் இருக்க வேண்டும்.
  • நன்கு பருத்து வளர்ந்து உடலோடு சேர்ந்த மடி கொண்ட பெட்டை ஆடுகளை தேர்வு செய்ய வேண்டும். மடியை கவனமாக பார்வையிட்டு வாங்க வேண்டும்.
  • ½ வயது முதல் 2 வயது கொண்ட பொலிகிடாக்களை இனப்பெருக்கத்திற்கு வாங்க வேண்டும்.
  • மிகவும் இளம் பெட்டை ஆடுகளை இனவிருத்தி செய்தால் குட்டி ஈனும் போது பிரச்சினைகள் ஏற்படும்.
  • பொதுவாக பெட்டையாடுகளின் எடை, சராசரி ஆட்டின் எடையில் 70 விழுக்காடு அடைந்தவுடன் இனவிருத்தி செய்ய வேண்டும்.
  • பெரிய ஆட்டின் சராசரி எடையை விட இனவிருத்தி ஆடுகளின் எடை சிறிது குறைவாக இருக்க வேண்டும்.
  • கிடா ஆடுகளின் பொலித்திறன் சிறப்பாக இருக்க வேண்டும். தீவனக் குறைபாடு, அதிக சுற்றுப்புற வெப்பம் அல்லது நோய் போன்றவை கிடாவின் பொலித் திறனை பாதிக்கும்.

இனப்பெருக்க பண்புகள்

2003_0101Image0019

 

  • 6-8 மாத வயதில் பருவத்திற்கு வரும். 15 மாத வயதிற்கு பிறகு இனச்சேர்க்கைக்கு சேர்க்க வேண்டும்.
  • சினைக்காலம் சுமார் 147 நாட்கள் (144 முதல் 152 வரை)
  • 20 பெட்டை ஆடுகளுக்கு ஒரு கிடா போதுமானது.
  • செம்மறி பெட்டை ஆடுகள் சுமார் 17 நாட்கள் இடைவெளியில் சினைத் தருணத்திற்கு வரும்.
  • பெட்டை வெள்ளாடுகள் சுமார் 19-21 நாட்கள் இடைவெளியில் சினைத் தருணத்திற்கு வரும்.
  • சினைத் தருணம் செம்மறியாடுகளில் 24-36 மணி நேரமும், வெள்ளாடுகளில் 34-38 மணி நேரமும் நீடிக்கும்.

சினைத் தருண அறிகுறிகள்

Estrual_mucus

 

  • இனப்பெருக்க உறுப்பு சிவந்திருக்கும். அதிலிருந்து கண்ணாடி போன்ற வழவழப்பான திரவம் வடியும்.
  • வாலை பக்கவாட்டில் ஆட்டிக் கொண்டே இருக்கும்.
  • மற்ற ஆடுகளின் மிது தாவும்.
  • கிடாவை நெருங்கி செல்லும். அமைதியின்றி காணப்படும்.
  • ஒருவிதமான குரலை எழுப்பும்.
  • மற்ற ஆடுகளை தன் மீது தாண்ட அனுமதிக்கும்.

பெட்டை ஆடுகளின் வாசனை, அது எழுப்பும் ஒருவித ஒலி போன்றவை கிடா ஆடுகளை கவர்வதால் கிடா ஆடுகள் கீழே கண்ட அறிகுறிகளை வெளிப்படுத்தும்.

  • வெளிப்புற இன உறுப்பை முகர்ந்து பார்க்கும்.
  • கழுத்தை நீட்டி மேல்தாடையை கோணலாக காட்டும்.
  • அமைதியின்றி இருக்கும். பெட்டையாடுகளை கடிக்க முயலும்.
  • செம்மறி கிடாக்கள் அமைதியின்றி முன்னங்கால்களை வித்தியாசமாக தரையில் சுரண்டும்.
  • பெட்டையாடுகளின் மேல் தாவி இனப்பெருக்கம் செய்யும்.

சினைத் தருணத்திலிருக்கும் பெட்டையாடுகளை கண்டறிதல்

1.கிடாக்களை உபயோகப்படுத்தும் முறை

  • கிடா ஆடுகளை மந்தையில் இருக்கச் செய்து சினைத் தருணத்திலிருக்கும் பெட்டையாடுகளை கண்டறியலாம்.
  • இந்த முறையில் இனப்பெருக்கம் நடைபெற வாய்ப்புள்ளது

2.பொலி தடுப்பு உடை அணிந்த பொலிகிடாவை உபயோகித்தல்

Male with aprons
Male with aprons

 

  • உடையை வயிற்றுப் பகுதியில் கட்டுவதால் அது கிடாவின் இன உறுப்பை மூடி வெளியே வராமல் தடுக்கும் 60ஓ45 செ.மீ. அளவு பருத்தி துணியால் இந்த பொலி தடுப்பு உடை தயார் செய்யலாம்.
  • இதனை தினமும் உபயோகித்தபின் கிழிந்திருக்கிறதா மற்றும் ஒட்டை விழுந்திருக்கிறதா என தினமும் பரிசோதித்தபின் சுத்தம் செய்ய வேண்டும்.
  • இந்த உடையை சரியாக கட்டாவிட்டால் இனவிருத்தி ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
  • சில சமயங்கள் இது கிடாவின் இன உறுப்பில் காயங்களை உண்டாக்கும்.
  • இந்த பொலித் தடுப்பு கிடாவை தினமும் காலை மற்றும் மாலையில் 15-20 நிமிடங்கள் உபயோகித்து சினைத் தருணத்தில் இருக்கும் பெட்டை ஆடுகளை கண்டறியாலம்.
  • கண்டறிந்த சினைத் தருண ஆடுகளை தேர்ந்தெடுக்கப்பட்ட பொலிகிடாவுடன் இனப்பெருக்கத்திற்கு சேர்க்க வேண்டும்.

3.ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட கிடா

  • அறுவைச் சிகிச்சை மூலம் இந்த கிடாக்காளை தயார் செய்யலாம்.
  • இத்தகைய கிடாக்கள் மந்தையில் மற்ற ஆடுகளுடன் மேயும் போது சினைத் தருணத்தில் இருக்கும் பெட்டை ஆடுகளை கண்டறியும்.

மேலே செல்க


இனவிருத்திக்கு பெட்டை ஆடுகளை தயார் செய்தல்

செலுமைப்படுத்துதல்

Flushing
Flushing


  • தேவைக்கு அதிகமாக சிறிது அடர்தீவனம் இனவிருத்தி காலத்திற்கு 3 முதல் 4 வாரம் முன்பிருந்து கொடுக்க வேண்டும்.  இது கருவகத்திலிருந்து வெளிவரும் சினைமுட்டைகளை அதிகப்படுத்தி இரட்டை மற்றும் மூன்று குட்டிகளை உருவாக்க உதவி செய்யும்.
  • இந்தியாவில் இரட்டை மற்றும் மூன்று குட்டிகள் பொதுவாக ஆடுகள் ஈனுவதில்லை.  குறிப்பாக மேய்ச்சலில் இருக்கும் செம்மறிஆடுகளில் இது விரும்ப்படுவதுமில்லை.  செலுமைபடுத்துவது தீவனம் குறைந்த காலகட்டங்களில் மட்டுமே உதவி செய்யும்.
  • செலுமைப்படுத்துதல், அதிகஆடுகளை சினைக்கு கொண்டுவருவது, அதிக சினை முட்டைகளை கருவகத்திலிருந்து வெளிப்படுத்துவது, இளங்கருக்களை அழிவிலிருந்து காப்பது போன்றவற்றிற்கு உதவுவதன் மூலம் அதிக குட்டிகளை ஈனுகிறது.
  • செலுமைப்படுத்த தினமும், 250 கிராம் அல்லது 500 கிராம் புரதப் பசுந்தீவனம் கொடுக்க வேண்டும்.

உரோமம் பகுதியாக அகற்றுதல் - கிடா ஆடு

  • கம்பள இன பெட்டை ஆடுகளில் கிடா ஆட்டின் ஆண் உறுப்பை சுற்றி உரோமம் அதிகமிருப்பதால் சில சமயங்களில் இனவிருத்தி  சரியாக நடக்காமல் போகும்.  முடியினை வெட்டி அகற்றுவதன் மூலம் இதனை சரிசெய்யலாம்.

உரோமம் முழுமையாக நீக்குதல் - கிடா ஆடு

  • இனவிருத்தி காலத்திற்கு முன் உரோமங்களை பொலிகிடாவின் உடலிலிருந்து சுத்தமாக வெட்டி விட வேண்டும். குறிப்பாக கழுத்து, வயிற்றின் அடிப்பகுதி, இன உறுப்பு பகுதி ஆகிய இடங்களிலுள்ள முடியினை கிளிப் செய்து அகற்ற வேண்டும்.

உரோமம் பகுதியாக அகற்றுதல் - பெட்டை ஆடு

  • இனவிருத்திக்கான பெட்டை செம்மறி ஆடுகளின் இனஉறுப்பை சுற்றி மற்றும் வாலின்அடிப்பகுதியில் முடியை நீக்குவதாகும்.  இது சரியான இனவிருத்திக்கு உதவி செய்கிறது. 

 

பொலிகிடாக்களை தயார் செய்தல்

கிடாக்களுக்கு கலர்பசை தடவல்

  • கிடாக்களின் மார்பில் கருப்பு அல்லது சிவப்பு நிறப்பசையை தடவி அது எந்தெந்த பெட்டைகளுடன் இணைந்தன எனக் கண்டுபிடிக்கலாம்.
  • வெவ்வேறு நிறப்பசை தடவப்பட்ட கிடா, பெட்டை ஆடுகளுடன் சேரும்போது அது பெட்டையாட்டின் முதுகில் ஒட்டியிருக்கும்.
  • இதன் மூலம் பெட்டை  எந்த நாளில் கிடாவுடன் சேர்ந்தது என்பதையும் கண்டறிந்து இனச்சேர்க்கை ஆனவுடன் மந்தையிலிருந்து பிரித்து பராமரிக்க வேண்டும்.
  • 16-18 நாட்களுக்கு ஒருமுறை கிடாவின் வயிற்றுப் புறத்தில் தடவப்படும் பசையின் நிறத்தை மாற்றுவதன் மூலம் சினை பிடிக்காத ஆடுகளையும் கண்டறிந்து பிரித்து தேவையான பராமரிப்பு கொடுக்கவேண்டும்.

கிடாக்களுக்கு கிரையான் கலர் பொருத்துதல்

  • கிடாவின் மார்பில் கிரையான் கலர் தடவுவதால் அது கிடா, பெட்டை மேல் ஏறும்போது, கிரையான் கலர் பெட்டைகளின் முதுகில் ஒட்டிக்கொள்ளும்.
  • இந்த முறைக்கு `ராட்லிங்’ என்று பெயர்
  • இந்த முறை பொதுவாக செம்மறியாடுகளில் கடைபிடித்து வரப்படுகிறது. இதனை வெள்ளாடு இனவிருத்தியிலும் கடைபிடிக்கலாம்.

இனவிருத்தி முறைகள்

  • 1.கைப்பொலிவு முறை

    • இந்த முறையில் ஒவ்வொரு ஆடாக கிடாவுடன் இனவிருத்தி செய்யப்படுகிறது. இம்முறையில் தினமும் ஒரு கிடா மூலம் அதிகபட்சம் மூன்று ஆடுகள் மட்டுமே இனவிருத்தி செய்யப்படும்.

    நன்மைகள்

    • இனப்பெருக்கம் நடந்திருப்பதை துல்லியமாக கணக்கிடலாம்.
    • இனப்பெருக்கத்தின்போது ஏற்படும் பிரச்சினைகள் குறைவு.
    • அனுபவப்பட்ட கிடாவினை இளம்பெட்டையாடுகளை இனவிருத்தி செய்ய முடியும்.
    • குட்டி ஈனும் காலத்தை துல்லியமாக கணக்கிட இயலும்
    • இம்முறையில் கிடாவின் பொலிவுத்திறன் அதிகமாவது மட்டுமல்லாது, குறைந்த காலத்தில் அதிக பெட்டையாடுகளுக்கு இனப்பெருக்கம் செய்யமுடிகிறது.

    2.இரவில் மட்டும் கிடாக்களை அனுமதித்தல்

    DSC00380

     

    • இந்த முறையில் மந்தையில் உள்ள பெட்டை ஆடுகளை 20 முதல் 25 ஆடுகள் கொண்ட குழுவாகப் பிரித்து அடைக்கவேண்டும்
    • பொலிகிடாவை இரவில் மட்டும் ஆடுகளுடன் இனச்சேர்க்கைக்காக சேர்த்து பின் பகலில் பிரித்துவிடவேண்டும்

    நன்மைகள்

    • இம்முறையில் பெட்டை ஆடுகளின் மேய்ச்சலை பகலில் பொலிகிடா ஆடுகள் கெடுக்காது
    • மேலும் பொலிகிடாக்களுக்கு பகலில் ஓய்வும், தீவனமும் கிடைக்கும்

    3.மந்தையுடன் கிடாக்களை அனுமதித்தல்

    DSC00380
    • இந்தமுறையில் பெட்டை ஆடுகளுடன் பொலி கிடாவை மேய்ச்சலின்போதும் மற்றும் இரவிலும் சேர்ந்து இருக்கச் செய்வர்
    • இம்முறையில் பொலிகிடாக்கள் பெட்டை ஆடுகளை விரட்டுவதிலேயே நேரத்தை செலவழிப்பதால் அதன் உடல் திறன் குறையும்.

    தீமைகள்

    • இம்முறையில் பொலிகிடாக்கள் சில குறிப்பிட்ட பெட்டை ஆடுகளை மட்டுமே தேர்வு செய்து இனப்பெருக்கம் செய்வதால் மற்ற ஆடுகள் சினைப்பிடிக்காமல் போகின்றன
    • சில நேரங்களில் ஒரு கிடா பல ஆடுகளில் இனப்பெருக்கம் செய்யும்போது கடைசியில் இனப்பெருக்கம் செய்யப்படும் ஆடுகள் சினைப்பிடிக்கத் தேவையான அளவு விந்தணுக்கள் கிடைக்காமல் போய்விடும்.

     

இனப்பெருக்க மேலாண்மை

DSC_0626 DSC_0709
DSC_8222 DSC_8239


  • 20 பெட்டையாடுகளுக்கு ஒரு கிடா போதுமானது
  • இளம் பெட்டை ஆடுகளை அனுபவப்பட்ட பொலிகிடாவுடனும், இளம் பொலிகிடாவை, ஏற்கனவே குட்டியீன்ற ஆடுகளுடனும் இனச்சேர்க்கை செய்யவேண்டும்.
  • ஓரே மரபுவழியில் வந்த ஆடுகளுக்குள் இனச்சேர்க்கை செய்யக்கூடாது
  • இரண்டு ஆண்டுகளுக்கொருமுறை பொலிகிடாவை மாற்றவேண்டும்.
  • நமது நாட்டு இன பெட்டை ஆடுகளை 18 – 24 மாத வயதில் அதன் உடல் எடையை கணக்கில் கொண்டு இனப்பெருக்கம் செய்யவேண்டும்.
  • மிகவும் இளம் ஆடுகளை இனவிருத்தி செய்தால் வலுவிழந்த குட்டிகள் பிறந்து குட்டி இறப்பு விகிதம் அதிகமாகும்.
  • இனப்பெருக்க நேரத்தில், வளர்ந்த பெட்டை ஆட்டின் சராசரி உடல் எடையைவிட சிறிது குறைவாக இருக்கவேண்டும்.
  • இனப்பெருக்க காலங்களில் 1 வயதிற்கு மேற்பட்ட ஆடுகளில் சினைத் தருணத்தை கண்டறிய அதற்கென்று தயார் செய்யப்பட்ட கிடாக்களை உபயோகப்படுத்தி கண்டறிய வேண்டும்.
  • பொதுவாக ஆடுகளுக்கு செப்டம்பர் முதல் அக்டோபர், பிப்ரவரி, மார்ச், மே, ஜுன் ஆகிய காலக்கட்டங்கள் இனப்பெருக்க காலங்கள் ஆகும்.
  • சினைத்தருணத்தையும் இனப்பெருக்க காலத்தையும் கணநீர் கொண்ட பொருட்கள் உபயோகித்தும் மற்றும் கிடாக்களை பெட்டை ஆடுகளிடம் காட்டியும் ஒருங்கிணைக்கலாம்.
  • ஒரு கிடாயுடன் மூன்று பெட்டை ஆடுகளை பகலிலோ அல்லது இரவிலோ இனப்பெருக்கத்திற்கு சேர்த்துவிட்டால் 90 விழுக்காடு சினைப்பிடிக்கும் வாய்ப்பு உண்டு.
  • 8-12 மணிநேர இடைவெளியில் இரண்டு முறை இனப்பெருக்கம் நடந்தால் சினைப்பிடிக்கும் வாய்ப்பு மிகவும் அதிகம்.
  • இனச்சேர்க்கைக்குப்பின் சினைக்கு வராத ஆடுகளை சினையாடுகள் எனக் கருதலாம். அவைகளை மற்ற பால்வற்றிய மற்றும் சினையில்லாத ஆடுகளிடம் இருந்து பிரித்து, 15 முதல் 20 சினையாடுகளை தனியாக பராமரிக்கவேண்டும்.
  • ஒரு வருட காலத்திற்கு குட்டி ஈனாத ஆடுகளை மந்தையிலிருந்து எடுத்துவிடவேண்டும்.
  • மே 15 முதல் ஜுன் 15 வரை ஆடுகளை இனச்சேர்க்கை செய்யவிடாமல் தடுப்பதன் மூலம் அதிக குளிர் காலங்களில் குட்டிகள் பிறப்பதைத் தவிர்க்கலாம். ஏனெனில் அதிக குளிர்காலத்தில் பிறக்கும் குட்டிகளுக்கு நிமோனியா மற்றும் குளிர்கால பிரச்சினைகளால் அதிக இறப்பு ஏற்படும்.
  • இளம் கரு அழிவினை தடுக்க ஆடுகளை பட்டினி போடக்கூடாது.

இனப்பெருக்க மேலாண்மைக்கான வழிமுறைகள்

  1. சினைத்தருணத்தை முன்னதாக வரவழைத்தல்
  • சினைத்தருணத்தை சினைக்காலத்திற்கு முன்பே வரவைக்கவும் ஒருங்கிணைக்கவும் பெட்டை ஆடுகளுடன் வீரியம் நீக்கப்பட்ட கிடாவை சினைக்காலம் ஆரம்பிப்பதற்கு 10 – 14 நாட்களுக்கு முன்னதாக சேர்த்துவிடவேண்டும்.
  • இவை முன்னதாகவே சினைக்கு வருவதால் சினைக்காலத்தின் முற்பகுதியிலேயே சினைப்பிடித்துவிடுகிறது.
  1. சினைத்தருண ஒருங்கிணைப்பு
  • இது சினையில்லாத எல்லா பெட்டையாடுகளையும் ஒரே நேரத்தில் சினைத்தருணத்திற்கு கொண்டு வருவதாகும்.
  • இது குறிப்பாக இனவிருத்திக்கான  செலவு மற்றும் காலங்களை மிச்சப்படுத்துவதுடன், சினைத்தருண ஒருங்கிணைப்பு செய்யப்பட்ட ஆடுகள் ஒரே காலகட்டத்தில் ஈனுவதால், குட்டிகளுக்கு சரியான பராமரிப்பு கொடுக்கமுடிகிறது. ஒரே சீரான வயதுடைய குட்டிகள் கிடைப்பதால் அவற்றை விற்பதில் நல்ல லாபமும் கிடைக்கிறது.                     
  1. கிடாக்களின் தாக்கம்
  • பெட்டையாடுகளிடமிருந்து கிடாக்களை பிரித்துவிட்டு, பின் திடீரென சினைக்காலத்திற்கு சில நாட்களுக்கு முன் அவற்றை பெட்டையாடுகளுடன் சேர்த்துவிட்டால் கிடாக்களின் தாக்கத்தால் நிறைய ஆடுகள் ஒரே காலகட்டத்தில்  சினைக்கு வரும்
  1. டெலஸ்கோப்பிங்
  • இதுவும் 2 முதல் 3 மாதங்கள் கிடாவை, பெட்டை ஆடுகளிடமிருந்து பிரித்து பின் திடீரென்று சேர்க்கும்போது 70-80 விழுக்காடு ஆடுகள்சினைத்தருணத்தை வெளிப்படுத்தும்.
  • இம்முறையை வெள்ளாடுகளின் இனப்பெருக்கத்திலும் கையாளலாம்
  1. கணநீர் சிகிச்சைமுறை
  • 14 நாட்களுக்கு புரோஸெஸ்டிரோன் கணநீரை  தீவனத்துடன் கலந்தோ அல்லது புணர்ச்சிக்குழயாய் ஸ்பான்ஞ்சை உபயோகித்தோ  கணநீர் சிகிச்சை மேற்கொள்ளவேண்டும். இப்படி சிகிச்சை பெற்ற ஆடுகள் சிகிச்சைக்குப்பின் மூன்று நாட்களில் சினைக்குவரும். மேலும் புரோஸ்டாகிளாண்டின் என்ற மருந்தினை உபயோகித்து சினைத்தருண ஒருங்கிணைப்பு செய்து அவற்றை மருந்து கொடுக்கப்பபட்ட 48 முதல் 96 மணி நேரத்தில் இனச்சேர்க்கைக்கு உட்படுத்தி சினைப்படுத்தலாம்.