பண்ணை உபகரணங்கள்

தீவனத்தட்டுகள்

DSC02605
 • செவ்வக வடிவ அல்லது அறுங்கோண வடிவிலான தீவனத்தட்டுகளை உபயோகித்து பசுந்தீவனங்கள், வைக்கோல் மற்றும் அடர்தீவனங்களை ஆடுகளுக்கு அளிக்கலாம்
 • தீவனப்பொருட்கள் ஆடுகளின் புழுக்கைகள், சிறுநீரால் மாசடைவதைத் இந்த தீவனத்தட்டுகள் தடுக்கின்றன
 • இந்த தீவனத்தட்டுகளைப் பயன்படுத்துவதால் தீவன சேதாரத்தைத் தடுக்கலாம்.

 

தண்ணீர்த் தட்டுகள்

DSC_3662
 • வெள்ளாடுகளை அதிக எண்ணிக்கையில் வளர்க்கும் போது ஒவ்வொரு வெள்ளாட்டிற்கும் 3-4 செமீ நீளத்திலான தண்ணீர்த் தட்டுகளைப் பயன்படுத்தினால் போதுமானது
 • மூடி வைக்கப்பட்ட தண்ணீர்த்தட்டுகளைப் பயன்படுத்த வேண்டும். மேலும் இத்தண்ணீர்த் தட்டுகளை அடிக்கடி சுத்தம் செய்து, அசுத்தமடைந்த தண்ணீரை மாற்ற வேண்டும்
 • தீவிர முறை வெள்ளாடு வளர்க்கும் பண்ணைகளில், தண்ணீர்த் தொட்டிகளில், தண்ணீர் போவதைக் கட்டுப்படுத்த வால்வுகள் அமைக்கப்பட வேண்டும்.

 

தீவனம் நறுக்கும் கருவி

Chaff cutter
 • தீவனப்பயிர்களை நறுக்குவதற்கு பல்வேறு வகையான தீவனம் நறுக்கும் கருவிகள் உள்ளன
 • கையால் இயக்கும் மற்றும் மின்சாரத்தால் இயங்கும் தீவனம் நறுக்கும் கருவிகள் பொதுவாக உபயோகப்படுத்தப்படுகின்றன
 • மின்சாரத்தால் இயங்கும் தீவனம் நறுக்கும் கருவிகள் பல்வேறு வோல்டேஜ்களில் இயங்கக்கூடியன.
 • தீவனம் நறுக்கும் கருவியினைப் பயன்படுத்தி தீவனத்தை நறுக்கி ஆடுகளுக்கு அளிப்பதால், தீவனம் எடுக்கும் அளவும், தீவனம் வீணாவதும் தடுக்கப்படுகின்றது
 • தீவனப்பயிர்களை நறுக்கும் போது அவற்றின் தண்டுப் பகுதிகளையும் வீணாக்காமல் தீவனமாக உபயோகிக்கலாம்.

 

ஆடுகளுக்கான அடையாளத் தோடுகளும் அவற்றைப் பொருத்தும் கருவிகளும்

Chaff cutter
 • இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி ஆடுகளுக்கு அடையாளக் குறியீடுகளையும், பொருட்களையும் பொருத்தலாம்
 • அடையாளத்தோடுகள் பொதுவாக ஆடுகளின் காதுகளில் பொருத்தப்படுகின்றன. இவற்றைக் காதுகளில் பொருத்துவது எளிது
 • அடையாளத் தோடுகள் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டு அதில் எண்கள் பொறிக்கப்பட்டிருக்கும். இவை வெவ்வேறு வடிவங்களில் கிடைக்கின்றன.

 

பர்டிசோ ஆண்மை நீக்கக் கருவி

Chaff cutter
 • இந்தக் கருவியினைப் பயன்படுத்தி ஆட்டுக் கிடாய்களை ஆண்மை நீக்கம் செய்யலாம்.
 • இக்கருவியினைப் பயன்படுத்தி 3-4 வயதான வெள்ளாடு மற்றும் செம்மறியாட்டுக் குட்டிகளை ஆண்மை நீக்கம் செய்யலாம்.

மேலே செல்க