செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளில் தவறான/ கெட்ட பழக்கங்கள்

1.கம்பளம் பிடுங்குதல் மற்றும் சாப்பிடுதல்

  • தீவிர முறையில் அல்லது  தடுப்புகளுக்குள் வளர்க்கப்படும். செம்மறியாடுகளில் கம்பளத்தை கடித்து பிடுங்கும் கெட்ட பழக்கம் உள்ளது.
  • கடித்து பிடுங்கும் கெட்ட பழக்கத்திற்கான முக்கிய காரணங்கள் குறிப்பிட்ட இடத்தில் அதிகளவில் வளர்த்தல் மட்டும்  தீவனத்தில் நார்ச்சத்து பற்றாக்குறையாகும்.

2.குட்டிகள் புறக்கணித்தல்

  • குறை பிரசவத்தில் பிறந்த குட்டிகளை தாய் ஆடானது. குட்டியின் அருகில் சென்று முகர்ந்து மட்டும் பார்க்கும். இத்தருணத்தில் தாயாடானது குட்டிகளை கவனிக்காத காரணத்தால் குட்டிகள் நோஞ்சானாக வாய்ப்புள்ளது.
  • இது மட்டுமல்லாமல், தாயிடம் தேவையான சீம்பால் இல்லாத சமயங்களில், வளர்ப்புத் தாயாடானது குட்டிகளை ஒதுக்கிவிடும். இதனால் குட்டிகள் இறக்க வாய்ப்புள்ளது. இம்மாதிரி குணமுடைய தாய் ஆடுகளை குட்டி ஈன்றவுடன் மந்தையிலிருந்து பிரித்து வளர்க்க வேண்டும்