த.வே.ப.க வேளாண் இணைய தளம் :: உழவர்களின் கண்டுபிடிப்பு :: மதுர் வாழைபழ உலர் அத்தி
மதுர் வாழைபழ உலர் அத்தி வீடியோnew

திருச்சி மாவட்டத்தில் விழையும் பாரம்பரிய வாழை ரகங்களான பூவன் , ரஸ்தாளி மற்றும் கற்பூரவள்ளி போன்ற சுவை மிகுந்த, சத்து நிறைந்த வாழை பழ குலைகளை தேர்ந்தெடுத்து , குளிரூட்டப்பட்ட அறைகளில் சீப்பாக சிப்பம் கட்டி விஞ்ஞான முறைப்படி பழுக்க வைத்து நூதன முறையில் தொட்டியம் வாழை உற்பத்தியாளர் குழுவால் ஜெர்மானிய கம்பனியான "பேயர்" குழுமத்தின் ஆதரவில் "சஸ்டேயின்" என்ற திட்டத்தில் அமைந்த நூதன கதிரொளி உலரகத்தில் பழுத்த பழங்களை தரமான தேனில் நனைத்து உலர வைத்து தயாரிக்கப்பட்டதுதான் "மதுர்" வாழைபழ உலர் அத்தி.

தாய்லாந்து நாட்டின் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட உலர் அத்தியில் , பழங்களில் உள்ள நீர்சத்து ௮௫ சதவீதம் ஆவியாக்கப்பட்டு அதே நேரத்தில் வாழைபழத்தில் உள்ள புரதம் , நார்சத்து மற்றும் இரத்த ஓட்டத்தை சீராக வைக்கும் வைட்டமின் சத்துகளும் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும் பொட்டசியம் தாது ஆகிய சத்துகள் பாதுகாக்கபட்டு உள்ளன. சுகாதார முறைப்படி பசுமை உலர் கூடத்தில் தயாரிக்கப்பட்ட உலர் "அத்தி" யை எந்த நேரத்திலும், எந்த வகையிலும் பயன்படுத்தி உண்ணலாம். சேதமில்லாமல் , சிரமம் இல்லாமல் சேமித்து வைத்து 6 மாதங்கள் வரை உங்கள் காலை உணவில் தவறாமல் சேர்த்து உன்ன அருமையான "மதுர்" வாழைபழ அத்தியை ஒருமுறை சுவைத்தால் மறுமுறை உண்ணத் தூண்டும் அருமையான இயற்கை உணவு. வாங்கி உண்பீர்! வளம் பெறுவீர்!

சத்து அளவுகள்: *( 100 கிராம்அளவில்)

ஆற்றல் 150 கலோரிகள்
வைட்டமின் சி 8 கி
கால்சியம் 6 மிகி
பொட்டாசியம் 430 மிகி
சோடியம் 1 மிகி
இரும்புசத்து 0.31 மிகி
பாஸ்பரஸ் 28 மிகி
மொத்த சர்க்கரை 44%
புரதம் 4.2%
கொழுப்பு 0.04%

கதிரொளி உலரகம் கதிரொளி உலரக வாழை வாழை சாக்லேட் / பழங்கள் உலர் பழங்கள்
கதிரொளி உலரக ஜாதிக்காய் கதிரொளி உலரக பப்பாளி கதிரொளி உலரக அன்னாசிப்பழம்

உற்பத்தியாளர்:

தொட்டியம் வாழை உற்பத்தியாளர் குழு,
எஸ்.ஏ.எஸ். தோட்டம், தொளுட்பட்டி,
பாலசமுத்திரம் அஞ்சல்,
தொட்டியம் – 621209
திருச்சி மாவட்டம்,
அலைபேசி: 099943 02877
                094437 14352
மின்னஞ்சல்:ajeethkisan@gmail.com


 

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016