ராஜா விதை உற்பத்தி மையம்

பெயர் : தி.சுப்பிரமணியம்  
முகவரி : த/பெ.த.திருஞான சம்பந்தம்,
வடக்குத் தெரு,
ராஜேந்திரப்பட்டினம் – 608 303
கடலூர் மாவட்டம் அலைபேசி எண் : 9787581169
குறு /சிறு/ பெரு விவசாயிகள் : சிறு விவசாயி  

வெற்றிக்கான காரணங்கள் மற்றும் அவைகளின் பங்கு

கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் பொதுவாக தனியார் மற்றும் அரசு நிறுவனங்களிலிருந்து விதைகளை வாங்கி உபயோகித்து வந்தனர்.
மேலாண்மை உத்திகள்

  • நமது வேளாண் அறிவியல் நிலையப் பயிற்சிகளின் போது தரமான விதைகளின் முக்கியத்துவம் மற்றும் விதை உற்பத்தி சார்ந்த லாபகரமான தொழில்வாய்ப்புகளும் போதிக்கப்பட்டனர்.
  • ஆனால் விவசாயிகளுக்கு தரமான விதை உற்பத்தி செய்வது தொடர்பான தொழில்நுட்ப அறிவு இல்லை.
  • இந்நிலையில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு.தி. சுப்புரமணியம் என்ற விவசாயி தம் அக்கம்பக்கத்து சக விவசாயிகளின் உதவியுடன் விதை உற்பத்தி செய்ய ஆர்வம்  கொண்டு நிலையத்தை அணுகினார்.
  • அவருக்கும் அவரது குழுவினருக்கும் தரமான விதை உற்பத்தி நுணுக்கங்களான நிலம் தேர்ந்தெடுத்தல், நிலம் தயாரித்தல், விதை மூலம் தேர்ந்தெடுப்பது, பயிர் விலக்கு தூரம் கடைபிடித்தல், கலப்பு பிரிப்பு, இலைவழி சத்துக் கொடுத்தல் அறுவடை மற்றும் அறுவடை பின்சார் தொழில்நுட்பம் ஆகியன கற்றுக் கொடுக்கப்பட்டன.
  • அத்தனை தொழில்நுட்பக் கூறுகளும் விதை கிராமத் திட்டத்தின் கீழ் மூன்று பகுதிகளாக நிலையப் பயிற்சிகளின் வாயிலாகவும், களப் பயிற்சிகளின் வாயிலாகவும் கற்றுக் கொடுக்கப்பட்டன.
பயிற்சியின் பயனாக திரு.தி.சுப்ரமணியம் விதை உற்பத்தியாளராக  உருவாகி இன்று பல்வேறு பயிர்களில் சான்று விதை மற்றும் உண்மை நிலை விதைகளை உற்பத்தி செய்து மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றார்.

விளைச்சல் /ஏக்கர்

விதை உற்பத்தியாளர் என்ற வகையில் நெல் மற்றும் பயறுவகைகளில் 12 எக்டரில் விதை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றார்.

வேலை வாய்ப்புகள்

அவரது பண்ணை மற்றும் விற்பனை   கூடங்களில்  மொத்தம் 50 தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கி வருகின்றனர்.  

தொழில்நுட்பத்தின் மூலம் பெறப்பட்ட மாத வருமானம்

ஆண்டிற்கு தோரயமாக ரூபாய் மூன்று முதல் மூன்றரை லட்சம் வரை வருமானம் பெற்று வருகின்றார்

பண்ணை விரிவாக்கம் பற்றிய எதிர்கால திட்டம்

  • விதை உற்பத்தியினை காய்கறி மற்றும் எண்ணெய் வித்துக்களுக்கும் விரிவாக்க திட்டமிட்டு வருகின்றார்.
  • விதை உற்பத்தி பரப்பினை 20 எக்டருக்கு உயர்த்த திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றார்.
ஆண்டு வருமானத்தை சுமார் ரூபாய் நான்கு லட்சம் என்ற அளவிற்கு உயர்த்த இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகின்றார்.

பிறருக்கு எடுத்துக்கூறும் உண்மை

  1. கடலூர் மாவட்டத்தில் விதை உற்பத்தி தொழிலுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. பிற விவசாயிகள் இதனைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
  2. காய்கறி மற்றும் எண்ணெய்வித்துக்கள் மற்றும் பயறுவகைகளுக்கும் விதைத் தட்டுப்பாடு உள்ளதால் இந்தப் பயிர்களில் விதை உற்பத்தி செய்து அதிக லாபம் ஈட்ட இயலும்.
கிராம மகளிர் மற்றும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கிறது.

தொழில்நுட்பம் சார்ந்த படங்கள்

திரு.சுப்ரமணியம் அவர்கள் தமது சான்று விதை மூட்டைகளுடன்
Updated on Feb , 2015
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015