தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் இணைய தளம்
த.வே.ப.க வேளாண் இணைய தளம் :: உழவர்களின் கண்டுபிடிப்பு 

உழவர்களின் சாகுபடி முறைகள்

வாழை சாகுபடி முறைகள்

விதை இருப்பு: திசு வளர்ப்பு தாவரங்கள்

பயிரிடும் பருவம் மற்றும் இரகங்கள்

  • அக்டோபர் முதல் பிப்ரவரி வரை பயிரிடப்படுகின்றது.
  • பூவன், நேந்திரன், கதலி, கிராண்ட்நைன், செவ்வாழை கற்பூரவல்லி, மொந்தன், ரஸ்தாழி, மலை வாழை (மலை அல்லாத பகுதிகளிலும் பயிரிடப்படுகின்றது)

இரகங்களின் பண்புகள்:

  • பூவன், கற்பூரவல்லி, ரஸ்தாழி, கதலி ஆகிய பழமையான இரகங்களை விசேஷங்களுக்கும் பழமாக உண்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
  • செவ்வாழை: இந்த இரகம் அறுவடை செய்ய அதிக நாட்களாவதால் குறைந்த அளவிலேயே பயிரிடப்படுகின்றது.
  • கிராண்ட் நைன் : பெரும்பான்மையாக பயிரிடப்பட்டு இந்தியா முழுவதும் சந்தைப்படுத்தப் படுகின்றது.
  • நேந்திரன்: பழபெரும் இரகமாக இருப்பினும், சிப்ஸ், குழந்தைகளுக்கான உணவுப்பொருட்கள் மற்றும் பழமாக உண்ண பயன்படுத்தப்படுகின்றது.

இக்காரணங்களினால், விஸ்வநாதன் அவர்கள் செவ்வாழை நேந்திரன் மற்றும் கிராண்ட் நைன் இரகங்களை தேர்வு செய்து பயிரிட்டு வருகின்றார்.

சிறப்பு பண்புகள் பற்றிய கருத்து

நேந்திரன்

மணிச்சத்து விரும்பும் பயிர்களான இவை ஆறு மாதங்களில் தார் ஈன்று விடும். 270 நாட்களின் அறுவடைக்குத் தயாராகி 300 நாட்களில் அறுவடை செய்துவிடலாம். இந்த ரகம் மறுதாம்புக்கு உகந்ததாகது. இது சிப்ஸ் தயாரிப்புக்கு ஏற்றதாக விளங்குவதன் மூலம், ஏற்றுமதிக்கு வழிவகிக்கிறது. அதனுடன், நன்கு காய வைக்கப்பட்டு, குழந்தைகள் உணவுக்காகவும், உண்பதற்கு பழமாகவும் பயன்படுத்தப்படுகின்றது.

கிராண்ட் நைன்

தலைச்சத்து விரும்பும் பயிர்களான இவை 157 நாட்களில் தார் ஈன்று 250 நாட்களின் அறுவடைக்குத் தயாராகி விடக்கூடியவை. இந்த ரகம் மறுதாம்புக்கு உகந்தது.

பயிர் மேலாண்மை

நிலம் தயாரித்தல்

நிலம் நன்றாக பல்வேறு வகையான கழப்பைகளைக் கொண்டு உழவப்பட்டு கட்டிகளை உடைத்து தயார் செய்யப்படுகின்றது. கடைசி உழவானது ஒன்பது கழப்பைகளை கொண்டு செய்யப்படுகின்றது. அதன் பின்னர் DAP மற்றும் பொட்டாஷ் அடி உரமாக அளிக்கப்பட்டு நிலம் தயார் செய்யப்படுகின்றது.

இடைவெளி மற்றும் பயிர் அமைப்பு

கிராண்ட் நைன், நேந்திரன், செவ்வாழை திசு வளர்ப்பு வாழைகளுக்கான இடைவெளி மற்றும் பயிர் அமைப்பு முறைகள்.

  1. கிராண்ட் நைன் மற்றும் நேந்திரன்: 6m x 6m விதத்தில் 1200 செடிகள்/ ஏக்கர்
  2. செவ்வாழை: 8m x 8m வீதத்தில் 700 செடிகள் /ஏக்கர்
  3. 1 x1 x1 அடி வீதத்தில் திசு வளர்ப்பு வாழைகள் பயிரிடப்படுகின்றது.

நீர் மேலாண்மை

பயிரிடப்படும் நிலமானது சொட்டு நீர்ப்பாசன முறைப்படி நீர்ப்பாய்ச்ச தகுந்தவாறு பயிரிடப்பட வேண்டும். திசு வளர்ப்பு வாழைகள் குழிகளில் நட்டவுடன் 4 லிட்டர் என்ற வீதத்தில் ஒவ்வொரு வாழைக்கன்றுக்கும் நீர்ப்பாய்ச்ச வேண்டும். பயிரிட்டு ஆரம்ப காலங்களில் ஒருநாள் இடைவெளியில் தொடர்ந்து நீர்பாய்ச்சுதல் போதுமானதாகும். ஆரம்ப காலங்களில் மட்டுமே வாழை இவ்வாறு குறைவான நீர்த் தேவைகளுடன் இருக்கும்.

சராசரி நீர் தேவையானது 18 லிட்டர் /செடி/ஒருநாளுக்கு ஆகும்.

ஒருங்கிணைந்த உர மேலாண்மை

ஒருங்கிணைந்த உர மேலாண்மையில் உரப்பாசனம் நீரில் கரையும் உரங்களைக் கொண்டு சொட்டு நீர்ப் பாசன முறையில் செய்யப்பட வேண்டும். செடியின் வளர்ச்சி மற்றும் வீரியத்தை அதிகரிக்க உரப்பாசனம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்யப்பட்டு இருக்கும் ஊட்டச்சத்துகள் முழுவதும் எளிதாக கிடைக்கப் பெற வழிவகை செய்யப்பட வேண்டும். பயிரிட்டு 31 நாட்களுக்கப் பின் உரப்பாசனம் செய்யப்பட வேண்டும்.

மண்ணிலுள்ள கரிம பொருட்களின் தன்மையை அதிகரிக்க மக்கிய மாட்டுச்சானம் மற்றும் கோழிப் பண்ணைகளிலிருந்து கிடைக்கும் கழிவை உரங்களாக 2 கிலோ என்ற வீதத்தில் 21 நாட்களுக்கு பின் ஒவ்வொரு செடிக்கும் அளிக்கப்பட வேண்டும். நான்கு வகையான தரம் பிரிக்கப்பட்ட உரங்கள் பயிர்கிள்ன சத்துத் தேவைகளை பொறுத்து அளிக்கபட வேண்டும்.

நேந்திரன் இரகத்திற்கு உரப்பாசனம் செய்வதற்கான அட்டவணை

இடைவெளி=1.8 ×1.8 மீ நேந்திரன் வாழை
பருவம் காலம்
(நாட்கள்)
உரத்தின் தன்மை 125:90:300 கி N P K/ plant
(கிகி/ஏக்கர்/நாள்) மொத்தம்
(கிகி/ஏக்கர்)
15-45 30 எம்ஏபி (12:61:0) 1.67 50
பாலிஃபீட்
(19:19:19)
(19:19:19)
1.50 45
46-105 60 எம்ஏபி (12:61:0) 1.67 100
பாலிஃபீட்
(19:19:19)
0.83 50
யூரியா (46.00.00) 0.67 40
106-180 75 பாலிஃபீட்
(19:19:19)
0.33 25
மல்டி பொட்டாஷ் (13:00:45) 4.00 300
யூரியா (46:00:00) 1.07 80
181-240 60 மல்டி பொட்டாஷ் (00:00:50) 1.67 100
எஸ்ஓபி (13:00:45) 5.88 353
யூரியா (46:00:00) 0.37 22
 

செவ்வாழை இரகத்திற்கு உரப்பாசனம் செய்வதற்கான அட்டவணை

இடைவெளி =1.8 ×1.8 மீ செவ்வாழை
பருவம் காலம்
(நாட்கள்)
உரத்தின் தன்மை 150:100:350 கி N P K/ plant
(கிகி/ஏக்கர்/நாள்) மொத்தம்
(கிகி/ஏக்கர்)
15-45 30 எம்ஏபி (12:61:0) 2.33 70
பாலிஃபீட்
(19:19:19)
(19:19:19)
1.50 45
46-105 60 எம்ஏபி (12:61:0) 1.67 100
பாலிஃபீட்
(19:19:19)
0.83 50
யூரியா (46.00.00) 0.67 40
106-180 75 பாலிஃபீட்
(19:19:19)
0.33 25
மல்டி பொட்டாஷ் (13:00:45) 5.33 400
யூரியா (46:00:00) 1.33 100
181-240 60 மல்டி பொட்டாஷ் (00:00:50) 1.67 100
எஸ்ஓபி (13:00:45) 6.53 392
யூரியா (46:00:00) 0.63 38
red banana

G9 இரகத்திற்கு உரப்பாசனம் செய்வதற்கான அட்டவணை

இடைவெளி = 1.8 * 1.8 m G9
பருவம் காலம்
(நாட்கள்)
உரத்தின் தன்மை 150:80:350 g NPK/ plant
(கிகி/ஏக்கர்/நாள்) மொத்தம்
(கிகி/ஏக்கர்)
15-45 30 எம்ஏபி (12:61:0) 1.73 52
பாலிஃபீட்
(19:19:19)
1.67 50
46-105 60 எம்ஏபி (12:61:0) 1.25 75
பாலிஃபீட்
(19:19:19)
0.83 50
யூரியா (46:00:00) 0.67 40
106-180 75 பாலிஃபீட் (19:19:19) 0.33 25
மல்டி பொட்டாஷ்
(13:00:45)
5.33 400
யூரியா (46:00:00) 1.33 100
மல்டி பொட்டாஷ்
(00:00:50)
1.67 100
      181-240 60 எஸ்ஓபி (13:00:45) 6.50 390
யூரியா (46:00:00) 0.80 48

களை மேலாண்மை

வாழையில் களைகளினால் பெரும் பிரச்சனைகள் இல்லாது இருப்பினும், பாஸ்போ பேக்டீரியா, அசோஸ்பைரில்லாம் போன்றவை மண் வளத்தை அதிகரிப்பதற்காக அளிக்கப்படுகின்றது. இவைகள் வாழைச் செடிகளின் வேர்ப்பரப்பை அதிகரித்து சத்துக்கள் உள்ளெடுப்பதை மேம்படுத்துகின்றது. எவ்விதமான களைக்கொல்லிகளும் வாழையில் தேவைப்படுவதில்லை. இருப்பினும், களைகளை கையில் அகற்றவதன் மூலம் களை மேலாண்மை செய்யப்படுகின்றது. சின்ன டிராக்டர் அல்லது பவர் டில்லர் போன்றவை கொண்டும் களைகள் அகற்றப்படலாம்.

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை

டிரைக்கோ டெர்மா விரிடே, சூடோமோனஸ், கரிம, தலை மற்றும் மணிச்சத்து போன்றவைகளை பயிர்களுக்கு அளிப்பதன் மூலம் பயிர்கள் பூச்சி மற்றும் நோய்களுக்கு எதிரான எதிர்ப்பு சக்திகளை மேம்படுத்துகின்றது. முன்னேற்பாடாக காப்பர் ஆகீஸ் க்ளோரைட் மற்றும் பெளஸ்டின் அளிக்கப்பட்டு வெயில் காலதிலிருந்து மழைக்காலங்களுக்கு சீதோசன மாற்றங்களினால் இலைகளில் வரும் மஞ்சள் நிறங்கள் தடுக்கப்படுகின்றது.

அறுவடை

அறுவடையானது உள்ளூர் வேலை ஆட்களைக் கொண்டு உள்ளூர் வாழை வர்த்தகர்களினால் செய்யப்படுகின்றது.

மகசூல்:

  • கிராண்ட் நைன் – சராசரி மகசூல் 35 கி/தார்
  • செவ்வாழை       - சராசரி 24 கி/ தார்
  • நேந்திரன்          – சராசரி 18 கி/ தார்
weed mgt
களை நீக்கிய வாழை வயல்

Updated on : March 2015

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015

Agritech Portal - Tamil Agritech Portal- English