தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் இணைய தளம்
த.வே.ப.க வேளாண் இணைய தளம் :: உழவர்களின் கண்டுபிடிப்பு 

உழவர்களின் சாகுபடி முறைகள்

சின்ன வெங்காயம் அபிவிருத்திக்கான சாகுபடி முறைகள்

இரகங்கள் :

துறையூர் உள்ளூர் வெங்காய குமிழ்கள் விதைப்புக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

மண்:
நல்ல வடிகால் வசதியுள்ள களிமண் நிலம் வெங்காய சாகுபடிக்கு ஏற்றது. முளைப்பு விகிதம் 90 சதவிகிதத்திற்கும் அதிகமாக  உள்ளது.

பருவ நிலை மற்றும் விதைப்பு :

நடுத்தர அளவிலான வெங்காயக் குமிழ்களைக் கொண்டு வெங்காய விதைப்பு மார்ச் 16, 2015ல் செய்யப்பட்டது. வெங்காய விதைப்பு நேரத்தில் வயலில் போதுமான அளவு ஈரப்பதம் இருக்க வேண்டும். வயல் முழுவதையும் ஈரப்படுத்த நுண்துளி தெளிப்புக்கருவியை அரைமணி நேரத்திற்கு சுழல செய்து வயலை ஈரமாக்க வேண்டும். பின்னர் வெங்காயக் குமிழ்களை 10 செ.மீ. இடைவெளியில், கைமுறையாக நடவு செய்ய வேண்டும்.

விதையளவு:

இரண்டு ஏக்கர் நிலத்திற்கு சுமார் 1100 கிலோ விதைக்குமிழ்கள் தேவைப்படுகிறது.

1. நிலம் தயாரித்தல், நீர்ப்பாசனம் & நுண்துளி தெளிப்பு நீர் கருவி அமைப்பு
2. உரப்பாசனம்
3. களை மேலாண்மை, பயிர்ப்பாதுகாப்பு & அறுவடை மற்றும் மகசூல்

 

Updated on : Aug 2015


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2009-15

Agritech Portal - Tamil Agritech Portal- English