முக்கிய பகுதிகள்
மீன் வளம் :: மாதிரி வங்கித் திட்டம்
 
   
கூட்டு மீன் வளர்ப்பு
தொடக்கம்

மீன் ஒரு மலிவான மற்றும் சுலபமாக செரிமானமாகக் கூடிய புரதம் நிறைந்த உணவு. மீன்களை பிடிப்பது மற்றும் மாசுபடுவதால் மீன்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆராய்ச்சியாளர்கள் மீன் உற்பத்தியை பெருக்க நிறைய வழிமுறைகளை கண்டுபிடித்துள்ளனர். மீன் உற்பத்தியை பெருக்க மீன் பண்ணைகளை கட்டுப்படுத்துதல் மற்றும் செயற்கை மீன் வளர்ப்பு மூலம் பெருக்கலாம். விவசாயிகள் சுலபமாக குட்டை, தொட்டி அல்லது மற்ற நீர் நிலைகளில் மீன்களை வளர்க்கலாம். இதன் மூலம் வருமானத்தை அதிகரிக்கலாம். திறமையுள்ள அல்லது திறமையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கின்றது. நாட்டில் தொழில்நுட்பம் மூலம் மீன் வளர்ப்பு நிறைய விதங்களில் முன்னேறிவருகிறது. இந்த வித மீன் வளர்ப்புகளை ஒன்றாக செய்வதால் கூட்டுமீன் உற்பத்தி அதிகரிக்கும். நீரின் ஆழம் 2 மீட்டராக இருந்தால் மீன்களை வளர்க்கலாம். இதற்கு குறைவாக நீர் இருந்தால் வளர்க்க முடியாது.

1. கூட்டு மீன் வளர்ப்பில் உள்ள மீன் இனங்கள்

உணவுப் பழக்கங்கள் மற்றும் ஒற்றுமைக்காக இருக்க கூடிய மீன்களை கூட்டு மீன் வளர்ப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.


இந்தியாவிற்கு
தகுந்த மீன்கள்

தோப்பா மிதவை விலங்கு உயிர் உண்பிகள் மேற்பரப்பு உண்பிகள்
ரோகு அனைத்துண்ணும் மீன் நடுமட்ட உண்பிகள்
மிர்கால் மக்குண்ணி அடிமட்ட உணவு உண்பிகள்


அயல்நாட்டு
மீன்கள்

வெள்ளிக்கொண்டை மிதவை தாவர நுண்ணுயிர்கள் மேற்பரப்பு உண்பிகள்
புல் கெண்டை தாவர உண்ணி மேல், நடுமட்ட உண்ணிகள்
சாதக் கொண்டை மக்குண்ணி/அனைத்துண்ணி அடிமட்ட உண்பிகள்

2. ஆற்றல்
திறன்

நண்ணீர் மீன் வளர்ப்பு 2.85 கோடி ஹெக்டர் நிலப்பரப்பில் வளர்க்கப்படுகின்றன(தொட்டி மற்றும் குளங்கள் சேர்த்து) மற்றும் 0.78 கோடி ஹெக்டர் சதுப்பு நில மீன் வளர்ப்பாகும். விவசாயம் செய்யாத நிலங்கலும் மீன் வளர்ப்புக்கு ஏற்ற இடமாகும். மொத்த உள்நாட்டு மீன் உற்பத்தியில் 60% வளர்ப்பு பகுதியாகும். குளத்தில் இருந்து மட்டும் 2160கீ/ஹெ/வருடம் மீன் உற்பத்தியாகிறது.

3. தொழில்நுட்ப வழிமுறைகள்

தேவையான இடம், பொருட்கள், முன் மற்றும் பின் இருப்பு செயல்கள், இருப்படர்த்தி, கருவுறுதல், உணவுகள்.

4. முதலீடுகளின்
பங்குகள்

முதலீடு தொகையில் 5,10 & 15% சிறு, நடுநிலை மற்றும் பெரிய விவசாயிகளின் பங்கு மற்றும் தொழிற்சாலை பங்குதாரர்களின் பங்கு 25% முதலீடாகும்.

5. உதவித்தொகை

குளம் விரிவுபடுத்த, புது குளம் உருவாக்க 5 ஆண்டு இடுபொருட்கள் ஆகிவற்றுக்கு மாநில அரசு மத்திய உதவி தொகையை மீன் வளத்துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.


6. கடன் வாங்க தகுதியுடையவர்கள்

  1. தனினபர்
  2. நிறுவனம்
  3. பங்குதாரர்கள்
  4. கூட்டுறவு சங்கம்
  5. மீனவர் குழு

கடன் வழங்குவதற்கு முன் மீனவர்கள் மீன் வளர்ப்பு தெரிந்திருக்க வேண்டும். மீனவர்களுக்கு மீன் வளத்துறை மூலம் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.


7. நிதிச் செலவு

ஒரு ஹெக்டர் குளம் வெட்ட ரூ1,75,000/- முதலீடு தேவை மற்றும் திரும்ப போடப்படும் தொகை ரூ26,000/- வங்கில் திட்டத்தை கொடுக்கும் போது திட்டத்தின் முழு பட்டியலை ஒப்படைக்க வேண்டும்.

8. திருப்பச் செலுத்தப்பட வேண்டியது

வங்கி கடன் 6-8 வருடத்திற்குள் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும்.

9. நிதி
விவரங்கள்

நிதி வழிமுறைகள் படி நிதி விவரங்கள் கொடுக்கப்பட்டள்ளது.
15% தற்போதய நிகர மதிப்பு - ரூ101106
15%க்கு வரவு செலவு விகிதம் + 1.15:1
வட்டி விகிதம் - 25%

10
. மாற்று நிதி விகிதம்

நபார்ட் வங்கி மீன் வளர்ப்புக்கு மாற்று நிதியை வணிக வங்கி மற்றும் மண்டல கிராம வங்கியிலிருந்து பெற அனுமதி வழங்கியுள்ளது.

11.
வட்டி விகிதம்

கடன் தொகை மற்றும் வங்கியை பொருத்து வட்டி விகிதம் இருக்கும்.

12. பாதுகாப்பு
நலம்

ரிசர்வு வங்கியின் முறைபடி பாதுகாப்பு நலன்கள் ஒப்படைக்க வேண்டும்.


இணைப்பு - I

தொழிற்நுட்ப வழிமுறைகள்

குளம் தேர்ந்தெடுப்பு

குளம் தேர்ந்தெடுக்கும் போது அந்த குளத்தில் உள்ள மண், நீர் இருப்பு, அதிக அளவு நீர் தேக்கம் மற்றும் குளம் வெள்ளம் வராத இடத்தில் இருக்க வேண்டும். குளம் சொந்தமாக அல்லது வாடகைக்கு கூட எடுக்கலாம்.

குளத்தை முன்னேற்ற:

  • குளத்தில் தூர் எடுத்தல்
  • ஆழமாக குளம் எடுத்தல்
  • புதிதாக தோண்டிய குளம்
  • நீர் நிலைகளில் தடுப்பான்கள்
  • மேட்டுக்கரை கட்டுதல்/சரி செயதல்
  • நுழைவு வாயில்/வடிகால் கட்டுதல்
  • மற்றும் இதர தேவைகள் மின் இணைப்புகள், காவலர் குடில் பொருட்கள், ஆகியவை திட்டத்தின் அளவைப் பொருத்தே அமையும்.

குள
மேலாண்மை

மீன் வளத்தில் குள மேலாண்மை ஒரு முக்கியமானது. மீன் இருப்புக்கு முன்னாடியும் பின்னாடியும் பாதுகாக்க வேண்டும்.


முன்
இருப்புகள்
  • புதிய குளமாக இருந்தால் தண்ணீர் விட்டு நிரப்ப வேண்டும். அதற்கு முன் களைச் செடிகளை அகற்ற வேண்டும் மற்றும் தேவையில்லாத மீன்களை நீக்க வேண்டும்.
  • இயந்திரம், இரசாயனம் அல்லது கைகளால் களைச்செடிகளை அகற்றலாம்.
  • தேவையில்லாத மீன்களை பிடிக்க வலை அல்லது இலுப்பை பிண்ணாக்கு 2500 கீ/ஹெ பயன்படுத்தலாம்.


சுண்ணாம்பிடுதல்

அமிலத்தன்மை குறைந்தால் சுண்ணாம்பு போடலாம். இதனால் கார அமிலத்தன்மை சமமாகும். அதிகமாக சுண்ணாம்பிட்டால்

  • கார அமிலத்தன்மை அதிகரிக்கும்
  • அமிலம் குறைக்க கரைசலாக பயன்படும்
  • கார அமிலத் தன்மையை சமமாக வைத்தக்கெரள்ளும்
  • ஒட்டுண்ணிகளை கொல்லும்
  • கரிம சிதைவுபடுதல்

சாதாரண சுண்ணாம்பு அளவுகள் 200-250கீ/ஹெ. காரஅமிலத்தன்மைக்கு ஏற்றவாரு சுண்ணாம்பு அளித்தல்

மண்ணின் கார அமிலத்தன்மை
சுண்ணாம்பு கீ/ஹெ.
4.5-5.0
2000
5.1-6.5
1000
6.6-7.5
500
7.6-8.5
200
8.6-9.5
-

 

கருவுறுதல்

மீன்வளத்தில் முக்கியமானது கருவுறுதல். இதனால் மீன் உற்பத்தி அதிகரிக்கிறது. குளத்தின் மண்ணுக்கு ஏற்ப அட்டவணை போட வேண்டும். இயற்கை அல்லது செயற்கை உரம் சேர்த்து பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். மீன் வளர்ச்சி, உணவு இருப்பு, மற்றும் பருவநிலைக்கு ஏற்றவாறு உரமிட வேண்டும்.

  • இயற்கை உரம்: சுண்ணாம்பு இட்டு 3 நாட்களுக்கு பின் இயற்கை உரம் இட வேண்டும். மாட்டு சாணம் 5000 கீ/ஹெ. இடலாம்.
  • செயற்கை உரம்: இயற்கை உரமிட்டு 15 நாட்களுக்கு பின் செயற்கை உரமிட வேண்டும்.

செயற்கை உரமிடும் அளவுகள்

மண் வளங்கள்
அமானியா சல்பைட்
யூரியா

1).நைட்ரஜன் (மி.கீ/100கீ மண்)

70

30

i). அதிகமாக (51-75)

90

40

ii).நடுநிலையாக (26-50)

140

60

iii).குறைவாக (25 வரை)

-

-

2).பாஸ்பரஸ்  (மி.கீ/100கி மண்)

தனியாக சூப்பர் பாஸ்பேட்

மூன்று மடங்கு சூப்பர் பாஸ்பேட்

i) அதிகமாக (7-12)

40

15

ii) நடுநிலையாக (26-50)

50

20

iii) குறைவாக (3 வரை)

70

30

 

இருப்புச் செய்தல்

உரமிட்டு 15 நாட்களுக்கு பின் குளத்தை இருப்புச் செய்தல் வேண்டும். குளத்தில் மீன் குஞ்சுகள் 10 செ.மீ. அளவு இருந்தால் 5000 குஞ்சுகள்/ஹெ இருப்புக் சேய்யலாம். மீன் தேவைக்கு ஏற்ப 3,4 அல்லது 6 மீன் இனங்களை ஒன்றாக வளர்க்கலாம்.


மீன் இன விகிதம்

இனங்கள்

3 இனங்கள்

4 இனங்கள்

6 இனங்கள்

கட்லா

4.0

3.0

1.5

ரோகு

3.0

3.0

2.0

மிர்கால்

3.0

2.0

1.5

வெள்ளிக்கொண்டை

-

-

1.5

புல்க்கொண்டை

-

-

1.5

பொதுக்கொண்டை

-

2.0

2.0

 

பின் இருப்பு செய்தல்

மேலுணவிடுதல்

மீன்கள் குளத்தில் உள்ள உணவைவிட அதிகமாக உணவு உண்ணும். மீன்களுக்கு தினமும் தவிடு மற்றும் பிண்ணாக்கு கலவையை உணவிடலாம். இந்த உணவை மூங்கில் தட்டில் வைத்து கிழே வைக்க வேண்டும். அல்லது மூலைகளில் தெளிக்க வேண்டும். மீன் இனங்கள் அனைத்தும் உணவுக்காக ஒரே இடத்திற்குச் சென்று அவற்றின் உணவுத் தேவையை பூர்த்தி செய்கின்றன. அந்த இடத்தில் நாம் உணவுகளை போட வேண்டும்.


உணவளவுகள்

காலங்கள்

அளவுகள்/கி./நாள்

I   கால் பங்கு

1.5-3

II  கால் பங்கு

3-6

III  கால் பங்கு

6-9

IV  கால் பங்கு

9-12

மொத்தம் (வருடத்திற்கு)

1,655-2,700

உரமிடுதல்

  • இயற்கை உரங்கள் மாதத்திற்கு - 1000கி/ஹெ. இட வேண்டும்.
  • செயற்கை உரங்கள், கரிம உரங்கள் இடும் மாத இடைவேளையில் இட வேண்டும். அதிகமாக இட கூடாது.

மீன் அறுவடை: (மீன் பிடிப்பு):
சாதாரணமாக முதல் வருடத்தின் கடைசியில் மீன் பிடிப்பார்கள். அப்போது மீன்கள் 750 கிராம் முதல் 1.25 கிலோ வரை இருக்க வேண்டும். ஒரு வருடத்தில் 4-5 டன்/ஹெ. மீன் கிடைக்கும். குளத்தில் நீரை வடிகட்டி அல்லது தொடர்ந்து வலைகளை வீசுவதால் மீன்களை பிடிக்கலாம்.


மீன்
வளத்தின் வளர்ச்சிகள்

மீன் உற்பத்தியில் நிர்வாகிகளுக்கு நிறைய வழிமுறைகள் வந்துள்ளது. இதனால் மீன் உற்பத்தியை அதிகரிக்காம். நிறைய இருப்புக் செய்வதால் நிறைய மீன்கள் கிடைக்கும் ஒருங்கிணைந்த மீன் வள்ர்ப்பினால் உற்பத்தி மற்றும் இயற்கை உரம் கிடைக்கும். இதனால் 7-10 டன்/ஹெ/வருடம் மீன் கிடைக்கும்.

இணைப்பு II
வரவு செலவுகள் (1ஹெ.குளம் 1மீ தோண்டுவதற்கு)

எண்

விவரங்கள்

புதிதாக தோண்டப்பட்ட 1மீ ஆழமுள்ள குளம்

A

முதலீட்டுச் செலவீனம்

150000

1.

தோண்டுவதற்கு

20000

2.

வடிகால் அமைக்க

5000

3.

வலைகள் மற்றும் கருவிகள்

5000

 

மொத்தம்

175000

B

திரும்ப போட வேண்டிய தொகை

 

1.

சுண்ணாம்பு 500கி, ரூ.5/கி

2500

2.

மீன் குஞ்சுகள் 5000 (எ) (ரூ400/1000கி)

2000

3.

இயற்கை உரம் (மாட்டு சாணம்)15டன் ரூ300/டன்

4500

4.

யூரியா 330கி (ரூ5/கி)

1650

5.

மூன்று மடங்கு சூப்பர் பாஸ்பேட் 165கி(ரூ5/கி)

825

6.

இலுப்பை பிண்ணாக்கு 1350கி (ரூ6/கி)

8100

7.

தவிடு 350கி (ரூ3/கி)

4050

8.

காப்பீட்டுத் தொகை 4% (உரம் மற்றும் மீன் மூட்டைக்கு)

960

9.

அறுவடை, விற்பனை மற்றும் பாதுகாப்பிற்கு

2415

 

மொத்தம்

27000

C.

வருமானம்

 

1.

உற்பத்தி

3000கி

2.

விற்பனை விலை

ரூ30

3.

மொத்த வருமானம்

90,000

இணைப்பு III
கூட்டு மீன் வளர்ப்பில் புது குளம் தோண்டுவதற்கான நிதி விவரங்கள்

A.

செலவு

வருடம் 1

வருடம் 2

வருடம் 3

வருடம் 4

வருடம் 5

வருடம் 6

வருடம் 7

வருடம் 8

1.

மாறாச்செலவுகள்

175000

-

-

-

-

-

-

-

2.

திரும்ப செய்கின்ற செலவுகள்

27000

27000

27000

27000

27000

27000

27000

27000

3.

மொத்தம்

202000

27000

27000

27000

27000

27000

27000

27000

B.

வரவுகள்

 

 

 

 

 

 

 

 

1.

விற்பனையான மீன்களின் வருமானம்

-

90000

90000

90000

90000

90000

90000

90000

2.

நிகர வருமானம்

202000

63000

63000

63000

63000

63000

63000

63000

3.

நிகர லாப செலவு மதிப்பு

273332

-

-

-

-

-

-

-

4.

நிகர லாப வருமான மதிப்பு

374428

-

-

-

-

-

-

-

5.

நிகர லாப மதிப்பு

10106

-

-

-

-

-

-

-

6.

வரவு செலவு விகிதம்

1.51:1

-

-

-

-

-

-

-

C.

வட்டி விகிதம்

25%

 

 

 

 

 

 

 

(ஆதாரம்: http://nabord.org./model/bankprojects/Fisheries.asp.)

 

 
மேலாண்மை
   
   
இதரவகை
   

தீவு வகை மீன்வளர்ப்பு
கடல்முகத்துரை மீன் வளர்ப்பு
நீர் மாசுபடுதல் மீன் வளர்ப்பு
கட்டுப்படுத்தப்பட்ட மீன் வளர்ப்பு முறை
கேள்வி-பதில்

   
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008