மீன் வளம் :: மண்

அடிமண் மேலாண்மை

அடிமண் தான் ஒரு குளத்தின் வளத்தை நிர்ணயிக்கிறது. குளத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களைப் பொறுத்தே அதில் உள்ள உயிர்களின் எண்ணிக்கை பெருக்கம் அமையும். இந்த ஊட்டச்சத்துக்கள் அடிமண்ணில் தான் அதிக அளவு அடங்கியுள்ளன. அடிமண் தான் குளத்தின் வேதியியல் தன்மையை பராமரிக்கிறது. எனினும் எல்லா குளங்களிலும் இந்த அடிமண்ணின் தரம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அதன் தரத்தை மேம்படுத்த பல முறைகள் பின்பற்றப்படுகின்றன.

தன்மை


மண் உருவான பாறைகளைப் பொறுத்து மண்ணின் தன்மை மாறுபடும். குளத்தில் மண்ணின் இயற்பியல் - வேதியியல் பண்புகளை பல காரணிகள் பாதிக்கின்றன. நல்ல மீன் வளர்ப்பிற்கு உகந்த மண் அதிக மணலாகவோ அல்லது களிமண்ணாகவோ இருத்தல் கூடாது. ஏனெனில் மணற்பாங்கான மண்ணானது எந்த ஒரு ஊட்டச்சத்துக்களையும் தக்கவைத்துக் கொள்ள இயலாது. அதேபோல் களிமண், ஈரத்தையும் அனைத்து வகை ஊட்டச்சத்துக்களையும் அதிகமாக உறிஞ்சி தக்கவைத்துக் கொள்ளும். குளத்தில் மண் அதிக மணலாக இருந்தால் அங்கு நிறைய அங்கக உரங்களை இட்டு மண்ணின் தன்மையை மேம்படுத்த வேண்டும். பொதுவாக மட்கிய தொழுவுரம் 10000 - 15000கி / எக்டர் / என்ற அளவில் ஆண்டு தோறும் இடவேண்டும்.

மண்ணின் அமிலத்தன்மை

மண்ணானது அமிலத்தன்மை அல்லது காரத்தன்மையுடையதாகவோ, நடுநிலை கொண்டதாகவோ இருக்கலாம். சராசரி அமிலகாரத்தன்மை 6-8 ஆக இருத்தல் வேண்டும். அமிலத்தன்மையுடைய மண்ணில் காணப்படும் நீர் சற்று குறைந்த காரத்தன்மையுடனும் கடினமானதாகவும் இருக்கும். இதில் அலுமனியம், இரும்பு போன்ற தாதுக்கள் சற்று அதிகம் காணப்படும். அமிலத் தன்மையுள்ள குளங்கள் உரங்கள் இட்டாலும் நல்ல பலனைத் தராது. இதற்கு சுண்ணாம்பு இடுவதே சிறந்தது.

அடிமண்ணின் உயர்வளியேற்றம்


நீரில் கரைந்த ஆக்ஸிஜன் மண்ணினுள் வேகமாகப் பரவ முடியாது. சில மி.மீ ஆழத்திற்கு மேல் மண்ணில் உயிர்வளிக் காற்று இருக்காது. நீர் சுழற்சி, காற்றளித்தல் மூலம் ஆக்ஸிஜனைச் செலுத்தினால் அடிமண்ணிற்கு ஆக்ஸிஜன் கிடைக்கச் செய்யலாம் உள்ளார்ந்த மீன் வளர்ப்பில் மேற்புற மண்ணில் அதிகம் ஆக்ஸிஜன் இருப்பதில்லை. ஆக்ஸிஜன் ஒடுக்க விகிதம் குறைவாக இருக்கும்போது ஹைட்ரஜன் சல்ஃபைடு மற்றும் சில விஷப் பொருட்கள் உற்பத்தியாகின்றன. சோடியம் நைட்ரேட்டானது ஆக்ஸிஜனற்ற சூழ்நிலையில் உயிரிகளுக்கு ஆக்ஸிஜனை வழங்குவதால் ஹைட்ரஜன் சல்ஃபைடு போன்ற விஷப் பொருட்கள் உருவாவதைத் தடுக்கின்றன.

குளத்தின் அடித்தளம் வற்றிப்போதல்


மண்ணின் துளைகளின் வழியே நீர் ஆவியாவதால் தாவரங்களுக்கு இடையே உள்ள பகுதி நீர் வற்றி வறண்டுபோகிறது. இதனால் மண்ணின் நுண்ணுயிரிகளுக்கு அங்ககப்பொருட்களை மட்கச் செய்வது எளிதாகிறது. அதிகமாகக் காயவிட்டாலும் நுண்ணுயிரிகள் இறந்துவிடநேரும். ஆதலால் 2-3 வாரங்கள் வரை காயவைப்பதே போதுமானது. உலர்ந்த மண்ணை தட்டுக் கலப்பை கொண்டு உழவு செய்வதும் நல்ல காற்றோட்டத்திற்கு வழிவகுக்கும். ஆனால் மண் அரிப்பு ஏற்படாமல் இருக்க உழவு செய்த மண்ணைக் கெட்டிப்படுத்திவிட வேண்டும்.

மீன் குளங்களுக்கு உரமிடுதல்


குளத்தின் மீன் பெருக்கமானது இயற்கை குளத்தில் உள்ள நுண்ணுயிரிகள், வளங்கள், சரியான தட்பவெப்பநிலை மட்டுமின்றி சரியான அளவு இடப்படும் உரத்தினையும் பொறுத்து அமையும்.

மீன் வளர்ப்பில் நீர்மேலாண்மை


மீன்கள் வளர்ப்பில் நீரின் பங்கு மிக முக்கியமானது. மீன்கள் சுற்றுப்புரச் சூழலைப் பொறுத்து எளிதில் பாதிக்கப்படும் நீரின் தன்மை மாறினாலோ அல்லது தரம் குறைந்தாலோ மீன்கள் பெரிதும் பாதிக்கப்படும். எனவே இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நீரின் தரத்தை பாதுகாக்க வேண்டியது மிக முக்கியம் ஆகும்.

கரைந்துள்ள ஆக்ஸிஜன்


குளத்து நீரின் சராசரி கரையும் ஆக்ஸிஜன் அளவு 1 லிட்டருக்கு 5மி.கி. இந்த அளவில் தான் மீன்கள் நன்கு வளரும் கரைந்துள்ள ஆக்ஸிஜன் குறைவாக இருந்தால் ஆக்ஸிஜன் அளிக்க வேண்டும். இதற்கென ‘சக்கர காற்றுப் புகுத்தி’ பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. காற்றுப்புகுத்தியை சரியான இடத்தில் வைக்க வேண்டும். ஏனெனில் கரை ஓரங்களில் புகுத்தி வைக்கப்படும்போது அதிக அளவு ஆற்றல் பாய்வதால் குளத்தின் அடிப்பாகம் பாதிக்கப்படுகிறது. இதைத் தடுக்க சரியான இடத்தில் காற்றுப் புகுத்தியை வைக்க வேண்டும்.

வெப்பநிலை


குளிர்நீர் மீன்வளர்ப்பிற்கு 14-180  செல்சியசும் மித வெப்ப மண்டல மீன்களுக்கு 24-300 செல்சியசும் ஏற்றவை. வளர்ப்புச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு வெப்பநிலையைச் சரி செய்து கொள்ள வேண்டும். எ.கா: குஞ்சு பொரிப்பு வலைகள் பெரிய அளவு கொண்ட வளரிடத்தில் வெப்பநிலையை மாற்றுவது கடினம். காற்றுப் புகுத்திகளை அமைதியான முன்பால் (மதிய) வேளைகளில் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வதால் குளத்தின் வெப்ப அடுக்கமைவுகளைப் படிப்படியாக உடைத்து (அடிப்பகுதியில் உள்ள) குளிர் நீரையும், (மேற்பகுதியில் உள்ள) வெப்பநீரையும் ஒன்றுடன் ஒன்று கலக்கச் செய்யலாம். குளத்தின் கரை ஓரங்களில் மரங்கள் வளர்ப்பதால் வெப்ப அடுககமைவுகள் குறைக்கலாம். எனினும் மரங்கள் நல்ல காற்றோட்டத்தைத் தடை செய்வதுடன் சூரிய ஒளி உட்புகுவதைக் குறைத்துவிடும். இதனால் குளத்தினுள் ஒளிச்சோர்க்கை குறைந்து அதன் விளைவாக உற்பத்தி குறைய வாய்ப்புள்ளது.

நீர் கலங்கல்


மிதக்கும் மண் துகள்கள், மிதவைத் தாவர உயிரிகள் மற்றும் அங்ககப் பொருட்கள் சிதைவதால் ஏற்படும் அங்ககத் துகள்கள் போன்றவை கலப்பதால் நீர் கலங்கல் தன்மை அடைகிறது. சாதாரணமாக இந்த கலங்கல் தன்மை 40-60 செ.மீ வரை இருக்கலாம். மிதவைத் தாவரங்கள் தான் அதிக கலங்கல் தன்மையை ஏற்படுத்துகின்றன. இதனால் ஏதும் பாதிப்பில்லை. அதிக பாசிப்பெருக்கம் ஒளி மற்றும் வெப்ப ஊடுருவலைத் தடுப்பதால் உற்பத்தி குறையும். மண் துகள்கள் மிதப்பதைக் குறைக்க 500 - 1000கி அங்கக உரத்தை ஒரு எக்டருக்கு இடுதல் வேண்டும். ஜிப்சம் ஒரு எக்டருக்கு 250-500 கிலோ வரை இடலாம்.

அம்மோனியா


மீன்கள் அயனாக்கம் செய்யப்படாத அம்மோனியாவினால் எளிதில் பாதிக்கப்படும். சராசரி அம்மோனியா அளவு 0.02 - 0.05 மி.கி / லி அதிக அளவு ஆக்ஸிஜன் அல்லது கார்பன்-டை-ஆக்ஸைடு இருக்கும்போது அம்மோனியாவின் விஷத்தன்மை குறைவாக இருக்கும். மிதவைத் தாவர வளர்ச்சியும் அம்மோனியாவை மட்டுப்படுத்தும். எக்டருக்கு 1200-1800 கிலோ உப்பு நீரில் அம்மோனியாவின் விஷத்தன்மையைக் குறைக்கலாம். ஃபார்மலினும் பயன்படுத்தப்படுகிறது.

நைட்ரைட


நன்கு ஆக்ஸிஜனேற்றம் செய்யப்பட்ட குளத்தில் நைட்ரைட் அடர்த்தி சரியான அளவே இருக்கும். குஞ்சு பொரிப்பகங்களில் உயிரியல் வடிகட்டி பயன்படுத்துவதாலோ அல்லது உப்பு சேர்ப்பதன் மூலமாகவோ நைட்ரைட் அளவைக் குறைக்கலாம். அங்ககக் கழிவுகளை முறையாக அகற்றுதல் போதுமான காற்றோட்டம் மற்றும் சரியான அளவு உரமிடுதல் போன்றவை நைட்ரைட் விஷத் தன்மை ஏற்படாமல் தடுக்க உதவும்.

நைட்ரஜன் சல்ஃபைடு


நன்னீர் மீன் குளங்கள் நைட்ரஜன் சல்ஃபைடு இன்றி தூய்மையாக இருத்தல் அவசியம். ஒரு லிட்டரில் 0.01 மி.கிராம் அளவு நைட்ரஜன் சல்ஃபைடு இருந்தாலும் மீன்களின் சமச்சீர் தன்மை குறைந்து அழிவு ஏற்படும். நீரை அடிக்கடி மாற்றுதல் இவ்விளைவைத் தடுக்க உதவும். சுண்ணாம்பு சேர்ந்து அமிலகாரத் தன்மையை உயர்த்துவதன் மூலமும் நைட்ரஜன் சல்ஃபைடு உருவாவதைக் குறைக்கலாம்.

அமில காரத்தன்மை


அமில காரத்தன்மை  என்பது நீரின் நைட்ரஜன் அயனிகளின் எண்ணிக்கையைக் கொண்டு அதன் அமிலம் மற்றும் காரத் தன்மையைக் குறிப்பதாகும். நீரின் அமிலகாரத் தன்மை மீன்களின் உடற்செயல் செயல்பாடுகளைக் குறைக்க உதவும் நீரின் அம்மோனியா, நைட்ரஜன் சல்ஃபைடு செயல்பாடுகளில் இதன் தாக்கம் அதிகம். மேலும் ஊட்டச்சத்துக்களின் கரையும் தன்மையை அதிகரிக்கச் செய்கிறது. அமிலகாரத் தன்மை குறைவாக இருந்தால் சுண்ணாம்பு சேர்த்து அதை 6 என்ற அளவிற்குக் கொண்டு வர வேண்டும்.

அமிலகாரத்தன்மை

விளைவுகள்

4

அமில முடிவுப் பகுதி

4-6

மெதுவான வளர்ச்சி

6-9

வளர்ச்சிக்கு ஏற்றது

9-11

குறைவான வளர்ச்சி அதிக நேரம் இந்நிலையில் இருந்தால் மீன்கள் இறக்க நேரிடும்

11+

கார முடிவுப் பகுதி

புதிய மீன் குஞ்சுகளை சேர்ப்பதற்கு அல்லது உரமிடுவதற்கு சில வாரங்களுக்கு முன்பே சுண்ணாம்பு சேர்க்கப்பட வேண்டும்.

மொத்த காரத்தன்மை


குளத்தில் காரத்தன்மை பொதுவாக குறைந்தே காணப்படும் (20 மி.கி / லி) மழைகாலங்களில் மிதவைத் தாவரங்களில் அதிகரிக்கும்போதும் கால்சியம் கார்பனேட் குறைந்த அளவே அமிலச் செறிவு கொண்டிருக்கும். இது மீன் எண்ணிக்கையைக் குறைத்து விடும். அதே போல் லிட்டருக்கு 300 மி.கி க்கு அதிகமாக காரத்தன்மை இருந்தாலும் கார்பன்டை ஆக்ஸைதின் அளவு குறைவதால் மீனு் உற்பத்தி தடைபடும். நன்னீர் மீன் வளர்ப்பில் சராசரியாக 60-300 மி.கி.லிட்டருக்கு என்ற அளவில் இருக்க வேண்டும்.

கடினத்தன்மை


நீரின் கடினத்தன்மை நன்னீரில் 40 மி.கி / லி கால்சியம் கார்பனேட் ஆக இருத்தல் வேண்டும். இவ்வாறு இருந்தால் மீன்கள் அமிலக்காரத்தன்மை மாற்றம் மற்றும் உலோக அயனிகளால் பாதிக்கப்படாமல் இருக்கும். கடினத்தன்மை மிகக் குறைவாக இருந்தால் சிறிது சுண்ணாம்பு சேர்க்கலாம்.

கார்பன் - டை - ஆக்ஸைடு

நன்னீர் மீன்கள் வளர்ப்பிடத்தில் குறைந்தளவே இருக்க வேண்டும். கார்பன் - டை - ஆக்ஸைடு (< 8 மி.கி / லி) ஹைட்ரஜனேற்றப்பட்ட சுண்ணாம்பு காற்றுப்புகுத்தி கொண்டு அமிலகாரத் தன்மையை அதிகரிக்கச் செய்கிறது. இது கார்பன் - டை - ஆக்ஸைடை கட்டுப்படுத்துகிறது. 1மி.கி ஹைட்ரஜன் ஏற்றப்பட்ட சுண்ணாம்பானது 1.68 மி.கி கார்பன் - டை - ஆக்ஸைடை அகற்றுகிறது.

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2014