மீன் வளம் :: பொழுதுபோக்கு மீன் பிடிப்பு
பொழுதுபோக்கு மீன்வளம்

இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களுக்கு மீன் பிடிப்பு என்பது பொழுதுபோக்காகவே அமைந்துள்ளது. பொழுது போக்கு மீன பிடிப்பின் மூலம் மக்கள் திருப்தி அடைகின்றனர். மீன் பிடிப்பது உடல் நலத்திற்கும் நல்லது என்று மருத்துவ துறையே கூறியுள்ளது.

நமக்கு தெரிந்த முக்கியமான உணவு மீன்களில் சில மீன்கள் பொழுதுபோக்கு மீன்கள். பொழுதுபோக்கு மீன்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். சிறிய வகை மற்றும் பெரிய வகை மீன்கள். பெரியவகை மீன்களின் எடை 50 கிலோவிற்கு மேல் இருக்கும். கலவா, பனிக்கலவா, மற்றும் பூமீன்கொண்டை. இவை அனைத்தும் பெரிய மீன் வகையை சார்ந்தது. இதுமட்டுமல்லாமல். பொழுதுபோக்கு மீன்பிடிப்பில் பல வகைகள் உண்டு.


முக்கியமான
பொழுதுபோக்கு மீன்கள்

பூமின் கொண்டை, கலவா, மற்றும் பெரிய கெளுத்தி ஆகிய மீன்கள் பொழுதுபோக்கு மீன்கள். நண்ணீர் மற்றும் மென் நீரில் உயிர்வாழ்கின்றது. ஒரு மீனினுடைய தன்மையும் மற்றொரு மீனினுடைய தன்மையும் மாறுபடும். அதாவது உடலின் வடிவம், இயல்புகள்(குணங்கள்), துடுப்பு அமைப்புகள் அளிக்கக்கூடிய நன்மைகள் மற்றும் நிறத்தில் வேறுபட்டு காணப்படும். தோற்றம் மற்றும் சூழ்நிலைகளை வைத்து பொழுதுபோக்கு மீன்களை இரண்டு வகையாக பிரிக்கலாம்.

  1. நன்னீர் பொழுதுபோக்கு மீன்கள்
  2. கழிமுக மற்றும் கடல் பொழுதுபோக்கு மீன்கள்

நேரோப்டிரஸ் சிட்டலா, சீலா அர்ஜன்டியா, ரைமஸ்போலோ, டோர்புட்டிடோரா, டோர்டோர்,டோர் கூட்ரி, அக்ரோசோசில்லியஸ், ஸகிஜோமொரய்கித்தஸ், ,சொகினஸ், ஸ்கஸஜோதொரக்ஸ், ப்ளானிபோரன்ஸ், கட்லா, லேபியோ கீளபவுள், ரோகு, மிர்கான், வலாகோ அட்டு, குலுப்பிசோவா கர்குவா, சிஸ்லோன்டிய, பங்காசியஸ், மைஸ்டஸ், பகாரிகள், சன்னா மருரியஸ் ஆகியவை நன்னீர் பொழுதுபோக்கு மீன்களாகும். மேகலோப்ஸ் சைட்ரினாய்ட்ஸ், லேட்ஸ் கால்காலிபர், எலத்திரினோனிமா டெட்ராடேக்டைலஸ், லுட்ஜனஸ், அர்ஜன்டிகே்குலேட்டா, ஸ்கோட்பெறோமோரஸ், ஸபாரஸ் ஆகியவை கழிமுக மற்றும் கடல் பொழுதுபோக்கு மீன்களாகும்.


மீன்
பிடிப்பு கருவிகள்

முந்தைய காலங்களில் மீன் பிடிக்க வலைகள் மற்றும் ஈட்டிகளை உபயோகித்தனர். படிப்படியாக முன்னேறி துடுப்பு அல்லது செயற்கை கண்ணி வைத்து பிடித்தனர். பின்பு மீன்பிடிப்பு கப்பலில் பொறி, கொக்கி, சுருள், தூண்டில் கயிறு, மற்றும் தூண்டில் ஆகிய கருவிகள் இணைந்துள்ளது. இது மட்டுமல்லாமல் அமிழ்கட்டை மற்றும் சுழலக் கூடிய கருவிகள் தற்போது இணைக்கப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு
மீன் பிடிப்பு மற்றும் சுற்றுலா

சுற்றுலா மற்றும் மீன்பிடிப்பு தொழில் மூலமாக அதிக அந்நிய செலாவணி ஈட்டும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் உள்ள மீன்களில் சில மீன்கள் பொழுதுபோக்குக்காக வளர்க்கப்படுகின்றன . (பூமீன் கொண்டை, கலவா, இன்னும் சில). கோடிக்கணக்கான சுற்றுலா பயணிகளுக்கு மீன்பிடிப்பு பொழுதுபோக்காக அமைந்துள்ளது. அனைத்து வயதினரும் தூண்டில் மீன்பிடிப்பை பொழுதுபோக்காகவே வைத்துள்ளனர். பொழுதுபோக்கு மீன்பிடிப்பில் முக்கியமானவை சுற்றுச்சூழல், நீரின் தன்மை, இயற்கை அழகு மற்றும் தனிமை இவை அனைத்தும் மக்களை மீன் பிடிக்க தூண்டுகிறது.

மற்ற நாடுகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளை மீன்பிடிப்பில் ஈர்க்க சில முயற்சிகளை இந்தியா மேற்கொண்டுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு கெண்டை மீன்பிடிப்பு முன்னேற்றம் ஹிமாச்சலத்தில் பலம்பூர் என்ற நிறுவனம் ஏர் இந்தியா 'டிரக் அண்டு டூர்' என்ற திட்டத்தை துவங்கியுள்ளது. மார்டின் கிளார்க் மற்றும் ராபர்ட் ஹிவிட் என்ற இரண்டு ஆங்கிலேயர்கள் 1980ல் கர்நாடக மாநிலத்திற்கு வந்து காவேரி ஆற்றில் மீன்பிடித்தனர். தென் இந்திய வன உயிர் சங்கத்தில் அனுமதி பெற்று, அங்கேயே தங்கி மீன்பிடித்து வந்தனர். அப்போது பெரிய மீன் கெண்டை பிடிப்பட்டது. அதனுடைய எடை 41.76 கி, நீளம் 1.7மீ, சுற்றளவு 1.0மீ. ஒரு மாதத்திற்குள் 40 கெண்டைகளை பிடித்து திரும்ப ஆற்றிலே விட்டனர்.

பொழுதுபோக்கு மீன்பிடிப்பின் மூலம் ஆய்வரங்கள், போட்டிகள் மற்றும் முகாம்கள் என நடந்து வந்தது. இதன் மூலம் சுற்றுலா பயணிகளின் ஆர்வம் அதிகரித்தது. பொழுதுபோக்கு மீன்பிடிப்பில் முக்கியமானது மீன்பிடிப்பு உரிமம் பெற வேண்டும். மாநில மீன்வளத்துறை மூலம் உரிமம் பெற்று அதன்பிறகு தான் மீன்பிடிக்க வேண்டும்.
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2014