வனவியல் தொழில்நுட்பங்கள் :: விதைக்கரனை வனவியல்

விதையில்லா வீரிய நாற்றுக்கள் உற்பத்தி
விதைக்கன்றுகளின் குறைவான உயிர்ப்பிடிப்புத் தன்மை, குறைவான வளர்ச்சி, ஒத்த வளர்ச்சி இல்லாமை ஆகிய குறைபாடுகள் வீரிய கன்றுகள் உருவாக்குவதன் மூலம் தவிர்க்கப்படுகிறது. இவ்வீரியக் கன்றுகள் அதிக வளர்ச்சித் திறனுடையவை. உயர் தொழில்நுட்பத்தைக் கொண்டு தரமான கன்றுகளை உருவாக்க குளோனல் முறையில் செயல் முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த விதையில்லா முறையின் மூலம் நாற்றுகள் உற்பத்தி செய்வதற்கான வழிமுறைகள் கேள்வியும் பதிலுமாக கொடுக்கப்பட்டுள்ளன.

விதையில்லா வீரியநாற்றுகளின் தன்மை
ஒரே மரத்திலிருந்து பெறப்பட்ட ஒத்த மரபுப் பண்புகள் கொண்ட நாற்றுகளை விதையில்லா முறையில் உற்பத்தி செய்யப்படுவதே விதையில்லா வீரியநாற்றுகள் எனப்படும்.
மிகச்சிறந்த மற்றும் அதிக உற்பத்தித்திறன் கொண்ட மரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, வெட்டப்பட்டு அதிலிருந்து வரும் மறுதாம்பு கிளைகளிலிருந்து இந்த நாற்றுகள் பெறப்படுவதால் இவைகளின் பண்புகள் தாய்மரத்தை ஒத்தே இருக்கின்றன. இந்நாற்றுகள் நவீன நாற்றுப் பண்ணைகளில் 4 முதல் 5 மாதம் வரை நன்கு பராமரிக்கப்படுகின்றன. இவ்வாறு 20 முதல் 30 செ.மீ வரை வளர்ந்த நாற்றுகள் நடவு செய்ய உகந்ததாக இருக்கும்.
உற்பத்தித்திறன்
இந்நாற்றுகளின் உற்பத்தித்திறன் சூழ்நிலையைப் பொறுத்து விதை நாற்றுகளின் உற்பத்தித்திறனை விட இரண்டு முதல் நான்கு மடங்கு வரை அதிகமாக இருக்கும்.
பண்புகள்
அதீக வளர்ச்சி வீதம்
மரபியல் ரீதியில் சிறந்த பண்புகள்
ஒரே சீரான வளர்ச்சி
அதிக விளைச்சல் மற்றும் வருமானம்
நோய் மற்றும் பூச்சித் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தன்மை கொண்டது
விதையில்லா வீரிய நாற்றுகளை கையாளும் முறைகள்
நாற்றுக்கள் நடவு செய்ய வேண்டிய இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டவுடன் மிதமாக நீருற்ற வேண்டும். ஊடனே நடமுடியாமல் போகும் நிலையில் நாற்றுகளை நன்கு காற்றோட்டமான, சூரிய வெளிச்சம் உள்ள இடத்தில் வைத்து பூவாளியின் மூலம் நாளொன்றுக்கு ஒரு முறை அல்லது இரு முறை சூழ்நிலைக்கேற்றவாறு நீருற்ற வேண்டும்.
நாற்றுகள் குப்பியிலிருந்து நீக்கப்படும் போது வளர் ஊடகம் மிகவும்  ஈரத்தன்மையாகவோ அல்லது மிகவும் காய்ந்த தன்மையானதாகவோ இருத்தல் கூடாது. மிதமாக நீர்தெளித்த நாற்றுகளை குப்பியிலிருந்து எடுக்கலாம். தனித்தனியாக குப்பியை மெதுவாகத் தட்டி அசைத்து பின்பு நாற்றுகளை எடுக்க வேண்டும்.

வேர்குப்பிகள் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்
1.வேரின் வளர்ச்சி கீழ்நோக்கிச் செல்ல அனுமதிக்கிறது
2.வேர்குப்பிகளை பயன்படுத்துவதால் வேர்சுற்றல் உருவாவதில்லை
3.மிக அதிக எண்ணிக்கையிலான வேர்கள் உருவாகிறது
4.வேர்குப்பிகள் மூலம் உருவாக்கப்டும் நாற்றுகள் பாலித்தீன் பைகளில், வளர்க்கப்படும் நாற்றுகளை விட நடவுக்குப்பின் விரைவாக வளர்ச்சி அடைவதுடன், உயிர்ப்பிடிப்பு விகிதம் அதிகமாக உள்ளது
5.நடவு செய்வது எளிமையாகவும், வேலை ஆட்கள் தேவை மிகவும் குறைவாகவும் உள்ளது
எந்தவகை மரங்களில் குளோனல் நாற்றுக்களை உற்பத்தி செய்யலாம்?
குளோனல் என்ற விதைல்லா இனப்பெருக்கமுறை என்பது அனைத்து வகையான மரங்களிலும் பயன்படுத்த முடியும். இருந்தாலும் வேகமாக வளரக்கூடிய மற்றும் குறுகிய காலத்தில் அறுவடைச் செய்யக்கூடிய மரங்களை குளோனல் முறையில் உற்பத்தி செய்தால் குறுகி காலத்தில் நல்ல மகசூல் கிடைக்கும். குறிப்பாக கீழ்க்கண்ட மரங்களை குளோனல் முறையில் உற்பத்தி செய்து அதிக அளவில் விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்.
1.காகித கூழ் மரங்கள் : தைலம், சவுக்கு மற்றும் மூங்கில்
2.உயிர் எரிபொருள்: சவுண்டல், காட்டாமணக்கு, புங்கன், இழுப்பை, சைமரூபா

 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2014