நோய் மேலாண்மை
வனப் பயிர்களில் நோய் மேலாண்மை
ஐலான்தஸ் எக்செல்ஸா (பெருமரம்):

ஹெலகான்தஸ் எலாஸ்டிக்கா என்ற தாவர ஒட்டுண்ணி பெருமரத்தை பெருமளவும் பாதிக்கிறது.
அறிகுறி:
ஹெலகான்தஸ் எலாஸ்டிக்கா, லோராதிசீஸ் என்ற குடும்பத்தைச் சேர்ந்தது. இது இளம் பச்சை நிறத்தில், நூல் போன்ற தண்டு ஓம்புயிரித் தாவரத்தைச் சுற்றிக் கொள்கிறது. இவை இலை வடிவத்தில் கொத்துக் கொத்தாக வெள்ளைப் பூக்களைக் கொண்டிருக்கும். தாவர ஒட்டுண்ணி ஓம்புயிரித் தாவரத்தைத் தொட்டவுடன், உறிஞ்சுருப்புகள்  ஓம்புயிரித் தாவர தசைகளில் ஊடுருவி அதற்கு தேவையான சத்துக்களையும் நீரையும் எடுத்துக் கொள்ளும். இதனால் மரம் முழுவதும் இந்த தாக்கம் பரவி முற்றிலுமாக செத்து விடும். இது அருகிலிருக்கும் அனைத்து மரங்களுக்கும் பறவைகள் மூலம் பரவி விடும்.
கட்டுப்பாட்டு முறைகள்:
தாக்கப்பட்ட கிளைகளை நீக்குவதன் மூலம் இந்த நோயைக் கட்டுப்படுத்தலாம். இந்த நோயின் தாக்கம் தொடக்க நிலையில் இருந்தால், தாவர ஒட்டுண்ணி ஓம்புயிரித் தாவரத்தைத் தொட்ட இடத்திற்கு கீழ் பகுதியில் வெட்டி விட வேண்டும். கடுமையாகப் பாதிக்கப்பட்ட மரங்களை வேரோடு பிடுங்கி தனிமையில் வைத்து எறித்து விட வேண்டும். 

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016