வனவியல் தொழில்நுட்பங்கள்

இலை சுரண்டும் பூச்சிகள்
இந்த குழுவானது பின்வரும் இலை சுரண்டும் வண்டு குடும்பங்களான மெலாந்திடே, கிரைசோமெல்லிடே மற்றும் கர்குலியாய்நிடே. இலை தின்னும் புழுக்கள் (லெபிடோப்டீரா) மற்றும் வெட்டுகிளிகள் (ஆர்த்தோப்டீரா), இவைகள் பெரும்பாலும் நாற்றாங்கால்களில் இலைதலைகளை பாதிக்கின்றன. பேரினமான சிலோப்டீரா, ஸ்டெர்னேஸீரா,  ஆம்லிரின்டஸ், அப்போடிரஸ், டெரியேடஸ், மற்றும் மைலோசிரஸ். வயது வந்த வண்டுகள் வன நாற்றாங்கால்கள் மற்றும் தோட்டங்களில் உள்ள நாற்றுகளின் இலை தலைகளில் அதிக சேதம் விளைவிக்கின்றன. பாதிக்கப்பட்ட இலை தலைகள் காய்ந்து கீழே விழ நேரிடும்.



 

மேலாண்மை நடவடிக்கைகள்
  • பாதிக்கப்பட்ட நாற்றுகளை இடம் பெயர்த்து அழிக்க வேண்டும்.
  • இயற்கை எதிரிகளை அறிந்து நாற்றாங்கால் இருக்கும் இடத்தில் பரவச் செய்ய வேண்டும்.
  • ஆரம்ப நிலையில் துரிதமாக கண்டறிந்து இவ்வகை பூச்சிகளை அழிப்பது மிகுந்த பலனைத் தரும்.
  • நாற்றங்கால் படுக்கைகளின் முனைகள், சுற்றுச் சூழல், மற்றும் மாற்றுப் படுக்கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
  • குஞ்சுகள் சேகரிப்பு, மண்ணைத் தோண்டி அழித்தல் போன்ற பணிகள் மூலம் இலை சுரண்டும் பூச்சிகள் பெருக்கத்தை தவிர்க்க முடியும்.
  • நாற்றங்கால்களில் பாசனத்தை சேர்த்து வெள்ளமாக நீரை நிரைப்பதன் மூலம் இலை சுரண்டும் பூச்சிகள் வெளியேற்றத்தை தவிர்க்க முடியும்.

Updated on June, 2014
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2014