வனவியல் :: அடிக்கடி கேட்கப்படும் கேள்வி
மூங்கில்

34. மூங்கில் சாகுபடியில் காணப்படும் முக்கியமான நோய்களைக் கூறுக.
இலைக் கருகல் நோய்,, வேர் முடிச்சு நோய், பக்கக் கன்று அழுகல், வேர் அழுகல், கதிர் உறை கருகல் நோய், துரு, சிற்றிலை நோய் மற்றும் நச்சுயிர் நோய்.

35. மூங்கிலின் ஒருங்கிணைந்தப் நோய் மேலாண்மையைக் கூறுக ?

  • நல்ல தரமான பக்க கன்றுகளை தேர்ந்தெடுக்கவும்.
  • நல்ல வடிகால் வசதிகள் இருக்க வேண்டும்.
  • நோய் தாக்கப்பட்ட கதிர் உறையை நீக்கிவிட வேண்டும்
  • 0.25%  காப்பராக்சிக் குளோரைடு அல்லது கார்பென்டசிம் 0.1%  (வேர் அழுகல் நோய்க்கு)
  • மான்கொசெப்  0.25%  (கருகல் நோய்க்கு)
  • சல்பர் 0.2%  (துரு நோய்க்கு)
  • பாதிக்கப்பட்ட கொத்துகளை நீக்குதல் (வைரஸ் நோய்க்கு)

36. மூங்கில் கணுக்களில் இருக்கும் மருத்துவ குணம் என்ன?
டபாசிர் / பான்ஸ்டோசென்

37. மூங்கில் கூடைகள் செய்வதற்கு பயன்படுத்தப்படும் மூங்கில் இரகங்கள் எவை?
டி.ஜெமில்டோனி, ஈ. ஹோக்காசெய், டி. கிகான்டியஸ், பி. பாளிமார்பம் மற்றும் பி. பலிடா

38. எந்த வேளாண் தொழில் துறை மூங்கிலை விலைக்கு வாங்குகிறது?
தமிழ்நாடு காகித நிறுவனம்

39.  நான் வாழ்கின்ற இடத்தில் மூங்கிலை வளர்க்க முடியுமா?
ஆமாம். சில மூங்கில்கள் மிதமான கால நிலையிலும், சில மூங்கில்கள் குளிர்ந்த கால நிலையிலும் வளரும். நீங்கள் வசிக்கும் இடம் எப்படிப்பட்டது என்பதற்கு ஏற்றவாறு மூங்கில் இரகத்தை தேர்ந்தெடுக்கவும்.

40. எவ்வளவு மூங்கில் இரகங்கள் உள்ளன?
1400 மூங்கில் இரகங்களுக்கும் மேல் உள்ளன.

41. சதுப்பு நிலத்தில் மூங்கிலை நடுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ?
மூங்கில், சதுப்பு நிலத்தில் வளராது. அது வளர்வதற்கு நன்கு நீர் வடிந்த நிலம் வேண்டும்.

42. எந்த மாதத்தில் மூங்கிலை நடுவது நல்லது ?
எல்லா மாதத்திலும் மூங்கிலை நடலாம்.

43. எனது மூங்கில் மரத்தின் இலைகள் மஞ்சளாகி உதிர்ந்து விடுகிறது. நான் என்ன செய்வது?
இது சாதாரண ஒரு நிகழ்வுகள்தான். இலையுதிர் காலத்தில் அதிகமாக இந்த நிகழ்வு காணப்படும். அழுத்தம், வறட்சி, அதிகமான நீர் மற்றும் சத்துப் பற்றாக்குறை ஆகியவை வேறு காரணங்களாக திகழ்கிறது.

44. எனது மூங்கிலின் நிறைய கொத்துகள் உடைந்து விட்டன. என்ன செய்வது?

உடைந்த கொத்துகளை அடி தளத்திலேயே கிடை மட்டமாக ரம்பத்தைக் கொண்டு வெட்டிவிட வேண்டும். கொத்துகள் குறைவாக இருந்தால் மூங்கில் கம்பை கொண்டு உடைந்த இரு பக்கத்திலும் கட்டி விடவேண்டும்
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016