நோய் மேலாண்மை

அக்கேசியா பிலானிப்ரான்ஸ்

குடும்பம் : லேகுமினேசி – மைமோசிடே
தமிழ் பெயர் : குடைவேல்
பயன்கள்:
1. எரிபொருள் : நல்ல எரிபொருள்
2. தீவனம் : இலைகளையும் காய்களையும் செம்மரி ஆடுகளும் ஆடுகளும் தீவனமாக உண்ணுகின்றன.
3. வேறு பயன்கள் : வறட்சியைத் தாங்கக்கூடியதானதால் காடாக்குவதற்கு சிறந்த மரமாகத் திகழ்கின்றது.
விதைகள் சேகரிக்கும் நேரம் : ஏப்ரல் – ஜூன்
ஒரு கிலோவிற்கு விதிகளின் எண்ணிக்கை : 3000 - 3750
முளைத்திரன் : 6 -12 மாதங்கள்
முளைப்புச் சதவிகிதம் : 25 %
விதை நேர்த்தி : விதைகளை கொதி நீரில் ஒரு நிமிடம் மூழ்கடித்து பின் குளிரவைத்து குளிர்ந்த நீரில் 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
நாற்றாங்கால் தொழில்நுட்பம் : 1. விதைகளை நாற்றுப்பண்ணையில்  நட்டப்பின் மணலை வைத்து மூட வேண்டும்.நாற்றுகள், இரண்டு இலைகள் விடும் பொழுது அதைக் கொள்கலனிலிருந்து பிடுங்க வேண்டும். நான்கு வயதான நாற்றுகள் 50 செ.மீ உயரம் வளர்ந்தப் பிறகு நடு வயலில் நாட்ட வேண்டும்.   
2. இரண்டு அல்லது மூன்று நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை தொட்டியில் நட வேண்டும்.  

 

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016