நோய் மேலாண்மை

கேசுவாரினா ஈக்விசிட்டிபோலியா

குடும்பம் : கேசுவரினேசி
தமிழ் பெயர் : சவுக்கு
பயன்கள்:
எரிபொருள் : 4800 கிலோ கலோரி / கிலோ
தீவனம் : ஏற்றதல்ல
வேறு பயன்கள் : எரிக்கட்டை, கூழ், கரி, காற்றுத்தடுப்பு மற்றும் மண் அரிப்பைக் கட்டுப்படுத்தும் மரமாக விளங்குகிறது.
விதைகள் சேகரிக்கும் நேரம் : பிப்ரவரி – மார்ச்
விதைகளின் எண்ணிக்கை / கிலோ : 7,50,000
முளைத்திரன் : மூன்று மாதங்கள்
முளைப்பு சதவீதம் : 20 %
விதை நேர்த்தி : மரத்தின் முடிச்சுகளை நசுக்கி அதன் மண்ணை உட்புகுத்தல் செய்ய வேண்டும்.
நாற்றாங்கால் தொழில்நுட்பம் : 1 x 5 மீ. மேட்டுப்பாத்தியில் நீர்ப் பாய்ச்சி விதைகளை வீசி விதைக்க வேண்டும். பின், மணலை வைத்து மூட வேண்டும்.பி.எச்.சி 10% பாத்தியில் இடுவதன் மூலம் பூச்சிகளின் தாக்குதலிலிருந்து விடுபட முடியும். ஒரு நாளிற்கு  இரண்டு முறை நீர்ப் பாய்ச்ச வேண்டும். 5 – 22 நாட்களுக்குள் முளைக்கத் தொடங்கும். பின்பு, நாற்றுகள் செ.மீ உயரம் எட்டியவுடன் நடுவயலில் நடலாம்.     
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016