வனவியல் தொழில்நுட்பங்கள்


நாற்றங்கால் தொழில்நுட்பம்

அறிமுகம்
அதிக அளவில் காடுகளை வளர்ப்பதற்கு நாற்றங்கால் அமைப்பதன் தேவை
பயனாளிகள்
இனத்தை தேர்வு செய்தல்
நாற்றங்கால் உத்தி
சாகுபடி செலவு
0.25 ஹெக்டேருக்குரிய வன நாற்றங்காலின் பிரிவுச் செலவு வரவுகள்
பயனாளிகளின் பங்களிப்பு
மறுநிதி ஒதுக்கீடு
வட்டி விகிதம்

முக்கிய மர இனங்களுக்குரிய நாற்றங்கால் தொழில்நுட்பம்


அறிமுகம்

இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாட்டிற்கு திடமான சுற்றுச்சூழல் பேணுவதற்கும், சமூதாய பொரளாதார மற்றும் கிராம முன்னேற்றங்களுக்கு, வனவியல் துறை முக்கிய பங்கு வகிக்கின்றது. வனங்கள், விறகு, தீவனம் சிறிய மற்றும் கட்டிடத்திற்கான தடி மரம் போன்ற பல்வேறு பொருள்களுக்கு பாரம்பரிய மூலதனமாகவும் மற்றும் பெறுபான்மையான மக்களுக்கு ஆதாரமாகவும் இருந்திருக்கின்றன. வனங்களால் கிராமப்புரங்களில் ஏற்படுத்தக்குடிய வேலை வாய்ப்புகளால் வரும் கிராம வருமானம் மற்றும் வருமை ஆற்றல் போன்ற வாய்ப்புகள் முறையாக பயன்படுத்தப்படுவதில்லை. தடி மரம், விறகு, தீவனம் மற்றும் மற்ற பிற வனப்பொருட்களை சட்டவிரோதமாக அகற்றுவதால் நாட்டின் வனங்கள் பெரிய நிர்பந்தத்திற்குள்ளாகியுள்ளன.
மாநில வனத்துறைகள், வனங்கள் சார்ந்த நிறுவனங்கள், அரசு-சாரா நிறுவனங்கள் போன்றவைகளாக பல்வேறு காடு வளர்ப்பு மற்றும் பயிரிடுதல் திட்டங்கள் செயல்படுத்தினாலும் உரிய நேரத்தில் காடு வளர்ப்பு பகுதிகளுக்கு அருகிலேயே தரமான நாற்றுகள் கிடைப்பது மிகப் பெரிய தடையாக இருப்பதால் பரந்த அளவில் தனியார் நிலங்கள் தரிசு நிலங்களில் காடு வளர்ப்பது சிரமமாக இருக்கின்றது.

அதிக அளவில் காடுகளை வளர்ப்பதற்கு நாற்றங்கால் அமைப்பதன் தேவை

நாட்டின் மூன்றில் ஒரு பங்குள்ள பூகோள பகுதிகள் வனங்கள் / மரங்களால் இருக்க வேண்டும் என்று தேசிய வனக் கொள்கை வலியுறுத்துகிறது. இதை முன்னிட்டு 10 வது ஐந்தாண்டு கால திட்டத்தில் அணுகுமுறை படிவமாக 25 சதவிகித நிலங்கள் புத்தாண்டு கால திட்ட இறுதியில் வனங்களாகவோ / மரங்களாலோ இருக்குமாறு மற்றும் பதினொன்றாம் திட்ட காலத்தின் இறுதியில் இது 33 சதவிகிதமாக இருக்குமாறு இலக்கை வைத்தனர். இத்திட்டம் நீர்வளம் உள்ள பகுதிகளில் நவீன நாற்றங்கால்கள் அமைத்து தரமான நாற்றுகள் அளிப்பதற்கு முக்கியத்துவம் வழங்குகின்றது. நிரந்தரமாக அழிந்து வரும் வனவளங்கள் மற்றும் அதிகரித்து வரும் காடு அழித்தல்கள் போன்றவைகளை முன்நிறுத்தி, சமுதாய மக்களையும் சுறுசுறுப்பாக காடு வளர்ப்பு திட்டங்களில் பங்கு பெற வைத்தால் தான் இத்திட்டங்கள் வெற்றி பெரும். கிராம சமூகம் நேரடியாக பயன் பெரும் வரை சிறிய ஊக்குவிப்பு பணம் அவர்களுக்கு வழங்கப்படுவது நன்றாக அறிந்த விஷயமாகும். கிராமப்புரங்களில் நாற்றங்கால்கள் அமைப்பதற்கு கடனுதவி செலவுகள் மூலம் எளிய மற்றும் சரியான நேரத்தில் நாற்றுகள் கிடைக்குமாறு செய்வதன் மூலம் கிராமப் பகுதிகளில் வேலை வாய்ப்பு மற்றும் வருமானம் ஈற்றுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தலாம். சமுதாய மக்களை வன நாற்றங்கால்கள் அமைப்பதற்கு ஈடுபடுத்துவது, எதிர்காலத்தில் வன மறுமலர்ச்சி திட்டங்களில் முக்கிய அம்சமாக இருக்கும். இங்கே குறிப்பிட்டுள்ள நாற்றங்கால் அமைக்கும் நிதியுதவி முறை பெரிய அளவில் வனம் வளர்ப்பதற்கு பேருதவியாக இருக்கும்.

பயனாளிகள்

விவசாயிகள், சுய உதவிக் குழுக்கள், மாநில வன மேம்பாட்டு நிறுவனங்கள், வனம் சார்ந்த நிறுவனங்கள், அரசு-சாரா நிறுவனங்கள் போன்றவைகள் ஒருங்கிணைக்கப்படாத நாற்றங்கால்களை அமைக்கலாம்.

இனங்களை தேர்வு செய்தல்

உள்ளூரில் நல்ல வரவேற்புள்ள / தேவைக்கேற்ப திட மரங்கள், விறகு, தீவனம், பழங்கள், மரம் அல்லாத வனப் பொருட்கள் மற்றும் அழகு அம்சம் கொண்ட இனங்களின் ஆரோக்கியமான நாற்றுகளை நாற்றங்கால் அமைத்துத் தரலாம்.

நாற்றங்கால் தொழில்நுட்பம்

0.25 ஹெக்டேர் பரப்பளவுள்ள பகுதியில் 1.25 லட்சம் நாற்றுகள் வளர்ப்பது லாபகரமாக கருதப்படுகின்றது. கடன் வாங்குபவரின் பிரிவு, கொள்திறன் மற்றும் நாற்றங்காலின் தேவைக்கேற்ப நாற்றங்கால் பரப்பளவு அதிகரிக்கப்படும். சரியான வடிகால் வசதிக்காக நாற்றங்கால்கள், சீரான சரிவு நிலங்களில் அமைக்க வேண்டும். களை எடுத்தல் மற்றும் உழுதல் மூலம் நிலம் தயார் செய்யப்படும். முதலில் நாற்றங்கால்கள் படுக்கைகளில் வளர்த்து பின்னர் தொட்டிகளில் வளர்க்கப்படும். நாற்றங்காலிற்கு நிரந்தர நீர் ஆதாரம் இருக்க வேண்டும். ஏனெனில் வெப்ப நிலை மற்றும் செலவை குறைக்க இது உதவும். 100m x 25m அளவு கொண்டு செவ்வக வடிவில் அமைக்க வேண்டும்.


10மீ x 10மீ (10 ச.மீ) அளவு கொண்ட பத்து விதைப்புப் படுக்கைகளை அமைக்க வேண்டும். இந்நிலையில், 1:12 விகிதத்தில் படுக்கைகள் தேவைப்படும். அதாவது ஒவ்வொரு படுக்கைக்கும் முறையாக 12 படுக்கைகள் தேவைப்படும். 120 படுக்கைகளிலிருந்து 1.25 இலட்சம் நாற்றுகளை வளர்ந்து, அவற்றிலுள்ள 1.20 இலட்சம் நாற்றுகளை நெகிழி உரைகளில் மீதமிருக்கும் 5000 நாற்றுகள் வேர் நாற்றுகளாக வளர்க்கப்படும்.


குறிப்பிட்ட காலத்திற்கு நாற்றங்காலிலுள்ள நாற்றுகளுக்கு குறைவான அளவு நீர் அளித்தல் மற்றும் அவைகள் சூரிய வெளிச்சத்திற்கு பல்வேறு நேரத்திற்கு வெளிப்படுத்துவதன் மூலம் நாற்றுகளை கடினப்படுத்துதல்; இவ்வாறு செய்கையில் நாற்றுகளை வயலில் நடவு செய்தபின், பாதகமான சூழ்நிலைகளையும் அவை தாங்கி வளர உதவி செய்யும். நாற்றங்கால்கள் தற்காலிகமானவைகள் மற்றும் அவை ஐந்து வருடங்கள் வரை இருக்கும். கோடை கால மாதங்களில் நெகிழி விரிப்புகள் அல்லது நிழல் வலைகள் கொண்டு நிழல் வழங்கப்படும். மூங்கில் பாய்களைக் கொண்டு நிழல் வழங்கப்படும். கம்பியைக் கொண்டு பகுதி முழுவதும் சுவர் போல் அமைத்து பாதுகாப்பு கொடுக்கலாம்.

சாகுபடி செலவு

முதலாம் வருடத்தில் 1.25 இலட்சம் நாற்றுகளை உற்பத்தி செய்ய ஆகும். ஒட்டுமொத்த செலவு Rs.2,172 இலட்சமாகும். முதலாம் ஆண்டிற்கான முதலீட்டுச் செலவு Rs.0.802 இலட்சமாகும். திருப்பி செலுத்த வேண்டிய தொகை Rs.1.37 இலட்சம். ஒரு நாள் ஆட்கூலி Rs.50 என்ற அனுமானத்தில், வகை மற்றும் வருடத்திற்குரிய பிரிவு செலவுகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

0.25 ஹெக்டேருக்குரிய வன நாற்றங்காலின் பிரிவுச் செலவு

1.25 இலட்சம் நாற்றுகள்
தினசரி ஆட்கள் கூலி : Rs.50 / MD

வ.எண்

வேலையின் விவரங்கள்

பிரிவு

செலவு (ரூ)

1.

நிலம் தயாரித்தல்

8MD

400

2.

சுவர் அமைப்பதற்காக 150 RMT இரும்பு கம்பிகள்

Rs.30/RMT

4500

3.

கலப்பு உர குழி மற்றும் நாற்றங்கால் பாதைகள் அமைத்தல்

10MD

500

4.

நீர்பாசன ஆதாரத்தை பராமரித்தல்

LS

2000

5.

5HP டீசல் பம்ப் செட்

LS

25,000

6.

நீர் பாசனத்திற்குரிய குழாய்கள் (100மீ)

Rs.15/ RMT

1500

7.

நாற்றங்கால் செயல்பாட்டிற்குரிய இயந்திரங்களின் செலவு

LS

2500

8.

நீர்த்தொட்டி செலவு

LS

5000

9.

படுக்கைகள் தயார் படுத்தூதல் (120)

100 MD

5000

10.

நிழல் வலை மற்றும் அதை நிறுவுதற்க்கான செலவு

LS

30,000

11.

உட் கூட்டல்

 

76400

12.

எதிர்பாராத செலவுகள் 5 %

 

3820

13.

மொத்தம்

 

80220

 
தொடர் செலவு

வ.எண்

வேலையின் விவரங்கள்

பிரிவு

செலவு(ரூ)

1.

0.25 ஹெக்டேருக்குரிய நிலத்திற்கான வாடகை

2500/yr

2500

2.

விதை படுக்கைகள் தயாரித்தல் (10)

10MD

500

3.

விதைகளின் விலை

LS

5000

4.

பாலிதீன் பைகளின் விலை (400 பாலிதீன் பைகள் / Kg)

Rs.40/kg

12000

5.

தொட்டி கலவையிற்கான செலவு ஏற்றுதல் மற்றும் இறக்குதல் செலவு உட்பட @ 2 Kg/பை

Rs.120/MT

30000

6.

உரச் செலவு @ 10gm ஒரு பாலிதீன் பையிற்கு

Rs.10/kg

12000

7.

பயிர் பாதுகாப்பிற்கான இரசாயனச் செலவு

LS

2500

8.

பம்ப் செட்டிற்கான டீசல் மற்றும் உராய்வு நீக்கியிற்கான செலவு @ 1.5 hrs 100 நாட்களுக்கு

1லி/hr ரூ22/ லி

3300

9.

கூரைக்குத் தேவையான பொருட் செலவு

LS

1000

10.

படுக்கைகளில் விதைப்பதற்கான செலவு

10MD

500

11.

களை எடுத்தலுக்கான செலவு

50MD

2500

12.

முளைப்பு படுக்கைகளிலிருந்து நாற்றுகளை எடுக்க ஆகும் செலவு

50MD

2500

13.

பாலிதீன் பைகளை நிரப்புதல் @ 200 பாலிதீன் பைகள் /MD

625MD

31250

14.

பாலிதீன் பைகளை நகற்றுதல்

50MD

2500

15.

நீர் பாய்ச்சுவதற்காகும் ஆட்கூலி செலவு

100MD

5000

16.

உரமிடுதலுக்காகின்ற செலவு

25MD

1250

17.

பூச்சி மருந்துகள் தெளிப்பதினால் ஆகும் செலவு

25MD

1250

18.

பாதைகளை பராமரித்தல்

10MD

500

19.

பம்பு செட்டுகளை பராமரித்தல்

LS

2500

20.

காவல் காப்பதற்கு

Rs.1000 ஒரு மாத்திற்கு

12000

21.

உட்கூட்டல்

-

130550

22.

மேற்பார்வையிடுவதற்கான செலவு 5%

-

6527

23.

மொத்தம்

-

137077

24.

ஒட்டு மொத்தம்

-

217297

சாகுபடி மற்றும் வருமானம்

வருடம்

நாற்றுகளின் எண்ணிக்கை

விற்பனையிற்கான நாற்றுகள் @ 90%

உண்மையான விற்பனை @ 90%

வருமானம் @ Rs.2.50 /நாற்று

1

125000

112500

101250

253125

2

125000

112500

101250

253125

3

125000

112500

101250

253125

4

125000

112500

101250

253125

5

125000

112500

101250

253125

0.25 ஹெக்டேர் வன நாற்றங்கால் பொருளியல்


வருடங்கள்

1

2

3

4

5

செலவு

217297

137077

137077

137077

137077

லாபம்

253125

253125

253125

253125

253125

மொத்த லாபம்

35828

116048

116048

116048

116048

PWC @ 15% 529259.89
PWB @ 15% 848514.26
BCR 1.60
IRR > 50%

வரவுகள்

இனங்களுக்கேற்ப 6 மாதம் முதல் 12 மாத கால மரக் கன்றுகள் பயிரிடுவதற்கு தயாராகும். ஆகையால் முதலாம் ஆண்டு முதல் வருமானம் வரப்படும். வருமானம் கணக்கிடுவதற்கு 10% சேதாரம் மற்றும் 90% உண்மையான விற்பனையாகவும் எடுத்துக் கொள்ளப்படும். ஒரு கன்றிற்கு Rs.2.50 செலவாக கருதப்படுகின்றது.

பயனாளிகளின் பங்களிப்பு

நபார்டின் விதிப் பிரிவிற்கேற்ப அதாவது சிறிய மற்றும் பிற விவசாயிகள் 5 முதல் 25% வரையிளான பணத்தை பயனாளிகள் செலுத்தலாம். பயனாளிகள் தங்களது வேலை ஆட்களையும் பங்களிப்பாக பணத்திற்கு ஈடு செய்யலாம்.

மறுநிதி ஒதுக்கீடு

கூட்டுறவின் கீழுள்ள தரிசு நில மேம்பாடு திட்டங்களின் மூலம் தனிநபர் விவசாயிகளோ மற்றும் தனிநபர் குழுக்கள், 100% வங்கிக் கடனை நீட்டிப்பதற்க மறுநிதி யை நபார்டு வங்கியின் பெற தகுதியுடையவர்கள் ஆவர்.

வட்டி விகிதம்

மறுநிதி வழங்குவதற்கான வட்டி விகிதம் நபார்டிடமிருந்து அவ்வப்போது வரும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் இருக்கும். உச்சமாக கடன் பெறுபவர்களுக்கு வட்டி விகிதத்தை நிதியுதவி வங்கிகள் தீர்மானிக்கும். எனினும் 12% வட்டி விகிதத்தை நிதியுதவி இயங்குவதற்கு மற்றும் ஏற்றுக் கொள்ளுக்கூடிய வகையில் கணக்கிடப்பட்டுள்ளது.

மேற்குறிப்பு: www.nabard.org