வனவியல் தொழில்நுட்பங்கள்
வேம்பு
NTFP-Bombax ceiba-1

வேம்பு இந்தியாவின் எல்லா இடங்களிலும் கடற்கரை ஒரங்களை தவிர்த்து மிதமான மழை பெய்யும் இடங்களில் வளரும் ஒரு எண்ணெய் வித்து மரமாகும். இது ஒரு நீண்ட நெடுமரம். இதன்  இலையுதிர் காலமானது குறுகிய காலமான பிப்ரவரி முதல் மார்ச் வரை.

மண்வளம்
இம்மரமானது நல்ல வடிகால் வசதி உள்ள மண்ணில் நன்றாக வளரும். கடினமான மண்வகைகள் கூட  சாகுபடிக்கு உகந்தவை இல்லை.

தட்பவெப்ப நிலை
இது ஒரு பசுமையான மரம். வறட்சியை தாங்கி  வளரக்கூடியது. ஆண்டு சராசரி மழையளவு 70 செ.மீ. இருந்தால் போதுமானது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 800 கி.மீ, உயரமுள்ள மலைச்சரிவுகளில் பயிர் செய்யப்படுகிறது.

பயிர் பெருக்க முறை
இம்மரமானது விதை மூலம் பயிர் செய்யப்படுகிறது. அதுவும் நன்றாக பழுத்த பழத்தை பறவைகள் தின்று அதன் எச்சத்தின் வழியாக விதையை வெளியேற்றுவதால் அவ்விதையானது பிற இடங்களில் முளைத்து மரமாகிறது. விதையின் முளைப்புத்தன்மை 3 முதல் 4 வாரங்கள் வரை மட்டுமே இருக்கும். இதனால் முளைப்புத்திறனானது மூன்று மாத விதைக்கு 60 சதவீதம் மட்டுமே பெறப்படும். இதற்காக விதையை நன்றாக தண்ணீரில் ஊறவைத்து தாய்பாத்தியில் விதைக்க வேண்டும். 6 மாத நாற்றுக்கள் நடுவதற்கு ஏற்றதாகும். அவற்றை 2 X 2  மீ இடைவெளியில் 1X1 அடி குழியில் நடவேண்டும். செழிப்பான 11 முதல் 12 மாத செடிகளிலிருந்து தூர்கள் பிரித்தெடுக்கப்பட்டு நேரடியாக வயலில் நடப்படுகின்றன.

உரமிடுதல்
ஒரு எக்டருக்கு 120 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து மற்றும் 75 கிலோ சாம்பல் சத்து தரவல்ல இரசாயன உரங்களை இட வேண்டும். பாதியளவு தழைச்சத்து உரத்தையும், முழு அளவு மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து ஆகிய உரங்களை அடியரமாக இட்டு மீதிபாதி தழைச்சத்து உரத்தையும் இரண்டு சமபாகமாக பிரித்து மரங்கள் பூக்கும் தருவாயில் இட வேண்டும்.

பயிர் பாதுகாப்பு
முதல் வருடத்தில் இரண்டு முறை களை எடுக்க வேண்டும்.  இரண்டாமாண்டு முதல் ஒரு முறை களையெடுத்தல் போதுமானது. ஐந்தாமாண்டில் இடையே உள்ள மரங்களை நீக்க வேண்டும். இம்மரங்கள் 40 முதல் 50 ஆண்டுகள் வரை வளர்ந்து பலன் தரவல்லது.

அறுவடை மற்றும் மகசூல்
வேம்பு நட்ட 6  அல்லது 7  ஆண்டுகளில் பூத்துகாய்க்க ஆரம்பிக்கும் மண் வளத்துக்கேற்ப வேம்பு 8 முதல் 100 ஆண்டுகள் வரை சீரான மகசூலைத் தரும். எட்டு வயதிற்கு மேற்பட்ட வேப்ப மரத்திலிருந்து சராசரியாக 350 கிலோ தழையை பெறலாம் (ஹெக்டேரில் 6-10 டன்). இம்மரங்களிலிருந்து 12.5 டன் கொட்டைகளை பெறலாம். பருப்பில் 48.9 விழுக்காடு எண்ணெயும், தோலுடன் சேர்ந்த விதையில் 23.5 விழுக்காடு எண்ணெயும் கிடைக்கிறது. விறகாக மரம் ஒன்றுக்கு 400 கிலோ கிடைக்கும். மரக்கரி 30.9 விழுக்காடு கிடைக்கும்.
இத்தகைய வேம்பு மரத்தை தரிசு மற்றும் வறண்ட நிலத்தில் பயிரிட்டால் பாயோ டீசல் உற்பத்திக்கு வேம்பு மரம் ஒரு சிறந்த மூலப்பொருள் ஆகும்.

 
 
முகப்பு | வனவியல் முன்னுரை | நிறுவனங்கள் | இயற்கை சுற்றுலா | வனவியல் சார் முகவரிகள் | தொடர்புகொள்ள

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016