தச்சு மற்றும் கட்டுமான மரங்கள் :: இலுப்பை மரம்
இலுப்பை

இலுப்பை மரம்

அறிவியல் பெயர்: ஃபேசியா லேட்டி ஃபோலியா

பரவல்: இந்தியாவை தாயகமாகக் கொண்ட இம்மரம் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் குறிப்பாக தென்னிந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பாக வளர்கிறது.

பருவநிலை: வருட மழைப்பொழிவு 800 - மி.மீ முதல் 1800 மி.மீ வரை உள்ள பகுதிகளில் இம்மரங்கள் செழிப்பாக வளர்கின்றன.

மண்: மணல் கலந்த மண்ணில் சிறப்பாக வளரும் வண்டல் மண்ணிலும் சிறப்பாக வளர்கிறது.

இலுப்பை இலைகள்
இலுப்பை பழங்கள்

நாற்றங்கால் தொழில்நுட்பங்கள்:
சூன் மற்றும் சூலை மாதங்களில் பழுத்த பழங்கள் உள்ள கிளைகளை உறுக்குவதன் மூலம் சேகரிக்கப்படுகின்றன.இப்பழங்கள் தரைகளில் உரசப்பட்டு நீரில் உளற வைக்கப்பட்டு விதையுறைகளிலிருந்து விதைகள் பிரித்தெடுக்கப்படுகின்றன.நாற்றங்காலில் பாத்திகள் அல்லது மண்,எரு மற்றும் மணல் கலந்த நெகிழ்தாள் பைகளில் நட்டு நீர் தெளிக்கப்படுகிறது.இவ்விதைகள் நாற்றங்காலில் 30 செ.மீX 15 செ.மீ. இடைவெளிகளில்  1.5 முதல்  2.5 செ.மீ ஆழத்தில் ஊன்றப்படுகின்றன.நட்டபின் 15 நாட்களுக்குப் பிறகே முளைக்கும்.இந்நாற்றுகள் ஒராண்டு வரை நேரடியான வெயில் படாமல் பாதுகாக்கப்படுகின்றன.

நடவுமுறைகள்:

நாற்றங்காலில் உள்ள ஒராண்டு நிரம்பிய நாற்றுகள் வயல்களில் மழைக்காலங்களில் நடவு செய்யப்படுகின்றன.வயல் நடவிற்கு 0.5மீ அகலமும் 0.5மீ நீளமும் உள்ள குழிகள் தோண்டப்பட்டு மே மற்றும் ஜீன் மாதங்களில் நடப்படுகிறது.நடவின்பொழுது ஆணிவேரை அசைக்காமல் கவனத்துடன் நடவு செய்ய வேண்டும்.பிறகு நீர் தெளிக்கப்படுகிறது.மூன்று மாத இடைவெளிகளில் களைநீக்கம் செய்து செடியைச் சுற்றிலும் லேசாகக் கொத்தி கிளறி விட வேண்டும். இரண்டு ஆண்டுகள் வரை களை நீக்கம் செய்வது அவசியம்.

பயன்கள்: மிக்க கடினமான மரக்கட்டைகள் கட்டுமானம் மற்றும் மரச் சாமான்களிலும் பயன்படுகிறது.விதையிலிருந்து பெறப்படும்.

தொடர்புக்கு
முதல்வர்,  
வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
மேட்டுப்பாளையம்,
கோயமுத்தூர் -  641301.
தொலைபேசி: 04254 - 222398, 04254 – 220460
அலைபேசி: 9443505843, 9489056727
மின்னஞ்சல்: deanformtp@tnau.ac.in


Updated on: April, 2015
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015