||| | | | | |
தோட்டக்கலை :: கேள்வி பதில்கள் :: மலரியல் & நில எழிலூட்டுதல்
நிலஎழிலூட்டுதல்

1. எனது வீட்டின் முன் இருக்கும் இரண்டு சென்ட் நிலத்தில் தோட்டம் அமைக்க விரும்புகின்றேன். எவ்வாறு இதனை ஆரம்பித்து செயல்படுத்த வேண்டும்?

முதலில், உரிமையாளரின் விருப்பம், வீட்டின் இருப்பு நிலை, வீட்டின் அளவு, நிலத்தரைப்பரப்பு,கிடைக்கக்கூடிய நீர்ப்பாசன அளவு, நில அமைப்பு, துணிகளை உலர்த்துவதற்கான இடம், செல்லப்பிராணிகளுக்கான இடம் ஆகியவற்றினைக் கருத்தில் கொண்டு தோட்டத்தினைத் திட்டமிட்டு வரைபடமாக ஒரு காகிகதத்தில் வரைந்து கொள்ள வேண்டும். மொத்த நிலப்பினையும் மூன்று பங்காக அதாவது பொது இடம், உபயோகப்படுத்தப்படும் இடம் மற்றும் தினப்பட்ட தோட்ட இடம் என்று பிரித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பிரித்துக்கொண்ட பிறகு காகிதத்தில் வரைந்திருக்கும் திட்டத்தை கவனத்துடன் முறையாக அமல்படுத்த வேண்டும்.

2. எனக்கு மிகவும் சிறிய நிலமே உள்ளது. நான் தோட்டம் அமைக்க விரும்புகின்றேன. இதற்கான சாத்தியம் உள்ளதா?

உங்களுக்கு மிகவும் சிறிய நிலமேயிலிருந்தாலும் உங்களால் தோட்டம் அமைக்க முடியும். உங்கள் வீட்டின் கூரைமேல் மாடித்தோற்றம் அமைக்கலாம். இத்தகைய தோட்டம் அமைக்கும் முன்பு மாடியின் வடிகால் வதி மற்றும் தாங்கக்கூடிய பாரத்தின்/எடையின் அளவு ஆகியவற்றைக் கருத்தில்கொள்ள வேண்டும்

3. புல் தரை அமைப்பதற்கான சுலபமான மற்றும் சிக்கனமான முறை என்ன? எவ்வாறு புல்தலையினை சிக்கனமாகவும் சுலபமாகவும் அமைக்கலாம்?

வேர்களை ஊன்றி புல்தரை அமைப்பதே சிக்கனமான முறையாகும். ஆனர்ல இம்முறையில் புல்தரை அமைப்பதற்கு அதிக காலம் தேவைப்படும். இதில் ஈரமான நிலையிலுள்ள தயார்படுத்தப்பட்ட நிலத்தில் சிறு வேர்களை(15 செ.மீ. இடைவெளிவிட்டு)  ஊன்ற வேண்டும். நடவு செய்த ஆறுமாத காலத்தில் வேர்கள் நன்கு படர்ந்து வளர்ந்ததுடன் புல் வெட்டுதல், உருளையை உருளவிடுதல் மற்றும் நீர்ப்பாசனம் ஆகிய செயல்களை மேற்கொண்டு திடமான புல்தரையும் உருவாகிவிடும்.

4. எனது வீட்டில் மிகவும் குறைந்த அளவே நீர்ப்பாசன வசதி உள்ளது. இத்தகைய Ÿழலுக்கு எவ்வகையாக புல்லினை பயன்படுத்தி புல்தலை அமைக்கலாம்?

அருகம்புல் என்று பொதுவாக அழைக்கப்படும் பெர்முட புல்லானது விரைவான வளர்ச்சி, வறட்சியைத் தாங்கும் தன்மை, குறைந்த நீர் தேவை மற்றும் அடிக்கடி வெட்டப்படுவதற்கான பிறதிச்செயல் ஆகிய தன்மைகளைக் கொண்டுள்ளதால்  இத்தகைய புல்லினை நீங்கள் பயன்படுத்தலாம்.

5. புல்தலையில் அதிகமான வளர்ச்சியடைந்த புற்களைஎவ்வாறு வெட்டவேண்டும்?

புல்வெட்டும் கருவியைக் கொண்டு சீரான உயரத்திற்கு புற்களை வெட்ட வேண்டும். ஆனால் புதிதாக அமைக்கப்பட்ட புல்தரையினை நன்கு படர்ந்து வளரும் வரை வெட்டக்கூடாது. ஆரம்பத்தில் வீசுக் கத்தியினைக் (Scythe) கொண்டு புற்களை நறுக்க வேண்டும். பருவத்தைப் பொறுத்து புல் வெட்டுவதற்கான கால இடைவெளி மாறுபடும். புற்களின் உயரம் 5-6 செ.மீட்டருக்கு மிகையாகமல் இருக்கும்படியாக புல்வெட்டும் கருவியிலுள்ள கத்திகளின் உயரத்தை பொறுத்த வேண்டும்.

6. நான் ஒரு அழகான புல்தரையினை அமைத்துள்ளேன் ஆனாலும் அது ஒரே மாதிரியாகக் காணப்படுகின்றது. இதனுள் சிறுஞ்செடிகள் ஏதேனும் நடலாமா?
படர்ந்த புல்தரையானது அழகாகக் தென்பட்டாலும் சில சமயம் ஒரேமாதிரியாகக் காணப்படும். ஆனால் பல சிறுஞ்செடிகள் அல்லது மரங்களை இப்புல்தரையில் வளர்ப்பது ஏதுவானதல்ல. ஆகவே இத்தகைய நிலையை சரி செய்வதற்கு ஒரேயொரு மரம் அல்லது சிறுஞ்செடியை புல்தரையின் நடுவில் நடவுசெய்யலாம். அம்ஹெர்ச்டியா நொபிலிஸ்()
கேலிஸ்டமான் லோன்சியோலேடஸ்(), தூஜா ஒரியன்டாலின்(), அரகேரியா எக்செல்சா, போன்ற மரங்கள் மற்றும் அகேவ் அமெரிக்கானா, () ஃபர்க்ரியா ஜைஜேன்டியா(), போகைன்வில்லியா ஸ்பெக்டாபிலிஸ்(காகிதப்பூசெடி), செஸ்ட்ரம் நாக்டர்னம்(), ஹைபிஸ்கஸ் சிற்றினம் (செம்பருத்தி) போன்ற சிறுஞ்செடிகளும் இதற்கு உபயோகப்படுகின்றன

7. என்னிடம் மனல்சார்ந்த மண்வகையுள்ள நிலம் உள்ளது. அதில் “ப்ளூ புல்” கொண்டு புல்தலை அமைக்கலாமா?

அமிலத் தன்மையுள்ள மண் மற்றும் உயரமான பகுதிகளில் வளர்க்கவே “ப்ளூ புல்” பயன்படுகின்றது.உங்களுடைய மணல் சார்ந்த மண் வகை நிலத்திற்கு ஜப்பான புல் வகையே ஏற்றதாகும். இவ்வகை புல் வெயில் படும் இடங்களிலும் நன்கு வளரும்.

8. தொட்டியிலிருக்கும் செடிகள் வாடலுடனும் மாசுபடிந்தும் காணப்படுகின்றன. எவ்வாறு இச்செடிகளைப் புதுப்பிக்கலாமா?

பொதுவாக நீர் பற்றாக்குறையினாலோ அல்லது வேர்ப்பகுதியில் நீர் அதிகமாக தேங்கியிருந்தாலே தெட்டிச் செடியிலுள்ள இலைகள் வாடலுடன் காணப்படும் மாசுப்படிந்த இலைகள் மீது நீர் தெளிப்பான் மூலம் தண்ணீரை தெளித்து இலைகளை ஈரப்படுத்துவதும் அவற்றின் செயல்பாடுகளையும் மேம்படுத்தலாம்.

9. புல்தலையில் எந்த இடைவெளியில் நீர்ப்பாசனம் செய்யவேண்டும்?

மழை மற்றும் குளிர் காலங்களில் 10 நாட்கள் இடைவெளியிலும் கோடை மற்றும் வசந்த காலங்களில் 7 நாட்கள் இடைவெளியிலும் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும் மற்றும் ஒவ்வொரு முறை உரமிடுதலுக்கு பின்பும் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்

10. எனது தோட்டத்தில் இருக்கும் புல்தலை கடினமாகவும் இறுக்கமாகவும் உள்ளது. இதை எவ்வாறு சரிசெய்வது?

இதற்கு தீர்வாக புல்தரையினை செதுக்கிவிடவேண்டும. புல்தரையினை இம்முறைியனை மேற்கொள்ள வேண்டும். புல்தலை அமைத்து மூன்று முதல் நான்கு வருடங்களுக்குப் பிறகு ஜீன் மாதத்தில் புல் செதுக்கும் கருவியை பயன்படுத்தி புற்களை செதுக்க வேண்டும். அல்லது மண்ணைத்தோண்டாமலும் புல்லின் வேர் மெலெழும்பாலும் மண்ணை கிளருவதுடன் மண்ணிற்கு காற்றோட்டத்தை ஏற்படுத்துவதுடன் மண்ணை இணைக்கமாக்கி புது வளர்ச்சிக்கு உதவலாம்.

10. வரையறுக்கப்பட்ட உருவமைப்பில் எவ்வாறு புல் தரையை பராமரிப்பது?

அவ்வப்போது எல்லைக் கோட்டிற்கு வெளியே வளரும் புற்களை வெட்டிவிடுவதன் மூலம் புல்தலையை வரையறுக்கப்பட்ட உருவமைப்பில் பராமரிக்கலாம்.

12. ஒரு சதுர அடி புல்தரையின் விலை என்ன?

ஒரு சதுர அடி புல்தரையின் விளை சுமார் 20 முதல் 25 ரூபாய் ஆகும்.

13. புதர்ச்செடியில் உள்ள சில கிளைகள் மிகவும்கவனத்துடன் கவாத்து செய்ய வேண்டும். மழைக்காலத்தில் பூக்கும் செடிகளை கோடை காலத்திலும் கோடைகாலத்தில் பூக்கும் செடிகளை மழைக்காலத்தினும் கவாத்து செய்ய வேண்டும. செடிகளின் உருவமைப்பு மற்றும் வயதினைக் கருத்தில் கொண்டு கிளைகளை வெட்ட வேண்டும். மிக அதிகமாக வளர்ந்து விட்ட கிளைகள், பழைய மற்றும் வலுக்குறைந்த கிளைகளைத் தரை மட்டத்திற்கோ அல்லது குச்சி எதுவும் தெரியாதபடியாகவோ வெட்டிவிட வேண்டும்.

14. நேரான அடிமரங்களுடன் கூடிய மரங்களை எவ்வாறு வளர்ப்பது?

முட்டுக்கொடுத்தல் மூலம் அடிமரங்களை நேராக்கலாம். இல்லாவிட்டால் அடிமரமானது வளைந்து இயல்புமாறிய் வளர்ச்சியுடன் காணப்படும். முட்டுக்குச்சியானது மரத்தின் அளவிற்கும் பொருத்தமாகவும் போதுமான திடத்துடனும் இருக்கவேண்டும். நேரான மூங்கில் குச்சிகள் அல்லது இரும்புக் கம்பிகளை இதற்கு பயன்படுத்தலாம். நடுத்தண்டிலிருந்து 5 செ.மீ. இடைவெளிவிட்டு இம்முட்டுகளை நடுவதன் மூலம் வேர்களுக்கு ஏற்படும் பாதிப்பையும் தவிர்க்கலாம்

15. இளமரக் கன்றுகள் நிலையான உருவமைப்பில்லாமல் வளர்கின்றன. இதை எவ்வாறு சரிசெய்து தேவையான உருவம் மற்றும் அளவுடன் வளர்க்கலாம்?

அனைத்து உலர்ந்துவிட்ட கிளைகள், இடர்பாடாக வளர்ந்து கட்டிடங்கள் அல்லது பாதைகளின் மேல் தொங்கிக் கொண்டிருக்கும் கிளைகள் ஆகியவற்றை வெட்டிவிட வேண்டும். பாதிப்படைந்த அல்லது அழுகிவிட்ட கிளைகளையும் அகற்றிவிட வேண்டும். பூஞ்சான் தாக்குதலைத் தவிர்ப்பதற்காக 5 செ.மீ. அதிகமாக உள்ள வெட்டுப்பகுதிகளில் போர்டியக்ஸ் கலவையைப் பூச வேண்டும்.

மருந்து மற்றும் வாசனை /நறுமணப்பயிர்கள்
மருந்து பயிர்கள் - அவுரி: கேசியா அங்குஸ்டிக்ஃபோலியா

1. அவுரியில் வெளியிடப்பட்ட இரகங்கள் என்னென்ன?

அவுரியில் கேகேஎம் செ 1 மற்றம் ஏ.எல்.எஃப் டி2 ஆகிய இரண்டு இரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் கே கே எம் செ1 தமிழகத்தில் சாகுபடி செய்ய ஏற்ற இரகமாகும்.

2. ஒரு எக்டரில் சாகுபடி செய்வதற்கு எவ்வளவு அவுரி விதைகள் தேவைப்படுகின்றன?

ஒரு எக்டரக்கு சுமார் 15 முதல் 20 கிலோ அவுரி விதைகள் தேவைப்படுகின்றது.

3. அவுரி சாகுபடிக்கேற்ற பருவம் எது?

அவுரியை பிப்ரவரி-மார்ச் மற்றும் ஜீன்-ஜீலை மாதங்களில் சாகுபடி செய்யலாம்

4. அவுரி சாகுபடிக்கு எவ்வளவு உரம் தேவைப்படுகின்றத?

செயற்கை உரங்கள் ஏதும் இடவேண்டுமா?

ஓரு எக்டருக்கு 10-15 டன் மட்கியதொழுவுதம் மற்றும் முறையே 25, 25 மற்றும் 40 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்தினை இட வேண்டும். தழைச்சத்தினை இரண்டு பிரிவுகளாக பிரித்து விதைத்த 40 மற்றும் 80வது நாட்களில் இடவேண்டும். அவுரியின் செயற்பாடு, அங்கக மற்றும் செயற்கை உரங்களை இணைந்து அளிக்கும்போது மேம்படுகின்றது.

 

||| | | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014