தோட்டக்கலை :: வாசனைப் பயிர்கள் :: வெட்டிவேர்

பொருளாதார பகுதி – வேர்

முக்கிய உள்ளடக்கம்  - வெட்டி வேர் ஒன், வெட்டிவேரோல்ஸ், வெட்டிவேர்னேட்பயன்கள் – வாசனை திரவங்கள், அழகு சாதனப் பொருட்கள்

வகைகள்

இவை பொதுவாக இரண்டு வகைகளாகும். அதாவது (1) நாற்று வகை மற்றும் (2) நாற்றல்லாத வகை. வட இந்தியாவில் நாற்றுவகை வளர்கிறது மற்றும் தென்னிந்தியாவில் நாற்றல்லாத வகை பரவலாக வளர்கிறது. கலப்பு 8, சுகந்தா, ஒடிவி – 3 ஆகியவை சாகுபடிக்கு ஏற்றவை.

காலநிலை மற்றும் மண்

நல்ல வடிகால் வசதியுடைய கரிசல் மண், காரஅமிலத் தன்மை 6-8 கொண்டிருக்க வேண்டும் மற்றும் வேர் புகும் மண் அடர்த்தியாகவும் போதுமான எண்ணைத் தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டும்.

பயிர் 100-200 செ.மீ மழை மற்றும் 30-400 செ வெப்பநிலையில் நன்கு வளரும்.

நடவு செய்தல்

விவசாயிகள் மூன்று விதமான நடவு முறைகளை பின்பற்றுகின்றனர்.

அமைப்பு 1 : 30-38 மீ உயரம், 48 செ.மீ அகலம் கொண்ட வரப்புகள் அமைத்து வெட்டிவேர் துண்டுகளை 23 செ.மீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.
அமைப்பு 2 : 30 செ.மீ உயரம், 68 செ.மீ அகலம் கொண்ட படுக்கைகள் அமைத்து முனையிலிருந்து 45 செ.மீ தள்ளி நடவு செய்ய வேண்டும். இரண்டு வரிசைகளுக்கும் இடையில் 22.5 செ.மீ இடைவெளி விட வேண்டும்.
அமைப்பு 3 : 45 செ.மீ உயரம் மற்றும் 60 செ.மீ அகலம் கொண்ட படுக்கைகள் அமைத்து முனையிலிருந்து 30 செ.மீ தள்ளி இரண்டு பக்கங்களிலும் 15 செ.மீ இடைவெளிவிட்டு நடவு செய்ய வேண்டும். இரண்டு வரிசைகளுக்கமான இடைவெளி 30 செ.மீ இருக்க வேண்டும்.

http://images.slidesharecdn.com/mappowerpoint-101002082429-phpapp02/95/slide-10-728.jpg?1286026013

இனப்பெருக்கம்
வெட்டிவேர் துண்டுகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. நீராற்றல் வீணாவதைத் தடுப்பதற்காக பயிரின் மேல் உள்ள கவாத்து செய்து எடுக்கப்பட்ட  துண்டுகள் இனப்பெருக்கம் செய்யப் பயன்படுகிறது. இவை அதிக முளைப்புத் திறன் கொண்டவையாக இருக்கும்.

இந்த துண்டுகள் 5 முதல் 8 செ.மீ ஆழமுள்ள குழிகளில் நடப்படுகிறது. ஒரு எக்டருக்கு 1,50,000 முதல் 2,25,000 துண்டுகள் 2 முதல் 3 துண்டுகள் ஒரு குழிக்கு நடப்படுகிறது. (அமைப்பு 2)

தென்னிந்திய சூழலில் அதிக  எண்ணெய் மகசூல் கிடைக்க ஜீன் மற்றும் ஜீலை மாதங்களில் நடவு செய்யலாம்.

http://images.slidesharecdn.com/mappowerpoint-101002082429-phpapp02/95/slide-5-728.jpg?1286026013

பயிர் நிலைப்புத் தன்மை

உரங்கள்

வெட்டிவேரின் மகசூலை அதிகரிக்க எக்டருக்கு தொழுஉரம் 10 டன், மற்றும் 60 கிகி நைட்ரஜன், P2O5 மற்றும் K2O முறையே 22.5 கிகி அளிக்க வேண்டும்.

ஊடுபயிர்

பயிரின் ஆரம்ப வளர்ச்சியில் (70-90 நாட்கள்) தட்டைப்பயறு, உளுந்து, பச்சைப்பயறு, கொத்தவரை, துவரை, சென்னா மற்றும் துளசி ஆகியவற்றை பயிரிடலாம்.

பயிர் பாதுகாப்பு

தீவர பூச்சி தாக்குதல் இந்த பயிரில் இருக்காது. வறண்ட பகுதிகளில் கரையான் மற்றும் வெள்ளை எரும்புகள் வேர்களை தாக்குகின்றன. லின்டேன் எக்டருக்கு 25கிகி அளிப்பதன் மூலம் இவற்றைக் கட்டுப்படுத்தலாம். இலைக்கருகல் கர்வுலேரியா டிரிஃபோலி (Curvularia trifolii) மற்றும் பியூசாரியம் (Fusarium)  போன்ற நோய்களால் ஏற்படுகிறது. இவற்றைக் கட்டுப்படுத்த காப்பர் ஆக்ஸிகுளோரைடு அல்லது 15 போர்டியாக்ஸ் கலவையை திரும்பத் திரும்ப தெளிப்பது அல்லது மண்ணில் அளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

அறுவடை

அதிக எண்ணெய் மகசூல் பெற ஜீலை மாதங்களில் நடப்பட்ட பயிர்களை 18 மாதங்களுக்குப் பிறகு அறுவடை செய்ய வேண்டும். அறுவடை பொதுவாக உலர் காலநிலையில் (டிசம்பர் முதல் பிப்ரவரி) செய்யப்படுகிறது. அறுவடையின்போது கைகளால் செடி வேருடன் சேர்த்து தோண்டி எடுக்கப்படுகிறது. வேர்கள் இலைகளிலிருந்த தனியாக பிரிக்கப்பட்டு கழுவி 1 முதல் 2 நாட்கள் நிழலில் உலர்த்தப்படுகின்றன.


http://1.bp.blogspot.com/_QcWx0-zicCM/TSoJrEYiNsI/AAAAAAAABoU/J21Y9rLG8dQ/s1600/roots_of_vetiver_after_six_months%2540permaculture.jpg
Roots of the vetiver plant after only 6 months cultivation
http://www.vetiver.org/CHN_Vet-root.jpg
Roots of the two years old vetiver plant

பின்வரும் தன்மையைக் கொண்ட வேர்கள் தரமான எண்ணெய் கொண்டவை.

  1. சிறிது சிவந்த பழுப்பு நிறமாக இருக்கும்
  2. தோலை உரித்தவுடன் கடினத்தன்மையுடன் காணப்படும்
  3. தடித்த, கடினமான, நீண்ட பலமுள்ளதாக இருக்கும்
  4. மெல்லும் போது மிகவும் கசப்பு தன்மை கொண்டிருக்கும்

மகசூல்

வெட்டிவேர் பயிரிலிருந்து தோராயமாக ஒரு எக்டரில் 3-4 டன் வேர்கள் அதாவது 15 – 16கிகி எண்ணெய் கிடைக்கிறது.


Source
1. www.flickr.com/.../in/set-72157600279486684/ 
2. flickr.com/photos/globetrotter1937/182189741/ 
Last Update : July 2016