தோட்டக்கலை :: நறுமணப்பயிர்கள் :: சிட்ரோனெல்லா

இரகங்கள்
ஜாவா 2, ஜெர்லேப் 2, ஜாவா சிட்ரோனல்லா, ஜாவா 11, சிலோன் சிட்ரோனல்லா, பையே - 13, மன்டாகினி மற்றும் மஞ்சுஷா.

மண் மற்றும் தட்பவெப்பநிலை


பருவம்

ஜ¤ன் - ஜ¤லை

விதை மற்றும் விதைப்பு

வேர்க்கட்டை மூலம் பயிாப்பெருக்கம் செய்யலாம். ஒரு எக்டர் நடவு செய்ய 28,000 வேர்க்கட்டைகள் தேவைப்படுகின்றது.

இடைவெளி :
60 x 45 செ.மீ

நிலம் தயாரித்தல்
நிலத்தை நன்கு உழுது, ஒரு எக்டருக்கு 30 டன் மக்கிய தொழு உரம் இட்டு நன்கு பண்படுத்தவேண்டும். தேவைக்கேற்றவாறு பார் சால் (அ) பாத்தி அமைத்து நடவு செய்யலாம்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை


அடியுரம்
: ஒரு எக்டருக்கு 25:40:40 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து.
மேலுரம் : ஒரு எக்டருக்கு தழைச்சத்து 75 கிலோவினை சரிபாகமாக (25 கிலோ) பிரித்து நடவு செய்த 3,6 மற்றும் 9 மாதத்தில் இடவேண்டும்.

நீர் நிர்வாகம்


நடவு செய்தவுடன் நீர்ப்பாசனம் செய்யவேண்டும். மேலும் உயிர் நீர் நடவு செய்த மூன்றாவது நாளும் அதன் பின்னர் 7-15 நாட்கள் இடைவெளியில் நீர்ப்பாசனம் செய்யவேண்டும்.

பின்நேர்த்தி


ஓரிரு முறைத்தேவைக்கேற்ப களை எடுக்கவேண்டும். அறவடையின் பின்னர் மண் அணைத்து நீர்ப்பாய்ச்சவேண்டும்.

ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு


இலைத்தீயல் நோயினைக் கட்டுப்படுத்த 0.2 சதவிகிதம் மேங்கோசிப் (அ) ஜினப் மருந்தை 15-20 நாள் இடைவெளியில் தெளிக்கவேண்டும்.

அறுவடை


முதல் அறுவடையானது நடவு செய்த 6வது மாதத்தில் செய்யலாம். இரண்டாவது மற்றும் அதகைத் தொடர்ந்து அறுவடையினை ஒவ்வொரு இரண்டரை மாத இடைவெளியிலும் செய்யலாம்.

மகசூல்

ஒரு வருடத்திற்கு புல்            =     20-30 டன் / எக்டர்

எண்ணை எடுக்க காய்ச்சி எடுக்கும் முறையினை பயன்படுத்தவேண்டும்.
எண்ணை முதல் வருடம்          =     50-100 கிலோ / எக்டர்
இரண்டாம் வருடம்              =     100-150 கிலோ / எக்டர்
ஐந்தாம் வருடம்                 =     250-300 கிலோ / எக்டர்