தோட்டக்கலை :: நறுமணப் பயிர்கள் :: ஜெரேனியம்

இரகங்கள் : அல்ஜேரியன், ரியூனியான், ஐஐஎச்.ஆர் 8, கொடைக்கானல் 1 மற்றும் ஏகிப்தியன்.

மண் மற்றும் தட்பவெப்பநிலை
அங்கக சத்துக்கள், காரச்சத்து மிகுந்து மண்வகைகள் சாகுபடிக்குச் சிறந்ததாகும். கடல் மட்டத்திலிருந்து 1000-2400 மீட்டர் உயரம் வரையிரலும் வருட மழையளவு 100-150 செ.மீ உள்ள பகுதிகளில் சாகுபடி செய்யலாம். மேலும் மண்ணின் கார அமிலத் தன்மை 5.5 முதல் 6.0 வரை இருக்கவேண்டும்.

விதை மற்றும் விதைப்பு
தண்டுக் குச்சிகள் மூலம் பயிர்ப்பெருக்கம் செய்யலாம். சுமார் 10 செ.மீ நீளம், 3-4 கணுக்கள், வளரும் மொட்டு பாகம் கொண்ட குச்சிகளை கடற்பாசி (அ) 10 x 10 செ.மீ பாலித்தீன் பைகளில் நடவு செய்யவேண்டும்.

இடைவெளி : 45 x 45  செ.மீ

பருவம்  : ஏப்ரல் - மே

நிலம் தயாரித்தல்
நிலத்தை உழுது பண்படுத்தவேண்டும். 30 x 30 செ.மீ அளவில் குழிகள் எடுத்து 250 கிராம் ஆட்டு உரம் இடவேண்டும். பின் இரண்ட மாதங்களான வேர்விட்ட தண்டுக்குச்சிகளை குழிகள் நடுவே நடவு செய்யவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
ஒரு எக்டருக்கு 60 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து இடவேண்டும். ஒவ்வொரு வருடமும் மணி மற்றும் சாம்பல் சத்தினை அறுவடைக்குப்பின் இடவேண்டும்.

நீர் நிர்வாகம்
ஜெரேனியத்தைப் பொதுவாக மானாவாரிப் பயிராக சாகுபடி செய்யலாம். வறட்சி காலங்களில் நீர்ப்பாசனமானது அவசியமாகும்.

பின்நேர்த்தி
தேவைக்கு ஏற்ப களைகளை நீக்கவேண்டும். நோய் தாக்கப்பட்ட செடிகளைத் தோண்டி எரித்து விடவேண்டும். இரண்டாம் ஆண்டு வேர்ப்பகுதியினை கொத்திவிடுவதன் மூலம் வேர் கட்டைகளின் போத்துகளின் உற்பத்தி அதிகமாகும். மகசூல் குறையும் போது செடிகளை தரைப்பகுதியிலிருந்த 15-20 செ.மீ உயரத்தில் வெட்டி கவாத்து செய்யவேண்டும். பொதுவாக 4-5 வருடங்களுக்கொருமுறை கவாத்து செய்யவேண்டும்.

ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு

நூற்புழுக்களை கட்டுப்படுத்த ஒரு எக்டருக்கு 2 கிலோ கார்போபியூரான் குருணை மருந்தை ஜ¤ன் மற்றும் டிசம்பர் மாதங்களில் இடவேண்டும்.

வாடல் நோயைக் கட்டுப்படுத்த ஒரு கிராம் மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து வேர்ப்பாகம் நனையுமாறு மாதம் ஒரு முறை ஊற்றவேண்டும்.

அறுவடை
நடவுசெய்த ஆண்டில் 7-8வது மாதத்தில் முதல் அறுவடை செய்யலாம். அதன் பின்னர் ஒரு ஆண்டில் 3 முதல் 4 அறுவடை பாகத்துடன் 6-12 கணுக்களுடைய பகுதியினை அறுவடை செய்து 2-3 மணிநேரம் நிழலில் உலரவைத்து எண்ணை எடுக்க பயன்படுத்தவேண்டும்.

மகசூல் :
இலைத் தண்டுப்பாகம்  : 20 -25 டன் / எக்டர்
எண்ணை : 15-20 கிலோ / எக்டர்

 

 

||| | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008