||| | | | | |
தோட்டக்கலை :: மலரியல் பயிர்கள் :: அரளி
gg gg

இரகங்கள்
தொழில்நுட்பங்கள்
விற்பனை விலை

தேசிய தோட்டக்கலை இயக்கம்
நபார்டு
தேசிய தோட்டக்கலை வாரியம்
தேசிய மூலிகைப்பயிர்கள்
வாரியம்
சொட்டுநீர் பாசனம்
ஒருங்கிணைந்த தோட்டக்கலை
மேம்பாட்டுத்திட்டம்
வணிக வாரியங்கள்

சந்தை நிலவரம்

இரகங்கள் : தனிரோஸ், தனிவெள்ளை, தனிச்சிவப்பு மற்றும் இரண்டு அடுக்கு வகைகள்.

மண் மற்றும் தட்பவெப்ப நிலை : கரிசல் அல்லது மணற்பாங்கான செம்மண் கலந்த மண்ணில் நல்ல வடிகால் வசதியுடன் நீர் வளம் உள்ள சூழ்நிலையில் அதிக வெப்பநிலையில் நன்கு வளரக்கூடியது.

விதையும் விதைப்பும்

இனவிருத்தி மற்றும் நடவு : இரண்டு அடி நீளமுள்ள கடினமான அல்லது மித கடினமான குச்சிகளை மண்ணில் விளைவாகப் பதிப்பதன் மூலம் வளர்க்கலாம். வேர் வந்த குச்சிகளை ஜுன் - ஜுலைகளில் ஒரு அடி ஆழமுள்ள குழியில் இரண்டு மீட்டர் இடைவெளியில் நடவும். நடும்முன் குழியில் தொழு உரம், செம்மண் மற்றும் மேல் மண் சேர்த்து இடவேண்டும்.

களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி

பின்செய்நேர்த்தி : அரளிக்கு தண்ணீர் தேவைப்படும்பொழுதெல்லாம் நீர் பாய்ச்சவேண்டும். ஜனவரியிலும், ஆகஸ்டிலும் 10 டன் தொழு உரம் ஒரு எக்டருக்கு இடவேண்டும். இராசயன உரங்கள் பொதுவாக இடவேண்டிய அவசியமில்லை.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

பெரும்பாலும் தீங்கு விளைவிக்கும் பூச்சிகளோ, நோய்களோ அரளியைத் தாக்குவதில்லை.

பூக்கும் பருவம் : வருடத்தின் எல்லாக் காலங்களிலும் பூக்கக் கூடியது. ஏப்ரலிலிருந்து ஆகஸ்ட் வரை அதிகமாகப் பூக்கும்.

அறுவடை

பூக்களை நட்ட நான்கு மாதத்திலிருந்து பெறலாம்.

மகசூல் : ஒரு நாளைக்கு ஒரு எக்டரிலிருந்து 100.125 கிலோ பூக்கள் கிடைக்கும்.
சிலசமயம் இலைப்புழுக்கள் ஆங்காங்கே காணப்படும். இதனைக் கட்டுப்படுத்த எண்டோசல்ஃபான் 35 EC 1 மில்லி / லிட்டர் அல்லது பாசலோன் 35 EC 1 / லிட்டர் அல்லது கோனோக்ரோட் டோஃபாஸ் 2 மில்லி / லிட்டர் என்ற விகிதத்தில் தெளிக்கவேண்டும்.

 

 

மேலோட்டம்
வழிமுறைகள்
தொழில்நுட்பங்கள்
வழங்கல்கனை மேலாண்மை
பசுமைக்குடில் தொழில்நுட்பம்
பழப்பண்ணை மேலாண்மை
உற்பத்தி செலவு

துல்லிய பண்ணைய விவசாயிகள்
பயிர் சாகுபடியாளர்கள்
aa

தேசிய இணையதளங்கள்
சர்வதேச இணையதளங்கள்

அரசு தோட்டக்கலைத் துறை
அரசு தோட்டக்கலைப்
பண்ணைகள்
வணிக வாரியங்கள்

புத்தகங்கள் மற்றும்
வெளியீடுகள்

 

aa

பழப்பயிர்கள்
காய்கறிப் பயிர்கள்
வாசனை மற்றும்
மலைத்தோட்டப் பயிர்கள்
மலரியல் மற்றும் நில
எழிலூட்டுதல்
மூலிகை மற்றும்
நறுமணப் பயிர்கள்

 

||| | | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2008