||| | | | | |
தோட்டக்கலை :: மூலிகை பயிர்கள் :: சோற்றுக் கற்றாழை
gg gg

இரகங்கள்
தொழில்நுட்பங்கள்
விற்பனை விலை

தேசிய தோட்டக்கலை இயக்கம்
நபார்டு
தேசிய தோட்டக்கலை வாரியம்
தேசிய மூலிகைப்பயிர்கள்
வாரியம்
சொட்டுநீர் பாசனம்
ஒருங்கிணைந்த தோட்டக்கலை
மேம்பாட்டுத்திட்டம்
வணிக வாரியங்கள்

சந்தை நிலவரம்

முன்னுரை

கற்றாழை வறட்சியான பகதிகளில் வளர்ப்பதற்கேற்ற ஒரு மருந்துச் செடி ஆகும். உன்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு அழகுச் சாதனங்கள் மருந்துப் பொருட்கள் தயாரிப்பதற்கு கற்றாழை பெரிதும் பயன்படுகின்றது. வறட்சிக்கு ஒரு வரப்பிரசாதமாக விளங்கும். கற்றாழை லில்லியேசி தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. இது ஆப்பிரிக்காவை தாயாகமாகக் கொண்டது. மேலும் கிரீஸ், பார்படோ தீவுகள், சீனா, இத்தாலி, வெனிசுலா,தென்னாப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இயற்கையான வளர்கின்றது. இந்தியாவில் ஆழ்வார் (ராஜஸ்தான்), சட்நாபள்ளி (அந்திரா), ராஜபிப்லா (குஜராத்), சேலம் மற்றும் தூத்துக்குடி (தமிழ்நாடு) ஆகிய நாடுகளில் சாகுபடி செய்யப்படுகின்றது.

கற்றாழை இலையிலிருந்து எடுக்கப்படும் “ஜெல்” எனப்படும் “கூழ்” சருமத்தின் ஈரத்தன்மையை (Moisture) பாதுகாக்கப்படுகிறது. இதன் தேவைக்கு இயற்கை சூழ்நிலையிலிருந்து கற்றாழைச் செடிகள் சேகரிக்கப்பட்டு பக்குவப்படுத்திய பிறகு மருந்துப் பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றது. இருப்பினும், தரம் வாய்ந்த கற்றாழைக்கூழ், எடுப்பதற்கு தென்னாப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், குர்குவா தீவுகள், இந்தியா ஆகிய நாடுகளில் வணிக ரீதியாக பயிர் செய்யப்படுகிறது.

பயன்கள்

கற்றாழையின் இலையிலிருந்து எடுக்கப்படும் “ஜெல்” அதாவது  “கூழ்” சருமத்திற்கு பாதுகாப்பதாக கருதப்படுகிறது. சூரிய ஒளியுடன் கலந்து வரும்  கடும் வெப்பத்தை ஏற்படுத்தும் காமா மற்றும் எக்ஸ்ரே கதிர் வீச்சுகளின் தீய விளைவுகளிலிருந்து சருமத்தை பாதுகாக்கின்றது. மேலும் சருமத்தின் ஈரத்தன்மையை காத்து சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்துகிறது. இதனால் வணிக ரீதியாக அதன் “கூழி” உலகெங்கிலும் சரும் லோசன், சவரம் செய்வதற்கான க்ரீம், ஷாம்பூ ஆகியவற்றால் சேர்க்கப்படுகின்றது.

கற்றாழையின் மருந்து மகத்துவத்தை கி.பி. 17 ஆம் நூற்றாண்டிலேயே ஆப்பரிக்கர்கள் கண்டறிந்து உலகத்துக்கு அறியப்படுத்தினர்.
கற்றாழையின் இலையில் ‘அலோயின்’ ்அலோசோன்’ போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன. ‘அலோயின்’ வேதிப்பொருளின் அளவு நான்கிலிருந்து இருபத்து ஐந்து சதம் வரை இதன் இலையில் காணப்படுகிறது.
சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கற்றாழைச்சாறு, இருமல், சளி, குடல்புண் ஆகியவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகின்றது. கடும் வயிற்றுப்புண், தோலில் ஏற்படும் தீக்காயம், அரிப்பு வெட்டுக்காயங்கள் ஆகியவற்றிற்கும் மருந்தாகப் பயன்படுகின்றது.

இரகங்கள்

கற்றாழையில் மூன்று வகைகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. அவை
1. குர்குவா கற்றாழை                                  -           அலோ பார்படென்ஸ் (Aloe vera)
2. கேப் கற்றாழை                             -           அலோ பெராக்ஸ் (Aloe ferox)
3. சாகோட்ரின் கற்றாழை               -           அலோ பெர்ரி  (Aloe perryi)

இவற்றில் முதல் இரண்டு வகைகள் “பார்பலோயின்” (Barbaloin) மற்றும் “அலோ எமோடின்”ஆகிய வேதிப்பொருட்களுக்காக சாகுபடி செய்யப்படுகின்றது. இவற்றின் “ஜெல்” “முசபார்” எனும் மருந்துப் பொருள் தயாரிக்கப்பட்டு வலி நிவாரணியாக உபயோகப்படுத்தப்படுகின்றது. கேப் கற்றாழை கால்நடைகளின் மருத்துவத்தில் பயன்படுகின்றது.

கற்றாழையில் ஜான்சிபார் கற்றாழை, யுகான்டா கற்றாழை மற்றும் நேட்டல் கற்றாழை, ஜஃபராபாத் கற்றாழை ஆகியவை தரம் வாய்ந்தது. இவற்றின் “கூழ்” கண்ணாடி போனறு அழகிய தோற்றத்தையும் மருத்துவத் தன்மையும் இருப்பதாக கருதப்படுகின்றது.
இந்தியாவில் அலோ பார்படன்சிஸ் (அலோ வீரா) நாடு முழுவதும் காணப்படுகின்றது. இது வறட்சியான சூழ்நிலையில் கடல் மட்டத்திருலிருந்து 1000 அடி உயரம் வரை உள்ள மலைப்பிரதேசங்களில் வளர்கின்றது.
இதன் இலைக்ள தடிமனாகவும், சிறிது சிவப்பு கலந்த பச்சை நிறத்தில் 30 முதல் 60 செ.மீ நீளமாகவும், சிறிறய முட்டைகளுடன் இருக்கும். செடிகள் நட்ட இரண்டாவது வருடத்தில் தான் பூக்கும். செடிகளில் பூக்கள் தோன்றினாலும் மகரந்தங்கள் செயலிழந்த இருப்பதால் காய் மற்றும் விதைகள் பிடிப்பதில்லை. இதனால் கற்றாழையை பக்கக் கன்றுகள் மூலமாகத் தான் பயிர்ப்பெருக்கம் செய்யவேண்டும்.

தரிசு மண், மணற்பாங்கான நிலம், பொறை மண் போன்றவை ஏற்றது. எனினும்  எல்லா வகையான மண்ணிலும் கற்றாழையை சாகுபடி செய்யலாம். காரத்தன்மை 7 முதல் 83.5 வரை உள்ள மண் வகைகளில் கற்றாழை வளர்கின்றது. நல்ல வடிகால் வசதியுடன் கூடிய மணங்பாங்கான நிலம் மிகவும் ஏற்றது.
மண் மற்றும் தட்பவெப்பநிலை

வறட்சியான தட்பவெப்பத்தில் அதாவது 42 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் உள்ள பகுதிகளில் நன்றாக வளர்கின்றது. எனினும் 25 முதல் 45 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை உள்ள வெப்ப மண்டலப் பகுதிகளில் வணிக ரீதியாக பயிர் செய்யலாம். தமிழ்நாட்டில் இராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் பயிர் செய்யலாம்.

விதையும் விதைப்பும்

தாய்ச்செடியிலிருந்து ஒன்று அல்லது இரண்ட மாத வயதுடைய பக்க்க கன்றுகளைப்பிரித்து பயன்படுத்தவேண்டும். ஒரே அளவிலள்ள பக்கக் கன்றுகளைத் தேர்ந்து எடுப்பது மிகவும் முக்கியம். இதனால் செடிகள் சீராக வளர்வதுடன் ஒரே சமயத்தில் அறுவடைக்கு வரும். பக்கக் கன்றுகளை பிரித்ததும் அவற்றின் வேரை கார்பன்டாசிம் கரைசலில் (லிட்டருக்கு 1 கிராம் கார்பன்டாசிம் மருந்து) ஐந்து நிமிடத்திற்கு நனைத்தபிறகு நடுவதால் அழுகல் நோய் வராமல் பாதுகாக்கலாம். கற்றாழையை தனிப்பயிராக சாகுபடி செய்யும்போது எக்டருக்கு 10,000 பக்கக் கன்றுகள் தேவைப்படும்.

விதைக்கும் பருவம்

கற்றாழையை வருடத்திற்கு இரண்டு பருவங்களில் அதாவது ஜுன் - ஜுலை மற்றும் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் நடவு செய்யலாம். இலைகள் முதிர்ச்சி பெறும் தருவாயில் ஓரளவு வறட்சியான தட்பவெப்பம் இருக்கவேண்டும். இதனால் இலையில் தரமான “கூழ்” கிடைக்கும். இதற்காக செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் நடவு செய்வது நல்லது.

நிலம் தயாரித்தல்

நிலத்தை இரண்டு முறை உழுது எக்டருக்கு 10 டன் தொழு எரு இட்டு, சமன் செய்து சிறிய பாத்திகளை அமைக்கவேண்டும். செடிகள் வாளிப்பாக வளர்வதற்காக செடிக்குச் செடி மூன்று அடி இடைவெளி விட்டு நடவேண்டும். மலைச் சரிவுகளின் குறுக்காக சிறிய பார்களை அமைத்து பாரின் மேல் அடிப்பகுதியில் பக்கக்கன்றுகளை நடவு செய்யவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

கற்றாழைச் செடிகளுக்க இராசயன உரங்கள் தேவைக்கேற்ப இடவேண்டும். வளமான நிலங்களுக்கு தொழு எரு இட்டால் போதுமானது. தரிசு மற்றும் வளமில்லாத மண்ணிற்கு செடிகளை நட்ட 20வது நாளில் எக்டருக்கு 30 கிலோ தழைச்சத்து உரத்தை இடுவது அவசியம். எக்டருக்கு  120 கிலோ உரத்தையும் அடியுரமாக இடுவது நல்லது. இதனால் அதிகளவு “கூழ்” மகசூல் கிடைக்கும்.

நீர் நிர்வாகம்

கற்றாழையை மானாவாரிப் பயிராக பயிர் செய்ய ஏற்றது. மஹாராஷ்டிர மாநிலத்தில் இப்பயிரை வருடம் முறை சாகுபடி செய்கின்றன. கோடைக்காலத்தில் பயிர் செய்ய அதன் மொத்த் பயிர் காலத்ததில் அல்லது ஐந்து நீர்ப்பாசனம அளிக்கின்றன.

ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு

கற்றாழையில் அதிக பூச்சி நோய் தோன்றுவதில்லை. நிர் தேங்கும்  நிலத்தில் அழுகல் நோய் ஏற்படும்.  நிலத்தில் வடிகால் வசதியை இலையில் அதிகளவு அலோயின் (Aloin) வேதிப்பொருள் காணப்படும். செடிகளை வேரோடு பிடுங்கி எடுத்து, இலைகளை ஆறு மணிநேரத்திற்குள் பக்குவப்படுத்துவதற்கு எடுத்துச் செல்லவேண்டும்.

மகசூல்

எக்டருக்கு 15 டன் கற்றாழை இலை மகசூலாகக் கிடைக்கும். இலையில்  80 முதல் 90 சதம் நீர் உள்ளதால் விரைவாக கெட்டுவிடும். இதனால் அறுவடை செய்த உடனே இலைகளை பக்குவப்படுத்தி அவற்றிலிருந்து “கூழ்” (Gel) யை பிரித்தெடுக்கவேண்டும்.

 

 

மேலோட்டம்
வழிமுறைகள்
தொழில்நுட்பங்கள்
வழங்கல்கனை மேலாண்மை
பசுமைக்குடில் தொழில்நுட்பம்
பழப்பண்ணை மேலாண்மை
உற்பத்தி செலவு

துல்லிய பண்ணைய விவசாயிகள்
பயிர் சாகுபடியாளர்கள்
aa

தேசிய இணையதளங்கள்
சர்வதேச இணையதளங்கள்

அரசு தோட்டக்கலைத் துறை
அரசு தோட்டக்கலைப்
பண்ணைகள்
வணிக வாரியங்கள்

புத்தகங்கள் மற்றும்
வெளியீடுகள்

 

aa

பழப்பயிர்கள்
காய்கறிப் பயிர்கள்
வாசனை மற்றும்
மலைத்தோட்டப் பயிர்கள்
மலரியல் மற்றும் நில
எழிலூட்டுதல்
மூலிகை மற்றும்
நறுமணப் பயிர்கள்

 

||| | | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2008