||| | | | | |
தோட்டக்கலை :: மலைத்தோட்டப் பயிர்கள் :: பாக்கு
gg gg

இரகங்கள்
தொழில்நுட்பங்கள்
விற்பனை விலை

தேசிய தோட்டக்கலை இயக்கம்
நபார்டு
தேசிய தோட்டக்கலை வாரியம்
தேசிய மூலிகைப்பயிர்கள்
வாரியம்
சொட்டுநீர் பாசனம்
ஒருங்கிணைந்த தோட்டக்கலை
மேம்பாட்டுத்திட்டம்
வணிக வாரியங்கள்

சந்தை நிலவரம்

இரகங்கள் : மங்களா, சுபமங்களா, சுமங்களா, மொஹி நகர் மற்றும் ‚மங்களா, சும்ருதி (அந்தமான்).

மண் மற்றும் தட்பவெப்பநிலை : பாக்கு மரத்தைப் பொதுவாக எல்லா வகையான
மண் வகைகளிலும் சாகுபடி செய்யலாம். மண் நல்ல வடிகால் வசதியுடன் இருக்கவேண்டும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 1000 மீட்டர் உயரம் வரை உள்ள இடங்களில்  சாகுபடி செய்யலாம்.

பருவம் : ஜுன் - டிசம்பர்

விதையும் விதைப்பும்

குறியீட்டு மூலம் தேர்வு செய்யப்பட்ட நன்கு முதிர்ந்த தாய் மரங்களிலிருந்து விதைகளைச் சேகரிக்கவேண்டும். விதைகளை 5-6 செ.மீ இடைவெளியில் மணல் பரப்பிய நாற்றாங்காலில்  விதைக்காம்புகள் மேல்  நோக்கி இருக்குமாறு நடவு செய்யவேண்டும். விதைகள் முளைத்து 2 அல்லது 3 இலைகள் வந்தவுடன், நாற்றுக்களைப் பிடுங்கி 30  x  50 செ.மீ அளவுள்ள மண்கலவை நிரப்பிய பாலித்தீன் பைகளில் நடவு செய்யவேண்டும். பிறகு நாற்றுக்களை நிழலில் வைத்து 12-18 மாதங்கள் வளர்க்கவேண்டும். இவ்வாறு வளர்க்கப்பட்ட நாற்றுக்களை 30 செ.மீ இடைவெளியில் இரண்டாம் நாற்றாங்காலில் நடவு செய்து வளர்க்கவேண்டும். அவ்வப்போது நாற்றுகளுக்கு தொடர்ந்து நீர்ப்பாய்ச்சவேண்டும்.

நடவு: அடர்த்தியான உயரம் குறைவான மற்றும் இலைகள் அதிகமுள்ள நாற்றுக்களைத் தேர்வு செய்யவேண்டும். நாற்றுக்கள் குறைந்தது ஒரு ஆண்டு முதல் இரண்டு ஆண்டு வயதுடையவையாக இருத்தல்வேண்டும். தேர்வு செய்யப்பட்ட நாற்றுக்களை 90 செ.மீ நீளம், அகலம், ஆழம் உள்ள குழிகளில் நடவேண்டும். குழிகளுக்கு இடையே உள்ள இடைவெளி 27.5 செ.மீ இருத்தல்வேண்டும். நாற்றுக்களின் முக்கால் பாகம் நீளத்திற்கு மண் அணைக்கவேண்டும். நாற்றுக்களைத் தென்மேற்குத் திசையிலிருந்து படக்கூடிய சூரிய ஒளியிலிருந்து தடுக்கப்படவேண்டும். இல்லையெனில் இலைகளில் சூரிய கருகல் உண்டாகும். எனவே நாற்றுக்களை நடுவதற்கு முன் தென் மற்றும் மேற்கு திசைகளில் விரைவில் வளரக்கூடிய நிழல் தரும் மரங்களை வளர்க்கவேண்டும். வாழை போன்ற பயிர்களை ஊடுபயிராக நட்டு நிழல் கொடுக்கலாம். பாக்கு மரம் நன்கு வளர தொடர்ந்து நீர்ப்பாய்ச்சவேண்டும்.

உரமிடுதல் காய்க்கக்கூடிய ஐந்து வயதான மரங்களுக்கு மரம் ஒன்றிற்கு 10 முதல் 15 கிலோ வரை தொழு எரு அல்லது பசுந்தாள் உரம் இடவேண்டும். இவற்றுடன் 100 கிராம் தழைச்சத்து, 40 கிராம் மணிச்சத்து, 50 கிராம் சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய இராசயன உரங்களை ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் இடவேண்டும். ஐந்து ஆண்டுகளுக்குக் குறைவாக உள்ள மரங்களுக்கு மேலே கூறிய உரங்களில் பாதி அளவு இடவேண்டும்.

பயிர்

 

இடவேண்டிய சத்துக்கள் (கிராம் மரம் ஒன்றிற்கு)

இப்கோ காம்ப்ளக்ஸ் 10:26:26 யூரியா இடவேண்டிய அளவு
(கிராம் மரம் ஒன்றிற்கு)

தழை

மணி

சாம்பல்

10:26:26

யூரியா

பொட்டாஷ்

பாக்கு

ஐந்து ஆண்டுகளுக்குக் குறைவாக உள்ள மரங்களுக்கு

50

20

25

97

88

0

 

ஐந்து வயதான மரங்களுக்கு

100

40

50

154

184

17

களைக்கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி

வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மண்வெட்டி கொண்டு கொத்தி களை நீக்கம் செய்யவேண்டும்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

சிலந்திப்பூச்சி : இதனைக் கட்டுப்படுத்த டைகோபால் 18 இசி மருந்தை லிட்டர் நீருக்கு 2.5 மில்லி கலந்து தெளிக்கவேண்டும்.

ஸ்பின்டில் வண்டு : கட்டுப்படுத்த 1.3 சதம் லிண்டேன் மருந்தை லிட்டர் நீருக்கு 2.5 கிராம் என்ற அளவில் கலந்து கொண்டைப் பகுதியில் நன்குபடும்படி தெளிக்கவேண்டும்.

பாளைப்புழுக்கள் பாளைகளைத் திறந்துவிட்டு லிட்டர் நீருக்கு லிண்டேன் 20 இசி 2.5 மில்லி மருந்து கலந்து தெளிக்கவேண்டும்.

நோய்கள்

காய் அழுகல் அல்லது மாகாளி நோய் : நோய் தாக்கப்பட்ட பகுதியை நீக்கிவட்டு அந்த இடத்தில் 10 சதவீதம் போர்டோக் கலவையை தடவிவிடவேண்டும்.

அடித்தண்டு அழுகல் : கடுமையாக தாக்கப்பட்ட மரங்களை வெட்டி அழித்துவிடவேண்டும். 1.5 சத ட்ரைடேமாாப் மருந்தை 125 மில்லி என்ற அளவில் வேர் மூலம் 3 மாத இடைவெளியில் செலுத்தவேண்டும்.

அறுவடை

நட்ட 5 ஆண்டுகளில் பாக்கு மரம் காய்ப்புக்கு வரும். கால் பங்கு அளவு பழுத்த பழங்களை அறுவடை செய்யவேண்டும். ஒரு வருடத்தில் மூன்று முதல் ஐந்து முறை அறுவடை செய்யலாம். அறுவடை எண்ணிக்கை பயிரிடும் இடம் மற்றும் பருவத்திற்கு ஏற்ப மாறுபடும்.

மகசூல் : எக்டருக்கு 1250 கிலோ.

 

 

மேலோட்டம்
வழிமுறைகள்
தொழில்நுட்பங்கள்
வழங்கல்கனை மேலாண்மை
பசுமைக்குடில் தொழில்நுட்பம்
பழப்பண்ணை மேலாண்மை
உற்பத்தி செலவு

துல்லிய பண்ணைய விவசாயிகள்
பயிர் சாகுபடியாளர்கள்
aa

தேசிய இணையதளங்கள்
சர்வதேச இணையதளங்கள்

அரசு தோட்டக்கலைத் துறை
அரசு தோட்டக்கலைப்
பண்ணைகள்
வணிக வாரியங்கள்

புத்தகங்கள் மற்றும்
வெளியீடுகள்

 

aa

பழப்பயிர்கள்
காய்கறிப் பயிர்கள்
வாசனை மற்றும்
மலைத்தோட்டப் பயிர்கள்
மலரியல் மற்றும் நில
எழிலூட்டுதல்
மூலிகை மற்றும்
நறுமணப் பயிர்கள்

 

||| | | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2008