||| | | | | |
தோட்டக்கலை :: மலைத்தோட்டப் பயிர்கள் :: கோகோ
gg gg

இரகங்கள்
தொழில்நுட்பங்கள்
விற்பனை விலை

தேசிய தோட்டக்கலை இயக்கம்
நபார்டு
தேசிய தோட்டக்கலை வாரியம்
தேசிய மூலிகைப்பயிர்கள்
வாரியம்
சொட்டுநீர் பாசனம்
ஒருங்கிணைந்த தோட்டக்கலை
மேம்பாட்டுத்திட்டம்
வணிக வாரியங்கள்

சந்தை நிலவரம்

இரகங்கள் : சிரையலோ, பாரஸ்ட்டீரோ மற்றும் டிரினிடாரியோ

பாரஸ்ட்டீரோ
டிரினிடாரியோ

மண் மற்றும் தட்பவெப்பநிலை : நல்ல வடிகால் வசதியுடைய இரு பொறை நிலம் உகந்தது. மண்ணின் கார அமிலத்தன்மை 6.6-7.0 வரை இருத்தல்வேண்டும். கடல் மட்டத்திலிருந்து 1200 மீட்டர் மழையளவு வருடத்திற்கு 150 செ.மீ உள்ள அனைத்து இடங்களிலும் பயிரிடலாம். கோகோ பயிர் நன்கு வளர குளிர்ந்த தட்பவெப்பநிலையும், நிழலும் இருத்தல் அவசியம். தென்னை மற்றும் பாக்குத் தோப்புகளில் ஊடுபயிராக வளர்க்க மிகவும் ஏற்றது.

பருவம் : ஜுன் - ஜுலை மற்றும் செப்டம்பர் - அக்டோபர்

விதையும் விதைப்பும்

பயிர்ப்பெருக்கம் : கோகோ செடியை விதைகளிலிருந்த இனப்பெருக்கம் செய்யலாம். நன்கு பழுத்த பழங்களிலிருந்து விதைகளைத் தனியாகப் பிரித்தெடுத்து கம்போஸ்ட், மேல்மண், தோட்டத்து மண் கலந்த நிரப்பிய பாலித்தீன் பைகளில் ஊன்றவேண்டும். பிறகு பாலித்தீன் பைகளை நிழற்பாங்கான இடத்தில் வைத்துப் பராமரிக்கவேண்டும். நாற்றுக்கள் 6 மாத வயது அடைந்தவுடன் நடுவதற்குத் தயாராகிவிடும்.

நடவு : தோட்டங்களில் 3 x 3 மீட்டர் இடைவெளியில் 45 செ.மீ நீள, ஆழ, அகலமுள்ள குழிகளைத் தோண்டி நாற்றுக்களை நடவேண்டும். நட்ட செடிகளுக்கு தற்காலிகமாக நிழல் அளித்துப் பாதுகாக்கவேண்டும். பசுந்தழை, இலைமக்கு கொண்டு நிலப்போர்வை அமைத்து மண் ஈரம் காக்கவேண்டும்.

நீர் நிர்வாகம்

நட்டவுடன் ஒரு முறையும் பின்பு நிலத்தின் ஈரத்திற்கு ஏற்ப நீர்ப்பாய்ச்சவேண்டும். கோடைக்காலத்தில் மூன்று நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

மூன்று வயது வரை ஆன இளம் செடிகளுக்குச் செடி ஒன்றிற்கு 50 கிராம் தழைச்சத்து, 20 கிராம் மணிச்சத்து, 70 கிராம் சாம்பல் சத்து தரக்மூடிய உரங்களை இடவேண்டும். மூன்று வயதிற்கு மேற்பட்ட செடிகளுக்கு, செடி ஒன்றிற்கு 100 கிராம் தழைச்சத்து 96 கிராம் மணிச்சத்து 140 கிராம் சாம்பல்சத்து தரக்கூடிய உரங்களை இடவேண்டும். மேற்கண்ட உரங்களை இரண்டாகப் பிரித்து ஏப்ரல் - மே  மற்றும் ஆகஸ்ட் -  செப்டம்பர் மாதங்களில் இடவேண்டும்.

பயிர்

 

இடவேண்டிய சத்துக்கள் (கிராம் மரம் ஒன்றிற்கு)

இப்கோ காம்ப்ளக்ஸ் 10:26:26 யூரியா இடவேண்டிய அளவு
(கிராம் மரம் ஒன்றிற்கு)

தழை

மணி

சாம்பல்

10:26:26

யூரியா

பொட்டாஷ்

கோகோ

மூன்று வயது வரை ஆன இளம் செடிகளுக்கு

50

20

70

77

92

84

 

மூன்று வயது மேற்பட்ட செடிகளுக்கு

100

96

140

370

138

74

களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி

பின்செய்நேர்த்தி : தேவைப்படும் போது இலேசாகக் கொத்தி களை எடுக்கவேண்டும். நோயுற்ற, குறுக்காக வளர்ந்த மற்றும் காய்ந்த கிளைகளை அவ்வப்போது வெட்டிவிடவேண்டும். இளம்  செடிகளுக்கு தற்காலிகமாக நிழல் கொடுக்க வாழை போன்ற மரங்களை நட்டு நிழல் ஏற்படுத்திக்கொடுக்கலாம். நிரந்தரமாக நிழல்தர பலா, சில்வர் ஓக் போன்ற மரங்களைப் பயிரிடலாம்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

பூச்சிகள் : இப்பூச்சி, கிளைகளிலும், காய்களிலும் காணப்படும். இதைக்கட்டுப்படுத்த பாஸ்போமிடான் 85 இசி, 1 மில்லி மருந்து அல்லது டைமித்தோயேட் 2 மில்லி மருந்து ஒரு லிட்டர் நீரில் கலந்து 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கவேண்டும்.

அசுவினி : இதனைக் கட்டப்படுத்த டைமித்தோயேட் 35 இசி, 1 மில்லி மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து ஒரு மாத இடைவெளியில் தெளிக்கவேண்டும்.

நோய்கள் : கருங்காய் நோய், பின் அழுகல் நோய், கரிப்பூட்டை நோய், பூசண நோய் போன்ற நோய்களைக் கட்டுப்படுத்த ஒரு சதவீத போர்டோக்கலவையை, நோயின் அறிகுறிகள் தோன்றும் போது தெளித்து கட்டுப்படுத்தலாம்.

கருங்காய் நோய்

அறுவடை

கோகோ செடிகள் நட்ட 4 ஆம் ஆண்டில் காய்ப்புழு வரும். ஆனால் மிக நல்ல விளைச்சல் செடிகள் நட்ட 6 ஆம் ஆண்டிலிருந்து கிடைக்கும் மே - ஜுன் மற்றும் நவம்பர் - டிசம்பர் மாதங்களில் காய்களை அறுவடை செய்யலாம்.

மகசூல் : ஒரு எக்டருக்கு 500-1000 கிலோ உலர்ந்த விதைகள்.

 

மேலோட்டம்
வழிமுறைகள்
தொழில்நுட்பங்கள்
வழங்கல்கனை மேலாண்மை
பசுமைக்குடில் தொழில்நுட்பம்
பழப்பண்ணை மேலாண்மை
உற்பத்தி செலவு

துல்லிய பண்ணைய விவசாயிகள்
பயிர் சாகுபடியாளர்கள்
aa

தேசிய இணையதளங்கள்
சர்வதேச இணையதளங்கள்

அரசு தோட்டக்கலைத் துறை
அரசு தோட்டக்கலைப்
பண்ணைகள்
வணிக வாரியங்கள்

புத்தகங்கள் மற்றும்
வெளியீடுகள்

 

aa

பழப்பயிர்கள்
காய்கறிப் பயிர்கள்
வாசனை மற்றும்
மலைத்தோட்டப் பயிர்கள்
மலரியல் மற்றும் நில
எழிலூட்டுதல்
மூலிகை மற்றும்
நறுமணப் பயிர்கள்

 

||| | | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2008