||| | | | | |
தோட்டக்கலை :: மலைத்தோட்டப் பயிர்கள் :: தென்னை
gg gg

இரகங்கள்
தொழில்நுட்பங்கள்
விற்பனை விலை

தேசிய தோட்டக்கலை இயக்கம்
நபார்டு
தேசிய தோட்டக்கலை வாரியம்
தேசிய மூலிகைப்பயிர்கள்
வாரியம்
சொட்டுநீர் பாசனம்
ஒருங்கிணைந்த தோட்டக்கலை
மேம்பாட்டுத்திட்டம்
வணிக வாரியங்கள்

சந்தை நிலவரம்

இரகங்கள் மற்றம் வீரிய ஒட்டு இரகங்கள்

அ. இரகங்கள்

  1. கிழக்குக் கடற்கரை நெட்டை
  2. மேற்குக் கடற்களை நெட்டை
  3. வி.பி.எம் (சாதாரண அந்தமான நெட்டை இரகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டது)
  4. ஏ.எல்.ஆர் (சி.என்.1) அரசம்பட்டி நெட்டை இரகத்திலிருந்து தேர்வு  செய்யப்பட்டது)
  5. செளகாட் ஆரஞ்சு குட்டை (இளநீருக்காக மட்டும்)

ஆ. வீரிய ஒட்டு இரகங்கள்
(சிறந்த பராமரிப்பில் வளர்க்கப்பட்ட வேண்டியவை)

1. வி.எச்.சி 2 (இ.சி.டி  x  எம்.ஒய்.டி)
2. வி.எச்.சி 3 (இ.சி.டி  x  ஒம்.ஒ.டி)
இது தவிர. இ.சி.டி  x  சி.ஓ.டி , டபுள்யூ x சி.ஓ.டி மற்றும் டபுள்யூ.சி.டி x எம்.ஒய்.டி ஆகிய நெட்டை x குட்டை ஒட்டு இரகங்களும் வேளாண் துறையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. நல்ல நீீர் வளம் உள்ள பகுதிகளில், சிறந்த பராமரிப்பில் பயிர் செய்ய ஏற்றதாக உள்ள குட்டை x நெட்டை (சி.ஓ.டி x டபுள்யூ.சி.டி) ஒட்டு இரகம் வேளாண் துறையினரால் உற்பத்தி செய்யப்படுகிறது.

  • புதிய இரங்கள் மற்றும் வீரிய ஒட்டு இரகங்கள் பற்றிய விபரங்கள்

வ.எண்

விபரம்

விஎச்சி 2 வீரிய ஒட்டு

விபிஎம் 3

விஎச்சி வீரிய ஒட்டு

ஏ.எல்.ஆர் (சி.என்) 1

1.

வெளியான வருடம்

1988

1994

2000

2002

2.

பெற்றோர்

கிழக்கு கடற்கரை நெட்டை x மலேசியா மஞ்சள் குட்டை

அந்தமான சாதாரண நெட்டை இரகத்திலிருந்து தேர்வு

கிழக்கு கடற்கரை நெட்டை x மலேசியா ஆரஞ்சு குட்டை

அரசம்பட்டி உயரம் இரகத்தில் இருந்து தேர்வு

3.

வயது (பெற்றோர்)

60

80

60

80

4.

முதல் பூத்தல் (மாதங்கள்)

43

63

46

48

5.

காய் அளவு

நடுத்தரம் முதல் பெரியது. நீள்வட்டமானது

நீள்வட்டம், அடிப்பகுதி பெரியது,பெரிய காய்கள்

நடுத்தலம் முதல் பெரியது நீள்வட்டமானது

சிறியது முதல் நடுத்தரம் நீள்வட்டமானது

6.

காய்களின் விளைச்சல் / வருடம்

142

92

156

126

7.

கொப்பரை(கிராம் மலேசியா / குர்யு்)

152

176

162

131

8.

கொப்பரை மகசூல் (கிராம் / மரம் / வருடம்)

21.5

16.2

25.2

16.5

9.

எண்ணெய் (சத்து %)

70.2

70.0

70.0

66.5

10.

சிறப்பு அம்சங்கள்

அதிகக்காய் மகசூல், அதிக எண்ணெய் சத்து

அதிகக் கொப்பரை அளவு, வறட்சி தாங்கும் திறன்.

அதிகக்காய் மகசூல், அதிக கொப்பரை மகசூல் அதிக எண்ணெய் சத்து

வறட்சி தாங்கும் திறன்

பயிர் நிர்வாகம்

1. மண் வகைகள்

செம்மண், வண்டல் மண் , மணல் கலந்த செம்மண் மற்றும் அமிலத்தன்மை கொண்ட வேட்டரைட் எனப்படும் மண் வகை தென்னை சாகுபடிக்கு ஏற்றது. அதிக களிமண் மற்றும் வடிகால் வசரியியல்லாத மண் வகைகள் தென்னை சாகுபடிக்கு ஏற்றதல்ல.

2. நடவு பருவங்கள்

ஆடி மற்றும் மார்கழி மாதங்கள் பாசன மற்றும் வடிகால் வசதியுள்ள இடங்களில் மற்ற மாதங்களிலும் நடலாம்.

3. நடவு இடைவெளி

25 அடிக்கு 25 அடி (7.5 x 7.5 மீட்டர்) என்ற கணக்கில் நடவு  செய்யலாம். இதனால் ஒரு எ்கடர் நிலப்பரப்பில் தென்னங்கன்றுகள் நடலாம். ஓரக்கால்களில் நடவு  செய்ய 20 அடி இடைவெளி போதுமானதாகும்.

4. நடவு முறை

3 அடி நீள, அகல, ஆழ குழிகள் தோண்டி அதில் 1.3 சதவீதம் லிண்டேன் தூள்களை தூவிவிடவேண்டும். அந்தக் குழியை 2 அடி உயரத்திற்கு (60 செ.மீ) மக்கிய தொழு உரம் செம்மண் மற்றும்  மணல் ஆகியவ்றறை சமமாகக் கலந்து நிரப்பவேண்டும். வெளித்தோன்றும் வேர்கள் அனைத்தும் நீக்கப்பட்ட தென்னங்கன்றுகளை குழயின் நடுவே மண் கலவையை எடுத்துவிட்டு நடவு செய்யவேண்டும். நாற்றையும் அதனுட்ன கூடிய தேங்காயையம் மண் அமைன்பு செய்து சுற்றிலும் அழுத்திவிடவேண்டும். நட்ட கன்றகளுக்கு பின்னிய தென்னை ஓலை அல்லது பணை ஓலை கொண்டு நிழல் அமைத்துத் தரவேண்டும். தென்னங்கன்றகளைச் சுற்றி சேரும் மண்ணை அடிக்கடி அப்புறப்படுத்த வேண்டும். வருடா வருடம் வட்டப்பாத்தியை அகலப்படுத்தவேண்டும்.

5. நீர் மேலாண்மை

ஐந்தாம் ஆண்டு முதல் தென்னங்கன்றுகளுக்கு நீர் ஆவியாலுக்கேற்ப கீழ்க்காணும் நீர் மேலாண்மை திட்டத்தை சொட்டு நீர்ப்பாசனம்  அல்லது வட்டப்பாத்தி மூலம் கடைப்பிடிக்கலாம்.

தமிழக்த்தின் மேற்குப் பகுதயியல் தென்னை மரங்குளுக்குத் தேவையான ஒரு  நாளைய நீரின் அளவு (லிட்டரில்).


மாதங்கள்

நீர்நிறைந்த பகுதிகள்

நீர் ஓரளவு கிடைக்கப் பெறும் பகுதிகள்

வறட்சியான பகுதிகள்

அ. சொட்டு நீர்ப்பாசனம்

 

 

 

பிப்ரவரி - மே

65

45

22

ஜனவரி, ஆகஸ்டு மற்றும் செப்டம்பர்

55

35

18

ஜுன் மற்றும் ஜுலை, அக்டோபர் முதல் டிசம்பர் வரை

45

30

15

ஆ. வட்டப்பாத்தி நீர்ப்பாசனம்

 

 

 

பிப்ரவரி - மே

410 லிட்டர் / 6 நாள் *

 

 

ஜனவரி, ஆகஸ்டு மற்றும் செப்டம்பர்

410 லிட்டர் / 7 நாள் *

 

 

ஜுன் மற்றும் ஜுலை, அக்டோபர் - டிசம்பர்

410 லிட்டர் / 9 நாள் *

 

 

தமிழகத்தின் கிழக்குப்பகுதியில் அக்டோபர் தென்னை மரங்குளுக்குத் தேவையான ஒரு நாளைய நீரின் அளவு (லிட்டரில்)


மாதங்கள்

நீர் நிறைந்த பகுதிகள்

நீர் ஓரளவு கிடைக்கப் பெறும் பகுதிகள்

வறட்சியான பகுதிகள்

அ. சொட்டு நீர்ப்பாசனம்

 

 

 

மார்ச்சு - செப்டம்பர்

80

55

27

அக்டோபர் - பிப்ரவரி

50

35

18

ஆ. வட்டப்பாத்தி நீர்ப்பாசன முறை

 

 

 

மார்ச்சு - செப்டம்ப ர்

410 லிட்டர் / 5 நாள்

 

 

அக்டோபர் - பிப்ரவரி

410 லிட்டர் / 8 நாள்

 

 

  • வட்டப்பாத்திகளில் நீர் பாய்ச்சும்பொது மேலே கொடுக்கப்பட்ட நீரின் அளவுடன் 35 முதல் 40 சதவிகிதம் (135 - 160 லிட்டர்) அதகப்படுத்தி வாய்க்கால்களில் பாய்ச்சும்போது குறையும் நீரின் அளவை ஈடுகட்டவேண்டும்.

தென்னை நார்க்கழிவால் நிரப்பப்பட்ட ஒரு அடி நீள, அகல, ஆழ குழிகள் அமைத்து குழிக்குள் 16 மி.மீ விட்டமுடைய பி.வி.சி குழாய்களை சாய்வாக வைத்து அதில் சொட்டு நீர் விழும்படி அமைக்கவேண்டும். இக்குழிகள் மரத்திலிருந்து 1 மிட்டர் தூரத்தில் நான்கு பக்கமும் அமைக்கப்படவேண்டும்.

முதலாம் ஆண்டு  ஒரு நாள் விட்டு ஒரு நாளும், இரண்டாம் ஆண்டு முதல் காய் விடிக்கும் வரை வாரம் இருமுறையும் தேவைக்கேற்ப பாய்ச்சதல் சிறந்தது.

வறட்சி மேலாண்மை மற்றும் மண் நீர்வள பாதுகாப்பு

அ.தென்னை மட்டைகள் ஓலைகள் தென்னை நார்க்கழிவு கொண்டு மூடாக்கு போடுதல்

குறிப்பாக கோடைக்காலங்களில் 1.8 மீட்டர் ஆரம் கொண்ட வட்டப்பாத்திகளில் குவிவட்டப்பகுதி மேல் நோக்கியவாறு 100 தென்னை மட்டைகளை அல்லது 15 காய்ந்த தென்னை ஓலைகளை அல்லது 10 செ.மீ உயரத்திற்கு தென்னை நார்க்கழிவு பரப்பி மண் நீர் வளத்தைப் பாதுகாக்கலாம்.

ஆ. தேங்காய் மட்டைகள் அல்லது தென்னை நார்க்கழிவு புதைத்தல்

தேங்காய் மட்டைகளை குழிந்த பகுதி மேல் நோக்கிய வண்ணம் வட்டப்பாத்தகளிலோ அல்லது இரு தென்னை வரிசைகளுக்கு இடைவெளிகளிலோ புதைத்து வறட்சிகளைத் தாங்க ஏற்பாடு செய்யலாம். 100 தேங்காய் மட்டைகள் நார்ப்பகுதி மேல் நோக்கி இருக்குமாறு அல்லது 25 கிலோ தென்னை நார்க்கழிவை 1.5 மீட்டர் ஆரம் தூரத்தில் 30 செ.மீ அகலமும். 60 செ.மீ ஆழமும்  கொண்ட குழகளில் இடவேண்டும். இந்த மட்டைகளை தென்னை மரத்திலிருந்து 3 மீட்டர் தள்ளி நீண்ட குழிகளில் 150 செ.மீ (5 அடி) அகலத்தில் இந்த மட்டைகளை போட்டு மூடி வைக்கலாம். இதன் மூலம் பருவ மழைக்காலத்தில் கிடைக்கும் நீரை சேமிக்கமுடியும்.

6. உரமிடல்

ஐந்தாம் ஆண்டு முதல் தென்னை மரங்களுக்கு 50 கிலொ தொழு உரம் அல்லதுமக்கிய உரம் அல்லது பசுந்தாள் உரமிடவேண்டும். மேலும் தென்னையின் அடிப்பாகத்தில் இருந்து 1.8 மீட்டர் ஆரத்தில் உள்ள வட்டப்பாத்தி முழுவதும் கீழ்க்காணும் உரங்களாவன
யூரியா                                         -           1.3 கிலோ (தழைச்சத்து 560 கிராம்)
சூப்பர் பாஸ்பேட்                         -           2.0 கிலோ (மணிச்சத்து 320 கிராம்)
மியூரியேட் ஆப் பொட்டாஷ்          -           2.0 கிலோ (சாம்பல் சத்து 1200 கிராம்)
என்ற கணக்கில் இடடு  கொத்தியபின் நீர் பாய்ச்சவேண்டும்.. உரமிடும்போது மண்ணில் தகுந்த ஈரம் இருக்கவேண்டியதும் அவசியமாகிறது. மேலே கூறியுள்ள உர அளவை இரண்டாப் பிரித்து ஆடி மற்றும் மார்கழி மாதங்களில் இடலாம். இரண்டு, மூன்று மற்றும் நான்காம் ஆண்டுகளில் தென்னங்கன்றுகளுக்கு முறையே 1/4, 1/2 மற்றும் 3/4 பகுதி அளவில் மேலே கூறப்பட்ட உரத்தை இடவேண்டும். மேலே பரிந்துரைக்கப்பட்ட உரங்களில் 75 சதவிகிதத்தை ஒவ்வொரு மாதமும் தென்னைக்குப் பாயும் நீரில் கலந்து விடலாம். பாஸ்பரஸ் உரத்தை மட்டும் சூப்பர் பாஸ்பேட்டாக வட்டப்பாத்திகளில் இடலாம் அல்லது நல்ல நீர் கிடைக்குமாயின் டி.ஏ.பியாக சொட்டு நீர்ப்பாசனம் மூலமாகவும் இடலாம்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தென்னை ஊக்க மரம்

காய்க்கும் மரங்களுக்கு, வேர்மூலமாக தென்னை ஊக்க உரத்தை ஒரு மரத்திற்கு 200 மில்லி அளவில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கொடுக்கவேண்டும்.

தென்னைக்கு நுண்ணுயிர் உர பரிந்துரைகள்

50 கிராம் அஸோஸ்பைரில்லம் + 50 கிராம் பாஸ்போபாக்டீரியா அல்லது 100 கிராம் அஸோஃபாட் உடன் 50 கிராம் வேர் உடபூசணத்தை தேவையான அளவு கம்போஸ்ட் அல்லது தொழு உரத்துடன் கலந்து இளம் வேர்களில் படும்படி 6 மாதங்களுக்கு ஒரு முறை இடவும். இராசயன பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களோடு உயிர் உரங்களை கலக்கக்கூடாது.

அங்கக கழிவு சுழற்சி

சணப்பு, அவுரி, கலப்பகோனியம், தக்கைப்பூண்டு ஆகிய ஏதாவது ஒரு பசுந்தாள் உரத்தைப் பயரிட்டு பூக்கும் தருணத்தில் உழவு செய்துவிடவேண்டும். சணப்பையை ஒரு வட்டப்பாத்திக்கு 50 கிராம் என்ற அளவில் விதைத்து பூக்கும் தருணத்தில் கொண்டு மண்ணோடு கலந்துவிடவேண்டும். மேலும் தென்னை நார்க்கழிவு அல்லது தென்னை மட்டைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மண்புழு உரம் மற்றும் மற்றும் மக்கிய கழிவுகளையும் இட்டு சுழற்சி செய்யலாம்.

7. பயிர் இடைநேர்த்தி மற்றும் களை நிர்வாகம்

தென்னந்தோப்புகளில் வருடம் இரண்டுமுறை அதாவது ஒருமுறையும் மற்றும் மார்கழி மாதத்தில் ஒருமுறையும் உழவு செய்வதன் மூலம் களைகளை நன்கு கட்டுப்பாட்டில் வைக்கலாம். மேலும் இது வேர்களில் காற்றோட்டத்தை அதிகப்படுத்தி, புதிய வேர்கள் விடத் தேவையான சத்துக்களை எடுத்துக்கொள்ள ஏதுவாகிறது.

இராசயன களைக் கட்டுப்பாடு

இருவிதை இலைகள் நிறைந்த தோப்புகளில் களை முளைப்பதற்கு முன் அட்ரசின் களைக்கொல்லியை செயல்படும் ஒரு கிலொ அளவில் ஒரு எக்டருக்கு  தெளித்து கட்டுப்படுத்தலாம். புல் வகை மற்றும் கோரை வைக் களைச் செடிகள் உள்ள தோப்புகளில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 மில்லி கிளைபொசேட் என்னும் களைக்கொல்லி மற்றும் 20 கிராம் அம்மோனியம் சல்பேட் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

8. ஊடுபயிர் சாகுபடி

தென்னந்தோப்பில் சாகுபடி செய்ய ஊடு பயிரைத் தேர்வு செய்யும் போது அந்தப்புகுதி தட்பவெப்பநிலை, மண் மற்றும் அந்த விளைப்பொருளுக்கு ஏற்ற சந்தை ஆகியவற்றை கருத்தில் கொள்ளவேண்டும். மேலும் தென்னை மரங்களின் இலைகளின் சுற்றளவு, இடைவெளி மற்றும் வயதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

அ. ஏழு ஆண்டுகளுக்கு குறைந்த வயதுடை மரங்கள்

அந்தந்த பருவநிலை, மரத்தின் பரப்பளவு  மற்றும் மண்ணின் தன்மைக்கேற்ப ஐந்தாண்டுகள் வரை. ஒரு பருவப் பயிர்களான நிலக்கடலை, எள், சூரியகாந்தி, மரவள்ளி, மஞ்சள் மற்றும் வாழை ஆகியவற்றை பயிர் செய்யலாம். கரும்பு மற்றும் நெல் போன்ற பயிர்கள் சாகுபடி செய்வதைத் தவிர்க்கவேண்டும்.

ஆ. 7-20 ஆண்டுகள் வயதுள்ள தோப்புகள்

இந்தக் காலக்கட்டத்தில் பசுந்தாள் உரம் மற்றும் தீவனப்பயிர்களை (நேப்பியர் மற்றும் கினியா புல்) பயிர் செய்யலாம்.

இ. 20 ஆண்டுகளுக்கு மேலான வயரடைய மரங்கள் உள்ள தோப்புகளில்

கீழ்க்காணும் பயிர்களை சாகுபடி செய்யலாம். (ஊடுபயிர் செய்ய தோப்புக்குள் வரும் சூரிய ஒளி 50 சதவிகிதத்திற்கு மேல் இருக்கவேண்டும்)

  1. ஒரு பருவப்பயிர் : நிலக்கடலை, வெண்டை, மஞ்சள், மரவள்ளி, சர்க்கரைவள்ளி கிழங்கு, சிறு கிழங்கு, சேனைக் கிழங்கு, இஞ்சி மற்றும் அன்னாசி ஆகியவற்றை சாகுபடி செய்யலாம்.
  2. இருபருவப் பயிர் : வாழையில் பூவன் மற்றும் மொந்தன் இரகங்கள் ஏற்றவைகளாகும்.
  3. பல ஆண்டு பயிர்கள் : கோகோ, மிளகு (பன்னியூர் 1, பன்னியூர் 2, பன்னியூர் 5 அல்லது கரிமுண்டா), ஜாதிக்காய் மற்றும் வனிலா.

இதில் கோகோ, ஜாதிக்காய் மற்றும் வனிலா ஆகியவை பொள்ளாச்சி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் சில பகுதிகளுக்கு ஏற்றவை. வனிலா பயிரிட, நோய் தாக்குதல் இல்லாத நடவு தண்டைப் பயன்படுத்தவேண்டும். மேலும் நட்டபின் நோய் தாக்குதல் பாதுகாக்கவேண்டும்.

பல பயிர் அமைப்பு

  1. தென்னை + வாழை + சிறுகிழங்கு + வெண்டை ஆகியவை கிழக்குப் பகுதிகளுக்கு ஏற்றவை.
  2. தென்னையுடன் வாழை, மிளகு, கோகோ, ஜாதிக்காய் மற்றும் வனிலா ஆகியவற்றை மேற்குப் பகுதிகளில் பயிரிடலாம்.

மேலே கூறிய பயிரமைப்புளில் ஒவ்வொரு பயிருக்கும் சிபாரிசு உரம் மற்றும் நிர்பாபசனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

அ. பூச்சி மேலாண்மை

பூச்சிகள்

மேலாண்மை முறைகள்

காண்டாமிருக வண்டு

  • இறந்த மரங்களைத் தோப்புகளிலிருந்து அகற்றி எரித்தவிடல் வேண்டும். ஏனெனில் அவைகள் வண்டினம் இனப்பெருக்கத்துக்கு உகந்த இடமாகிவிடுகிறது.
  • தொழு உரத்தை குழிகளிலிருந்து எடுக்கும் பொது அவற்றிலிரக்கும் புழுக்கள் மற்றம் கூட்டுப்புழுக்களைச் சேகரித்து அழித்துவிடவெண்டும்.
  • புழுக்களை உண்டு அழிக்கம் பச்கை மஸ்கார்டைன் பூஞ்சாணத்தை (மெட்டாரைசியம் அனிசோபிலியே) எருக்குழிகளில் கலந்து விடவேண்டும். இவ்வகைப் பூஞ்சாணம் அரசு உயிரியல் ஆய்வகங்களில் வளர்க்கப்படுகிறது. இப்பூஞ்சாணம் ஆய்வகத்தில் சோளம் மற்றும் காரட் போன்றவற்றில் வளர்க்கப்படுகிறது.
  • ஒரு கிலோ ஆமணக்குப் புண்ணாக்கினை 5 லிட்டர் தண்ணீரில் மண்பானைகளில் ஊறவைத்து, தோப்புகளில் ஆங்காங்கே வைத்து வண்டுகளைக் கவர்ந்து அழிக்கவும்.
  • பச்சைத் தென்னை மட்டைகளை நீளவாக்கில் பிளந்து அல்லது அழுகிய இளம் தென்னை மரத்தண்டுப் பகுதியினை கள்ளில் நன்குத் தோய்த்து, தோப்புகளில் ஆங்காங்கே வைப்பதன் மூலம் வளர்ந்த வண்டகளைக்  கவர்ந்தழிக்கலாம்.
  • ஒவ்வொரு முறையும் தேங்காய் எடுக்கும் தருணத்தில் தென்னை மடல் பகுதிகளை நன்குச் சோதிக்கவேண்டும். அரை மீட்டர் நீளமுள்ள குத்தூசிக் கொண்டு மடல்களுக்கும் குருத்துகளுக்கும் இடையே செருகி, வண்டிருப்பதைச் சோததித்து, இருந்தால் குத்தி எடுத்துவிடவேண்டும்.
  • தென்னங்கன்றுகளில் அடிப்பாகத்தில் பண்ணாடைகளின் உட்பகுதியில் மூன்றரை கிராம் எடையுள்ள மூன்று பூச்சிக்குண்டுகளை (பாச்சை உருண்டைகளை (அ) அந்துப் பூச்சி உருண்டைகளை) ஒரு கன்றுக்கு என்ற அளவில் 45 நாட்களுக்கு ஒருமுறை வைத்து கன்றுகளை வண்டின் தாக்குதலிலிருந்துத் தவிர்க்கலாம்.
  • விளக்குப் பொறியை முதல் கோடைமழை சமயங்களில் மற்றும் பருவமழைக் காலங்களிலும் அமைத்துக் கவர்ந்தழிக்கலாம்.
  • விளக்குப் பொறியை முதல் கோடை மழை சமயங்களில் மற்றும் பருவமழைக் காலங்களிலம் அமைத்துக் கவர்ந்தழிக்கலாம்.
  • பேக்குலோ நச்சுயிரியும் இவ்வண்டினத்தைத் தாக்கி அழிக்கிறது. இந்நச்சுயிரி உட்செரலத்தப்பட்ட வண்டுகளைத் தோப்புகளில் விடுவதன் மூலம் நச்சுயிரி அடுத்து வரும் சந்ததிகளில் பரவிப் புழுப்பருவத்தில் அழிவை ஏற்படுத்துகிறது. பேக்குளோ நச்சுயிரி நோய் தாக்கிய வண்டுகளை எக்டர் ஒன்றுக்கு 15 வீதம் தோப்புகளில் விடவும்.
  • வேப்பங்கொட்டைத் தூள் அல்லது வேம்பு பருப்புத் தூள் 150 கிராமுடன் இரண்டு மடங்கு மணலைக் கலந்து மடல் பகுதிகளில் உள்ளிருந்த மூன்றாவது மட்டைகளின் அடிப்பகுதியில் பண்ணாடைகளுக்கு இடையில் வைப்பதன் மூலம் வண்டுகளால் ஏற்படும் சேதத்தைத் தவிர்க்கலாம்.
  • போரெமட 10 சத குருணை மருந்து 5 கிராமை ஒரு சிறிய அடிப்பகுதியில் குண்ட ஊசியால் துளையிட்ட பாலீத்தீன் பையில் எடுத்துககொண்டு அடை மடல் பகுதிகளில் உள்ளிருந்து இரண்டாவது இடைவெளியில் இருமுறை வைப்பதன் மூலம் வண்டுகளால் ஏற்படும் சேதத்தைத் தவிர்க்கலாம்.
  • ரைனோலூர் (Rhinolure) இனக்கவர்ச்சிப் பொளிகளை இரண்டு எக்டருக்கு ஒன்று வீதம் வைத்து வண்டுகளைக் கவர்ந்து அழிக்கவும்.

கருந்தலைப்புழு

  • இப்பூச்சியின் தாக்குதல் நவம்பர் மாதம் முதல் மே மாதம் வரையிலும் மற்றும் பருவமழைக்குப்பின் ஆகஸ்டு மாதம் முதல் நவம்பர் மாதம் வரைக் காணப்படும். தென்னையின் அனைத்து வயதுடைய மரங்களையும் தாக்கும்.
  • கோடைக்காலத்தில், கருந்தலைப்புழுக்களின் உற்பத்தி அதிகமாக்க காணப்பட்டால் எக்டருக்கு ஒட்டுண்ணிகளான பெத்திலிட் 3000 என்ற அளவிலும் மற்றும் பிரகோனிட் 4500 என்ற அளவில் விடவேண்டும். ஒட்டுண்ணி பொறி மூலம் ஒட்டுண்ணிகளை மரத்தில் விடவேண்டும். ஒட்டுண்ணிகளை மரத்தின் உச்சியில் (மட்டைகளுக்க இடையில் ) விடக்கூடாது.
  • இலைகளில் கருந்தலைப்புழு முதல் இரு நிலைகளில் காணப்பட்டால், எக்டருக்கு பெத்திலிட் என்ற புழு ஒட்டுண்ணியை 3000 அல்லது 1:8 (கருந்தலைப்புழு ஒட்டுண்ணி) என்ற அளவில் விடவேண்டும்.
  • தாக்கப்பட்ட இலைகளை வெட்டி எரித்துவிடவேண்டும்.
  • இளமரங்களில், கருந்தலைப்புழுக்களின் சேதம் காணப்பட்டால், மாலத்தியான் 50 சதம் ஒரு மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்துத் தெளிக்கலாம்.
  • வேர்மூலம் செலுத்துதல் மானோகுரோட்டாபாஸ் 36 சத மருந்து 10 மில்லியுடன் 10 மில்லி  தண்ணீர் கலந்துவேர்  மூலம் செலுத்திக் கட்டுப்படுத்தலாம். மருந்து செலுத்திய 45 நாட்கள் கழித்துதான், இளநீர் மற்றும் தேங்காய்களைப் பறிக்கவேண்டும்.

சிகப்புக் கூன் வண்டு

  • காண்டாமிருக வண்டுகள் தாக்குதலுக்கு இல்ககான மரங்களை இவ்வண்டுகள் எளிதில் தாக்குகின்றன. எனவே காண்டாமிருக வண்டுகள் தாக்குதலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

 

  • காய்ந்த மற்றும் சேதம் அடைந்த மரங்களின் பகுதிகள் மற்றும் இறந்த மரங்களை அகற்றி அழித்து வண்டின் இனப்பெருக்கத்தை தடுக்கவேண்டும்.
  • மரத்தில் சேதம் ஏற்படாமல் மடிந்த வரை பார்த்துக்கொள்ளவேண்டும். அவ்வாறு சேதம் ஏற்பட்டால் சிமெண்ட் கொண்டு அவற்றை அடைத்து இவ்வண்டுக்ள முட்டையிடுவதைத் தடுக்கலாம்.
  • பச்சை மட்டைகளைவெட்டுவதைத் தவிர்க்கவேண்டும்.
  • மட்டை இடுக்ககுளில் காணப்படும் கூன் வண்படுபளைப் பிடித்து அழித்துவிடவேண்டும். மரததின் குருத்துப் புகுதிகளிலும் மற்றும் மேலுள்ள மூன்று மட்டைகளில் அடிப்பகுதியிலும், மண்ல் மற்றும் வேப்பங்கொட்டைத்தூள் அல்லது வேம்புபருப்புத் தூளை (2:1) அல்லது லிண்டேன் 1.3 சதத் தூளுடன் 1:1 என்ற அளவில் கலந்து மூன்று மாதத்திற்கு ஒரு முறை இடுவதல் இப்பூச்சியின் முட்டை இடுவது தடுக்கப்பட்டு, தாக்குதலைக் குறைக்கலாம்.
  • ஒரு ஏக்கருக்கு கரும்புச் சர்க்கரைப்பாகு (Molasses) 2.5 கிலோ (அ) கள் 2.5 லிட்டர் + அசிடிக் அமிலம் 5 மில்லி + ஈஸ்ட் மாத்திரை 5 கிராம் இவற்றுடன் முப்பது தென்னை மட்டைகளை நீளவாக்கில் சிறு துண்டுகளாக்கிசத் சேர்த்து தோப்புகளில் வைத்து கூன் வண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
  • கூன் வண்டுகளைக் கவர்ந்து ஈர்க்கும் பெரோலியூர் (Ferrolure) எனப்படும் கவர்ச்சி மற்றும் உணவுப் பொறிகளை 2 எக்டருக்கு ஒன்று வீதம் தோப்புகளில் வைத்து வண்டகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து அழிக்கவும்.
  • கூன் வண்டின தாக்குதலைத் தவிர்க்க தோப்பைத்  துப்புரவாக வைப்பது மிகவும்  அவசியம்.
  • வேர் மூலம் மானோகுரோட்டோபாஸ் மருந்தை 10 மில்லி + 10 மில்லி தண்ணீரில் கலந்து 45 நாட்கள் இடைவெளியில் 3 தடவைச் செலுத்தவும்.
  • வேர் மூலம் மருந்து செலுத்துதல் தாக்கப்பட்ட பதை்தினைச் சற்றி ஏதாவது ஒரு இடத்தில் குழிபறித்து ஒரு நல்ல இளம் சேர் ஒன்றை எடுக்கவும். பிறகு ஒரு பாலித்தீன் பையில் (7 x 10 செ.மீ) 10 மில்லி மானோகுரோட்டாபாஸ் மருந்துடன் 10 மில்லி தண்ணீரைக் கலந்து எடுத்துக்கொள்ளவும். பின்பு வேரின் நுனியைக் கத்தியினதல் நீளமாகச் சீவி விட்டு இந்த வேரை பாலித்தீன் பையில் உள்ள மருந்துக்கலவையில் நனையும்படி வைத்துப் பையை வேருடன் இணைத்துக் கட்டிவிடவேண்டும். 24 மணி நேரத்தில் மருந்து உறிஞ்சப்படுகிறதா என்றுத் சோதித்துக் குழியினை மூடலாம். அப்படி மருந்த உறிஞ்சப்படவில்லை என்றால் வேறு ஒரு வெரை எடுத்துச்செலுத்தவேண்டும்.
  • குறிப்பு : வேர் மூலம் மருந்து செலுத்திய பின் 45 நாட்கள் கழித்து இளநீர் மற்றும் காய்களைப் பறிக்கவும்.

கரையான்

  • தென்னை தோப்புகளுக்கு அருகாமையில் காணப்படும் கரையான் புற்றுக்களைக் கண்டறிந்து அழிக்கவும்.
  • வேப்பம் எண்ணெய் 5 சதம் மருந்துக் கரைசலை மரங்களின் அடிப்பாகத்தில் 2 அடி உயரத்திற்குத் தடவவும்.
  • குளோர்பயிரிபாஸ் மருந்து 3 மில்லி ஒருலிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
  • தென்னை மட்டைகளை சேமித்து வைக்க கீழ்க்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றிளைத் தெளிக்கவும்.
  • தாமிரக் கரைசல் 1 சதம் (காப்பர் சல்பேட்)
  • முந்திரிக்கொட்டை எண்ணெய் 80 சதம்
  • வேப்பெண்ணெய் 50 மில்லி / லிட்டர் தண்ணீர்
  • வேப்பங்கொட்டைச்சாறு 200 கிராம் / லிட்டர் தண்ணீர்

செதில் பூச்சிகள்

  • இளநீர் மற்றும் முதிர்ந்த தென்னய்காய்களைப் பறித்து விட்டு மானோகுரோட்டாபாஸ் 36 இசி ஒரு மில்லி அல்லமு டைமித்தோயெட் 30 இசி  1.25 மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து, பாதிக்கப்பட்ட காய்களின் மேல் தெளிக்கவும்.

குறிப்பு : மருந்த தெளித்த 45 சாட்கள் கழித்து இளநீர் மற்றம்காய்களைப் பறிக்கவும்.
மீன் எண்ணெய் சோப்புக் கரைசலை 2.5 சதம் தெளிக்கவும்.

மாவுப் பூச்சிகள்

  • பாதிக்கப்பட்ட தென்னை மட்டை மற்றும்  இலைகளை வெட்டி எரிக்கவும். கீழ்க்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து, பாதிக்க்பபட்ட காய்களின் மேல் தெளிக்கவும்.
  • மாலத்தியான் 50 இசி 2 மில்லி
  • டைமித்தோயேட் 30 இசி 1 மில்லி
  • மீதைல்தோயெட் 25 இசி 1 மில்லி
  • பாஸ்பாமிடான் 40 எஸ்.எல். 1.25 மில்லி
  • மானோகுரோட்டோபாஸ் 36 டபுள்யூ.எஸ்.சி 1 மில்லி
  • மிதோமில் 25 இசி 1 மில்லி
  • வேப்பண்ணெய் 30 மில்லி

பழுப்பு நிறப்புழு, குரும்பைப் புழு மற்றும் குரும்பை நாவாய்ப்பூச்சி

  • விவசாயிக்ள, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், விடுமுறை நாட்களில் பூச்சிகள் காணப்படும் தோப்புகளுக்குச் சென்று. அந்துப்பூச்சிகள், புழுக்கள் மற்றும் கூட்டுப்புழுக்களைக் கட்டுப்படுத்த கார்பரில் 50 சத தூளினை 2 கிராம்  / லிட்டர் தண்ணீருக்கு என்ற விகிதத்தில் கலந்துத் தெளிக்கவும்.

 

  • பழுப்புநிறப் புழுக்களை அழிக்க உயரமான மரங்களில் வேர் மூலம் மானோகுரோட்டோபாஸ் 36 டபுள்யூ.எஸ்.சி 10 மில்லி மருந்தை 10 மில்லி தண்ணீரில் கலந்து 45 நாட்கள் இடைவெளியில் 3 தடவைச் செலுத்தவும்.
  • அந்துப்பூச்சிகளை விளக்குப்பொறி வைத்துக் கவர்ந்து அழிக்கவும்.
  • இலைகள், மரப்பட்டைகளில் காணப்படும் முட்டைகள், புழுக்களையும் . மண்ணில் காண்பபடும் கூட்டுப்புழுக்களையும் சேகரித்து அழிக்கவும்.
  • இலைகள், மரப்பட்டைகளில் காணப்படும் முட்டைகள், புழுக்களையும், மண்ணில் காணப்படும் கூட்டுப்புழுக்களையும் சேகரித்து அழிக்கவும்.
  • டைகுளோர்வாஸ் பூக்கிக்கொல்லியை ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மில்லி வீதம் கலந்துத் தெளிக்கவும்.
  • குறிப்பு : வேர் மூலம் மருந்து செலுத்திய பின் 45 நாட்கள் கழித்து இளநீர் மற்றும் காய்களைப் பறிக்கவும்.

நத்தைப் புழு (அ) எரிப்பூச்சி

  • இப்பூச்சியினால் தாக்கப்பட்ட கீழ்வரிசையில் உள்ள மட்டைகள வெட்டி,  அவற்றைத் தோப்பிலிருந்து அப்புறப்படுத்தி, தீவைத்து எரித்து அழிக்கவேண்டும்.

 

  • புழுக்கள் அதிகம் தாக்கப்பட்டத் தென்னை தோப்புகளில் டிராக்டரில் பொருத்தப்பட்ட அதிக விசையுள்ள மருந்து தெளிப்பான் கருவி கொண்டு, டைக்குளோர்வாஸ் 2 மில்லி அல்லது மீதைலடெமட்டான் 25இசி 4 மில்லி அல்லது கஎரை அசோபாஸ் 5  மில்லி அல்லது பேசில்லஸ் துரண்ஜியன்சிஸ் பாக்டீரியா 2 கிராம் மருந்ததினை ஒரு லிட்டர் தண்ணீருட்ன ஒட்டுத்திரவம் (டீபால்) 0.5 மில்லி கலந்துத் தெளித்தோ அல்லது மரம் ஒன்றுக்கு மானோகுரோட்டாபாஸ் மருந்து 15 மில்லியுடன்  15 மில்லி தண்ணீர்க் கலந்து வேர் மூலம் செலத்திக்கட்டுப்படுத்தலாம். இவ்வாறு செலுத்தப்படும்  மரங்களில், 45 நாட்களுக்கு இளநீர் மற்றும் தேங்காய் பறித்தலைத்தவிர்க்கவேண்டும்.
  • எரிப்பூச்சியின் புழுக்களைத் தாக்கி அழிக்கும் கேந்திகேனோ வகை இரைவிழுங்கி நாவாயப்பூச்சி, சில இடங்களில் இயற்கையில் காணப்படுகிறது. இவைத் தென்படும் தோப்புகளில்  மருந்தத்  தெளிக்காமல் இருப்பது நல்லது. ஏனெனில் இந்நாவாய்ப்பூச்சிகள் பெருகி, நத்தைப்புழுக்களின் சாற்றை உறிஞ்சி இயற்கையாகவே கட்டுப்படுத்தும்.

பட்டைத் துளைப்பான் (ஸ்கோழடிட் வண்டு)

  • தென்னை மரத்தில் தரையிலிருந்து 3 அடி உயரத்தில் ஒரு சிறிய துளை போடவும். பென்தியான் 100 இசி 2 மில்லி அல்லது டைகுளோர்வாஸ் 76 டபுள்யூ.எஸ்.சி  3 மில்லி மருந்தை ஒர லிட்டர் தண்ணீர் கலந்துக் கொள்ளவும். ஒரு விளக்கு திரியை மேலே கூறிய மருந்துகளில்  ஏதேனும்  ஒன்றில் நனைத்து அதை துளையில் வைத்துக் களிமண் கொண்டு மூடவும். சேதம் அதிகம் இருந்தால் ஒருமாத இடைவெளியில் மீண்டும்  ஒரு முறை இதனைச் செய்யவும்.

மரநாய்

  • பழுத்த வாழைப்பழத்தில் 500 கிராம் கார்போபியூரான் 3 சத குருணை மருந்தைக் கலந்த உணவுப்பொறிகளை பரவலாக மட்டைகளில் வைத்து இவைகளைக் கட்டுப்படுத்தலாம்.

தென்னை எலிகள்

  • தென்னை மட்டைகளுக்கு இடையெ உள்ள காய்ந்த பாளைகள், பன்னாடைகளை நீக்கி, சுத்தம் செய்தால், எலிகள் தங்க வசதி இருக்காது. எலிகள் இனவிருத்தி அடையாது.

 

  • மரங்களில் புரோமோடயலோன் 0.005 சதம் அளவில், மரம் ஒன்றிற்கு 10 கிராம் வீதம், 12 நாட்கள் இடைவெளியில்  வைத்து எலிகளைக் கவர்ந்து அழிக்கலாம். வயலில்  5 மரங்களுக்கு ஒன்று என்ற விகிதத்தில் எலி மருந்து வைத்தல் போதுமானது.
  • எலிப்பொறிகள் வைத்தும் கவர்ந்து அழிக்கலாம்.
  • மரங்களில் பின் நோக்கி வளைக்கப்பட்ட கூம்பு போன்ற தகரத்தை அடித்து எலிகள் மேலே ஏறாமல் தடுக்கலாம்

முக்கியப் பிரச்சனைகள்

ஈரியோபைட் சிலந்தி ஒருங்கிணைந்தக் கட்டுப்பாட்டு முறைகள்

உரம் இடுதல் ( ஒரு மரத்திற்கு ஒரு வருடத்திற்கு)

  • யூரியா 1.3 கிலோ
  • சூப்பர் பாஸ்பேட்டு 2.0 கிலோ
  • பொட்டாஷ் 3.5 கிலோ
  • அதிக அளவில் சாம்பல் சத்து அளிப்பது சிலந்தித் தாக்குலுக்கு எதிர்ப்புத் தன்மையை உருவாக்கவல்லதாகும்.
  • வேப்பும் புண்ணாக்கு 5 கிலோ
  • மக்கிய தொழு உரம் 50 கிலோ

 

நுண்ணூட்டச்சத்துக்கள்

  • போராக்ஸ் 50 கிராம்
  • ஜிப்சம் 1.0 கிலோ
  • மெக்னீஷியம் சல்பேட் 0.5 கிலோ
  • சணப்பை ஊடுபயிர் வருடத்திற்கு இருமுறை (விதையளவு : எக்டருக்கு 30 கிலோ)

 

தாவரச் சிலந்தி  கொல்லிகள்

சிலந்தியைக் கட்டுப்படுத்த கீழக்கண்ணட தாவரச் சிலந்திக் கொல்லிகளை ஒருல லிட்டர் தண்ணீரில்  கலந்து சிறு கைத்தெளிப்பதன் மூலம் 45 சாட்கள் இடைவெளியில் ஒன்று முதல் ஆறு மாதக் குரும்பைகளின் மேல் நன்கு படும்படி, குறைந்தது மூன்று முறைகள் தெளிக்கவேண்டும். தாவரச் சிலந்திக் கொல்லிகளை ராக்கர் மற்றம் கால் மிதிப்பு தெளிப்பான் மூலமும் 30 அஎ வரை உயரமுள்ள மரங்களில் தெளிக்கலாம்.

தாவரச் சிலந்திக் கொல்லிகள்

 

அசோடிராக்டின் 1 % - 5 மில்லி

முதல் முறை

வேப்ப எண்ணெய் - 30 மில்லி + டீபால் ஒட்டும் திரவம்

இரண்டாவது முறை

அசோடிராக்டின் 1 % - 5 மில்லி

மூன்றாவது முறை

மேலே கூறியுள்ள தாவரச் சிலந்திக்கொல்லிகளை ஜனவரி முதல் ஜுன் மாதம் வரை உள்ள காலத்தில் தெளிக்கவேண்டும். ஒரு மரத்திற்கு ஒரு லிட்டர் அளவு தேவைப்படும். மழை இல்லாத காலத்தில் மேலுள்ள ஆறு குலைகிளல் மட்டும்படும்படி தெளிக்கவேண்டும்.

பின்குறிப்பு

  • தாவரச் சிலந்திக்கொல்லிகளை மழை இல்லாத காலத்தில் தெளிக்கவேண்டும்.
  • காற்று அதிகமாக இருக்கும்போது சிலந்திக் கொல்லிகளைத் தெளிக்கக்கூடாது.
  • பாதுகாப்பான கையுறை, கண் கண்ணாடி மற்றம் கவச உடை அணிந்துக் கொண்டு தான் மருந்தினைத் தெளிக்கவேண்டும்.
  • தாவரச் சிலந்திக்கொல்லிகளைத் தெளித்த வின் முகம் மற்றும் கைகளை சோப்புக் கொண்டு நன்குக் கழுவவும்.
  • சிலந்தியின் தாக்குதல் மிக அதிகமாக இருந்தால் மேலும் இரண்டு முறை தாவரச் சிலந்திக்கொல்லிகளைப் பயன்படுத்தவும்.

 

ஆ. நோய் மேலாண்மை

நோய்களின் பெயர்

கட்டுப்படுத்தும் முறை

அடித்தண்டு அழுகல் நோய் கேனோடெர்மா லுசிடம்

உழவியல் துறை
வருடத்திற்கு மரம் ஒன்றிற்கு 200 கிராம் சூடோமோனனாஸ் புளோரசன்ஸ் மற்றும் 200 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி இடுதல் வேண்டும். மேலும் மரம் ஒன்றுக்கு  50 கிலோ தொழு உரம், 200 கிராம் பாஸ்போபாக்டீரியா மற்றும் 200 கிராம் அசட்டோபாக்டர் இடுதல்.
வயலில் பசுந்தாள் உரப்பயிர்கள் வளர்த்து பின்பு உழுது விடுதல்.
இராசயனம்
வேப்பம் புண்ணாக்கினை மரம் ஒன்றுக்கு 5 கிலோ இராசயன உரமுடன் சேர்த்து இடுதல் ஆரியோபஞ்ஜீன் 2 கிராம் மற்றும் 1 கிராம் தாமிர சல்பேட் அல்லது டிரைடிமார்ப் 2 மில்லிணை 100 மில்லி தண்ணீருடன் கலந்து  வேர் மூலம்  செலுத்ததுல் (பென்சில் அளவு தடிமனுள்ள வேரை தேர்வு செய்து சாய்வாக வெட்டவேண்டும். பின்பு மருந்து கரைசலை பாலித்தீன் பை அல்லது  கண்ணடாடி புட்டிகளில்   எடுத்து வெட்டப்பட்ட வேர் நுனி முழுவதும்  நனையுமாறு வைக்கவேண்டும்).

40 லிட்டர் 1 சத போர்டோக் கலவையை மரத்தைச் சுற்றி 1 மீட்டர் அகலத்திற்கு மண்ணில் ஊற்றவேண்டும்.

குருத்துஅழுகல் நோய் பைட்டோயாப்சிஸ் ஃபாராடோக்சா

தண்டுப்பகுதியில்  சாறு ஒழுகும் இடங்களை வெட்டி எடுத்துவிட்டு போர்டோ பசை பூச வேண்டும் அல்லது  1 சதம் போர்டோக் கலசை பருவமழைக்கு முன் குருத்து பகுதி நனையுமாறு தெளிக்கவேண்டும்.

இலை கருகல் நோய் லேசியோடிப்ளோடியா

1 சதம் போர்டோக்கலவை அல்லது 0.25 சதம் காப்பர் ஆக்ஸி குளோரைடு அல்லது 0.2 சதம்  இண்டோபில் எம் 45 தெளிக்கவேண்டும். (பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில்).

அ. சமபோர்டோக்கலவை தயாரிக்கும் முறை

400 கிராம் தாமிர சல்பேட் 20 லிட்டர் தண்ணீர் கரைத்து கொள்ளவேண்டும். இதேபோல் வேறு பாத்திரத்தில் 400 கிராம்  சுண்ணாம்பை 20 லிட்டர் தண்ணீருடன் கலந்து கொள்ளவேண்டும். பின்பு தாமிர சல்பேட் கரைசலை சுண்ணாம்பு கரைசலுடன் சீராக நன்கு கலக்கவேண்டும். கரைசலை தயாரிக்க மண்ணால் ஆன அல்லது மரத்தாலான பாத்திரத்தை மட்டுமே உபயோகிக்கவேண்டும். உலோகத்திலான பாத்திரங்களை உபயோகிக்ககூடாது. கலவை சரியான விகிதாச்சரத்திரல் கலந்துள்ளதா என்பதை அறிய நன்கு தீட்டப்பட்ட இரும்பு கத்தியை ஒர நிமிடம் கரைசலில் வைக்கவேண்டும். கத்தியில்  துருபோன்று படிவு  இருந்தால் சிறிதளவு சுண்ணாம்பு கரைசல் சேர்க்கவேண்டும். சுண்ணாம்பு கரைசலைக் கத்தியில் துரு படியாது இருக்கும் வரை சேர்க்கவேண்டும்.

ஆ. போர்டோப் பசை தயாரிக்கும் முறை

200 கிராம் தாமிரசல்பேட் தண்ணிரில் கலக்கவேண்டும். பின்பு வேறு பாத்திரத்தில் 200 கிராம் சுண்ணாம்பு ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்துக்கொள்ளவேண்டும். பின்பு மூன்றாவது பாத்திரத்தில் இவ்விரண்டு கரைசலையும் கலந்து பசை போன்று உபயோகித்துக் கொள்ளலாம்.

4. அறுவடை மற்றும் அறுவடைக்குப் பிந்திய தொழில்நுட்பங்கள்

தோப்புகளில் தேங்காய் விளைச்சலுக்கேற்ப 30-45 நாட்கள் இடைவெளியில் நன்கு முற்றிய 11 மாதங்களைக் கடந்த தேங்காய்களை அறுவடை  செய்யவேண்டும். வீட்டு உபயோகத்திற்காக இருந்தால் தேங்காய்களை நேராக வைக்கவேண்டும். தேங்காய்களை எடுத்து சூரிய ஒளியிலோ அல்லது தேங்காய் பருப்பு காய வைக்கும் இயந்தியரங்களிலொ வைத்து காய வைக்கவேண்டும். காய்ந்த பருப்புகளை 5-6 சதம் நீராவி வரும் வரை காயவைத்து  இருப்பு வைக்கவேண்டும். மேலும், காய் வைத்த கொப்பரைகளை பாலித்தீன் தார்பூசிய சணல் பைகளில் இருப்பு வைப்பது சிறந்தது.

தென்னையில் ஏற்படும் பிரத்தியேக பிரச்சனைகள்

1. வளர்ந்த தென்னந்தோப்புகளை புதுப்பித்தல்

பெரும்பான்மையான தோப்புகளின் குறைந்த காரணங்கள் அதிக எண்ணிக்கையிலான  மரங்கள் மற்றும் உரம், நீர்  ஆகியன சரிவர கிடைக்கப்பெறாததேயாகும். இந்தத் தோப்புகளை கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் மேம்படுத்தலாம்.

அ. அடர்ந்த தோப்புகளில் மரங்களின் எண்ணிக்கையை குறைத்தல்

அதிக எண்ணிக்கையில் மரங்கள் நடப்பட்டுள்ள விவசாயிகளின் நிலத்தில் பல மரங்கள் வருடத்திற்கு இருபதிற்கும் குறைவான காய்களையே தருகின்றன. இவ்வகை வெட்டி அப்புறப்படுத்தவதன் மூலம் மகசூலை அரிகரிக்கலாம். இதனால் சாகுபடி செலவை மிச்சப்படுத்துவதோடு நிகல லாபத்தையும் அதிகரிக்கலாம். குறைந்த மகசூல் கொடுக்கும் மரங்களை அப்புறப்படுத்தியபின் ஒரு எக்டருக்கு 175 மரங்கள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும்.

ஆ. போதுமான அளவு உரம் மற்றும் நீர் அளித்தல்

பரிந்துரை செய்யப்பட்ட உரம் +நீர்+சாகுபடி முறைகளை பின்பற்றுவதன் மூலம் தென்னந்தோப்புகளின் மகசூலை அதிகரிக்கலாம்.

2. பென்சில் முனை குறைபாடு

நுண்ணூட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக நுனிப்பகுதி சூம்பிப் போய், இலைகளின் எண்ணிக்கையும் குறைந்து காணப்படும். இலையின் அளவும்  பெருமளவில் குறைந்து இலைகள் வெளுத்த மஞ்சள் நிறத்தில் காணப்படும். பரிந்துரைக்கபட்ட உரங்களோடு போராக்ஸ், துத்தநாக சல்பேட்டு, மெக்னீசியம் சல்பேட், தாமில சல்பேட் ஆகிய ஒவ்வொன்றும் 225 கிராம் அளவும் மற்றும் அம்மோனியம் மாலிப்டேட் 10 கிராம் அளவும் எடுத்து 10 லிட்டர் நீரில் கரைத்து 1.8 மீட்டர் அரை வட்டப்பாத்திகளில் ஊற்றவேண்டும். ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால் இந்தக்குறைபாட்டை சரி செய்துவிடலாம். மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மரங்களை அப்புறப்படுத்திவிட்டு அந்த இடங்களில் புதிய நாற்றுக்களை நடவு செய்யலாம்.

3. குரும்பை உதிர்தல்

குரும்பை மற்றும்  இளங்காய்கள் உதிர்வதற்கு கீழெ கொடுக்கப்பட்டுள்ளவைகளில் ஏதேனும் ஒன்று காரணமாக இருக்கலாம்.

  1. அதிக கார அமில நிலை
  2. வடிகால் வசதி இல்லாமை
  3. கடும் வறட்சி
  4. மரபியல் காரணங்கள்
  5. ஊட்டச்சத்து குறைபாடு
  6. மகரந்தச் சேர்க்கை இல்லாமை
  7. ஹார்மோன் குறைபாடு
  8. பூச்சிகள்
  9. நோய்கள்

இவற்றை சரிசெய்யும் வழிமுறைகள் கீழ்க்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது.

அ. மண்ணின் கார அமிலத் தன்மையை சரி செய்தல்

மண்ணின் அதிகப்படியான கால அல்லது அமிலத்தன்மை குரும்பை உதிர்வதற்கான காரணமாக இருக்கலாம். மண்ணின் கார அமில நிலை 5.5 க்கும் குறைவாக இருப்பது அதிக அமில நிலைக்கான அறிகுறியாகும். இதனுடன் சுண்ணாம்பு சேர்ப்பதன் மூலம் சரிசெய்யலாம். கார அமில நிலை 80.0க்கும் அதிகமாக இருப்பது மண்ணில் அதிகமான காரத்தன்மையைக் குறிக்கும். இதனை ஜிப்சம் சேர்ப்பதன் மூலம் சரிசெய்யலாம்.

ஆ. போதுமான வடிகால் வசதி அமைத்தல்

தென்னை மரங்களில் நீர் வடிகால் வசதி இல்லாவிட்டால், அதன் வேர்கள் காற்றில்லாமல் மூச்சுவிட முடியாத நிலை ஏற்படும். இந்நிலையில் குரும்பைகள் உதிரும். உரிய இடங்களில் வடிகால் வாய்க்கால்களை அமைத்து மழைக்காலத்தில் எஞ்சிய நீரை வெளியேற்றவேண்டும்.

நீர் தேங்கி நிற்கும் இளந்தென்னந்தோப்புகளில் மேலாண்மை

இளந்தென்னங்கன்றுகள் நடப்பட்ட இரு வரிசைகளுக்கிடையே பருவமழை தொடங்கும் பருவத்தில்  ஒரு நீண்ட குழி அமைக்கவேண்டும். குழியின் அளவு மூன்று மீட்டர் அகலமும், 30-45 செ.மீ ஆழமும் உள்ளபடி வயலின் முழு நீளத்திற்கு அமைக்கவேண்டும். இதிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட மண்ணைக் கன்றுகள் நடப்பட்ட வரிகைகளிலே ஒரு மேடான பாத்தி உருவாகும்படி போடவேண்டும்.
இளங்கன்றுகளை சுற்றிலும் 1.2 மீட்டர் அகலமும்  30-45 மீட்டர் உயரமும் கொண்ட மணற் குன்றுகளை அமைக்கவேண்டும்.

ஈ. மரபியல் காரணங்கள்

சில நேரங்களில் போதுமான உர, நீர்,  பூச்சி மற்றும் நோய்  மேலாண்மை செய்தபோதிலும் குரும்பை உதிர்வது தொடர்ந்து கொண்டிருக்கும். இது விதைத்தேங்காய் எடுக்கப்பட்ட மரத்தின் வழியே வந்த குறைபாட்டின் அறிகுறியாகும். ஒன்று போல நல்ல மகசூலை தரும் மரங்கள் கிடைக்க விதைக்காய்களுக்கு தரமான விதை மரத்தை தெரிவு செய்யவேண்டும் என்ற தேவையை இது உணர்த்தும்.

உ. ஊட்டச்சத்து குறைபாடு

முற்றிலுமாகவோ அல்லது போதுமான அளவிலோ உரமிடாலிருப்பதால் குரும்பைகள் உதிரும். பரிந்துரை செய்யப்பட்ட உரங்களை குறித்த காலத்தில் இடுவது குரும்பைகள் உதிர்வதைக் குறைப்பதற்கு முக்கியமாகக் கருதப்படுகிறது. தென்னையில் ஒல்லிக்காய்களை சரிசெய்ய பரிந்துரைக்கப்பட்ட உரங்களை இடுவதுடன் மரத்திற்கு 2 கிலோ மியூரேயேட் ஆப் பொட்டாஷ் மற்றும் 200 கிராம் போராக்ஸ் கூடுதலாக இடவேண்டும்.

போரான் பற்றாக்குறை : 200 கிராம் போராக்ஸ் மருந்தை வருடத்திற்கு / மரத்திற்கு இருமுறை பிரித்து இடவேண்டும்.

ஊ. மகரந்தச் சேர்க்கை

மகரந்தச்சேர்க்கை இல்லாததாலும் குரும்பைகள் உதிரும். தோப்பில் எக்டருக்கு பதினைந்து என்ற கணக்கில் தேனீ கூடுகளை ஏற்படுத்தவதால் கலப்பின சேர்க்கை அதிகரிக்கும். மேலும் தேனினால் கிடைக்கப்பெறும் கூடுதல் வருவாயினால் குறிப்பிட்ட பரப்பளவிற்குரிய நிகல இலாபமும் அதிகரிக்கும்.

எ. உறார்மேன் பற்றாக்குறை

இனச்சேர்க்கை முடிந்த நிலையில் உள்ள பெண் பூக்கள், அதாவது சில சமயங்களில் உதிரும். பாளை வெடித்த ஒரு மாதத்தில் மலர் கொத்தின் மீது 30 பிபிஎம் 2 , 4-டி அல்லது 20 பிபிஎம் என்ஏஏ (ஒரு லிட்டர் நீரில் 30 மில்லி கிராம் 2, 4 அல்லது 20 மில்லி கிராம் என்ஏஏ) தெளிப்பதன் மூலம் சதவீதத்தை அதிகரிக்கலாம்.

ஏ. பூச்சிகள்

நாவாய்ப் பூச்சி தாக்குவதால் குரும்பைகள் உதிரலாம். இதனை மீதைல் டெமட்டான் 0.025 சதம (1 மில்லி / லிட்டர் தண்ணீர்) அல்லது டைமெதோயேட்ட 0.03 ( 1  மில்லி  / லிட்டர் தண்ணீர்) சதம் போன்ற ஊடுருவி பூச்சிக்கொல்லிகளை தெளிப்பதன் மூலம் குறைக்கலாம்.

ஐ. நோய்கள்

குரும்பை உதிர்வது அடித்தண்டு அழுகுதலும் போன்ற நோய்த் தாக்குதலினாலும் உண்டாகும். நோய்க்கட்டுப்பாடு முறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் நோய் பரவுவதை குறைப்பதோடு குரும்பை உதிர்வதையும் தடுக்கலாம்.

தென்னை விதை மரத்தை தேர்வு  செய்தல் மற்றும் நாற்றாங்கால் மேலாண்மை

தென்னை போன்ற பல வருடப் பயிரில், அதிக மகசூல் தரும் தென்னை மரங்களிலிருந்து விதைக்  காய்களைத் தேர்ந்தெடுப்பதன் அவசியம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கீழ்க்கண்ட குறிப்புகளை நினைவில் கொள்ளவேண்டும்.

தென்னை விதை மரத்தேர்வு

  1. அதிக மகசூல் தரும் மரங்களை பெருமளவில் கொண்டுள்ள, மற்றும் ஒன்று போல காய்க்கும் தன்மையுடைள தோப்புகளை விதைக் காய்க்காக தெரிவு செய்யவேண்டும். வீட்டுப்பக்கம் மாட்டுத்தொழுவம், உரக்குழிகளில் மிக நல்ல சூல்நிலையில் வளரும் மரங்களைத் தவிர்க்கவேண்டும்.
  2. வருடத்திற்கு நூறு காய்களுக்குக் குறையாமல் அதிக மகசூல் கொடுக்கும் மரங்களையே விதைக்காய்களுக்காக வருடத்திற்கு தெரிவு செய்யவேண்டும். அடுத்தடுத்து அதிகமாகவும், குறைவாகவும் காய்க்கும் மரங்களைத் தவிர்க்கவேண்டும். நடுத்தர வயதுடைய, அதாவது 25 முதல் 40 வயதுடைய மரங்களையே தெரிவு செய்யவேண்டும். பதினைந்து வயது மரங்களையும்,அவை நிலையான நல்ல மகசூலைத் தருமாயின் தெரிவு செய்யலாம்.
  3. விதைக்காய் மரங்கள் நேரான தண்டு, அதிகப்படியான இலை மற்றும்  பாளை, சிறிய, பருத்த தண்டு, அதிகப்படியான பெண்பூக்கள், எப்பொழுதும் காய்க்கும தன்மை, குலைகள் தொங்காத தன்மை, அதிகப்படியான காய்பிடிக்கும் தன்மை (சதவிகிதம்), நடுத்தர காய்கள், அதிக பருப்பு, நோய் மற்றும் பூச்சி தாக்குதல் இல்லாமல் இருத்தல்வேண்டும். நல்ல, தொடர்ந்து காய்க்கும் ஒரு விதை மரமானது சராசரியாக மாதத்திற்கு ஒரு இலை மற்றும்  ஒரு பாளையை, இலையும் தண்டுப்பகுதியும் சேரும் இடத்தில் உற்பத்தி செய்யும் எந்த ஒரு சமயத்திலும் ஒரு மரத்தில் பன்னிரெண்டு குலைகள் பல்வேறு முதிர்ச்சியடைந்த நிலையில் காணப்படும்.
  4. நல்ல தரமான கன்றுகள் கிடைக்க விதைக்காய்களை பிப்ரவரி முதல் ஆகஸ்டு மாதத்திற்குள் அறுவடை செய்யவேண்டும். செய்யப்படவுள்ள விதைக்காய் குலைகளை ஒரு கயிற்றின் மூலம் கட்டி காய்கள் சேதமடையாதவாறு கீழே இறக்கவேண்டும்.
  5. விதைக்காய்கள் உருண்டை வடிவிலும், விரலால் தட்டினால் உலொக சத்தம் கொடுப்பவைகளாகவும் இருக்கவேண்டும். மகரந்த சேர்க்கை முடிந்து 12 மாதத்தில் முழுமையாக முற்றிய காய்கள் உருவாகிவிடும்.
  6. நல்ல தரமான கன்றுகளைப் பெறுவதற்கு நெட்டை மற்றும் வீரிய ஒட்டு இரக விதைக்காய்களை காற்றுபடும்படி ஒரு மாதத்திற்கு குறைந்தது காற்றுப்படும்படி வைத்தபின் இரண்டு மாதங்கள் மணலில் வைக்கலாம்.

நாற்றாங்கால் மேலாண்மை

  1. நாற்றாங்காலுக்கு தேர்ந்தெடுக்கும் பகுதி நல்ல வடிகால் வசதியுள்ள இடமாக இருக்கவேண்டும். நாற்றாங்கால் திறந்த வெளியிலோ அல்லது நன்கு வளர்ந்த தென்னந்தோப்புகளிலோ அமைக்கவேண்டும்.
  2. விதைக்காய்களை நீளமான, அகலம் குறைவான பாத்திகளில் ஒரு அடிக்கு ஒரு அடி இடைவெளிவிட்டு நடவேண்டும். ஒரு வரிசைக்கு ஐம்பது காய்கள் வீதம் நேராகவோ அல்லது சாய்பவையாகவோ ஒரு பாத்தியில் ஐந்து வரிசைகள் நடவேண்டும்.
  3. நாற்றாங்கால் பாத்திகளுக்கு மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சவேண்டும்.
  4. தென்னை நாற்றாங்காலில் களைகளை கட்டுப்படுத்த சணப்பு இருமுறை பயிரிடுவதும் (ஒவ்வொன்றையும் பூக்கும் தருணத்தில் அறுவடை செய்யவும்) தொடர்ந்து ஆறாவது மாதத்தில் ஒரு கைக்கிளையெடுப்பதும் மிகவம் உகந்ததாக உள்ளது, அதோடு சணப்பு, வளர்ந்த தென்னை மரங்களுக்கு பசுந்தாள் உரமாகவும் பயன்படுகிறது.
  5. பாத்தி ஓரங்களில் அகத்தி அல்லது சூபாபுல் ஆகியவற்றை நட்டு நாற்றாங்காலுக்கு நிழல் உண்டாக்கவேண்டும்.
  6. விதைக்காய்கள் நட்ட ஆறு முதல் எட்டு வாரங்களில் முளைக்க ஆரம்பித்து, ஆறு மாதங்கள் வரை முளைப்புத் தன்மை தொடர்கிறது. நட்ட ஐந்து மாதங்களுக்குள் முளைத்த கன்றுகளையே தேர்வு செய்யவேண்டும். முளைக்காத விதைக்காய்களை தோண்ட எடுத்துவிடவேண்டும்.
  7. நாற்றாங்காலில் பூச்சி நோய் தாக்குதல் இல்லாமல் கண்காணிக்கவேண்டும்.
  8. நடவுக்குப்பின் ஒன்பது முதல் பன்னிரெண்டு மாதங்கள் ஆன கன்றுகளை தேர்வு செய்யவேண்டும். விரைவில் இலை துணுக்குகள் பிரிந்த கன்றுகளையே  தேர்வு செய்யவேண்டும். காக்காய் மூக்கு பிள்ளை கன்றுகளை (அதாவது அப்போது தான் முளைவிட்டுள்ள விதைக்காய்கள்) தேர்வு செய்யக்கூடாது.
  9. நாற்றாங்காலிலிருந்து நாற்றுக்களை மண்வெட்டியால் தோண்டி எடுக்கவேண்டும். இலைகளையோஈ தண்டையோ பிடித்து நாற்றுக்களை வெளியே இழுக்கக்கூடாது.
  10. தேர்நதெடுக்கும் தென்னை நாற்றுக்களில் 6 இலைகளும், கழுத்துப்பகுதி சுற்றளவு 10 செ.மீ ஆகவும் இருக்கவேண்டும்.

 

 

 

மேலோட்டம்
வழிமுறைகள்
தொழில்நுட்பங்கள்
வழங்கல்கனை மேலாண்மை
பசுமைக்குடில் தொழில்நுட்பம்
பழப்பண்ணை மேலாண்மை
உற்பத்தி செலவு

துல்லிய பண்ணைய விவசாயிகள்
பயிர் சாகுபடியாளர்கள்
aa

தேசிய இணையதளங்கள்
சர்வதேச இணையதளங்கள்

அரசு தோட்டக்கலைத் துறை
அரசு தோட்டக்கலைப்
பண்ணைகள்
வணிக வாரியங்கள்

புத்தகங்கள் மற்றும்
வெளியீடுகள்

 

aa

பழப்பயிர்கள்
காய்கறிப் பயிர்கள்
வாசனை மற்றும்
மலைத்தோட்டப் பயிர்கள்
மலரியல் மற்றும் நில
எழிலூட்டுதல்
மூலிகை மற்றும்
நறுமணப் பயிர்கள்

 

||| | | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2008