||| | | | | |
தோட்டக்கலை :: மலைத்தோட்டப் பயிர்கள் :: வெண்ணிலா
gg gg

இரகங்கள்
தொழில்நுட்பங்கள்
விற்பனை விலை

தேசிய தோட்டக்கலை இயக்கம்
நபார்டு
தேசிய தோட்டக்கலை வாரியம்
தேசிய மூலிகைப்பயிர்கள்
வாரியம்
சொட்டுநீர் பாசனம்
ஒருங்கிணைந்த தோட்டக்கலை
மேம்பாட்டுத்திட்டம்
வணிக வாரியங்கள்

சந்தை நிலவரம்

இரகங்கள்

இப்பயிரில் வெளியிடப்பட்ட இரகங்கள் ஏதுமில்லை.

மண் மற்றும் தட்பவெப்பநிலை

வெண்ணிலாப் பயிரினை அனைத்து வகையான மண் வகைகளிலும் சாகுபடி செய்யலாம். அங்ககச்சத்து நிறைந்த நல்ல வடிகால் வசதியுடைய மண் சாகுபடிக்கு ஏற்றதாகும். சிறந்த வளர்ச்சிக்கு 150-300 செ.மீ சராசரி வருட மழையளவு கொண்டிருத்தல்  வேண்டும். இந்த மழையளவு பயிர் வளர்ச்சியின் போது கொண்டிருக்கவேண்டும். மேலும் பூக்கும் தருணத்தில் மழையிருத்தல் கூடாது. இப்பயிரினை கடல் மட்டத்திலிருந்து 700 முதல் 1500 மீட்டர் வரை சாகுபடி செய்யலாம். சிறந்த மகசூலுக்கு 21 முதல் 32 டிகிரி செல்சியஸ் வெப்பம் கொண்டிருக்கவேண்டும்.

பருவம்

பருவமழை தொடங்கும் போது (மே - ஜுன்) மாதங்களில் நடவு செய்யலாம். தாங்கு மரங்களை 6 மாதத்திற்கு முன்பே (செப்டம்பர் - அக்டோபர் - நவம்பர்) நடவு செய்யவேண்டும்.
தாங்கு மரங்கள்
கிளைரிசிடியா
கல்யாண முருங்கை
காட்டாமணக்கு
புளுமேரியா
சவுக்கு
பயிர் உற்பத்தி / இனப்பெருக்கம்
தண்டுக்குச்சிகள் (90-100 செ.மீ)

இடைவெளி

செடிக்கான இடைவெளி                 -           1.2 - 1.5 மீட்டர்
வரிசைகளுக்கான இடைவெளி      -           2.0 - 2.5 மீட்டர்
ஒரு எக்டருக்கு 1600 - 2000 செடிகள்

நடவு

தாங்கு மரம் மற்றும் வெண்ணிலா நடவு  செய்ய 30 x 30 x 30 செ.மீ குழிகள் எடுக்கவேண்டும். வேர்விடாத குச்சிகள் (60 - 120 செ.மீ)    தேர்வு செய்து நடவின்பொது குச்சிகளுக்குள் மண்ணுள் புதையும்படி நடவு செய்யவேண்டும். 60 செ.மீக்கு குறைவான நீளமுடைய குச்சிகளை 0.2 சதவீதம் காப்பர் ஆக்சி குளோரைடு நனைத்து 2-3 நாட்கள் நிழலில் வைக்கவேண்டும். பின்பு நாற்றாங்காலில் 4-8 வாரம் வரை வைத்து நடவு  செய்யவேண்டும்.

வளர்ச்சி சீரமைப்பு

கொடிகளை 1.2 - 1.5 மீட்டர் வளரச் செய்து பின் பற்று மரத்தாங்குகளில் கீழ்நோக்கி வளருமாறு சீரமைக்கவேண்டும். அவ்வாற வளர்ந்த கொடிகள் மண்ணில் புதையச் செய்து வேரூட்டம் செய்யவேண்டும். வேர் ஊன்றிய பின்னர் மேல் நோக்கி வளரச் செய்து பற்று / தாக்கு மரங்களில் படரச் செய்யவேண்டும். இம்முறையினைத் தொடாந்து செய்தல்வேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம்

வெண்ணிலா வளர்ச்சிக்கு மக்கு உரங்களைப் பெருமளவில் பயன்படுத்தவேண்டும். எனவே வளர்ந்த தாவரப் பகுதிகளை கவாத்து செய்து வேர்ப்பகுதியிலிட்டு மக்கச்செய்யலாம். மேலும் ஒரு வருடத்திற்கு ஒரு கொடி ஒன்றிற்கு 40-60 கிராம் தழைச்சத்து 20-30 கிராம் மணிச்சத்து + 60-100 கிராம் சாம்பல் சத்து இடவேண்டும். இதனை 2 (அ) 3 முறை பிரித்து இடவேண்டும். சிறந்த வளர்ச்சிக்கு இலை வழியாக ஊட்டச்சத்துக்களை தெளிக்கவேண்டும்.  1 சதவீதம் 17:17:17 தழை,மணி,சாம்பல் சத்துக்கலவையினை மாதம் ஒரு முறை தெளிக்கவேண்டும்.

மகரந்தச்சேர்க்கை

வெண்ணிலா நடவு செய்த மூன்றாவது வருடத்திலிருந்து பூக்கத் தொடங்கும். இப்பயிரானது டிசம்பர் - ஜனவரி மாதங்களில் பூக்கத் தொடங்கும். பூக்கும் தரணத்திற்கு 6-8 மாதத்திற்கு முன்பு நுனிப் பகுதியினை 7.5 – 10 செ.மீ அளவில் வெட்டி விடுதல்வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பூக்கும் / அரும்ப முதிர்ந்த தண்டுகளைக் கவாத்து செய்தவன் மூலம் அதிக மொட்டுக்கள் கிடைக்கும்.
ஒவ்வொரு பூங்கொத்திலும் 15-20 பூக்களைக் கொண்டிருக்கும். மகரந்தச்சேர்க்கையினை மலர்ந்த அன்றே காலை 4.00 முதல் மதியம் 1.00 மணிக்குள் செய்து முடிக்கவேண்டும். பொதுவாக பூ கொத்தில் கீழ்ப் பகுதியிலுள்ள 5-6  பூக்களை மகரந்தச்சேர்க்கை செய்தல்வேண்டும். ஒரு பழக்கப்பட்ட / கைத்தேர்ந்த வேலையாள் நாளொன்றுக்கு 1000-1500 பூக்கள் மகரந்தச்சேர்க்கை செய்யலாம்.

பயிர் பாதுகாப்பு

  1. இலைத் தின்னும் புழுக்களை 0.05 சதவீதம் குயினால்பாஸ் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
  2. சார் உறிஞ்சும் பூச்சிகளை 0.05 சதவீதம் குயினால்பாஸ் (அ) மோனோகுரோட்டோபாஸ் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

நோய்

  1. புசேரியம் வாடல் நோயினை கட்டுப்படுத்த 01. சதவீதம் கார்ப்னடாசிம் வேர்ப்பகுதி நனையுமாறு ஊற்றவேண்டும். மேலும் அததே அளவினை இலையின் மீது தெளிக்கவேண்டும்.
  2. இலை மற்றும் காய் அழுகல் நோய் கட்டுப்படுத்த 1 சதவீதம் போர்டோக்கலவையின தெளிக்கவேண்டும். மேலும் 0.2 சதவீதம் காப்பர் ஆக்சிகுளோரைடு வேர்ப்பாகத்தில் கரைத்து ஊற்றவேண்டும்.

அறுவடை

காய்கள் / பீன்ஸ் மலர்ந்த 6 முதல் 9 மாங்களில் அறவடை செய்யலாம். முதிர்ந்த காய்களில் அறுவடை  செய்யலாம். முதிர்ந்து காய்கள் பச்சை நிறத்திலிருந்து இள மஞ்சள் நிறமாக மாறும் தருணத்தில் அறுடை செய்யவேண்டும். தினசரி முதிர்ந்த காய்களை அகத்திகளைக்  கொண்டு வெட்டி அறுவடை செய்யவேண்டும்

மகசூல்

ஒரு வருடத்தில் ஒரு எக்டரலிருந்து 300-600 கிலோ பதப்படுத்தப்பட்ட பீன்ஸ் கிடைக்கும். 1 கிலோ பதப்படுத்தப்பட்ட பீன்ஸ் கிடைக்க 6 கிலொ பச்சை பீன்ஸ் தேவைப்படும்.

இலாபகரமான மகசூலுக்கு கொடிகளை 12-14 வருடம் வரை வளர்க்கலாம்.

 

 

மேலோட்டம்
வழிமுறைகள்
தொழில்நுட்பங்கள்
வழங்கல்கனை மேலாண்மை
பசுமைக்குடில் தொழில்நுட்பம்
பழப்பண்ணை மேலாண்மை
உற்பத்தி செலவு

துல்லிய பண்ணைய விவசாயிகள்
பயிர் சாகுபடியாளர்கள்
aa

தேசிய இணையதளங்கள்
சர்வதேச இணையதளங்கள்

அரசு தோட்டக்கலைத் துறை
அரசு தோட்டக்கலைப்
பண்ணைகள்
வணிக வாரியங்கள்

புத்தகங்கள் மற்றும்
வெளியீடுகள்

 

aa

பழப்பயிர்கள்
காய்கறிப் பயிர்கள்
வாசனை மற்றும்
மலைத்தோட்டப் பயிர்கள்
மலரியல் மற்றும் நில
எழிலூட்டுதல்
மூலிகை மற்றும்
நறுமணப் பயிர்கள்

 

||| | | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2008