||| | | | | |
தோட்டக்கலை :: திட்டங்கள் :: வணிக வாரியங்கள்

வணிக வாரியங்கள்

  1. தென்னை வளர்ச்சி வாரியம்
  2. காபி வாரியம்
  3. தென்னைநார் வாரியம்
  4. ரப்பர் வாரியம்
  5. வாசனைப் பயிர்கள் வாரியம்
  6. தேயிலை வாரியம்

1.. தென்னை வளர்ச்சி வாரியம்:

தென்னை வளர்ச்சி வாரியம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. முதன் முதல் தென்னையில் ஒருங்கிணைந்த வளர்ச்சி, உற்பத்தி மற்றும் பயன்படுத்தும் திறன் அதிகரிக்கப்பட்டது. இந்த வாரியம் 12, ஜனவரி 1981 ம் ஆண்டு மத்திய வேளாண்மைத் துறை அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் கேரளாவில் உள்ள கொச்சினும், மண்டல அலுவலகங்கள் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூர், தமிழ்நாட்டில் உள்ள சென்னை மற்றும் பீகாரிலுள்ள பாட்னா ஆகிய இடங்களில் உள்ளன. மொத்தம் ஆறு இடங்களில் இதன் மையங்கள் உள்ளன. அவை, ஒரிசா மாநிலத்தில் உள்ள புவனேஷ்வர், மேற்கு வங்காளத்தில் உள்ள கொல்கத்தா, அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள கெளகாதி, திரிபுரா மாநிலத்தில் உள்ள அகர்டாலா, ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஹதராபாத், மற்றும் அந்தமான் நிகோபர் தீவுகளில் உள்ள போர்ட் பிளாய்ர் ஆகியனவாகும். இந்த வாரியம் 9 டி எஸ் பி பண்ணைகளில் வெவ்வேறு இடங்களில் நாடு முழுவதும் உள்ளது. தற்போழுது 8 பண்ணைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

இந்த வாரியத்தின் செயல்பாடுகள்:

  1. தென்னை தொழிற்சாலை மேம்பாட்டிற்கான செயல்முறைகளை மேற்கொள்ளுதல்
  2. தென்னை சாகுபடி மற்றும் தொழிற்சாலைகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு தொழில்நுட்ப ரீதியான ஆலோசனைகளை வழங்குதல்
  3. தென்னை சாகுபடி செய்யும் பகுதிகளில் தேவையான நிதி மற்றும் இதர உதவிகளை ஏற்படுத்தித் தருதல்
  4. தென்னை மற்றும் அதுசார்ந்த பொருட்களுக்கான நவீன தொழில்நுட்பங்களை செயல்படுத்த ஊக்குவித்தல்.
  5. தென்னை மற்றும் அதுசார்ந்த பொருட்களுக்கான ஊக்கத்தொகை பெறுவதற்கான செயல்முறைகளை மேற்கொள்ளுதல்
  6. தென்னை மற்றும் அதுசார்ந்த பொருட்களின் விற்பனையை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை பரிந்துரைத்தல்
  7. தென்னை மற்றும் அதுசார்ந்த பொருட்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை ஒழுங்குபடுத்துவதற்கான வழிமுறைகளை பரிந்துரைத்தல்
  8. தென்னை மற்றும் அதுசார்ந்த பொருட்களுக்கான தரமதிப்பீடுகள் செய்தல்.
  9. தென்னை உற்பத்தியை அதிகரிக்க மற்றும் அதன் தரம், விளைச்சலை அதிகப்படுத்துவதற்கான தகுந்த திட்டங்களின் நிதியை அளித்தல்.
  10. தென்னை மற்றும் அதுசார்ந்த பொருட்களை பற்றி வேளாண், தொழில்நுட்ப, தொழிற்சாலை (அ)பொருளாதார ஆராய்ச்சிகளுக்கு உதவுதல், ஊக்கப்படுத்துதல் மற்றும் நிதியுதவி செய்தல்
  11. தென்னை மற்றும் அதுசார்ந்த பொருட்களைப் பற்றிய புள்ளி விபரங்களை சேகரித்து, வெளியிடுதல்
  12. தென்னை மற்றம் அதுசார்ந்த பொருட்கள் பற்றிய புத்தகங்கள் மற்றும் இதழ்களை வெளியிடுதல் மற்றும் அதுசார்ந்த செயல்களை மேற்கொள்ளுதல்

மேலும் விபரம் அறிய:http://coconutboard.nic.in

2. காபி வாரியம்
காபி வாரியமானது, இந்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இந்த வாரியமானது, இந்தியாவில் உள்ள காபித் தொழிற்சாலைகளுக்கு ஒரு நண்பனாக, தத்துவமேதையாக, உதவியாளராக இருக்கிறது. 1942 –ம் வருடம் இந்தியாவில் பாராளுமன்ற சட்டத்தின்படி இந்த வாரியம் அமைக்கப்பட்டது. இந்த வாரியமானது, ஆராய்ச்சி, விரிவாக்கம், தரம் உயர்த்துதல், சந்தைத் தகவல் மற்றும் உள்ளூர் மற்றும் வெளியூர் சந்தைகளில் காபி வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதை மையமாகக் கொண்டு செயல்படுகிறது.
காபி பற்றிய ஆராய்ச்சியில் 75 வருடங்களாக இந்த வாரியம் பணியாற்றி வருகிறது. கர்நாடகா மாநிலம் சிக்மகலூர் மாவட்டத்தில் உள்ள மத்திய காபி ஆராய்ச்சி நிறுவனம் தொடர்ந்து பல வருடங்களாக காபி பற்றிய ஆராய்ச்சியை செய்து கொண்டிருக்கிறது.
இந்த வாரியமானது, விரிவாக்கத்தில் பணிகளை தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா போன்ற மூன்று முக்கியமான காபி உற்பத்தி செய்யும் மாநிலங்களில் செய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், ஆந்திரப் பிரதேசம், ஒரிசா மற்றும், வடகிழக்கு மாநிலங்களிலும் விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
காபி பதப்படுத்தலுக்கான உதவித் திட்டம்
முன்னுரை
உலக காபி உற்பத்தியில் 40% காபி பொருளாதாரமானது காபி உற்பத்தி செய்யும் நாடுகளிலிருந்து வருகிறது. மீதமுள்ள  60%  காபி உட்கொள்ளும் நாடுகளாக உள்ளன. கடந்த பல வருடங்களில் காபியை பதப்படுத்துதால், தயாரித்தல் மற்றும் காபியை சந்தைப்படுத்துதல் வரை நிறைய மாற்றங்கள் நடைபெற்றுள்ளது. காபி உற்பத்தி சங்கிலி மற்றும் சந்தைப் படுத்துதலை மேம்படுத்துவதற்காக, காபியை வறுத்து, அரைத்து, சிப்பமிடுவது வரை பல நவீன தொழில்நுட்பங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. உள்ளூர் சந்தைகளில் காபியை பதப்படுத்த, சிப்பமிட்டு, சந்தைப்படுத்துவதால் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வழியாக வேலைவாய்ப்பும் ஏற்படுத்தி தரமுடிகிறது. காபியை வறுத்து, அரைத்து, சிப்பமிடுவது போன்ற நவீன தொழில்நுட்பங்கள் அதிக மூலதனம் கொண்டவையாதலால், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் காபியை மதிப்பு கூட்டும் பொருளாக மாற்றுவது தடைபடுகிறது. இதற்குத் தகுந்தவாறு, தொழில் முனைபவர்களுக்கு காபி பொடி தயாரிப்பதற்கு, சிப்பமிடுவதற்கு தகுந்த தொழில்நுட்பம் கிடைக்கப்பெற உதவி செய்ய வேண்டிய அவசியமுள்ளது.
திட்டத்தின் குறிக்கோள்
காபி வறுத்தல், அரைத்தல் மற்றும் சிப்பமிடுதல், மதிப்பு கூட்டுதல் வழியாக மேம்பட்ட தொழில்நுட்பகளை அறிமுகப்படுத்துவதால் காபி பொடுகளின் தரத்தை மேம்படுத்தமுடியும்.
திட்டத்தை பெறுவதற்கான தகுதி
தனிநபர்கள், சுயஉதவிக் குழுக்கள், காபி சாகுபடி செய்பவர்கள், விற்பனைக் கூட்டுறவுகள், நிறுவனங்கள், பங்குதாரர்கள் போன்ற பலரும் காபி வறுத்தல் மறறம் அரைத்தல் அமைப்புகளை அமைத்தல், அதை நவீனப்படுத்துதல் போன்றவையும் இந்த திட்டத்தின் கீழ் அடங்கும்.

  1. இந்த திட்டத்தில் வழங்கப்படும் மானியம் காபி வாரியத்தின் மற்ற திட்டங்களில் வழங்கப்படுவதில்லை.
  2. இந்த திட்டத்தைப் பெறுதற்கு தகுந்த உரிமம் அந்தந்த சட்ட அதிகாரிகளிடமிருந்து பெற வேண்டும்.

திட்டத்தின் காலம்
இந்த திட்டமானது 11வது ஐந்தாண்டு திட்டத்திலிருந்து அமலில் உள்ளது. மானியமானது, தனிநபர்/நிறுவனங்களுக்கான மொத்தத் தொகையில் 25 சதவீதமும், சுயஉதவிக் குழுக்கள், இதர சாகுபடியாளர்களுக்கு 40 சதவீதமும் வழங்கப்படுகிறது. இயந்திரங்களுக்கு ஆகும் செலவு, வரிகள், சரக்கு கட்டணம், காப்பீடு, முகவர் கட்டணத்திற்கான செலவுகளும் மொத்த செலவில் அடங்கும்.
மானியம் பெறுவதற்கான தகுதியுடையவை
காபிக் கொட்டை வறுத்தல், அரைத்தல், சிப்பமிடல் போன்ற ஏதாவது ஒரு இயந்தரம் (அ) இணைந்தும் இந்த மானியத்தைப் பெறலாம்.

  1. காபிக் கொட்டை வறுக்கும் இயந்தரம், அரைக்கும் இயந்திரம், சிப்பமிடும் இயந்திரம்
  2. வறுக்கும் இயந்திரம் மற்றும் சிப்பமிடும் இயந்திரம்
  3. அரைக்கும் இயந்திரம் மற்றும் சிப்பமிடும் இயந்திரம் இருந்தாலும், மேலே குறிப்பிட்ட ஏதாவது ஒரு இயந்திரத்திற்கு தான் மானியம் கிடைக்கப்பெறும்.

முன்னுரிமை:
எந்த விண்ணப்பம் அனைத்து தகவல்களுடன் முதலில் வருகிறதோ அதற்கே முன்னுரிமை அளிக்கப்படும்.
திட்டத்திற்கான மாற்றங்கள்
காபி வாரியத்தின் கீழ் இந்த இயந்திரங்களை அமைத்தபின் மானியம் கோருவதற்கு விண்ணப்பதாரர்கள் பின்வரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
அ. விலைப்பட்டியிலின் நகல்
ஆ. சரக்குக் கட்டணம்/ இயந்திரங்களை அமைத்தல் / தரகு கட்டணம் மற்றும் காப்பீடு ஏதும் கோரியிருந்தால், அதனுடைய விலைப்பட்டியலின் நகல்
இ. உத்தரவாத சான்றின் நகல்
ஈ.  நகராட்சி அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட உரிமத்தின் நகல்
உ. வங்கி கணக்கின் விபரங்கள் (1) வங்கியின் பெயர், கிளை, விலாசம் (2) கணக்கு வைத்திருப்பவர் பெயர், (3) வங்கிக் கணக்கு எண்
ஊ. இயந்திரங்களை அமைத்தபின் எடுத்த புகைப்படங்கள்

காபிக் கொட்டை வறுத்தல், அரைத்தல் மற்றும் பைகளில் அடைப்பதற்கான இயந்திரங்களின் தனி அளவீடுகள்


வ.எண்.

இயந்திரங்கள்

குறைந்தபட்ச அளவீடுகள்

01.

வறுக்கும் இயந்திரம்

ஒரு பிரிவுக்கு 10 கிலோ மற்றும் அதற்கு மேல்

02.

அரைக்கும் இயந்திரம்

ஒரு மணி நேரத்திற்கு 15 கிலோ அளவு அரைக்கும் இயந்திரம்  (கல் அரையை மில்கள் இதில் சேராது)

03.

பைகளில் அடைக்கும் இயந்திரம்

காலால் அடைக்கும் இயந்திரம் தொடர்ந்து அடைக்கும் இயந்திரம், பைகளில் நிறைத்து, அடைக்கும் இயந்திரம், தானாக,  அர பகுதிதானாக நைட்ரஜன் வாயு நிரப்பி  அடைக்கும் இயந்திரம் வெற்றடமாக்கி அடைக்கும் இயந்திரம் (அ) நைட்ரஜன் நிரப்புதல் மற்றும் வெற்றிடமாக்கி, அடைக்கும் இயந்திரம்

மேலும் தகவல் பெற: http://www.india coffee.org/


3. தென்னை நார் வாரியம்
தென்னை நார் தொழிற்சாலை சட்டம் 1953 ம் ஆண்டில் இந்திய அரசால் அமைக்கப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பே தென்னை நார் வாரியமாகும்.
தென்னை நார் வாரியத் திட்டங்கள்
திட்டத்திற்கான செயல்பாடு வழிகாட்டிகள்

  1. செயல்பாடு வழிகாட்டிகள் – தென்னை நார் உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான திட்டம்
  2. செயல்திறனை உயர்த்துதல் மற்றும் தரத்தை மேம்படுத்துதல் – செயல்பாடு வழிகாட்டிகள்

திட்டங்கள்:

  1. கயிறு திரிக்கும் தொழிற்சாலைகளை புதுப்பித்தல், நவீனப்படுத்துதல் மற்றும் தொழில்நுட்பங்களை புதுப்பித்தல்
  2. பராம்பரிய தொழிற்சாலைகளை புதுப்பிக்க தேவையான நிதியளிக்கும் திட்டம்
  3. திறமைகளை புதுப்பித்தல் மற்றும் தர மேம்பாட்டுத் திட்டம்
  4. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் திட்டம்
  5. ஏற்றுமதி சந்தையை ஊக்கப்படுத்தும் திட்டம்
  6. ஊள்ளூர் சந்தையை ஊக்கப்படுத்தும் திட்டம்
  7. வர்த்தகம் மற்றும் தொழிற்சாலை சம்பந்தமான செயல்பாடுகளுக்கான சேவைத் திட்டம்
  8. நலத்திட்டம்

துணைத் திட்டங்கள்:

  1. 2007-2008 முதல் 2010-2012 ஆம் ஆண்டிற்கான  வெளிச்சந்தை மேம்பாட்டு உதவி
  2. சந்தை மேம்பாட்டு உதவி திட்டம் (உள்ளூர் சந்தை)
  3. கயிறு திரிக்கும் தொழிலாளர்களுக்கான தனிநபர் விபத்து காப்பீட்டுத் திட்டம்

மேலும் தகவல் பெற: http://www.coirboard .nic.in

4.இரப்பர் வாரியம்

இரப்பர் சட்டம் 1947ன் படி, இந்தியாவில் இரப்பர் தொழிற்சாலையின் ஒட்டுமொத்த வளர்ச்சியை மேம்படுத்த இந்திய அரசால் அமைக்கப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பு இரப்பர் வாரியமாகும்.
செயல்பாடுகள்:
1. ரப்பர் தொழிற்சாலையை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தித்தருதல்

  1. அறிவியல், தொழில்நுட்ப (அ) பொருளாதார வளர்ச்சி பற்றிய ஆராய்ச்சி மேற்கொள்ளுதல், உதவுதல், ஊக்கப்படுத்துதல்
  2. இரப்பர் சாகுபடி, உரமிடுதல், பூச்சி மற்றும் நோய் மருந்த தெளித்தல் பற்றிய பயிற்சிகளை அளித்தல்
  3. இரப்பர் சாகுபடியாளர்களுக்கு சந்தையை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குதல்
  4. ரப்பர் சாகுபடியாளர்கள், விற்பனையாளர்கள், உற்பத்தி செய்பவர்களின் புள்ளி விபரங்களை சேகரித்தல்
  5. இரப்பர் தொழிற்சாலை ஊழியர்களுக்கு வேலை செய்வதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்தித் தருதல் மற்றும் அவர்களுக்கு ஊக்கத் தொகை மற்றும் உரிமைகள் பெற உதவுதல்
  6. இரப்பர் வாரியச் சட்டத்தின்படி மற்ற அனைத்து வேலைகளையும் நடைபெறச் செய்தல்

நடைமுறையில் உள்ள திட்டங்கள்

  1. இரப்பர் சாகுபடி மேம்பாட்டு திட்டம் - பகுதி IV
  2. இரப்பர் சாகுபடி மேம்பாட்டு திட்டம் - பகுதி XI திட்டம்
  3. இரப்பர் சாகுபடி மேம்பாட்டு திட்டம் - பகுதி V
  4. வட கிழக்குப்பகுதியில் இரப்பர் சாகுபடி மேம்பாட்டு திட்டம்
  5. இரப்பர் சாகுபடி மேம்பாட்டுத் திட்டம் - பகுதி VI
  6. ஆலோசனை மற்றும் விரிவாக்கச் சேவைகள்
  7. இரப்பர் பயிரிடுதல் ம்றம் அதை மேம்படுத்த உதவும் திட்டங்கள்
  8. குறைந்த கொள்ளளவு உடைய தெளிப்பான்களை பிரபலப்படுத்தும் திட்டம்
  9. இரப்பர் பால் சேகரித்தலை மேம்படுத்தும் திட்டம்
  10. இரப்பர் சாகுபடி செய்யும் கூட்டுறவுகளுக்கு உதவும் திட்டம்
  11. இரப்பர் உற்பத்தியாளர்கள் சங்கங்களை மேம்படுத்தும் திட்டம்
  12. இரப்பர் பதப்படுத்த உள்ள நிறுவனங்களுக்கு உதவும் திட்டங்கள்
  13. பெரியளவில் இரப்பர் சாகுபடியாளர்களுக்கு உதவும் திட்டங்கள்
  14. பராம்பரியமாக இரப்பர் சாகுபடி இல்லாத பகுதிகளுக்கான செயல்பாடுகள்
  15. பயிற்சிகள்
  16. பொதுவானத் திட்டங்கள்

மேலும் தகவல் பெற: http://rubberboard.org.in/

5. நறுமணப் பயிர்கள் வாரியம்

இந்தியாவில் 109 நறுமணம் பயிர்களில் 75 பயிர்கள் பல வேளாண் காலநிலை உள்ள பகுதிகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவில் உலக ஏற்றுமதியில் 45% ஏற்றுமதி செய்யப்படுகிறது. இருந்தாலும் இதில் 3.2 மி. டன் அளவு வருடாந்திர உற்பத்தியில் 8% அளவு மட்டும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது, 2-9 மி.ஹெக்டேர் அளவு நறுமணம் பயிர்கள் பயிரிடப்படுகின்றன. இந்த வாரியத்தின் தலைமையிடம் கொச்சினில் உள்ளது. இதில் மண்டல அலுவலகங்களும், கள அலுவலகங்களும் உள்ளன. தலைமையிடத்தில் மத்திய தர மதிப்பீடு ஆய்வகம் அமைந்துள்ளது. தலைமை அலுவலகத்தில் உயிரி தொழில்நுட்ப ஆய்வகம் செயல்பட்டு வருகிறது. நறுமணப்பயிர் வாரியத்தின்  ஆராய்ச்சிப் பிரிவின் தலைமையிடம் மைலாடும்பாரா (இடுக்கி, கேரளா), மண்டல அலுவலகங்கள் – தடியன்குடிசை (தமிழ்நாடு), சைக்லேஸ்பூர் (கர்நாடகா) கேங்க்டாக் (சிக்கிம்).
மேம்பாட்டுத் திட்டங்கள்:

  1. தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் மிளகு சாகுபடிக்கான திட்டம்
  2. ஏலக்காய் சாகுபடியை புதுப்பித்தல் மற்றும் திரும்ப பயிரிடுதலுக்கான சிறப்பு நிதி
  3. நறுமணப்பயிர்களின் ஏற்றுமதி சார்ந்த உற்பத்தி மற்றும் அறுவடை பின் சார்

மேம்பாடு

  1. ஏற்றுமதி மேம்பாடு 11வது ஐந்தாண்டு திட்ட சேவைகள்
  2. திட்டங்களுக்கான வரையறைகள்

மேலும் தகவல் பெற: http://www.indianspices.com/

6. தேயிலை வாரியம்

இந்தியாவில் பாராளுமன்ற சட்டத்தின்படி, தேயிலை தொழிற்சாலை ஒரு முக்கியமான தொழிற்சாலை நிறுவனமாக உள்ள து. இந்தியாவில் மற்றும் இந்தியாவிற்கு வெளியிலும் இந்தியத் தேயிலையை ஊக்கப்படுத்துவதற்கான, தேயிலை ஏற்றுமதி செய்ய வரி விதித்தல் போன்றவற்றை இந்த மசோதா ஏற்படுத்தியுள்ளது. தற்போதுள்ள தேயிலை வாரியம் 1953-ம் ஆண்டு தேயிலை சட்டத்தின் பிரிவு 4-ன் கீழ் அமைக்கப்பட்டது. இந்த அமைப்பில், தேயிலை சாகுபடி மற்றும் தேயிலை ஏற்றுமதி ஒழுங்குபடுத்தும் செயல்களை செய்து வருகிறது.
திட்டங்கள்:

  1. சிப்பமிடப்பட்ட அசல் இந்திய தேயிலை ரகங்கள் ஏற்றுமதியாளர்களுக்கான ஊக்குவிப்புத் திட்டம்
  2. தேயிலைச் சங்களுக்கான ஊக்குவிப்புத் திட்டம்
  3. ஐ.சி.டி. அமிலங்கானக்கான திட்டங்கள்
  4. தேயிலைத் தரம் உயர்த்துதல் மற்றும் தேயிலைச் சார்ந்த பல்வகைப் பொருட்களின் உற்பத்திக்கான திட்டம்
  5. தேயிலைத் தோட்ட வளர்ச்சித் திட்டம் -11வது ஐந்தாண்டுத்திட்டம்
  6. சிறப்பு பயன்பாட்டிற்கான தேயிலை நிதித் திட்டம் மார்ச் 2007
  7. தேயிலை வாரியத்தின் தேயிலைந்தித் திட்டம்
  8. சிறு தேயிலை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பிற்கான கடன் பெற்றுத் தரும் அமைப்பு
  9. தேயிலைத் தோட்ட வளர்ச்சித் திட்டம்

மேலும் தகவல் அறிய: //www.teaboard.gov.in/

 

 

||| | | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014