||| | | | | |
தோட்டக்கலை :: நறுமணப் பயிர்கள் :: வெள்ளைப்பூண்டு
gg gg

இரகங்கள்
தொழில்நுட்பங்கள்
விற்பனை விலை

தேசிய தோட்டக்கலை இயக்கம்
நபார்டு
தேசிய தோட்டக்கலை வாரியம்
தேசிய மூலிகைப்பயிர்கள்
வாரியம்
சொட்டுநீர் பாசனம்
ஒருங்கிணைந்த தோட்டக்கலை
மேம்பாட்டுத்திட்டம்
வணிக வாரியங்கள்

சந்தை நிலவரம்

இரகங்கள்

உள்ளூர் இரகங்கள். ஊட்டி 1, ஃபார்வி, ராஜாளி காடி மற்றும் சிங்கப்பூர்.

மண் மற்றும் தட்பவெப்பநிலை

நல்ல வடிகால் வசதியுடைய மணற்பாங்கான இரும்பொறை மண் சாகுபடிக்குச் சிறந்தது. சிறந்த வளர்ச்சிக்கு குளிர்ப்பருவ நிலை சிறந்ததாகும்.

விதையும் விதைப்பும்

நிலத்தினை நன்கு பண்படுத்தவேண்டும். பின்பு குறைந்த (அ) சிறிய சால்களை அமைத்து 15 செ.மீ இடைவெளியில் பூண்டுகளை நடவு செய்யவேண்டும். மேலும் 10 செ.மீ அளவில் ஒரு எக்டர் நடவு செய்ய 500-600 கிலோ விதைப்பூண்டு தேவைப்படுகின்றது.

நீர் நிர்வாகம்

நடவு செய்தவுடன் நீர்ப்பாய்ச்சவேண்டும். பிறகு மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து 7 முதல் 15 நாட்கள் இடைவெளியில் நீர்ப்பாய்ச்சவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

அடியுரம் : மக்கிய தொழு உரம் 50 டன் / எக்டர், மேலும் ஒரு எக்டருக்கு 40 கிலோ தழைச்சத்து. 75 கிலோ மணிச்சத்து,  75 கிலோ சாம்பல் சத்து + ஒரு டன் வேப்பம் புண்ணாக்கு + 50 கிலோ மெக்னீசியம் சல்பேட் இடவேண்டும்.

களைக்கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி

3-4 முறை கைக்களை எடுத்து மண்ணைக்கவேண்டும்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

தாக்குதல்

இதனைக் கட்டுப்படுத்த மீதைல் டெமட்டான் 25 இசி (அ) டைமெத்தோயேட் 30 ஈசி, மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும்.

பூண்டு அழுகல் நோய்

நடவிற்கு முன் ஒரு கிலொ பூண்டிற்கு 2 கிலே கார்பன்டாசிம் கொண்டு நேர்த்தி செ்யது (அ) இதனை 1 கிராம் / லிட்டர் தண்ணீரில்  கலந்து வேர்ப்பகாம் நனையுமாறு ஊற்றவேண்டும்.

இலைத்தீயல் நோய்

இந்நோயினைக் கட்டுப்படுத்த ஒரு எக்டருக்கு 500 கிரர்ம கார்பன்டாசிம் கலந்து தெளிக்கவேண்டும்.

நூற்புழு

இதனைக் கட்டுப்படுத்த நடவிற்கு முன் பூண்டுகளைத் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும். அதன் பின்னர் பாஸ்போமிடான் 40 எஸ்.எல் (2 மில்லி மருந்து ஒரு லிட்டர் தண்ணீருக்கு) என்ற அளவில் கலந்து 15 நிமழடம் ஊறவைத்து நடவு செய்வதன் மூலம் நூற்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.

குறைபாடு

பூண்டகள் இரப்பர் போன்று காணப்படும். இவ்வாறான குறைபாட்டின் மூலம் பூண்டுகள் மெலிந்து உண்பதற்குரிய பண்புகளற்று காணப்படும்.

கட்டுப்பாடு

  1. தழைச்சத்து  பயன்பாட்டினை குறைத்துக் கொள்ளவேண்டும்.
  2. யூரியா பயன்பாட்டினை மாற்றி அம்மோனியம் சல்பேட் இடவேண்டும்.
  3. நடவு செய்த 30வது நாள் 1500 பிபிஎம் சிசிசி (அ) மேலிக் ஹைட்ராக்சைடு தெளிக்கவேண்டும்.
  4. நீர் பாய்ச்சும் இடைவெளியினை அதிகப்படுத்தவேண்டும்.
  5. நடவு செய்த 30,60 மற்றும் 90 நாட்களில் போரான் 0.1 சதவீதம் மற்றும் சோடியம் மாலிபடேட் இடவேண்டும்.

மகசூல்

ஒரு எக்டருக்கு 6-8 டன்.

 

 

மேலோட்டம்
வழிமுறைகள்
தொழில்நுட்பங்கள்
வழங்கல்கனை மேலாண்மை
பசுமைக்குடில் தொழில்நுட்பம்
பழப்பண்ணை மேலாண்மை
உற்பத்தி செலவு

துல்லிய பண்ணைய விவசாயிகள்
பயிர் சாகுபடியாளர்கள்
aa

தேசிய இணையதளங்கள்
சர்வதேச இணையதளங்கள்

அரசு தோட்டக்கலைத் துறை
அரசு தோட்டக்கலைப்
பண்ணைகள்
வணிக வாரியங்கள்

புத்தகங்கள் மற்றும்
வெளியீடுகள்

 

aa

பழப்பயிர்கள்
காய்கறிப் பயிர்கள்
வாசனை மற்றும்
மலைத்தோட்டப் பயிர்கள்
மலரியல் மற்றும் நில
எழிலூட்டுதல்
மூலிகை மற்றும்
நறுமணப் பயிர்கள்

 

||| | | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2008