||| | | | | |
தோட்டக்கலை :: நறுமணப் பயிர்கள் :: மஞ்சள்
gg gg

இரகங்கள்
தொழில்நுட்பங்கள்
விற்பனை விலை

தேசிய தோட்டக்கலை இயக்கம்
நபார்டு
தேசிய தோட்டக்கலை வாரியம்
தேசிய மூலிகைப்பயிர்கள்
வாரியம்
சொட்டுநீர் பாசனம்
ஒருங்கிணைந்த தோட்டக்கலை
மேம்பாட்டுத்திட்டம்
வணிக வாரியங்கள்

சந்தை நிலவரம்

இரகங்கள் : கோ 1, பிஎஸ்ஆர் 1,2 (பவானிசாகர் 1,2) ரோமா, ஸ்வெர்ணா, சுதர்ஷயா, ரங்கா, ராஷ்மி, ராஜேந்திர சோனியா, கிருஷ்ணா, சுகுணா, சுகந்தம் சுரோமா ஆலப்புழா, ஐஐஎஸ்ஆர் பிரதீபா, ஐஐஎஸ்ஆர் அலப்பி சுப்ரீம் மற்றும் ஐஐஎஸ்ஆர் கெடாரம்.

உள்ளூர் வகைகள் : ஈரோடு மற்றும் சேலம் மஞ்சள் முக்கிய நாட்டு வகைகள் ஆகும்.

கோ 1
பிஎஸ்ஆர் 1
பிஎஸ்ஆர் 2

மண் மற்றும் தட்பவெப்பம் : மஞ்சள் ஒரு வெப்ப மண்டலப்பயிர் ஆகும். நல்ல வடிகால் வசதியுடைய செம்மண் மற்றும் இருபண்பாடு நிலம் மிகுவும் உகந்தது. மஞ்சள் பெரும்பாலும் இறவைப் பயிராகவே சாகுபடி செய்யப்படுகிறது, ஆண்டு ஒன்றுக்கு சராசரி மழை 1500 மி.மீ மேல் உள்ள பகுதிகயில் மஞசளை மானாவாரியாக பயிரிடலாம். கடல் மட்டத்திலிருந்து 2500 மீட்டர் உணரம் வரை உள்ள இடங்களிலும் சாகுபடி செய்யலாம்.

பருவம் : தமிழ்நாட்டில் மே - ஜூன் மாதம் மிகவும் ஏற்ற பருவமாகும்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை மூன்று அல்லது நான்கு முறை உழுது பண்படுத்தவேண்டும். கடைசி உழவின் போது எக்டருக்கு 10 டன் மக்க்ிய தொழு உரம் இட்டு மண்ணுடன் நன்கு கலக்கவேண்டும். நிலத்தை சமப்படுத்திய பின்பு 45 செ.மீ இடைவெளியில் பார்கள் அமைக்கவேண்டும்.

விதையும் விதைப்பும்

விதையளவு : எக்டருக்கு 1500-2000 கிலோ விதை மஞ்சள், விதைப்பதற்கு விரலி மற்றும் கிழங்கு (குண்டு) மஞ்சளைப் பயன்படுத்தலாம்.

விதை நேர்த்தி : விதைப்பதற்கு முன் மஞ்சளுடன் எமிசான் மருந்து கலந்து விதை நேர்த்தி செய்யவேண்டும். ஒரு கிராம் எமிசான் மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து, அதில் விதை மஞ்சளை 10 நிமிடம் ஊறவைத்து, பின் நிழலில் உலர்த்தி விதைக்கவேண்டும். இதனால் கிழங்கு அழுகல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.

இடைவெளி : நிலத்திற்கு நீர் பாய்ச்சி விதை மஞ்சளைப் பார்களின் ஓரத்தில் 15 முதல் 20 செ.மீ இடைவெளியில் 4 செ.மீ ஆழத்தில் நடவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

அடியுரமாக எக்டருக்கு கீழ்க்கண்ட உரங்களைப் பார்களின் பக்கவாட்டில் நடவுக்கு முன் இடவேண்டும். மக்கிய தொழு உரம் 10 டன்கள் (கடைசி உழவிற்குப் பின்) அல்லது வேப்பம்புண்ணாக்கு அல்லது கடலைப் புண்ணாக்கு 200 கிலோ, தழைச்சத்து 25 கிலோ, மணிச்சத்து  60 கிலோ, சாம்பல் சத்து 18 கிலோ கொடுக்கக்கூடிய இராசயன உரங்கள், 30 கிலோ பெரஸ் சல்பேட், 15 கிலோ துத்தநாக சல்பேட் இடவேண்டும். விதைத்த ஒரு மாதம் கழித்து அசோஸ்பைரில்லம்  அல்லது பாஸ்போபாக்டீரியா 10 கிலோ இடவேண்டும்.

மேலுரம் : மஞ்சள் நட்ட 30,60,90 மற்றும் 120ஆம் நாட்களில் ஒவ்வொரு முறையும் தழைச்சத்து 25 கிலோ, மணிச்சத் 25 கிலோ மற்றும் சாம்பல் சத்து 18 கிலோ கொடுக்கக்கூடிய இராசயன் உரங்களை இடவேண்டும்.

நுண்ணூட்டச்சத்து இடுதல் : போரான், இரும்பு மற்றும் துத்தநாக குறைபாட்டினை தவிர்க்க நுண்ணூட்டச் சத்து கலவையை இலை வழி ஊட்டமாக கிழங்குகள் தண்ணீரில் பிடிக்கும் தருணத்தில் தெளிக்கவேண்டும். சூப்பர் பாஸ்பேட் 15 கிலோவை 25 லிட்டர் தண்ணீரில் கரைத்து ஒரு நாள் இரவு ஊறவைக்கவேண்டும். மறுநாள் காலை தெளித்த நீரை எடுத்து அதில் கீழ்க்கண்ட உப்புகளைச் சேர்த்து 250 லிட்டர் தண்ணீர் ஊற்றி, இலைகளின் மேல் தெளிக்கவேண்டும்.

இரும்பு சல்பேட்

375 கிராம்

துத்தநாக சல்பேட்

375 கிராம்

போராக்ஸ்

375 கிராம்

யூரியா

375 கிராம்

பயிர்

 

ஒரு எக்டருக்கு இடவேண்டிய சத்துக்கள்(கிலோ)

இப்கோ காம்ப்ளக்ஸ் 10:26:26, யூரியா இடவேண்டிய அளவு (கிலோ)

 

 

தழை

மணி

சாம்பல்

10:26:26

யூரியா

பொட்டாஷ்

மஞ்சள் பூண்டு

அடியுரம்

25

60

18

70

40

263

 

நட்ட 30 நாட்களில்

25

25

18

70

40

44

 

நட்ட 60 நாட்களில்

25

25

18

70

40

44

 

நட்ட 90 நாட்களில்

25

25

18

70

40

44

 

நட்ட 120 ஆம் நாட்களில்

25

25

18

70

40

44

களை கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி

களை நிர்வாகம் : நட்ட மூன்றாவது நாளில் பேஸலின் களைக் கொல்லி 2 லிட்டர் என்ற அளவில் தெளிக்கவேண்டும். நடவு செய்த 30வது நாளில் முதல் களையும், பின் 50,120 மற்றும் 150 நாட்களிலும் களை எடுக்கவேண்டும்.

ஊடுபயிர் : மஞ்சளை இறந் தென்னந்தோப்புகளில் ஊடுபயிராக பயிர் செய்யலாம். மஞ்சள் தோட்டத்தில் கொத்தமல்லி, வெந்தயம், மிளகாய் பயறுவகைகள் போன்ற பயிர்களை அகன்ற இடைவெளியில் பயிருக்கு தக்கவாறு ஊடுபயிராகப் பயிரிடலாம். மஞ்சளை சிறிதளவு நிழலிலும் சாகுபடி செய்யலாம். நிழல் ஒழுங்கு படுத்தும் பயிராக அகத்தி மற்றும் ஆமணக்கு போன்ற பயிர்களைப் பயிரிடலாம்.

சின்ன வெங்காயத்தை ஊடுபயிராகப் பயிர்  செய்வதாக இருந்தால், பேஸலின் மருந்தை சின்ன வெங்காயம் விதைப்பு செய்தவுடன் மண்ணின் மீது தெளிக்கவேண்டும். பேஸலின் தெளித்த பகுதிகளில் நடக்கக்கூடாது. நடந்தால் மருந்து காலில் ஒட்டிக்கொள்ளும். அந்த இடத்தில் களைகள் முளைத்துவிடும். எனவே, களைக்கொல்லி தெளிக்கும் போது பின்நோக்கி நடக்கவேண்டும். அல்லது பக்கவாட்டில் நடக்கவேண்டும். நீர்ப்பாசனமத் செய்த பின்னர் தான் நிலத்தில் நடக்கவேண்டும். பெல்லாரி வெங்காயம் நடவு செய்யவேண்டும் எனில் களைக்கொல்லி தெளிதது நீர்ப்பாசனம் செய்த பின் நடவு செய்யவேண்டும்.

மண் அணைத்தல் : இரண்டாவது மேலுரம் மற்றும் நான்காவது மேலுரம் இடும்போது மண் அணைக்கவேண்டும்.

நீர் நிர்வாகம்

மஞ்சள் நடவுக்கு முன்பு, பிறகு நடவு செய்த மூன்றாம் நாளும் உயிர்த் தண்ணீர் பாய்ச்சவேண்டும்.பின்பு மண்ணின் தன்மைக்கேற்ப வாரம் ஒரு முறை நீர்ப்பாய்ச்சவேண்டும்.

ஒருங்கியணைந்த பயிர் பாதுகாப்பு

பூச்சிகள்

செதில் பூச்சி : இவை மஞ்சளின் கிழங்குப் பகுதியினைத் தாக்கிச் சேதம் விளைவிக்கும். இதனால் கிழங்குகள் சுருங்கி, பின் காய்ந்துவிடும். இதனைக் கட்டுப்படுத்த பாசலோன் 1.5 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் கரைசலில் 15 நிமிடம் ஊறவைத்து, கிழங்குகளை நடவு செய்யவேண்டும். செதில் பூச்சியால் பாதிக்கப்படும் சேனைக்கிழங்கு போன்ற பயிர்களை மஞ்சள் பயிரிடும் நிலத்தில் பயிர்  செய்யக்கூடாது. நடவு செய்யப்பட்ட வயலில் செதில் பூச்சிகளை ஒழிக்க டைமீதோயேட் (ரோகார்) 2 மில்லி ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்த வேர்ப்பாகம் நனையும்படி ஊற்றவேண்டும்.

தண்டுத் துளைப்பான் : இவை தண்டு, கிழங்குப் பகுதியினைத் துளைத்து  செல்வதால் நடுக்குருத்து காய்ந்துவிடும். இதனைக் கட்டுப்படுத்த எண்டோசல்பான் 0.1 சதம் தெளிக்கவேண்டும். தண்டுத் துளைப்பான் விரும்பி உண்ணும் ஆமணக்கு, மாதுளை, பலா, இஞ்சி போன்றவை மஞ்சள் தோட்டத்திற்கு அருகில் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

இலைப்பேன் : இலைகளில் சாறை உறிஞ்சி பயிர்களை வாடச்செய்யும். மெட்டாசிஸ்டாக்ஸ் மற்றும் டைமெத்ரான் 750 மில்லி , தெளிப்பதன் மூலம் இலைப்பேனைக் கட்டுப்படுத்தலாம்.

நூற்புழு : செம்மண் கலந்து மணற்பாங்கான இடங்களில் நூற்புழு தாக்குதல் தென்படும். இவை மஞ்சளைத் தவிர புகையிலை, மிளகாய், கத்தரி, வாழை, கானகாம்பரம் ஆகிய பயிர்களைத் தாக்கும். எனவே இவற்றை ஊடுபயிராகப் பயிரிடுவதைத் தவிர்க்கவேண்டும். செண்டு மல்லியை ஓரங்களில் பயிரிட்டால் நூற்புழுவைக் கட்டுப்படுத்தலாம். நூற்புழுத் தாக்குதலைக் குறைக்க ஒரு எக்டருக்கு 250 கிலோ வேப்பம் புண்ணாக்கு கடைசி உழவின்போது இடவேண்டும். மீண்டும் யூரியா இடும்போது 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு கடைசி உழவின்போது இடவேண்டும். மீண்டும் யூரியா இடும்போது 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும். நட்ட 5வது மாதத்தில் ஒரு எக்டருக்கு 35 கிலோ கார்போபியூரான் குறுணையை செடியைச் சுற்றி 2-3 செ.மீ ஓரத்தில் இடவெண்டும். பின்பு மணல் கொண்டு மூடி நீர்ப்பாய்ச்சவேண்டும்.

நோய்கள்

இலைத் தீயல்நோய்

நட்ட வயலில் இலைகளின் இருபக்கமும் வட்டவடிவ அல்லது ஒழுங்கற்ற வட்டவடிவமான பழுப்புநிறப் புள்ளிகள் தோன்றும். பின்கரும்பழுப்பு நிறமாகி இலைப்புள்ளிகளின் அளவ பெரிதாகும். இளம் இலைகளை அதிக அளவு பாதிப்பதால் அவை முதிர்ச்சியடையாமலே காய்ந்து கருகிவிடும். அதிக அளவில் பாதிக்கப்பட்ட வயல் பார்ப்பதற்கு தீய்ந்து போன தோற்றத்தைத் தரும். இந்நோயின் பாதிப்பினால் விளைச்சல் அதிக அளவில் பாதிக்கப்படும்.

கட்டுப்பாடு

பாதிக்கப்பட்ட இலைகளைக் கிள்ளி எடுத்து எரித்துவிடவேண்டும். பின் காப்பர் ஆக்சி குளோரைடு 1250 கிராம் ஒரு எக்டருக்கு அல்லது மேன்கோசெப் 400 கிராம்ஒ ஒரு எக்டர் என்ளும் அளவில் நோய் கண்டவுடன் தெளிக்கவும். நோயின் தீவிரத்தைப் பொறுத்து, இரண்டு அல்லது  மூன்று முறை 10 அல்லது 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்கவேண்டும்.

இலைப்புள்ளி நோய்

இலையின் மேல் பகுதியில் பழுப்புநிறப் புள்ளிகள் பல்வேறு வடிவத்துடன், நோயின் தீவரம் அதிகரிக்க புள்ளிகளை வளர்ந்து நீள்வட்ட வடிவமாக இருக்கும். இலைப்புள்ளிகள், பழுப்புநிற விளிம்புகளையும், சாம்பல நிற நடுப்பகுதியையும் கொண்டு காணப்படும். நோய் முதிர்ச்சியடைந்த நிலையில் இலைப்புள்ளிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து, இலைகள் காய்ந்து பின் கீழே விழுந்துவிடும்.

கட்டுப்பாடு

இலைத்தீயல் நோய்க்கு உரிய மருந்துகளை இதற்கும் பயன்படுத்தி இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்.

வேகவைக்க சாண நீர் பயன்படுத்துவதால் மஞ்சளுக்கு அதிக விலை கிடைப்பதாகவும், விறகு செலவுகள் குறைவதாகவும் விவசாயிகள் நினைக்கிறார்கள். இது முற்றிலும் தவறான எண்ணமாகும். மாறாகப் பல தீமைகள் விளைகின்றன. முதலாவது இது சுகாதாரமற்றது. எனவே ஏற்றுமதி வாய்ப்பினை அதிக அளவில் இழக்க நேரிடும். உடல் நலத்தைக் குறைக்கின்றது. மஞ்சள் கிழங்கின் மத்தியில் கறுப்பு வளையம் ஏற்படுவதால் தரம் குறையும். எனவே சுத்தமான நீரில் வேக வைத்தாலே நல்லது. போதுமானது. கிழங்குகளைச் சரியான அளவு வேகவைக்கவேண்டும். அதிகமாக வேகவைத்தால் நிறம் மங்கிவிடும். குறைவாக வேக வைத்தால் கிழங்குகள் காயும் போது நொறுங்கி உடைந்து விடும்.
நீர் கொதிக்க ஆரம்பித்த பின்னர் சுமார் 45 முதல் 60 நிமிடங்களில் கிழங்குகள் நன்கு வெந்துவிடும். இதனை சல் குறிப்புகளால் கண்டறிலாம். முதலாவது நல்ல மஞ்சள் வாசனை வீசும். இரண்டாவது நீர் கொதிக்க நுரை தள்ளும். மூன்றாவது கிழங்கிளை இலேசாக அமுக்கும்போது நெகிழ்ந்தது கொடுக்கும். நன்கு வெந்த கிழங்கினுள் சிறு குச்சியினை நுழைத்தால் அது எளிதில் உள்ளே செல்லும். உடைத்தால் எளிதில் உடையும். வெள்ளை நிற ஆவி வரும். மஞ்சளை உடைத்துப் பார்த்தால் உட்பாகம் ஆரஞ்சு நிறம் மாறி மஞ்சள் நிறமாக இருக்கும். இந்த சமயத்தில் கிழங்குகளை எடுத்து ஆறவிடவேண்டும்.
தூய்மையான தரையில் சூரிய வெப்பத்தில் காய வைக்கவேண்டும். மழையில் ஒரு போதும் நனைய விடக்கூடாது, ஒவ்வொரு நாளும் மூன்று அல்லது நான்கு முறை கிளவி விட்டு சீராக்க காயவிடவேண்டும். தினமும் மாலையில் கிழங்குகளை ஒன்றாக்க குவித்து தார்பாலினால் மூடிவிடவேண்டும். சுமார் 10 அல்லது 15 நாட்களில் மஞ்சள் காய்ந்துவிடும். கிழங்குகள் உறுதியாக மாறிவிடும்.
செயற்கை முறையிலும் உலர வைக்கலாம். சுமார் 12 மணி நேரம் நீராவி நேர்த்தி செய்து பின்னர் சுமார் 60 செல்சியஸ் வெப்பநிலையில் 28 மணி நேரம் உலர்த்துவதால் நல்ல நிறமுள்ள மஞ்சள் கிடைக்கும்.
காய்ந்த மஞ்சளைப் பெரிய உருளைகளில் போட்டு மெருகூட்டலாம். இந்த உருளைகள் கையாலோ அல்லது மின்சாரத்தாலோ சுற்றப்படுகின்றன. மெருகூட்டும் போது மஞ்சள் கிழங்குகளின் மீதுள்ள செதில்கள், சிறு வேர்கள் நீங்கி மேற்புறம் பளபளப்பும் மெருகும் சேர்க்கிறது.

இவ்வாறு மெருகூட்டும்  போது நிறமிடுதல் செய்யவேண்டும். நிற மூட்டுவதற்கு லெட்குரோமேட் போன்ற இரசாயனங்களையோ இதர பொருட்களையோ ஒரு போதும் பயன்படுத்தக்கூடாது. நல்ல சுத்தமான உலர்ந்த மஞ்சள் பொடியினைச் சேர்த்து நிறமூட்டலாம்.

பதப்படுத்தப்பட்ட மஞ்சளைப் பாலித்தீன் உட்கொடுக்கப்பட்ட கோணிச் சாக்குகளில் அடைக்கவேண்டும். ஈரமற்ற தரைகளில் வைக்கவேண்டும். அவற்றிலிருந்து சுமார் ஒரு அடிக்கும் கூடுதலாக இடைவெளி விட்டு மஞ்சள் சிப்பங்களை அடுக்கவேண்டும். எலி, அணில், பறவைகள் உள்ளெ நுழையவிடக்கூடாது. பூஞ்சாண மருந்துகளை உடன் சேமித்து வைக்கக்கூடாது. அவ்வப்போது சிப்பங்களை சூரிய வெளிச்சத்தில் காட்டுவதால் மஞ்சளின் சேமிப்பைக்கூட்ட முடியும். பூச்சி மருந்துகளை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது.

 

 

மேலோட்டம்
வழிமுறைகள்
தொழில்நுட்பங்கள்
வழங்கல்கனை மேலாண்மை
பசுமைக்குடில் தொழில்நுட்பம்
பழப்பண்ணை மேலாண்மை
உற்பத்தி செலவு

துல்லிய பண்ணைய விவசாயிகள்
பயிர் சாகுபடியாளர்கள்
aa

தேசிய இணையதளங்கள்
சர்வதேச இணையதளங்கள்

அரசு தோட்டக்கலைத் துறை
அரசு தோட்டக்கலைப்
பண்ணைகள்
வணிக வாரியங்கள்

புத்தகங்கள் மற்றும்
வெளியீடுகள்

 

aa

பழப்பயிர்கள்
காய்கறிப் பயிர்கள்
வாசனை மற்றும்
மலைத்தோட்டப் பயிர்கள்
மலரியல் மற்றும் நில
எழிலூட்டுதல்
மூலிகை மற்றும்
நறுமணப் பயிர்கள்

 

||| | | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2008