||| | | | |
தோட்டக்கலை :: காய்கறிப் பயிர்கள் :: கொண்டைக்கடலை

இரகங்கள்
ஜே.ஜீ.- 11, பூஃக்ளே ஜீ 95311(கே)
விதைக்கும் பருவம்
மானாவாரி: செப்டம்பர் கடைசி வாரம் முதல் அக்டோபர் முதல் வாரம் வரை
பாசன பயிர் : அக்டோபர் இரண்டாம் பதினைந்து நாட்கள் முதல் நவம்பர் முதல்
வாரம் வரை
இடைவெளி
30x10 செ.மீ.(வரி விதைப்பு)
விதை நேர்த்தி
  • விதை பிரைமிங் (விதையை 4-5 மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும்)
  • டிரைக்கோடெர்மா (6 கிராம்/கிலோ) மற்றும் விட்டா வேக்ஸ் (கார்பாக்ஸின்) 1 கிராம் கொண்டு 1 கிலோ விதை நேர்த்தி செய்தல்
  • ரைசோபியம் கலவை (200 கிராம்) / 10 கிலோ விதைக்கு விதை நேர்த்தி செய்தல்

களை எடுத்தல்

  • பென்டிமெத்தலினை 1.0 – 1.25 ஏ.ஐ. கிலோ/ ஹெக் அளவில் முளைக்கும் முன் தெளிக்க வேண்டும்.
  • ஒரு கைக்களையெடுத்தல் வேண்டுமெனில் செய்ய வேண்டும்.

நீர்ப்பாசனம்
காய் உருவாகும் பருவத்தில் ஒரு நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.
உரம் இடுதல்

  • 15-20 கிலோ நைட்ரஜன் 40 கிலோ பாஸ்பரஸ், 20 கிலோ சல்பர், 1 கிலோ அம்மோனியம் மாலிப்டேட் மற்றும் 5 டன் தொழு உரம்/ எக். இட வேண்டும்.
  • 2% யூரியா/டீ.ஏ.பி. பூக்கும் பருவத்திலும் (விதைத்த 70 நாட்களுக்குப் பிறகு) அதன் பின் நாட்களிலும் தெளிக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு
பூச்சி கண்காணிப்பு

  • 5-6 பொறிகள் எக்டருக்கு – பீரமோன் பொறிகள் அமைக்க வேண்டும் (6 ஆண் அந்துப்பூச்சிகள் ஓர் இரவில் பொறியில் சிக்குதல்)
  • செண்டுமல்லியைப் பொறிப்பயிராக வளர்த்தல்
  • எக்டருக்க 30 – 40 பறவைகள் உட்காருமிடம் அமைத்தல் (பயிர் முதிர்ச்சி அடையும் சமயத்தில் அவற்றை நீக்க வேண்டும்)
  • வேம்பு விதைச்சாறு 5% (அ) இன்டாக்சோகார்ப் 500 மி.லி./ஹெக். தெளிக்க வேண்டும்.

அறுவடை

  • 3-7 மாதத்தில் பயிர் முதிர்ச்சி அடையும், இலைகளானது பழுப்பு (அ) மஞ்சள் நிறமாக முதிர்ச்சி அடையும் பருவத்தில் மாறும்
  • பயிர் முதிர்ச்சி அடையும் போது காய்ந்த விதைகளை அறுவடை செய்யலாம் (அ) காயும் முன்பே நிலப்பரப்பை ஒட்டி அறுத்தல் (அ) முழுவதும் பிடுங்குதல் வேண்டும்
  • பயிர்களை சில நாட்கள் அடுக்கி வைத்து, பின்னர் களத்தில் அடித்து எடுக்க வேண்டும்.
  • உமிகளை/ தோலை காற்றில் தூற்றுவதன் மூலம் கடலையிலிருந்து பிரிக்கலாம்.
Last Update:June 2014
 

||| | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014