||| | | | | |
தோட்டக்கலை :: காய்கறிப் பயிர்கள் :: பாகற்காய், புடலைக்காய்
gg gg

இரகங்கள்
தொழில்நுட்பங்கள்
விற்பனை விலை

தேசிய தோட்டக்கலை இயக்கம்
நபார்டு
தேசிய தோட்டக்கலை வாரியம்
தேசிய மூலிகைப்பயிர்கள்
வாரியம்
சொட்டுநீர் பாசனம்
ஒருங்கிணைந்த தோட்டக்கலை
மேம்பாட்டுத்திட்டம்
வணிக வாரியங்கள்

சந்தை நிலவரம்

பாகற்காய் இரகங்கள் : கோ 1, எம்டியு 1, அர்காஹரித், ப்ரியா ப்ரீத்தி மற்றும் கோபிஜிஎச் 1.

புடலை இரகங்கள்:கோ 1, கோ 2, பிகேஎம் 1, எம்டியு 1 மற்றும் பிஎல்ஆர்(எஸ்ஜி) 1.

பீர்க்கள் இரகங்கள் : கோ 1, கோ 2, அர்கா சுமீத் மற்றும் அர்கா சுஜாத்.

மண் மற்றும் தட்பவெப்பநிலை: மணலும், மண்ணும் கலந்த வளமான நிலத்தில் நன்கு வளரும். மிதமான வெப்பநிலை இப்பயிர்களுக்கு ஏற்றது. சிறந்த மகசூலுக்கு கார அமிலத்தன்மை 6.5-7.5 இருத்தல்வேண்டும்.

பருவம் : ஜீலை மற்றும் ஜனவரி

நிலம் தயாரித்தல் :

நிலத்தை நன்கு உழவு செய்து சமன் செய்தபின்பு 2.5x2 மீட்டர் என்ற இடைவெளியில் குழிகள் தோண்ட வேண்டும். குழிகளை 30 செ.மீ 30 செ.மீ அகலம் மற்றும் 30 செ.மீ ஆழம் இருக்குமாறு அமைக்கவேண்டும். தோண்டிய குழிகளை 7-10 நாட்கள் வரை ஆறப்போடவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

ஒவ்வொரு குழிக்கும் மக்கிய தொழு உரம் 10 கிலோ இடவேண்டும். இத்தோடு அடியுரமாக ஒவ்வொரு குழிக்கும் 6:12:12 என்ற அளவில் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக் கலவையை 100 கிராம் அளவுக்கு இடவேண்டும். மேலுரமாக பூக்கும் தருணத்தில் ஒவ்வொரு குழிக்கும் 10 கிராம் தழைச்சத்தை இடவேண்டும்.

பயிர்

 

இடவேண்டிய சத்துக்கள்(கிராம குழி ஒன்றிற்கு)

இப்கோ காம்ப்ளக்ஸ் 10:26:26, யூரியா இடவேண்டிய அளவு (கிராம குழி ஒன்றிற்கு)

 

 

தழை

மணி

சாம்பல்

10:26:26

யூரியா

சுரைக்காய்

விதைக்கும்போது ஒன்றிற்கு

6

12

12

60

0

 

30 நாட்களுக்குப் பிறகு

10

0

0

0

22

விதை அளவு

பாகற்காய்

எக்டருக்கு 4.5 கிலோ

புடலை

எக்டருக்கு 1.5 கிலோ

பீர்க்கன்

எக்டருக்கு 1.5 கிலோ

விதையும் விதைப்பும்

விதை நேர்த்தி : ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் என்ற அளவில் கேப்டான் அல்லது திரம் மருந்தினைக் கலந்து 24 மணி நேரம் வைத்துப்பின்னர் விதைக்கவேண்டும்.

விதைப்பு : ஒவ்வொரு குழியிலும் 2 செ.மீ ஆழத்தில் 3-4 விதைகள் வீதம் விதைக்கவேண்டும. பின்னர் நன்கு வளர்ந்தவுடன் குழிக்கு இரண்டு செடிகள் வீதம் விட்டு மற்றவற்றைக் கலைத்துவிடவேண்டும்.

நீர் நிர்வாகம்
விதைகள் முளைத்து வரும் வரை விதைக் குழிகளுக்கு நீர் ஊற்றவேண்டும். சுமார் 8-10 நாட்களில் விதைகள் முளைத்து வரும். பின்பு வாய்க்கால்களின் மூலம் வாரம் ஒரு முறை நீர்ப்பாய்ச்சவேண்டும்.

களை கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி

களையெடுத்தல் : விதைத்த 15வது நாளிலும், முப்பதாவது நாளிலும் களைக்கொத்து கொண்டு களை எடுக்கவேண்டும்.

பந்தல் அமைத்தல் : புடலை, பீர்க்கன், பாகல் ஆகியவற்றின் கொடிகள் படர பந்தல் அல்லது மூங்கில் தட்டிகள் மிகவும் அவசியம். கொடிகள் தோன்ற ஆரம்பித்தவுடன் 2 மீட்டர் உயரத்திற்கு பந்தல் அல்லது தட்டிகளை அமைத்து கொடிகளை அவற்றில் படரவிடவேண்டும். புடலையில் குட்டை மற்றும் நீண்ட காய் இரகங்கள் உள்ளன. நீண்ட காய் இரகங்களின் பிஞ்சுகளின் நுனிப்பாகத்தில் சிறிய கற்களை கட்டிவிடுவதன் மூலம் காய்கள் ஒரே சீராக வளர்ந்து அதிக பலனைத் தரும். கோ 2 இரகப்புடலைக்குப் பந்தல் அமைக்கத் தேவையில்லை.

பாகல்

100 பிபிஎம் (ஒரு மில்லி 10 லிட்டர் தண்ணீரில்)

புடலை

100 பிபிஎம் (ஒரு மில்லி 10 லிட்டர் தண்ணீரில்)

பீர்க்கன்

250 பிபிஎம் (2.5 மில்லி 10 லிட்டர் தண்ணீரில்)

எத்ரல் கரைசலை மேற்கண்ட விகிதத்தில் கலந்து, முதல் இரண்டு இலைகள் (விதையிலை தவிர) உரவாகிய வின் ஒரு முறையும், பின்பு வாரம் ஒரு முறை என்ற இடைவெளியில் இரண்ட முறை தெளிக்கவேண்டும். இதனால் ஆண்பூக்களின் எண்ணிக்கை குறைந்து பெண்பூக்களின் எண்ணிக்கை அதிகமாகும்.
லிண்டேன் தூவும் மருந்து, காப்பர் மற்றும் கந்தகத் தூள்களைக் கண்டிப்பாக உபயோகப்படுத்தக்கூடபது.
சாம்பல் நோய் : இதனைக் கட்டுப்படுத்த டைனோகாபர் 1 மில்லி அல்லது கார்பென்டாசிம் 0.5 கிராம் மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும்.
அடிச்சாம்பல்நோய் : மான்கோசெப் அல்லது குளொரோதலானில் 2 கிராம் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டவுடன் 10 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்கவேண்டும்.

அறுவடை

பாகற்காய் : விதைத்த 60-65 நாட்களில் முதல் அறுவடை செய்யலாம். அதன் பிறகு வாரம் ஒருமுறை அறுவடை செய்யலாம். விதைகள் முதிர்ச்சியடைய ஆரம்பிக்கும் முன்பே காய்களை அறுவடை செய்யவேண்டும்.

புடலை : விதைப்பு செய்த 75-80 நாட்களில் முதல் அறுவடைக்கு வரும், சுமார் 5-7 நாட்கள் இடைவெளியில் மறுபடியும் அறுவடை செய்யலாம்.

பீர்க்கன் : விதைத்த 55-60 நாட்களில் முதல் அறுவடை செய்யலாம். அதன் பின்னர் 5-7 நாட்கள் இடைவெளியில் மறுபடியும் அறுவடை செய்யலாம்.

மகசூல்

பாகற்காய்

எக்டருக்கு 140-150 நாட்களில் 14 டன் காய்கள் வீரிய ஒட்டு இரகங்களில் 40  டன்

புடலை

எக்டருக்கு 134-145 நாட்களில் 18 டன் காய்கள்

பீர்க்கன்

எக்டருக்கு 125 நாட்களில் 14 முதல் 15 டன் காய்கள்

 

 

மேலோட்டம்
வழிமுறைகள்
தொழில்நுட்பங்கள்
வழங்கல்கனை மேலாண்மை
பசுமைக்குடில் தொழில்நுட்பம்
பழப்பண்ணை மேலாண்மை
உற்பத்தி செலவு

துல்லிய பண்ணைய விவசாயிகள்
பயிர் சாகுபடியாளர்கள்
aa

தேசிய இணையதளங்கள்
சர்வதேச இணையதளங்கள்

அரசு தோட்டக்கலைத் துறை
அரசு தோட்டக்கலைப்
பண்ணைகள்
வணிக வாரியங்கள்

புத்தகங்கள் மற்றும்
வெளியீடுகள்

 

aa

பழப்பயிர்கள்
காய்கறிப் பயிர்கள்
வாசனை மற்றும்
மலைத்தோட்டப் பயிர்கள்
மலரியல் மற்றும் நில
எழிலூட்டுதல்
மூலிகை மற்றும்
நறுமணப் பயிர்கள்

 

||| | | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2008