முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
பாரம்பரிய வேளாண்மை் :: பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

சோளம் (கோண சோளம்)
இந்த சோளம் ஒரு பாசன பயிராகும். இந்த சோளம் அனைத்து மண் வகைகளிலும் சாகுபடி செய்யலாம். முதல் உழவிற்கு பிறகு, தொழு உரத்தை அடியுரமாக பயன்படுத்தலாம். இரண்டாம் உழவு முடித்த பிறகு, மூன்றாம் உழவில் விதை விதைக்கலாம். விதையளவு 3கிலோ/ஏக்கர்.  இப்பயிரிடுவதற்கான பருவம் ஜனவரி – பிப்ரவரி. பயிரின் கால அளவு 90 நாட்கள். 10 நாட்கள் இடைவெளியில் பாசனம் அளித்தால் போதுமானது. களையெடுப்பு தேவையில்லை. ஒரு ஏக்கர் நிலத்தில் தானிய மகசூல் 2500 கிலோ. ஒரு கிலோ விதையின் விலை ரூ.12-15, ஒரு ஏக்கர் சாகுபடிக்கு ரூ.3000/- வரை தேவைப்படும்.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014