முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
பாரம்பரிய வேளாண்மை் :: பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

குடம்புளி– கார்சினியா கம்போஜியா
குடம்புளி பெரிய அளவிலான, நீண்ட ஆயுள், உயர்ந்த பசுமையான மரமாகும். இதன் சதை உண்ணுவதற்கு ஏற்றது, ஸ்குவாஷ் தயாரிப்பில் புளிப்பு சுவைக்காகவும், பானங்கள் உடன் சட்னி, மற்றும் பொதுவான சமையலுக்கும் பயன்படுகிறது.  சிறந்த மண் வகை மற்றும் போதுமான ஈரமுடைய வண்டல் மண் ஏற்றது. இச்சூழ்நிலை கன்னியாகுமரி மாவட்டத்தில்  நிலவுகிறது. செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் பூக்கிறது. ஏப்ரல் மாதத்தில் முழுவதும் பழுத்த பழங்கள் அறுவடைக்கு வருகிறது. மகசூல் வீதம் 120-150 கிலோஒரு வருடத்திற்கு ஒரு மரம் கொடுக்கிறது. இந்திய புளிவகைகளை விட குறைந்த அமிலத்தன்மையுடையது. பழங்கள் ஆரஞ்சு பழத்தோற்றத்தை போன்று இருக்கும், சுளைகள் உண்ண தகுந்த மற்றும் சாறு நிறைந்ததாக இருக்கும்.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014