முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
பாரம்பரிய வேளாண்மை் :: பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

நாட்டு மரவள்ளி கிழங்கு (வெள்ளை பொந்தா) – மரவள்ளி கிழங்கு
சேலம் மாவட்டத்தில் வெள்ளை பொந்தா என்ற இந்த பாரம்பரிய இரகம் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பயிரின் கால அளவு 8 மாதங்களாகும் (ஆகஸ்ட் – மார்ச்). ஒரு ஏக்கர் நிலத்திற்கு 4500 – 5000 செடிகள் வரை நடவு செய்யப்படுகின்றன. மாதம் ஒரு முறை களையெடுப்பதால், மகசூல் அதிகரிக்கும். ஒரு செடியிலிருந்து 4-5 கிலோ கிழங்கு மகசூல் கிடைக்கும். ஒரு ஏக்கரிலிருந்து 10 டன்கள் கிழங்கு கிடைக்கும். ஒரு கிலோ கிழங்கின் சந்தை விலை ரூ.5/-. முதல் 3 மாதங்கள் வரை ஊடு பயிர் சாகுபடி செய்யலாம். உளுந்து மற்றும் நிலக்கடலையை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். தென்னை மரங்களை வரப்பு ஓரங்களில் நடவு செய்யலாம். இந்த இரகத்தில் வெள்ளை ஈ தாக்குதல் அறுவடை நேரத்தில் அதிகமாக இருக்கும்.

சிறப்பு பண்புகள்

  • இது முக்கியமாக சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது.

  • இதன் தோலின் நிறம் சிவப்பு நிறமாகவும், சில நேரங்களில் வெள்ளை நிறமாகவும் மற்றும் நாட்டு இரக கிழங்கில் அதிகளவு மாவுச்சத்து கொண்டதாகவும் உள்ளது.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014