தவேப வேளாண் இணைய தளம் :: கிசான் அழைப்பு மையம்(1800-180-1551)

விவசாயி குறைதீர்க்கும் தொலைபேசி சேவை மையம்

நமது நாட்டில் தனியார் துறையிலாகட்டும், அரசுத்துறையிலாகட்டும் தொலைபேசி வழி தகவல் பரிமாற்றம் அபரிமிதமாக வளர்ச்சி அடைந்துள்ளது. 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் பொது தொலைபேசி வசதி கொண்டுள்ளன. ஆகவே இத்தகவல் தொடர்பு முறையை வேளாண் தொழில்நுட்பத்திற்குப் பயன்படுத்தி விவசாயிகளுக்கு செய்திகளை வழங்க முடிவு செய்யப்பட்டது. இப்போது இத்திட்டம் நாடு முழுவதும் பரவலாக்கப்பட்டுள்ளது. இக்குறைதீர்க்கும் தொலைபேசி சேவை நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகளுக்கு 1800-180-1551 என்ற இலவச அழைப்பு எண்ணின் மூலம் வழங்கப்படுகிறது. இது முதன் முதலில் 21.01.2004 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.  2004ம் ஆண்டு ஜீன் 10ம் தேதியிலிருந்து இந்த சேவை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுகிறது. ஞாயிறு மற்றும் முக்கிய அரசாங்க விடுமுறை நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் ஒலி பதிவு செய்யும் கருவி மூலம் வேளாண் பெருமக்களின் சந்தேகங்கள் பதிவு செய்யப்பட்டு, பரிந்துரைகள் வழங்கப்படுகின்றன.

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014