கிசான் அழைப்பு மையம் :: திட்ட செயல்பாடுகள்

இக்குறைதீர்க்கும் தகவல் மையம் இதுவரையில் தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் மற்றும் வேளாண் தொழில்நுட்பம் ஆகிய இரண்டு தொழில்நுட்பங்கள் அடங்கியது. வேளாண் ஆராய்ச்சயாளர்கள் மற்றும் விரிவாக்கச் செயலாளர்கள் பணியை முறையாகத் தகவல் தொழில்நுட்பத்துடன் இணைத்து இச்சேவை வழங்கப்படுகிறது. இக்குறைதீர்க்கும் மையம் 3 பகுதிகளாகச் செயல்படுகிறது.

  • நிலையில் தொலைபேசி வசதியுடன் ஒரு வேளாண் பட்டதாரி அந்த பகுதிகளின் உள்ளூர் மொழிகளை அறிந்தவராக இருப்பார்.
  • நிலையில் கணினி மற்றும் தொபை்பேசி வசதியுடன் தொழில்நுட்ப சிறப்பு அறிநர் விவசாயிகளின் கேள்விக்கு பதில் அளிப்பர்.
  • நிலையில் வேளாண் ஆராய்ச்சியாளர்கள் மேலாண்மைக் குழு அமைந்து இருக்கும். முதல் இரண்டு நிலைகளில் தீர்க்கப்படாத கேள்விகள் இந்த 3ம் நிலைக்கு அனுப்பப்பட்டு ஆராய்ச்சியாளர்களால் பதிலளிக்கப்படும்.

முதல் நிலை:

விவசாயிகளிடமிருந்து வரும் தொலைப்பேசி அழைப்புகள் தொழில் நிபுனரால் எடுக்கப்படும். அதைத் தொடர்ந்து ஒரு வரவேற்பு செய்தி அளிக்கப்பட்டு பின்பு விவசாயியின் கேள்விகள் என்னவென்று கேட்கப்படும்.
இந்த உரையாடல்கள் அனைத்தும் அருகே உள்ள ஒரு கணினியில் பதிவு செய்யப்படும்.
முதல் நிலை தொழில் நிபுணர் உள்ளூர் மொழிகள் நனகு அறிந்த ஒரு வேளாண் பட்டதாரியாக இருப்பார். அதோடு இவர் நல்ல தகவல் தொடர்பு மற்றும் வேளாண்மையில் புலமையும் பெற்றிருக்க வேண்டும். விவசாயிகளின் பெரும்பான்மை சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கக்கூடியவராக இருக்க வேண்டும்.

இரண்டாம் நிலை:

இந்த நிலையில் வேளாண் தொழில்நுட்ப தகவல் மையம், வேளாண் அறிவியல் நிலையம், வேளாண் கல்லூரி, அல்லது அருகிலுள்ள ஆராய்ச்சி நிலையத்தின் தொழில்நுட்ப சிறப்பு அறிஞர் இருப்பார். முதல் நிலையில் பதிலளிக்க இயலாத சந்தேகங்கள் இவர்களுக்கு தொடர்பு கொடுக்கப்படுகிறது. விவசாயியின் கேள்விகளும் அதனுடன் தொடர்புடைய தகவல்களும் இத்தொழில்நுட்ப அறிஞருக்கு அனுப்பப்படுகிறது. இது கணினியில் பதியப்படுவதால் மீண்டும் அதே கேள்விகள் வருவது தடுக்கப்படுகிறது. உடனடியாக அச்சந்தேகத்திற்கு பதில் அளிக்கப்பட இயலவில்லையெனில் அவ்விவசாயிக்கு 72 மணி நேரத்திற்குள் தொலைபேசி / அஞ்சல் / மின்னஞ்சல் அல்லது தொலைப்பிரதி வழியே பதில் அளிக்கப்படுகிறது.
இத்தொழில்நுட்ப அறிநரைத் தேர்ந்தெடுக்கு முன் அப்பகுதியில் அதிகம் பயிரிடப்படும் பயிர் மற்றும் எழும் பிரச்சனைகள் பற்றிச் சிந்தித்துப் பின் தேர்ந்தெடுக்க வேண்டும். அறிநரைத் தேர்ந்தெடுக்கும்போது இரு முக்கிய கருத்துக்களைக் கவனிக்க வேண்டும். அவை

  • அந்தந்த பகுதி / மாவட்டங்களில் பயிரிடப்படும். பயிர்களைப் பொறுத்து தொழில்நுட்ப அறிஞர்களைத் தேர்வு செய்யலாம்
  • அப்பகுதிகளில் நிலவும் பிரச்சனைகள், பெரும்பான்மையாக எழும் கேள்விகளைக் கருத்தில் கொண்டு தேர்ந்தெடுக்கலாம்

அதோடு அவர் நல்ல தகவல் தொடர்பு பற்றிய அறிவும் உள்ளூர் மொழிகளும் அறிந்தவராக இருத்தல் வேண்டும். மேலும் அந்தத் துறையில் 10-15 வருடங்கள் அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும்.

மூன்றாம் நிலை:

இது மண்டல அளவில் ஒரு அறையுடன் கூடியது. முதல் இரண்டு நிலைகளில் பதில் அளிக்கப்பட இயலாத கேள்விகள் இங்கு அனுப்பப்படுகின்றன. இங்கு அக்கேள்விகள் உள்ளூர் அறிஞர்கள் அல்லது தீர்வு காணப்படுகிறது. கேள்வி கேட்ட 72 மணி நேரத்திற்குள் தொலைபேசி, தொலைபிரதி, அஞ்சல் அல்லது மின்னஞ்சல் வழியே பதில் அனுப்பப்படும்.

அறிவு சார்ந்த மேலாண்மை முறை:

அறிவு சார்ந்த மேலாண்மை முறை என்பது இந்திய தொலைத்தொடர்பு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு மென்பொருள் சேவை. எல்லோரும் பயன்படுத்தக் கூடிய தொலைபேசி எண்ணுடன் கூடியது. விவசாயிகள் அழைக்கும்போது அதுபற்றிய அனைத்துத் தகவல்களும் கணினியில் பதியப்படும்.
இம்மேலாண்மை முறையில் கேட்டகப்பட்ட கேள்விகளின் அடிப்படையில் (தகவல்கள்) அதற்கான பதிலுடன் ஒரு குறிப்பேடு தயார் செய்யப்படுகிறது. தகவல்கள் தேதி வரரியாக, பயிர், இடம், வட்டம், மாநிலம், பிரச்சனைகள் நிலைகள், தொலைபேசி அழைப்பு வகை போன்றவை தேசிய அளவில் தொகுக்கப்பட்டு கணினியில் பதிவு செய்து வைக்கப்படுகின்றன. இந்த செய்திகள் பின்பு இணைதளத்தில் வெளியிடப்படுகின்றன.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013