தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் & சுய உதவிக் குழுக்கள் :: கப்பார்ட்

கப்பார்ட் :

நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்கள் :

கப்பார்ட் கிராம புறங்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்துவதை முக்கிய நோக்கமாக கொண்டு செயல்படுகிறது. குறிப்பாக ஏழை மற்றும் பின் தங்கிய சமுதாய மக்கள் நலனுக்காக செயல்படுகிறது. அதிலும் குறிப்பாக வறுமை கோட்டிற்கு கீழ்வாழும் மக்கள், பின் தங்கிய வகுப்பினர், பழங்குடியினர், கொத்தடிமைகள், பெண்கள், உடல் ஊனமுற்றோர் போன்றவர்களின் நலனுக்காக அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது கப்பார்ட்.

கப்பார்ட்டின் முக்கிய நோக்கங்கள் :

   கிராம புறங்களின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கும் திட்டங்களை நடைமுறைபடுத்துவதற்காகவும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு உதவுவது.

  1. கிராமப்புறங்களுக்கு ஏற்ற தொழில்நுட்பங்களை வளர்ச்சியடைய செய்வது மற்றும் மேம்படுத்துவதில் தேசத்தின் முக்கிய காரணியாக செயல்படுகிறது.

  2. கிராமபுற மேம்பாட்டிற்காக மக்களின் பங்களிப்பினை மேம்படுத்தவும் தன்னார்வ முயற்சிகளை மேற்கொள்ளவும் ஏதுவாக தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் கிராமப்புற மக்களுக்கும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துகிறது.

  3. தன்னார்வ அமைப்புகள், கிராமிய தொழில்நுட்பங்கள் மற்றும் கிராமிய முன்னேற்றங்களுக்கு இது  தகவல் வங்கியாகவும் தகவல்களை வழங்கும் இடமாகவும் திகழ்கிறது.

  4. சமுதாய வளர்ச்சிக்கு உதவுகிறது.

  5. முக்கியமாக இடர்பாடுகளுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

  6. கிராம மக்களையும் கிராமிய மக்களை உருவாக்குவது மற்றும் வலுப்படுத்துகிறது.

  7. தகுந்த கிராம தொழில்நுட்பங்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது.

  8. கிராமப்புறங்களின் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் திறனை வலுப்படுத்துகிறது.

  9. வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் பொருளாதார சுய சார்பு.

  10. சமுதாய சொத்துக்களை உருவாக்குவது மற்றும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தல்

  11. சுற்றுப்புற சூழல்களை பாதுகாத்தல் மற்றும் இயற்கை வளங்களை மீண்டும் உருவாக்குவது.

  12. பெண்ணுரிமை, சமூக பொறுப்பு அல்லாதவர்கள் மற்றும் பின்தங்கிய சமுதாயத்தையும் முன்னேற்றத்தில் பங்கு கொள்ள வைப்பது.

   கப்பார்ட்டின் குறிக்கோள் அதுமட்டுமல்லாது தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நிதி மற்றும் இதர ஆதாரங்களை வழங்குகிறது.மேலும் கருத்தரங்கம், வளர்ச்சி பெரிய அளவிலான திட்டங்களை மேற்கொள்ளுதல் போன்ற வளர்ச்சி பணிகளுக்கு உதவுகிறது.
கப்பார்ட் இந்திய அரசிடமிருந்து அதிக அளவு நிதியினை பெறுகிறது. இது மேலும் கருத்தரங்கம், வளர்ச்சி பெரிய அளவிலான திட்டங்களை மேற்கொள்ளாமல் போன்ற வளர்ச்சி பணிகளுக்கு உதவுகிறது.

CAPART

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015