தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் & சுய உதவிக் குழுக்கள் :: வெற்றிகரமாக இயங்கும் சுய உதவிக்குழுக்கள்

திட்டங்கள்:

நபார்ட்(NADARD) செயல்சார் பயிற்சிகள் மூலம் சுய உதவிக் குழுக்களுக்கு தொழில் நுட்ப மாற்ற பயிற்சி மற்றும் சிறிய அளவிலான உணவு பதப்படுத்தும் தொழில் நிறுபவும் 2011-ல் இருந்து உதவி செய்கின்றது. வேளாண் மற்றும் தோட்டகலைப் பயிர்களில் கிட்டதட்ட 100 சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 20 உறுப்பினர்கள் பயிற்சியில் கற்றுக் கொண்டதை அருகில் உள்ள கடைகள், வீடுகள், கண்காட்சி மற்றும் பொருட்காட்சிகளில் விற்பனை செய்கின்றனர்.

INSIMP : தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சிறு தானியத்திலிருந்து செய்யப்படும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களின் திட்டம் RCT அறக்கட்டளையிலும் செயல்படுகின்றது.

உற்பத்தியாளர்களுக்கான நிறுவனம் : கோவை அங்கக உற்பத்தியாளர்கள் என்ற பெயரில் நிறுவனம் பதிவு செய்யப்பட்டு கிட்டதட்ட 500 உறுப்பினர்கள் பங்கு பெற்று வருகின்றனர்.

பயிற்சியின் வகைகள் :

பெண் தொழில் முனைவோர்

  • அறக்கட்டளையின் முக்கிய நோக்கம் பெண்களை தொழில் முனைவோராக மேம்படுத்துவதாகும். இலவச பயிற்சிகள் சுய உதவிக் குழுக்களுக்கும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு வழங்கப்படுகிறது.

.அரசு உதவியுடன் நடைபெறும் பயிற்சிகள் :

  • நபார்ட்(NADARD) - செயல்சார் பயிற்சிகள் மூலம் சுய உதவிக் குழுக்களுக்கு தொழில் நுட்ப மாற்ற பயிற்சி மற்றும் சிறிய அளவிலான உணவு பதப்படுத்தும் தொழில் நிறுபவும் 2011-ல் இருந்து உதவி செய்கின்றது. வேளாண் மற்றும் தோட்டகலைப் பயிர்களில் கிட்டதட்ட 100 சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 20 உறுப்பினர்கள் பயிற்சியில் கற்றுக் கொண்டதை அருகில் உள்ள கடைகள், வீடுகள், கண்காட்சி மற்றும் பொருட்காட்சிகளில் விற்பனை செய்கின்றனர்.

  • MSME - நுண், சிறு மற்றும் தொழில்களுக்கான அமைச்சகம் உணவுத் தொழில் முனைவோரை உருவாக்கும் தளமாக RCT அறக்கட்டளை இணைந்துள்ளது. கிட்டதட்ட 294 பேருக்கு ஒரு வாரகால பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

  • EDI - சென்னையில் உள்ள தொழில் முனைவோர் உருவாக்க மையம் 25 பங்கேற்பாளர்களுக்கு 25 நாட்களுக்கு RCT அறக்கட்டளையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

  • NMPF - தொழில் முனைவோருக்கான மதிப்புக் கூட்டப்பொருட்கள் உற்பத்தி செய்யும் மையம் அமைப்பதற்கான பயிற்சிக்கு ஆதரவளித்துள்ளது. 30 நாட்களுக்கு 30 உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

  • பெண்கள் முன்னேற்றக் கழகம்(WDC) - பெரியநாயக்கன் பாளையம் தொகுதிக்கு உட்பட்ட 30 உறுப்பினர்களுக்கு 45 நாட்களுக்கு பயிற்சி WDC மூலம் அளிக்கப்பட்டது.
ஆசிரியர்களுக்கான பயிற்சி

வெள்ளாளர் கல்லூரி, ஈரோடு மற்றும் RVS கல்லூரி சூலூர் சேர்ந்த ஆசிரியர்கள் பதப்படுத்துதல் ஆற்றலை மேம்படுத்தும் பயிற்சியில் பங்கு பெற்றனர்.
மாணவர்களுக்கான உள்கட்ட பயிற்சி

ஈரோடு வெள்ளாளர் கல்லூரியை சேர்ந்த இளங்கலை மாணவர்கள் , PSG கலைக்கல்லூரி, Dr.NGP கலைகல்லூரி, RVS கலைகல்லூரியை சேர்ந்த முதுகலை மாணவர்கள் 7 முதல் 30 நாட்களுக்கான உள்ளகப் பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.

 

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015