முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
தவேப வேளாண் இணைய தளம் ஊட்டச்சத்து :: சொற்குறிப்பு

1.உடல் நலம்  (HEALTH): உடல் ஆரோக்கியமாக இருப்பதை மட்டும் குறிக்காமல், மனவளர்ச்சி, மூளை வளர்ச்சி, சமுதாயப் பண்பு போன்ற அனைத்திலும் சிறப்பாக அமையும் நிலையையே குறிக்கும்

2. ஊட்டச்சத்துக்களின் தேவை (NUTRIENT REQUIREMENT): ஒவ்வொரு வயதினற்கும் அவரவர் உடல் எடை மற்றும் உயரத்திற்கு ஏற்றவாறு ஊட்டச்சத்துக்களின் தேவை வேறுபடும். அதற்கேற்ப உணவு உட்கொள்ளும் போது உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது சுலபமாகும்

3.உடல்நலத்தை பேண தேவையான அளவு உணவின் பரிந்துரை (RECOMMENDED DIETARY ALLOWANCES.(RDA): மாவுச்சத்து, புரதச்சத்து, உயிர்ச்சத்துக்கள் மற்றும் தாதுப்பொருட்களின் அளவு, ஒவ்வொரு வயதினருக்கும் அவரவர் எடை, உயரம் வைத்து கணக்கிடும் ஐடியல் எடைக்கு தகுந்தாற்போல் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு வகைகளை பரிந்துரைக்கும் முறைக்கு ஆர்.டி.ஏ என்று பெயராகும்

4.சரிவிகித உணவு(BALANCED DIET): சரிவிகித உணவு என்பது மூன்று முக்கியச் சத்துக்களான மாவுச்சத்து, கொழுப்புச் சத்து, புரதச்சத்து, உயிர்ச்சத்து மற்றும் தாதுப்பொருட்கள் போன்றவற்றை உள்ளடக்கி ஐடியல் எடைக்கு தகுந்தாற்போல் எடுத்துக் கொள்ளும் அளவு உணவாகும்.
தொன்றுதொட்டே, தமிழ் நாட்டில் திருமணம், காதணி விழா மற்றும் பல வைபோகங்களுக்கு பரிமாறும் உணவின் முறையை ஆராய்ந்தால், அவர்களும் சரிவிகித உணவைப் படைப்பது தெரிய வருகின்றது.

1. அரிசிச்சாதம்  : மாவுச்சத்து
2. பருப்பு மற்றும் சாம்பார் :

புரதச்சத்து

3. நெய் :

கொழுப்புச்சத்து

4. காய்கறி, கூட்டு பொரியல், அவியல் : உயிர்ச்சத்துக்களும் தாதுப்பொருட்களும் கிடைக்கின்றன

மேலும் சாப்பாடு முடிந்தவுடன் வெற்றிலை பாக்கு போடுவதன் மூலம் ஜீரண சக்தியைக் கொடுப்பதுடன், நார்ச்சத்தையும் கொடுப்பதால் அஜீரண கோளாறுகளைத் தவிர்க்க முடியும். நாகரீகக் காலத்தில் இந்த உணவில் சில மாற்றங்களும் இடம் பெற்றுள்ளன. அதில் அதிகமான வாசனைப் பொருட்களையும் சுவைக்காக நிறைய கொழுப்புச்சத்துக்களையும் சேர்ப்பதின் மூலம் உடல் நலக்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் (ANTIOCIDANTS):உடலில் உள்ள செல் சரிவர வேலை செய்வதற்கு ஆன்டி ஆக்ஸிடென்ட் என்ற மூலக்கூறு மிகவும் அவசியமாகும். இந்த மூலக்கூறு செல்லை அழிவிலிருந்து காப்பாற்றி பாதுகாக்க உதவுகிறது. மேலும் செல் அழிவு (Cell damage) என்பது தனிப்பட்ட ஆக்ஸிஜன் மூலக் கூற்றினை அதிக அளவு உருவாக்கி கொழுப்புச்சத்தில் கெடுதல்களை உண்டாக்கி செல்களில் உள்ள புரதம் மற்றும் டி.என்.ஏ (DNA) போன்ற மூலக்கூறுகளை அழிப்பதாகும். எனவே சதைப்பகுதி மற்றும் தசைப்பகுதிகளில் மாறுதல்கள் ஏற்பட்டு புண்ணாகி விடுகின்றது. இந்த காரணிதான் புற்று நோய் (Cancer) இருதய வால்வு அடைத்தல் (Atherosclerosis) மற்றும் இறுதியாக வயதான தோற்றத்தையம் கொடுக்க காரணமாகின்றது. எனவே உணவில் அடங்கியுள்ள இயற்கையான ‘ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ்’ உயிர்ச்சத்து ‘சி’ (Vitamin ‘C’) உயிர்ச்சத்து ‘ஈ’ (Vitamin ‘E’) உயிர்ச்சத்து ‘ஏ” (Carotenoids) போன்றவை செல் அழிவிலிருந்து காப்பாற்றி, மேற்கூறிய நோய்களிலிருந்து விடுபட உதவுகின்றது. ஆன்டி ஆக்ஜஸிடென்ட்ஸ் அடங்கியுள்ள உணவுப் பொருட்கள்: 1 நெல்லிக்காய், 2. கொய்யாப்பழம் 3. பனை எண்ணெய் 4.சூரியகாந்தி எண்ணெய் 5.மஞ்சள் மற்றும் 6.கிராம்பு

உணவில் அடங்கியுள்ள மற்றச் சத்துக்கள்:
ப்ளேவனாய்டுஸ் (FLAVANOIDS) : இந்த மூலக்கூறு வெங்காயம் மற்றும் சில காய்கறிகளிலும் உள்ளது. இந்த மூலக்கூறு உயிர்ச்சத்து ‘சி’ யை வேலை செய்ய தூண்டுகின்றது. எனவே ஒவ்வாமை (Allergy) குடல்புண் (Ulcer) மற்றும் புற்றுநோய்Tumours) போன்ற வியாதிகளுக்கு மருந்தாகின்றது. உயர் இரத்த அழுத்தத்தையும் குறைப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

ஐசோப்ளேவன்ஸ்(ISOFLAVONES): இந்த மூலக்கூறு புற்றுநோய் வளர்ச்சியை வெகுவாகக் குறைக்கின்றது. முக்கயி மூலக்கூறுகள் ஜீன்ஸ்டின் (Genestein) மற்றும் டைடுஜின் (Daidzin) போன்ற இரண்டும் சோயா மொச்சையில் அடங்கியுள்ளது. சோயா மொச்சையை(Soya Beans)  உண்பதின் மூலம் புற்றுநோய் வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியும் என மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
தியால்ஸ்(THEOLS): முட்டைக்கோஸ் மற்றும் டர்னிப் போன்ற காய்கள், க்ளுக்கோசினோலேட்ஸ் (Gulcosinolates) எனப்படும் காரணியை கொண்டுள்ளன. இந்த காரணி புற்று நோயின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகின்றது.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015