organic farming
அங்கக வேளாண்மை :: தோட்டப் பயிர்கள்

முட்டைக்கோஸ் பயிரின் அங்கக சாகுபடி

இரகங்கள்

மலைப்பகுதி : 
குயிஸ்டோ

சமவெளிப்பகுதி: கோல்டன் ஏக்கர், மகாராணி

மண்: இது பொதுவாக குளிர் கால பருவங்களில் பயிரிடப்படுகிறது. சமவெளி பகுதிகளில் இது குளிர்காலப் பயிரா சாகுபடி செய்யப்படுகிறது. பலதரப்பட்ட மண் வகைகளிலும் நன்றாக வளரும். இதற்கு மண்ணின் கார அமிலத்தன்மை 5.5 முதல் 6.5 ஆக இருக்க வேண்டும்

பருவம்

மலைப்பகுதி: ஜனவரி-பிப்ரவரி, ஜீலை-ஆகஸ்ட், செப்டம்பர்-அக்டோபர்
சமவெளிப்பகுதி: ஆகஸ்ட் - நவம்பர்
விதையளவு: 650 கிராம்/ஹெக்டேர்

நாற்றங்கால்

நாற்றங்கால் போடுவதற்கு 100 சதுர அடி நிலம் இருந்தாலே போதுமானது. 15 செ.மீ. உயரம், 1 மீ அகலம், தேவைப்படும் நீளம் கொண்டு விதைப்படுக்கையை உருவாக்கலாம். 2 கிலோ தொழு உரம், 200 கிராம் மண்புழு உரம், 40 கிராம் வி.ஏ.எம். 2008 அசோஜ்பைரில்லம், 2008 பாஸ்போ பாக்டீரியா போன்றவற்றை ஒரு சதுர அடிக்கு அளிக்க வேண்டும். விதைப் படுக்கைகளில் 10 செ.மீ. இடைவெளி விட்டு விதைகளை விதைக்க வேண்டும் . 20-25 நாள் வயதுடைய நாற்றுக்களை 45 செ.மீ. இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும். வேர்முடிச்சு நோயால் நிலம் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும்.

விதை நேர்த்தி

வயலை தயார் செய்தல்

நிலத்தை பண்பட உழ வேண்டும். மலைப்பகுதிகளில் 40 செ.மீ. இடைவெளி விட்டு குழி தோண்ட வேண்டும். சமவெளிப்பகுதிகளில் 45 செ.மீ.  பார் அமைக்க வேண்டும்.

இடைவெளி

மலைப்பகுதி: 40 X40 செ.மீ.
சமவெளிப்பகுதி: 45X30 செ.மீ.

பாசனம்: தொடர்ந்து ஈரப்பதமாக இருக்குமாறு பாசனம் செய்ய வேண்டும்

உரமிடுதல்

வளர்ச்சி ஊக்கிகள்

  • பஞ்சகாவ்யாவை (3%) பயிரிட்ட ஒரு மாதம் கழித்து 10 நாட்கள் இடைவெளியில் தழைத் தெளிப்பாக தெளிக்க வேண்டும்
  • வெர்மிவாஷ் 10%ஐ பயிரிட்ட ஒரு மாதம் கழித்து 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்
  • மாட்டுக் கொம்பு சிலிக்கா 2.5 கிலோ/ஹெக்டேர் என்ற அளவில் எடுத்து 50 லிட்டர் நீரில் கரைத்து பயிரிட்ட 65 நாட்கள் கழித்து தழைத் தெளிப்பாக தெளிக்க வேண்டும்
  • பயிரிட்ட பின் மேற்கொள்ளப்படும் சாகுபடி முறைகள்:
  • ஆழமான தோண்டுவது மற்றும் களை எடுப்பதை தவிர்க்க வேண்டும்

பயிர் பாதுகாப்பு

பூச்சிகள்

வெட்டுப் புழுக்கள்

  • விளக்குப் பொறியை கோடைக் காலத்தில் வயலில் பொருத்துவதால் தாய் அந்துப் பூச்சியை அழிக்கலாம்
  • தெளிப்பு நீர் வாசன அமைப்பைப் பொருத்தி, பகல் வேளைகளில் பாசனம் செய்வதால் புழுக்களை மண்ணிற்கு வெளியே கொண்டு வரலாம். இவற்றை பறவைகள் உண்டு விடும்
  • பைரித்ரம் கொல்லி, கோதுமைத் தவிடு, கரும்பு சர்க்கரை (2:1:1) என்ற விகிதத்தில் கலந்து பயன்படுத்தலாம்

அசுவிணிகள்

  • வேப்ப எண்ணெய் 3% தெளிக்க வேண்டும்
  • வேப்ப இலை சாற்றை 110% பயிரிட்ட 45, 60, 75 வது நாளில் தெளிக்கலாம்
  • வைர முதுகு அந்துப்பூச்சி:
  • கடுகுச் செடியை ஊடுபயிராக 20:1 என்ற விகிதத்தில் பயிரிடலாம்
  • இனக்கவர்ச்சி பொறியை ஒரு எக்டருக்கு 20 என்ற எண்ணிக்கையில் வயலில் பொருத்தலாம்
  • பேசில்லஸ் துரியன்ஜினஸ் 2 கிராம்/லிட்டர் என்ற அளவில் எடுத்து தெளிக்க வேண்டும்
  • வேப்பங்கொட்டை சாற்றை 5% அளவு எடுத்து தெளிக்க வேண்டும்
  • டையாடிக்மா செமிகிளாசம் என்ற ஒட்டுண்ணியை ஒரு எக்டருக்கு 50000 என்ற அளவில் பயிரிட்ட 45,60, 75 வது நாட்கள் கழித்து தழைத் தெளிப்பாகத் தெளிக்க வேண்டும்

நோய்கள்

வேர்முடிச்சு நோய்

  • நோயற்ற விதை/நாற்றுக்களை தேர்ந்தெடுக்க வேண்டும்
  • சூடோமோனஸ் ப்ளுரோசென்ஸ் ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் கலந்து விதை நேர்தி ஒரு எக்டருக்கு 2.5 கிலே என்ற அளவில் மண்ணில் கலந்து அளிப்பது (அ) ஒரு லிட்டர் நீரக்கு 5 கிராம் என்ற அளிவல் கலந்து நாற்றுக்களை முக்கி எடுத்தோ விதை நேர்த்தி செய்யலாம்
  • பயிர் சுழற்சி முறையை மேற்கொள்ளலாம்
  • தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு முட்டைக்கோஸ் இன வகைகளை பயிரிடக் கூடாது
  • டோலமைட் ஒரு எக்டருக்கு 10 கிலோ என்ற அளவில் அளிப்பதால் மண்ணின் கார அமிலத் தன்மையை அதிகரிக்கலாம்

இலைப்புள்ள நோய்

  • 5% மஞ்சூரியன் தேயிசை் சாற்றை பயிரிட்ட ஒரு மாதத்திற்கு பிறகு ஒரு மாத இடைவெளி விட்டு 3 முறை தெளிக்க வேண்டும்
  • தசகாவ்யா 3%ஐ பயிரிட்ட ஒரு மாதம் கழித்து 10 நாட்கள் இடைவெளி விட்டு தழைத் தெளிப்பாகத் தெளிக்க வேண்டும்
  • சுடுநீரில் (50 செ.மீ.) விதைகளை 30 நிமிடத்திற்கு ஊற வைத்து, பின் உலர்த்தி, விதைக்க வேண்டும்

இலைக் கருகல் நோய்

அக்ரி ஹோட்ரா சாம்பலை (200 கிராம் அக்ரி ஹோட்ரா சாம்பலை ஒரு லிட்டர் மாட்டுக் கோமியத்தில் கரைத்து 15 நாட்கள் ஊற வைத்து, 10 லிட்டர் நீரில் நீர்க்கச் செய்து தெளிக்க வேண்டும் விதைத்த பயிரிட்ட ஒர மாதத்திலிருந்து ஒரு மாத இடைவெளியில் 3 முறை தெளிக்க வேண்டும்.

கருப்பு அழுகல் நோய்

  • விதைகளை ஸ்டரப்டோசைக்ளின் 100 பிபிஎம்-ஐ 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்
  • ஸ்டரப்டோமைசின் 100 பிபி.எப்.ஐ பயிரிட்ட பிறகு 2 முறை தெளிக்க வேண்டும்

மண் வழியே பரவும் நோய்கள்

  • டிரைக்கோடெர்மா விரிடி 5 கிலோ எக்டர் நிலத்தைத் தயார் செய்யும் போது அளிக்க வேண்டும்
  • சூடோமோனஸ் ப்ளுரோசென்ஸ் 5 கிலோ எக்டர் நிலத்தைத் தயார் செய்யும் போது அளிக்க வேண்டும்

மகசூல்

  • மலைப்பகுதி 150 நாட்களில் ஒரு எக்டருக்கு 70-80 டன்கள்
  • சமவெளிப்பகுதி: 120 நாட்களில் ஒரு எக்டருக்கு 25-35 டன்கள்