organic farming
அங்கக வேளாண்மை :: தோட்டப் பயிர்கள்

கேரட்டின் அங்கக சாகுபடி

இரகங்கள்

மலைப்பகுதி: ஊட்டி -1, நேன்டிஸ், நியூ கொரடா
சமவெளிப்பகுதி: இந்தியா கோல்டு,  பூசா கேசர், ஹாப் லாங் டான்வெர்ஸ்

மண்: கேரட் ஒரு குளிர்காலப் பயிராகும். 15 செ. முதல் 20 செ. வெப்பநிலையில் நன்கு வளரும். கேரட்டிற்கு அதிக ஆழமுள்ள தளர்ந்த வண்டல் மண் ஏற்றது. மண்ணின் கார அமிலத் தன்மை 6 முதல் 7 ஆக இருக்க வேண்டும்.

பருவம்

மலைப்பகுதி

கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரத்தில், பாசனம் நிலையான இருந்தால் கேரட்டைப் பயிரிடலாம். கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர்  உயரத்தில் இருந்தால், கேரட்டை ஜீலை-பிப்ரவரி மாதத்தில் பயிரிடலாம்.
விதையளவு 4 கிலோ/எக்டர்

இடைவெளி

  • 25-30 செ.மீ. இடைவெளியில் வரிசை அமைக்க வேண்டும்
  • விதைகளை மணலுடன் கலந்து (ஒரு பாக விதையை 4 பாக மணலுடன் கலக்க வேண்டும்) விதைக்க வேண்டும்

செடிகளைக் குறைத்தல்

மலைப்பகுதி: செடிகளுக்கு நடுவில் 10 செ.மீ.
சமவெளிப்பகுதி: செடிகளுக்கு நடுவில் 5 செ.மீ. இடைவெளி விட வேண்டும். நிலத்தைத் தயார் செய்தல்
மலைப்பகுதி: நிலத்தை பண்பட உழவேண்டும். 15 செ.மீ. உயரத்திற்கு விதைப்படுக்கையை அமைக்க வேண்டும். 1 மீ அகலமும், வேண்டிய அளவு நிலத்துடன் அமைக்க வேண்டும்
சமவெளிப்பகுதி: 2 உழவு செய்ய வேண்டும். 30 செ.மீ. இடைவெளியில் வரிசை அமைக்க வேண்டும்

விதை நேர்த்தி

1. மாட்டு உரக் கழிவுகளை 3 கிராம்/லிட்டர் நீரில் கரைத்து 24 மணி நேரத்திற்கு விதைகளை ஊற வைத்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்
2. டிரைக்கோடெர்மா விரிடியை 5% எடுத்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்
3. நாற்றுக்களின் வேர் நுனிகளை நடோமோனாஸ் ப்ளுரோசென்ஸ் 5% ல் நனைத்து நடவு செய்ய வேண்டும்

பாசனம்

ஐந்து நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்ய வேண்டும். வறட்சிக் காலங்களில், மாலை வேளைகளில் பாசனம் செய்தவுடன், விதைப்படுக்ககைகளை ஈரமான சாக்கு பைகளைக் கொண்டு மூட வேண்டும். இதனால் விதை முளைப்பும் அதிகமாகும்.

உரமிடுதல்

  • பயிரிட்டபின் மேற்கொள்ளப்படும் முறைகள்
  • விதைத்து 15 நாட்களுக்குப் பிறகு முதல் களை எடுக்க வேண்டும். விதைத்த 30 வது நாளில் செடிகளைக் குறைத்தல் மற்றும் மண் அணைக்க வேண்டும்.

வளர்ச்சி ஊக்கிகள்

பயிர் பாதுகாப்பு

பூச்சிகள்

  • கேரட்டில் அதிகளவு பூச்சித் தாக்குதல் இருக்காது. வேர் முடிச்சு நூற்புழுக்கள்
  • வேப்பங்கட்டியை 1 டன்/எக்டர் என்ற அளவில் விதைக்கும் சமயத்தில் அளிப்பதால், மெலாடிகைன் வகை நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்
  • 3 வருடத்திற்கு ஒரு முறை கேரட் பயிரிடுமாறு பயிர் சுழற்சி முறை மேற்கொள்ள வேண்டும்
  • துலக்கமல்லி செடியை 2 வருடத்திற்கு முறை பயிரிட வேண்டும்
  • பேசிலோமைசிஸ் லிலாசினைஸ் 10 கிலோ/எக்டர் என்ற அளிவல் எடுத்து விதைப்பதற்கு முன் அளிக்க வேண்டும்

நோய்கள்

இலைப்புள்ளி நோய்

  • 5% மஞ்சுரியன் தேயிலைச் சாற்றை மூன்று முறை விதைத்த ஒரு மாதம் கழித்து ஒரு மாத இடைவெளியில் தழைத் தெளிப்பாகத் தெளிக்க வேண்டும்
  • 3% தசகவ்யாவை விதைத்த ஒரு மாதத்திலிருந்து 10 நாட்கள் இடைவெளி விட்டு தழைத் தெளிப்பாகத் தெளிக்க வேண்டும்

மண் வழியே பரவும் நோய்கள்

  • டிரைக்கோடெர்மா விரிடி 5 கிலோ/எக்டர் என்ற அளவில் நிலத்தைத் தயார் செய்யும் பொழுது அளிக்க வேண்டும்
  • சூடோமோனஸ் ப்ளுரோசென்ஸ்5 கிலோ/ எக்டர் என்ற அளவில் நிலத்தைத் தயார் செய்யும் பொழுது அளிக்க வேண்டும்

மகசூல்: 100-120 நாட்களில் 25-30 டன்/எக்டர் என்ற அளவில் மகசூல் கிடைக்கும்