organic farming
அங்கக வேளாண்மை :: திட்டங்கள்

1. வேளாண்மைத் துறையில் உள்ள திட்டங்கள்

2. தோட்டக் கலைத் துறையில் உள்ள திட்டங்கள்


1.வேளாண்மைத் துறையில் உள்ள திட்டங்கள்

வ.எண் திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் தகுதி தொடர்புக்கு
1. 25% மானியத்தில் பசுந்தாள் உர விதைகளை உற்பத்தி செய்தல் மற்றும் வழங்குதல் அனைத்து விவசாயிகள் துணை வேளாண் அதிகாரி / வட்டார துணை வேளாண் இயக்குநர்
2. ரைசோடியம், அசோஸ்பைரில்லம், பாஸபோ பாக்டீரியாவை உற்பத்தி செய்தல் மற்றும் வழங்குதல் – ஒரு பாக்கெட் ரூ.6/கிராம் அனைத்து விவசாயிகள் துணை வேளாண் அதிகாரி / வட்டார துணை வேளாண் இயக்குநர்
3. நீலப் பச்சைப் பாசியை உற்பத்தி செய்தல் மற்றும் வழங்குதல் – ஒரு கிலோவுக்கு 2.75 ரூபாய் அனைத்து விவசாயிகள் துணை வேளாண் அதிகாரி / வட்டார துணை வேளாண் இயக்குநர்
4. கருந்தலைப் புழுவை கட்டுப்படுத்துவதற்கான ஒட்டுண்ணியை உற்பத்தி செய்தல் மற்றும் மற்றும் வழங்குதல். மானியம் ஒரு எக்டருக்கு 35 ரூபாய் அனைத்து விவசாயிகள் துணை வேளாண் அதிகாரி / வட்டார துணை வேளாண் இயக்குநர்
5. இடைக் கணுத்துளைப்பானை கரும்பில் கட்டுப்படுத்த ஒட்டுண்ணியை வயலில் விடுதல் ரூ.3.75/எக்டருக்கு   அனைத்து விவசாயிகள் துணை வேளாண் அதிகாரி / வட்டார துணை வேளாண் இயக்குநர்
6. பருத்தியில் புரோடினியாவை கட்டுப்படுத்த என.பி.லி –ஐ உற்பத்தி செய்தல் ரூ.53/எக்டருக்கு அனைத்து விவசாயிகள் துணை வேளாண் அதிகாரி / வட்டார துணை வேளாண் இயக்குநர்
7. பாநரோட்டஸ் மூலம் பண்ணைக் கழிவுகளை கம்போஸ்ட் ஆக்குதல்
இலவசமாக அதற்கான தொடுப்பை வழங்குதல் (ஒரு கிலோ பாநரோட்டஸ், 5 கிலோ யூரியா, தொழில்நுட்ப தகவல்கள் அடங்கிய தாள் ரூ.140/தொகுப்பு
அனைத்து விவசாயிகள் துணை வேளாண் அதிகாரி / வட்டார துணை வேளாண் இயக்குநர்
8. மண்புழு உர உற்பத்தி திட்டத்தை அமல்படுத்துவதற்கான விளக்கம். இடு பொருட்களை வழங்குவதற்கான விலை ரூ.1200 அனைத்து விவசாயிகள் துணை வேளாண் அதிகாரி / வட்டார துணை வேளாண் இயக்குநர்
9. மண்புழு உர உற்பத்தி திட்டத்தை அமல்படுத்துவதற்கான பயிற்சி. பயிற்சியில் பங்கு பெறும் ஒவ்வொருவருக்கும் 50 ரூபாய் அனைத்து விவசாயிகள் துணை வேளாண் அதிகாரி / வட்டார துணை வேளாண் இயக்குநர்

பதவிறக்கம் செய்வதற்கான படிவங்கள்

பின்வரும் விண்ணப்ப படிவங்களை பதவிறக்கம் செய்து,அந்தந்த வட்டார அலுவலர்களிடம் சமர்பிக்க வேண்டும்.

தொடர்புக்கான அலுவலருடைய பதிவு துணை வேளாண் அதிகாரி/வட்டார அளவில் துணை வேளாண் இயக்குநர்


2. தோட்டக்லை துறையில் உள்ள அங்கக பண்ணைத் திட்டங்கள்

நகரத்தில் உள்ள பல வீடுகள்,மருத்துவ மனைகளில் அங்கக உணவுகளை சீராக வழங்கவும்,நச்சுத் தன்மையில்லாத பழங்கள்,காய்கறிகள் வழங்குவதற்கும் தேவை அதிகரித்துள்ளது.பெரிய நகரங்களில் உள்ள சில்லறை வியாபாரிகள் மற்றும் காய்கறிகளை மத்திய கிழக்கு / தூர கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு அங்கக விளைப் பொருட்களை வருடம் முழுவதும் வழங்குவதற்கு தேவைப்படுகிறது. ஈரோடு, திருநெல்வேலி, சிவகங்கை, தோட்டக்கலை பண்ணை அமைப்புகளாக மாற்றப்பட்டு உள்ளது. அபிடா நறுமணப் பயிர்கள் வாரியம் மற்றும் லுயேசிஸ் (தன்னார்வ தொண்டு நிறுவனம்) உடன் இணைந்து அங்ககப் பண்ணை சான்றிதழ் பெற்றுள்ளது.

உலக வணிக சங்கமும் நன்னெறி வேளாண் முறைகள் நன்னெறி தயாரிப்பு முறைகளுக்கான விதிமுறைகளை உருவாக்கி உள்ளது.நீலகிரி,சத்தியமங்கலம்,சிவகங்கை,திருநெல்வேலி,தேனியில் அங்கக பண்ணைகளை உருவாக்கி உள்ளது.இதனால் விவசாயிகள் இண்டோசெர்ட்,ஸ்கால்,இப்போயம் போன்ற நிறுவனங்களால் சான்றிதழ் பெறலாம்.ஆகவே,1400 ஹெக்டர் அங்கக தோட்டங்கள்,42 மண்புழு வளர்ப்பு பிரிவுகள்,2005-06 க்கான அங்கக சான்றிதழ் பெறவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.அங்கக உற்பத்தியாளர்களுக்கு,நன்நெறி வேளாண் முறைகள், எஸ்.பி.எஸ் பற்றி பயிற்சி அளிக்கப்படுகிறது.தற்பொழுது,உற்பத்தியாளரையும், சில்லறை பிரிவையும் இணைக்க எந்த விதமான நிறுவன அமைப்பும் இல்லை.மாவட்ட அளவிலான கொள்முதல் மையம்,நகரப் பகுதியில் சில்லறை விற்பனை மையங்கள் தமிழ்நாடு தோட்டக்கலை விளைபொருட்கள் கூட்டுறவு நிறுவனங்களின் கீழ் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான திட்ட மதிப்பீடு 2.76 இலட்சமாகும்.

அங்கக பண்ணை உருவாக்குதல்


திட்ட மதிப்பு : ரூ:20000/எக்டர்
மானியம் : 50% அதாவது ரூ.10000/எக்டர்
ஒவ்வொருவருக்கும் 4 எக்டருக்கான பெருவாரியான மானியம்

அங்கக சாகுபடி பழப்பயிர்கள்,காய்கறிப் பயிர்கள்,நறுமணப் பயிர்கள் மற்றும் குளிர் மண்டல பயிர்களில் செய்யப்படுகிறது.

வ.எண் விவரம் 50% மானியத்தில் ரூபாயில் விவசாயிகளின் பங்களிப்பு ரூபாயில் மொத்தம்
1. நிலத்தை தயார்செய்தல் 0 2500 2500
2. பசுந்தாள் உரம் மற்றும் விதை 0 500 500
3. டிரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, வாம் 1000 0 1000
4. மண்புழு உரம் மற்றும் அங்கக உரம் 4000 0 4000
5. வேப்பங்கொட்டை எண்ணெய் கட்டி மற்றும் புஸ்பக் கட்டி 4000 0 4000
6. வேப்ப எண்ணெய் 500 0 500
7. கோழிப் பண்ணை எரு, பண்ணை எரு 500 7000 7500
  மொத்தம் 10000 10000 20000

மண்புழு உரப் பிரிவு

மதிப்பு : ஒரு பிரிவுக்கு 60000 ரூபாய், 50% மானியத்தில் அதாவது ஒரு பிரிவுக்கு 30000 ரூபாய். ஒரு வருடத்திற் 25 டன் அளவுக்கு உற்பத்தி செய்யலாம்.

திட்ட வரையறைகள்:

  1. 45x25 அடியுள்ள ஒரு கூரை, சிமெண்ட் தூண்கள் 10 அடி  இடைவெளியில் வைக்க வேண்டும். இந்தத் தூண்களைச் சுற்றி மரத் தப்பைகளையும், அதன் மேல் தென்னை ஓலைகள் வேயப்பட வேண்டும். இதற்காகும் செலவு 30000 ரூபாய்.
  2. தொட்டியை 2 அடி நீளம், 4 அடி அகலம், 2 அடி ஆழத்தில் உருவாக்க வேண்டும். ஒவ்வொரு தொட்டியும் 10 அடி இடைவெளியில் 10 அடி உயர கவருடனும் இருக்க வேண்டும். சுவர்களைக் கட்ட ஹாலோபிளாக் கற்கள் பயன்படுத்தி சிமெண்ட் பூச வேண்டும். 2 மண்புழு உரத் தொட்டியின் அளவு 20’x4’x2’ =160 கன அடி ஆகும் செலவு 25000 ரூபாய்
  3. சாணி 5 டன்னிற்கு (ரூ.400/டன்) ரூ.2000/-
  4. மண்புழுக்கள் மற்றும் அதற்குத் தேவையான பொருட்கள் 2700 ரூபாய் (10 கிலோ – ஒரு கிலோவிற்கு 270 ரூபாய்)
  5. மண்புழு உரத்தை ஊட்டமேற்றுவதற்கு ஆகும் அசோஸ்பைரில்லத்திற்கு ஆகும் செலவு (10 கிலோ – ஒரு கிலோவிற்கு 30 ரூபாய்)

மொத்த செலவு 60000 ரூபாய்

பதிவிளக்கம் செய்வதற்கான படிவங்கள்

பின்வரும் விண்ணப்பங்களை பதவிறக்கம் செய்து, வட்டர அதிகாரிகளிடம் சமர்பிக்க வேண்டும்.

தொடர்பு கொள்வதற்கான அதிகாரியின் பதிவு துணை வேளாண் அலுவலர் / வட்டர அளவில் துணை வேளாண் இயக்குநர்.