organic farming
அங்கக வேளாண்மை :: தோட்டப் பயிர்கள்

தைமின் அங்கக சாகுபடி 

மண்:வளமுள்ள மற்றும் இளர் தன்மையுடைய நிலங்களிலும் வளரும்.கடின மண்,ஈர மண் வகைகளில், இரைகளின் நறுமணம் குறைவாக இருக்கும்.விரைவில் பயிர் காய்ந்து விடும்.

வானிலை:சற்று சூடான வானிலை இந்த பயிருக்கு ஏற்றது.மலைகள் மற்றும் சமவெளிகளில் சாகுபடிக்கு மிகவும் ஏற்றது. பனியை தாங்கி நின்று வளரும்.

பருவம்:ஏப்ரல் மாதத்தின் போது விதைகளை நாற்றங்காளில் விதைக்கலாம்.கோடை பின் காலத்தில் நடவு செய்ய வேண்டும்.

விதைப் பெருக்கம்:தைப் பயிர் விதை (ஆ) துண்டுகள் (அ) பக்ககக் கிளைகளை ஒட்டி அடுக்குதல் போன்ற முறைகளில் பெருக்கம் செய்யலாம்.வரிசைகளில் நேரிடையாக விதைகளை விதைக்கலாம் (அ) நாற்றங்கால் ஏற்படுத்தலாம்.3% பஞ்சகாவ்யா (அ) 10% சி.பி.பி.கரைசலைப் பயன்படுத்தி விதைகள் (அ) துண்டுகள் பயிரிடுவதற்கு முன் 20 நிமிடங்களுக்கு மூழ்க வைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

நிலத்தை தயார் செய்தல்:தொடர் உழவு (அ) தோண்டுதல் மூலம் நிலத்தை பயன்படுத்த வேண்டும்.நிலத்தை தேவையான அளவிற்கு பிர்த்துக் கொள்ளலாம்.

விதைத்தல்:விதைகளை நேரடியாக விதைக்கும் பொழுது,விதைகள் வரிசையில் 90செ.மீ இடைவெளி விட்டும். வரிசைகளுக்கு இடையே 30-45செ.மீ இடைவெளி விட்டும் விதைக்க வேண்டும்.பயரிட்ட பின் உயிர் பாசனம் செய்ய வேண்டும். 

உரமிடுதல்

  • மட்கிய பண்ணை எரு ஒரு ஏக்டருக்கு 50டன் மற்றும் உயிர் கம்போஸ்ட் ஒரு எக்டருக்கு 5டன் அளவில் அளிக்க வேண்டும்.
  • மண் புழு உரம் ஒரு எக்டருக்கு 5டன் என்ற அளவில் அளிக்க வேண்டும்.
  • வேப்பங்கட்டி ஒரு எக்டருக்கு 5டன் என்ற அளவில் அளிக்க வேண்டும்.
  • அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா ஒரு எக்டருக்கு 25கிலோ என்ற ளெவில் அளிக்க வேண்டும்.
  • பஞ்சகாவ்யா 3% ஐ ஒரு மாத இடைவெளியில் வருடத்திற்கு 5 முறை தெளிக்கலாம்.

பாசனம்: கோடை பின் காலத்தில் பயிரிட்டால், வறண்ட காலங்களில் அடிக்கடி பாசனம் செய்யப்பட வேண்டும்.

இடை உழவு முறைகள்
:இடை உழவு முறைகள் மற்றும் களையெடுத்தல் சீராக செய்ய வேண்டும்.மலைப் பகுதிகளில் பனி ஏற்படும் பாதிப்புகளை தவிர்ப்பதற்கு முடாக்கல் செய்ய வேண்டும்.5%  வேப்ப எண்ணெய் 10%  வெர்மிவாஷ், 3%  தசகாவ்யாவை மாதம் ஒரு முறை தழைத் தெளிப்பு செய்ய வேண்டும்.

பூச்சிகள் மற்றும் நோய்கள்:பூச்சிகளால் எந்த வித பாதிப்பும் ஏற்படாது.வாடல் நோய் மட்டும் ஏற்படும். வயலை சுகாதாரமாக வைத்தல் மூலம் கட்டுப்படுத்தலாம்.

அறுவடை மற்றும் மகசூல்

இலைகள் மற்றும் பூக்கள் சமையல் மற்றும் மருந்து செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.விதைத்த 5 மாதங்களுக்கு பிறகு அறுவடை செய்யலாம். இலைகள் மற்றும் பூக்கள் (அ) 15செ.மீ கிளைகள் அறுவடை செய்யப்பட்டு நிழலில் உலர்த்தி (அ) உலர்த்தியில் உலர்த்தி சேமிக்கலாம்.உலர் இலைகள் சுருண்டு,பழுப்பு கலந்த பச்சை நிறத்தில் காணப்படும்.6-7மி.மீ அளவுக்கு அதிகமாக இருக்கக் கூடாது.உலர் கிளைகள் தூள் செய்யப்பட்டு பைகளில் அடைக்கப்படுகின்றன.சாதகமான சூழ்நிலைகளில்,உலர் மூலிகை ஒரு ஏக்கருக்கு 1100-2200 கிலோ என்ற அளவில் மகசூல் கிடைக்கும்.முதல் வருடத்தில் மகசூல் சிறிது குறைவாக இருக்கும். மூனறு (அ) 4 வருடங்களுக்கு பிறகு திரும்பவும் பயிரிட வேண்டும்.எண்ணெய் எடுப்பதற்காக,புதிதாக அறுவடை செய்த மூலிகை புஸக்க ஆரம்பிக்கும் சமயத்தில் அறுவடை செய்யப்படும்.அறுவடை செய்யும் போதுஈ மஞ்சள் (அ) பழுப்பு நிற இலைகளை தவிர்க்க வேண்டும்.