Seed Certification
விதை சேமிப்பு :: அமைப்புகள்

விதையின் ஈரப்பதம்

சேமிப்புத் திறனை பாதிக்கும் முக்கியக் காரணி விதைகளின் ஈரப்பதமே சேமிப்பின் போது விதையின் வீரியத்தை கட்டுப்படுத்தும் முக்கியக் காரணியாகும்.

           
விதையின் ஈரப்பதம் அதிகரிக்கும் பொழுது சேமிக்கும் காலம் குறைகிறது. அதிக ஈரப்பதமானது பூஞ்சாண்களின் தாக்குதலை அதிகப்படுத்துகிறது. குறைந்த ஈரப்பதமும் (14 சதவிகிதம்) விதைகளை சேதமாக்கும் ஏனெனில் விதைகள் அதிகமாக உலர்ந்தும், (அ) கடின விதைகளாக மாறிவிடும்.

           
ஈரப்பதத்தை மையமாகக் கொண்டே விதையின் வாழ்நாள் தீர்மானிக்கப்படுவதால் விதைகளை குறிப்பிட்ட அளவு ஈரப்பதத்திற்கு உலர்த்துதல் அவசியமாகிறது. அந்த அளவு ஈரப்பதத்திற்கு உலர்த்துதல் அவசியமாகிறது. அந்த ஈரப்பதமானது சேமிப்புக் காலம், சேமிக்கும் கொள்கலன்கள், அடைக்கும் பைகளிக் வகை (அ) விதையின் இரகம் ஆகியவற்றைப் பொருத்தே அமையும். சாதாரணமாக சேமிக்கும் சூழலில் தானியங்களின் ஆயுட்காலம் 12-18 மாதங்கள் ஆகும். இவற்றின் ஈரப்பதம் 10 சதவிகிதம் இருப்பது சாதகமானதாகும். ஆனால் பைகளில் அடைத்து சேமிக்கும் பொழுது 5-8 சதவிகிதம் ஈரப்பதம் தேவைப்படும். இது பயிர்களுக்கிடையே மாறுபடும்.

ஹாரிங்டன் கோட்பாடுகள் (விதை ஈரப்பதம்)

விதையின் ஈரப்பதம் 1 சதவிகிதம் குறையும் போது அவற்றின் ஆயுட்காலம் இரட்டிப்பாகிறது. 4-12 சதவிகிதம் ஈரப்பதம் வரையில் இது பொருந்தும். ஈரப்பதத்தின் இழப்பைக் கொண்டு விதைகளின் சகிப்புத் தன்மை பொறுத்து விதைகள் இரு வகைகளாக பாகுபடுகின்றன.

மென்தோல் விதைகள்

ஈரப்பத இழப்பை தாங்கிக் கொள்ளும் இவ்வகை விதைகள் இது போன்ற குறைந்த ஈரப்பதம் விதைச் சேமிப்பிற்கு சாதகமாக அமையும்.
எ.கா நெல், மக்காச்சோளம்.

தடித்தோல் விதைகள்

மென்தோல் விதைகளுக்கு எதிர் மாறான ஈரப்பத இழப்பை தாங்கிக் கொள்ள முடியாதவை இவ்விதைகள் ஆகும். வீரியத்தன்மையைப் பராமரிக்க அதிக அளவு ஈரப்பதம் தேவைப்படும்.

நுண்ணுயிர், பூச்சிகள், சிலந்திகள்

இவ்வகை உயிரினங்களின் தாக்குதலால் விதைகளின் வீரியத்தன்மை குறைந்துவிடும். நுண்ணுயிரிகளின் செயல்பாட்டை, கட்டுப்படுத்துவது விதையின் ஈரப்பதம், வெப்பநிலை மற்றும் சுற்றுப்புறச் சூழல் ஈரப்பதம் போன்றவை பூஞ்சாணக்கொல்லியில் நேர்த்தி செய்யப்படும் விதைகள் நீண்டகாலம்  சேமிக்கும் திறன் பெற்றிருக்கும். வாயு நச்சுவைக் கொண்டு விதைகளை நேர்த்தி செய்தால், அதிக நேரம் விதைகளை சேமிக்க முடியும்.

வாயு நச்சு மீத்தைல் ப்ரோமைட், ஹைட்ரஜன் சயனைடு, எத்திலின் டைக் குளோரைடு, கார்பன் டெட்ரோ குளோரைடு கார்பன் டை சல்பைட் மற்றும் நாப்தலீன் (ம)அலுமினியம் பாஸ்பின்.

 

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016.

Fodder Cholam