Seed Certification

விதைத் திட்டங்கள்

விதைத் திட்டங்கள்

வேளாண் துறையின் கீழ் செயல்படும் விதைத் திட்டங்கள்

  1. விவசாயிகளுக்கு தரமான விதை உற்பத்திக்கான உதவித் திட்டங்கள்

 

நலத்திட்டங்களின் பகுதிகள் மற்றும் பயன்பாடுகள்

பயன்களைப் பெற வேண்டிய தகுதிகள் மற்றும் நிலைகள்

தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்

நெல், சிறுதானியங்கள், பயிறுகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும்  பருத்திக்கான விதைப் பெருக்கத்திட்டம்

விவசாயிகளை உற்சாகப்படுத்தவும் அவர் முயற்சிகளை ஊக்குவிக்கவும், அவர்கள் உற்பத்தி செய்யும் விதைகளுக்கு ஊக்கத் தொகை அளிப்பது.

வேளாண் துறையுடன் ஒப்பந்தம் செய்து விதை உற்பத்தி செய்து கொடுக்கும் அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் அவர்கள் விதைப் பண்ணையை பதிவு செய்யலாம். தாழ்த்தப்பட்ட / பழங்குடி இனத்தைச் சார்ந்த விதை உற்பத்தியாளர்களுக்குத் தனி ஒதுக்கீடு உண்டு. பண்ணை மகளிர் குழுவிற்கும், விவசாயிகளின் ஈடுபாடு கொண்டவருக்கும் முன்னுரிமை உண்டு.

கிராம அளவில் உள்ள உதவி வேளாண் அலுவலர்.
வட்டார அளவில் வேளாண் அலுவலர் / இணை வேளாண் அலுவலர்.
வட்டார அளவில் வேளாண் துணை இயக்குநர்.
மாவட்ட அளவில் வேளாண் இணை இயக்குநர்.

நெல்
விதைச் சான்று நிலை உற்பத்திக்கான வெகுமதி ரூ. 2 / கிலோ விதை

பங்கு பெற ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவ்வருட தொடக்கத்தில் பயிற்சி அளிப்பர்.

 

சிறு தானியங்கள்
சான்று நிலை விதை உற்பத்திக்கான வெகுமதி ரூ. 2 / கிலோ விதை

 

 

பயறு வகைகள்
ஆதார நிலை விதை உற்பத்திக்கான ரூ. 2 / கிலோ விதை சான்று நிலை விதை உற்பத்திக்கான ரூ. 1 / கிலோ விதை

வேளாண் துறையானது, மூல விதைகளை வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் வேளாண் துறைப் பட்டியலில் நிர்ணயம் செய்த விலையில் விதைகளை விநியோக்கின்றன. விதைச் சான்றிதழ் துறையின் வழங்கிய சான்றட்டையுடன் விதைகள் வழங்கப்படும்.

 

நிலக்கடலை
ஆதார நிலை விதைக்கு ரூ. 3 / கிலோ  மற்றும் சான்று நிலை விதைக்கு ரூ. 2 / கிலோவாகவும் வழங்கப்படும்.

விதைகளின் கருத்தைப் பராமரிக்க வயல் ஆய்வாளர்கள்  /  விதைச் சான்ற அலுவலர்கள் விவசாயிகள் பின்பற்றவேண்டும்.

கிராம அளவில் உள்ள உதவி வேளாண் அலுவலர்.
வட்டார அளவில் வேளாண் அலுவலர் / இணை வேளாண் அலுவலர்.
வட்டார அளவில் வேளாண் துணை இயக்குநர்.
மாவட்ட அளவில் வேளாண் இணை இயக்குநர்.

உண்மை நிலை விதைக்கு ரூ. 1 / கிலோ விதை வழங்கப்படும்.

விவசாயிகள் அந்த வட்டாரத்தில் உள்ள வேளாண் துணை இயக்குநரை அணுகி தேவைப்பட்ட கட்டணத்தைச் செலுத்தி விதைப் பண்ணையை பதிவு செய்யவேண்டும்.

 

எள்
ஆதார நிலை விதைக்கு சந்தை விலையைக் காட்டிலும், 7.5 சதவிகிதம் கூடுதலாகவும், சான்று நிலை விதைக்கு சந்தை விலையைக் காட்டிலும் 5 சதவிகிதம் கூடுதலாகவும் ஊக்கத் தொகை வழங்கப்படும்.

வயல் தரங்கள் அனைத்தையும் பயிர் வளர்ச்சி காலத்தில் பூர்த்தி செய்யும் பொருளை வயல் அளவில் பொருத்தியது என அறிவிக்கப்படும். இப்பொருளின் பெயர் தான் “வயல் பொருந்தும் பொருள்”

 

சூரியகாந்தி
சந்தை விலையைக் காட்டிலும் ஒரு கிலோ விதைக்கு, ஆதார நிலை விதை @ 7.5 சதவிகிதம் கூடுதலாகவும் சான்று நிலை விதை @ 5 சதவிகிதம் கூடுதலாகவும் வழங்கப்படும்.

விதைப் பொருளானது, சான்றிதழ் தரங்களான, இன / புறத்தூய்மை ஈரப்பதம், முளைப்புத்திறன் போன்றவற்றை பூர்த்தி செய்யவேண்டும்.

 

ஆமணக்கு
சந்தை விலையில் காட்டிலும் ஒரு கிலோ விதைக்கு ஆதார நிலை விதை @ 30 சதவிகிதம்  கூடுதலாகவும் சான்று நிலை விதை @ 20 சதவிகிதம் கூடுதலாகவும் வழங்கப்படும்.

விதைச் சான்றிதழ் அலுவலர் ஆய்வு செய்தபின் விதைப் பொருளானது முறையான அனுமதி பெற்று அருகிலுள்ள வேளாண் துறையின் விதைச் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்படும்.

 

சோயாபீன்ஸ்
சந்தை விலையைக் காட்டிலும் ஒரு கிலோ விதைக்கு ஆதார நிலை விதை @ 7.5 சதவிகிதம் கூடுதலாகவும், சான்று நிலை விதை 5 சதவிகிதம் கூடுதலாகவுமு: வழ

விதைகளை பண்ணையிலிருந்து நிலையத்திற்கு எடுத்துச் செல்லும் போக்குவரத்து செலவினை விவசாயி ஏற்றுக் கொள்ளவேண்டும்.
விதைகளை, விதைச் சுத்திகரிப்பு நிலையத்திற்குக் கொண்டு சென்ற பின், விவசாயிகளுக்கு பொது விநியோகத் துறை அறிவித்துள்ளபடி 90 சதவிகிதத்தை குறைந்த பட்ச ஆதார வலையாக கொடுக்கப்படுகிறது.
விதைச்சான்று அலுவலர் முன்னிலையில் விதைச் சுத்திகரிப்பு நிலையங்களில் விதைகள் சுத்திகரிப்பு செய்யப்படும்.
சுத்திகரிப்பு நிறைவடைந்த பின்னர், விதைச்சான்று அலுவலர், விதைத் தரத்தை ஆய்வு செய்ய விதை மாதிரிகளை எடுப்பார்.
இந்த விதை மாதிரிகள் ஆய்விற்காக விதை ஆய்வு கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

கிராம அளவில் உள்ள உதவி வேளாண் அலுவலர்.
வட்டார அளவில் வேளாண் அலுவலர் / இணை வேளாண் அலுவலர்.
வட்டார அளவில் வேளாண் துணை இயக்குநர்.
மாவட்ட அளவில் வேளாண் இணை இயக்குநர்.

 

பரிசோதனைகள் முடிந்த பின்னர் ஆய்வின் முடிவுகள் விதை ஆய்வுக்கூடங்களில் வெளியிடப்படும்.
விதைகள் குறிப்பிட்ட தரங்களை பூர்த்தி செய்யாவிடில், விவசாயி ஆனவர் தனக்கு செலுத்தப்பட்ட முன் தொகை அனைத்தையும் ஒரே சமயத்தில் திரும்பச் செலுத்தி, பின் அவர் விதைகளை பெற்றுக் கொள்ளலாம்.
முடிவுகள் விதைத் தரங்களை உறுதி செய்வதாய் இருப்பின், அந்த விதைப்பொருள் ஏற்றுக் கொள்ளப்படும்.
இப்பொழுது நிர்ணயிக்கப்பட்ட வாங்கும் விலை அனைத்தையும் விவசாயிக்கு வழங்கவேண்டும். முன் தொகை 90 சதவிகிதம் தொகை மற்றும் முழுத் தொகைக்கும் உள்ள வித்தியாசத்தை கணக்கிட்டு முழுத் தொகையும் செலுத்தப்படும்.

 

பயிர் உற்பத்தி திறனை பெருக்குவதற்கான உதவித் திட்டங்கள்

நெல் மற்றும் சிறு தானியங்களான சோளம், கம்பு, ராகி, மற்றும் திணை, வரகு, சாமை, குதிரைவாலி ஆகியவை.

உணவுத் தானியங்கள் வளர்ச்சித் திட்டம் - பெரும் பராமரிப்பு முறை திட்டங்கள்

நெல் சான்று விதைகளை விநியோகித்தல்

விற்கும் விலையில் வேளாண் விரிவாக்க மையங்களில் ஒரு கிலோ விதைக்கு ரூ. 2 மானியம் வழங்கப்படும்.

அனைத்து விவசாயிகளுக்கும் இத்திட்டத்தின் மூலம் மானியம் வழங்கப்படுகின்றது. சிறு / குறு பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் 30 சதவிகிதம் தொகை தாழ்த்தப்பட்ட / பழங்குடி இனத்திற்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

கிராம அளவில் உள்ள உதவி வேளாண் அலுவலர்.
வட்டார அளவில் வேளாண் அலுவலர் / இணை வேளாண் அலுவலர்.
வட்டார அளவில் வேளாண் துணை இயக்குநர்.
மாவட்ட அளவில் வேளாண் இணை இயக்குநர்.

சோளம்
(எண்ணெய் வித்துக்கள், பயறு வகைகள் மற்றும் சோளம் ஆகியவற்றிற்கான ஒருங்கிணைந்த திட்டம்)

சோளத்தில் சான்று நிலை விதை உற்பத்தி 1000 / குவிண்டால்

சோளம் விளைவிக்கும் கீழ்க்கண்ட மாவட்டத்து அனைத்து விவசாயிகளுக்கும் இத்திட்டத்தின் மானியம் பெற தகுதி பெற்றவர் - கோயமுத்தூர், திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், பெரம்பலூர், விருதுநகர், தேனீ, விழுப்புரம், வேலூர், சேலம், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருச்சி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி சிறு / குறு விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தாழ்த்தப்பட்ட / பழங்குடி விவசாயிகளுக்கு 24 சதவிகிதம் தொகையும், பெண் விவசாயிகள் / மகளிர் குழுக்களுக்கு 20 சதவிகிதம் தொகையும் செலுத்தப்படும்.

கிராம அளவில் உள்ள உதவி வேளாண் அலுவலர்.
வட்டார அளவில் வேளாண் அலுவலர் / இணை வேளாண் அலுவலர்.
வட்டார அளவில் வேளாண் துணை இயக்குநர்.
மாவட்ட அளவில் வேளாண் இணை இயக்குநர்.

பயறு வகைகள்
(எண்ணெய் வித்துக்கள், பயறு வகைகள், சோளம் ஆகியவற்றிற்கான ஒருங்கிணைந்த திட்டம்)

ஆதார நிலை விதை உற்பத்தி
ஒரு குவிண்டாலுக்கு ரூ. 1000 வரையில் மானியம்.

பயறு வகைகளை விளைவிக்கும் அனைத்து விவசாயிகளும் மானியம் கிடைக்கப்பெறலாம்.

கிராம அளவில் உள்ள உதவி வேளாண் அலுவலர்.
வட்டார அளவில் வேளாண் அலுவலர் / இணை வேளாண் அலுவலர்.
வட்டார அளவில் வேளாண் துணை இயக்குநர்.
மாவட்ட அளவில் வேளாண் இணை இயக்குநர்.

சான்று நிலை விதை உற்பத்தி ஒரு குவிண்டாலுக்கு ரூ. 1000 வரையில் மானியம்.

தாழ்த்தப்பட்ட / பழங்குடியினர் 24 சதவிகிதம்
பண்ணை மகளிர் 20 சதவிகிதம்

 

சான்று நிலை விதை விற்பனை விலையில் 50 சதவிகிதம் வரை மானியம் (அ) ரூ. 1200 இரண்டில் குறைவானது எடுத்துக் கொள்ளப்படும்

எண்ணெய் வித்துக்கள்
(எண்ணெய் வித்துக்கள், பயறு வகைகள், ஆயில் பால்ம் மற்றும் சோளத்திற்கான ஒருங்கிணைந்த திட்டம்)
விதைத் துறைக்கு வினியோகம் செய்யப்படும்.

சான்று நிலை மற்றும் ஆதார விதைகளுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ. 1000 மானியம் வழங்கப்படும்.

ஆதார நிலை மற்றும் சான்று நிரை விதைகளை உற்பத்தி செய்து விநியோகிக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.

கிராம அளவில் உள்ள உதவி வேளாண் அலுவலர்.
வட்டார அளவில் வேளாண் அலுவலர் / இணை வேளாண் அலுவலர்.
வட்டார அளவில் வேளாண் துணை இயக்குநர்.
மாவட்ட அளவில் வேளாண் இணை இயக்குநர்.

சான்று நிலை விதைகளை விநியோகித்தல் - விதையின் விலையில் 50 சதவிகிதம் குறைவாகவோ (அ) ஒர குவிண்டாலுக்கு ரூ. 1200 எது குறைவோ அது எடுத்துக் கொள்ளப்படும்.

கன்னியாகுமரி, சென்னை மற்றும் நீலகிரி மாவட்டங்களை தவிர்த்து அனைத்து மாவட்ட எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகள், யாவரும் தகுதி பெற்றவர்.

 

பருத்தி
தீவிர பருத்தி வளர்ச்சித் திட்டம்

ஆதார நிலை பருத்தி விதைகள் உற்பத்தி - இரகங்கள் மற்றும் வீரிய இரகங்களுக்கு ரூ. 5000 ஒரு குவிண்டாலுக்கு மானியம் வழங்கப்படும்.

விதைப் பண்ணையில் பதிவு செய்து விதைப்புத் துறைக்கு விதைகளை அனுப்பும் அனைத்து விவசாயிகளும் மானியம் பெற தகுதியானவர்களாவர்.

கிராம அளவில் உள்ள உதவி வேளாண் அலுவலர்.
வட்டார அளவில் வேளாண் அலுவலர் / இணை வேளாண் அலுவலர்.
வட்டார அளவில் வேளாண் துணை இயக்குநர்.
மாவட்ட அளவில் வேளாண் இணை இயக்குநர்.

சான்று நிலை பருத்தி விதை உற்பத்தி - இரகங்கள் மற்றும் வீரிய இரகங்களுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ. 1500 மானியம் வழங்கப்படும்.

கன்னியாகுமரி, காஞ்சிபுரம், திருவல்லூர், சென்னை மற்றும் நீலகிரி மாவட்டங்களை தவிர்த்து அனைத்து விவசாயிகளும் மானியம் பெற தகுதியானவர்கள்.

 

சான்று நிலை விதைகளை வினியோகித்தல் - இரகங்கள் மற்றும் வீரிய இரகங்களுக்கு 25 சதவிகிதம் சந்தை விலை, அதிக இழை நீளம் கொண்ட பருத்தி இரகங்களுக்கு சந்தை விலையில் 50 சதவிகிதம் வரை ரூ. 2000த்திற்கு மிகாமல்.

தாழ்த்தப்பட்ட / பழங்குடியினருக்கு 25 சதவிகிதம் தொகை (தாழ்த்தப்பட்டவர்கள் 16 சதவிகிதம்
பழங்குடியினருக்கு 8 சதவிகிதம்
பெண் விவசாயிகளுக்கு 30 சதவிகிதம்)

 

பயறு வகைளில் ஊடுபயிர் செய்தல்
விதை விநியோகம் 25 சதவிகிதம்
மானியம் ஒரு கிலோவிற்கு ரூ. 6.50 (அ) ஒரு டன்னுக்கு ரூ. 6,500

 

 

மண் வளத்தை மேம்படுத்த விவசாயிகளுக்கு உதவித் திட்டம் பசுந்தாள் உர விதைகளை உற்பத்தி செய்து விநியோகம் செய்தல்

பசுந்தாள் உர விதைகள் விநியோகம் விதையின் விலையில் 25 சதவிகிதம் மானியம் வழங்கப்படும்.

சென்னை மற்றும் நீலகிரி மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்ட விவசாயிகள் தகுதி உள்ளவர்கள் ஆவர்.

கிராம அளவில் உள்ள உதவி வேளாண் அலுவலர்.
வட்டார அளவில் வேளாண் அலுவலர் / இணை வேளாண் அலுவலர்.
வட்டார அளவில் வேளாண் துணை இயக்குநர்.
மாவட்ட அளவில் வேளாண் இணை இயக்குநர்.

விதைக் கிராமத் திட்டம்

நெல், எண்ணெய்வித்துக்கள் மற்றும் பயறு வகைகள் விவசாயிகளுக்கு 50 சதவிகிதம் மானியத்தில் விநியோகம் செய்யப்படும்.

மாநிலத்தில, விதைப் பண்ணை ஏற்படுத்தி மற்ற விவசாயிகளுக்கு  தரமான விதைகளைத் தரும்  அனைவருக்கும் இதில் தகுதி உண்டு.

கிராம அளவில் உள்ள உதவி வேளாண் அலுவலர்.
வட்டார அளவில் வேளாண் அலுவலர் / இணை வேளாண் அலுவலர்.
வட்டார அளவில் வேளாண் துணை இயக்குநர்.
மாவட்ட அளவில் வேளாண் இணை இயக்குநர்.

தேசிய உணவுப் பொருள் பாதுகாப்பு திட்டப்பணி (நெல்) நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் செயல்படுகிறது.

வீரிய இரக நெல் விதைகள் உற்பத்திக்கு ஊக்கத்தொகை ரூ. 1000 குவிண்டால்

மேற்கூறிய அனைத்து மாவட்ட விவசாயிகள் சிறு / குறு பெண் விவசாயிகளுக்கு 33 சதவிகிதம் ஒதுக்கீடு தாழ்த்தப்பட்ட விவசாயிகளுக்கு 16 சதவிகிதம் மற்றும் பழங்குடியினருக்கு 8 சதவிகிதம் ஒதுக்கீடு ஒரு விவசாயிக்கு 2 எக்டர் வரையில் உதவி வழங்கப்படும்.

கிராம அளவில் உள்ள உதவி வேளாண் அலுவலர்.
வட்டார அளவில் வேளாண் அலுவலர் / இணை வேளாண் அலுவலர்.
வட்டார அளவில் வேளாண் துணை இயக்குநர்.
மாவட்ட அளவில் வேளாண் இணை இயக்குநர்.

வீரிய இரக நெல் விதை விநியோகத்திற்கு மானியம் ரூ. 2000 குவிண்டால்

 

அதிக விளைச்சல் தரும் நெல் விதைகளை விநியோகம் செய்ய ரூ. 500 குவிண்டால்

கிராம அளவில் உள்ள உதவி வேளாண் அலுவலர்.
வட்டார அளவில் வேளாண் அலுவலர் / இணை வேளாண் அலுவலர்.
வட்டார அளவில் வேளாண் துணை இயக்குநர்.
மாவட்ட அளவில் வேளாண் இணை இயக்குநர்.

தேசிய உணவுப் பொருள் பாதுகாப்பு திட்டப்பணி (பயறு வகைகள்) கோயமுத்தூர், கடலூர், நாகப்பட்டினம், நாமக்கல், திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் செயல்படுகிறது.

ஆதார நிலை மற்றும் சான்று நிலை விதை உற்பத்திக்கு
ரூ. 1000 / குவிண்டால்

மேற்கூறிய அனைத்து மாவட்ட விவசாயிகள் சிறு / குறு பெண் விவசாயிகளுக்கு 33 சதவிகிதம் ஒதுக்கீடு தாழ்த்தப்பட்ட விவசாயிகளுக்கு 16 சதவிகிதம் மற்றும் பழங்குடியினருக்கு 8 சதவிகிதம் ஒதுக்கீடு ஒரு விவசாயிக்கு 2 எக்டர் வரையில் உதவி வழங்கப்படும்.

கிராம அளவில் உள்ள உதவி வேளாண் அலுவலர்.
வட்டார அளவில் வேளாண் அலுவலர் / இணை வேளாண் அலுவலர்.
வட்டார அளவில் வேளாண் துணை இயக்குநர்.
மாவட்ட அளவில் வேளாண் இணை இயக்குநர்.

சான்று விதைகள் விநியோகம்
@ 50 சதவிகிதம் விலையில் (அ)
ரூ. 1200 / குவிண்டால்

மேற்கூறிய அனைத்து மாவட்ட விவசாயிகள் சிறு / குறு பெண் விவசாயிகளுக்கு 33 சதவிகிதம் ஒதுக்கீடு தாழ்த்தப்பட்ட விவசாயிகளுக்கு 16 சதவிகிதம் மற்றும் பழங்குடியினருக்கு 8 சதவிகிதம் ஒதுக்கீடு ஒரு விவசாயிக்கு 2 எக்டர் வரையில் உதவி வழங்கப்படும்.

தகவலுக்கு
பேராசிரிய மற்றும் தலைவர்
விதை மையம்
தமழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
கோயமுத்தூர்-641003.
தொலைபேசி எண்:0422-661232.
மின்னஞ்சல்: seedunit@tnau.ac.in

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015.

Fodder Cholam