Seed Certification
பீர்க்கன் காய்

பீர்க்கன் காய் விதை உற்பத்தி தொழில் நுட்பங்கள்



பீர்க்கன் காய் அதிக அளவில் தென் மற்றும் கிழக்கு மாநிலங்களில் பயிரிடப்படுகின்றது. இதனில் வைட்டமின் ்A், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் ஆகிய சத்துகள் மிகுதியாக உள்ளன. அதிக பரப்பளவில் இது பயிரிடப்படாததற்கு தரமான விதைகள் இல்லாததே காரணமாகும். பீர்க்கனில் காயிலிருந்து விதை உற்பத்தி 13 - 14% ஆகும்.

வயல் தேர்வு

விதை உற்பத்தியாளரின் முதன்மையான முயற்சி வயல் தேர்வே ஆகும். விதை உற்பத்தி செய்யும் வயலை தேர்வு செய்வதில் மிகுந்த கவனம் தேவை. முந்தைய பருவ காலத்தின் பீர்க்கன் காய் பயிரிடப்படாத நிலத்தை தேர்வு செய்ய வேண்டும். இதனால் தான் தோன்றிய பயிர்கள் முளைப்பதை தடுக்கலாம்.

மண்ணின் கார அமிலத் தன்மை நடுநிலையில் இருக்க வேண்டும். வண்டல் மண் அல்லது களிமண் கலந்த வண்டல் மண்ணை தேர்வு செய்ய வேண்டும்.

J தான்தோன்றி பயிர்கள் என்றால் என்ன?
       
வயலில் உள்ள மண்களில் கலந்துள்ள விதைகளிலிருந்து முளைக்கும் பயிர்களே தான்தோன்றி பயிர்களாகும். இவ்விதைகள் முந்தைய கால பருவ பயிர்களில் இருந்து கீழே விழுந்தவை ஆகும். விதைக்காமல் தானகவே முளைத்து வளரக்கூடியவை என்பதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றது.

இனக் கலப்பினை தவிர்த்தல்

பிற மகரந்த சேர்க்கையினால் நேரும் இனக் கலப்பினை தடுக்க பயிர் விலகு தூரம் மிகவும் அவசியம். விதைப் பயிரினை தனித்து விட வேண்டும்.

விதைப்பயிரிகளை கலப்பு நேரக்குடிய பயிர் இரகங்களிந்து விலக்கி தனித்து பயிரிடுவது “பயிர் விலக்குதல் “ என்றழைக்கப்படுகிறது. பீர்க்கனில் ஒரு பால் பூக்கள் உள்ளதபல் பிற மகரந்த சேர்க்கை அதிக அளவில் நடைபெறும். ஆதலால் இதற்கு 500மீ பயிர் விலகு தூரம் அளித்து பயிரிட வேண்டும்.

பயிரிடும் காலம்

விதைகள் சுற்றுப்புற சூழ்நிலையால் மிகவும் பாதிப்படையும் வாய்ப்புண்டு. ஆதலால் சரியான பருவ காலத்தினை தேர்வு செய்தல் அவசியம். வருடம் முழுவதும் பீர்க்கனை பயிரிடலாம், என்றாலும், விதை முதிர்ச்சி அடையும் காலம் குளிர்ந்த வறண்ட நிலையாக இருப்பது உகந்ததாகும். இதனால் காய்கள் நன்கு பழுப்பதற்கும், நோய் மற்றும் பூச்சி தாக்குதல் குறைவதற்கும் ஏதுவாகும். தமிழ்நாட்டில் விதைப்பதற்கு ஏற்ற பருவம் ஆடி பட்டம் (ஜீன் - ஜீலை) மற்றும்’ தைப்பட்டம் (ஜனவி - பிப்) ஆகும்.

விதை தேர்வு

“நல்ல தொடக்கம் பாதி வேலையை முடித்தது போன்றது” என்ற கூற்றிற்கு ஏற்ப, நல்ல வீரியமுள்ள விதைகளை தேர்வு செய்வது, வீரியமுள்ள நாற்றுகளை அளிப்பதுடன் தரமான விதை உற்பத்திற்கும் வழி வகுக்கும். வீரியமான நாற்றுகளை நடுவதால் பூச்சி மற்றும் நோய் எதழர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், நடவு வயலில் இடக்கூடிய உரங்களையும் நல்ல முறையில் எடுத்துக் கொள்ளும். ஒரு வருடத்திற்கு மேல் சேமித்த விதைகளை பயிரிடாமல் கவனமாக இருத்தல் வேண்டும்.

தரமான விதை உற்பத்தியின் முதல் படி விதைத் தேர்வே ஆகும். விதை உற்பத்தி செய்யப்படும் இரகத்தின் இனத்தூய்மை கொண்ட விதைகளை தேர்வு செய்தல் அவசியமாகும். தெரிந்த இடத்திலிருந்தே விதைகளை பெற வேண்டும். அதாவது விதையினை விதை பெருக்கம் செய்யும் நிறுவனங்கள் / பல்கலைக்கழக  ஆராய்ச்சி நிலையங்கள் (அ) வல்லுநர்கள் ஆகியோரிடமிருந்து பெறவேண்டும். விதையில் தேவையான, வல்லுநர் சான்றட்டை (ஆதார விதை உற்பத்திற்கு), ஆதார சான்றட்டை (சான்று விதை உற்பத்திற்கு) ஆகியவை இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும் விதைகள் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் அற்றதாக இருக்க வேண்டும். அழுகிய, நிறம் குறைந்த, கரும் புள்ளிகளுடைய விதைகளை களைந்து விட வேண்டும். ஒருமித்த அளவு மற்றும் அமைப்புடன் கூடிய விதைகளையே தேர்வு செய்ய வேண்டும்.

நடவு வயல் தயாரித்தல் மற்றும் விதைத்தல்

வயலினை நன்கு உழுத பின்னர், 45 செ.மீ, நீளம் அகளம் மற்றும் உயரம் கொண்ட குழிகளை 2.5 x 2மீ இடைவளியில் தோண்டி எடுக்க வேண்டும். 10 நாட்களுக்கு பிறகு ஒரு குழிக்கு 10 கிலோ தொழு உரம், 20 கி யூரியா, 90கி சூப்பர் பாஸ்பேட் மற்றும் 15கி பொட்டாஷ் இடவேண்டும். இந்த உரங்களை குழியினுள் நன்கு கலந்து, மூடி சமன் செய்ய வேண்டும்.பீர்க்கன் செடி படரும் தன்மை கொண்டுள்ளதால், 2ம் உயரத்தில் பந்தல் நிறுவ வேண்டும். இதனால் பயிர் வளர்ச்சி மற்றும் மகசூல் ஆகியவை பெருகுவதுடன் கலவன் அகற்றுதலும் சுலபமாக இருக்கும்.

விதைத்தல்

1கிலோ / ஏக்கர் என்ற அளவில் விதைகளை பூஞ்சாணக் கொல்லியல் நேர்த்தி செய்து தயார் செய்து, ஒரு குழியில் 5 விதைகள் வீதம் விதைக்க வேண்டும்.

நீர் நிர்வாகம்

விதைத்த உடன் பூவாளி கொண்டு நீர் உளற்ற வேண்டும். அப்படி செய்யும் பொழுது மண் அரிப்பு ஏற்படாமலும், விதைகள் வெளியல் தெரிக்காமலும் இருப்பதில் கவனமாக இருக்க வேண்டும். நாற்றுகள் முளைத்த பின் வாரம் ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.

நடவு வயல் நிர்வாகம்

நாற்றுகள் முளைத்து 10 நாட்களுக்கு பின்னர், 3 வீரியமான நாற்றுகளைவைத்துக் கொண்டு இரண்டினை களைய வேண்டும். இதனால் நாற்றுகள் செழித்து வளரும். விதைத்த 20 - 25 நாட்களுக்கு பிறகு, ஒவ்வோர் செடியையும் ஒரு ஊன்று கோலுடன் இணைந்து பந்தலுக்கு ஏற்றுதல் வேண்டும். பந்தலில் படருவதற்கு ஊற்ற நிர்வாக முறையை காய்க்கும் வரையில் செய்ய வேண்டும்.

களை கட்டுப்பாடு

பயிர்கள் நன்கு செழித்து வளர, களைகள் அல்லாத நிலம் அவசியமாகும். பூக்கும் முன்னர் உன்று (அ) இரண்டு கைக்களை எடுத்தல் அவசியமாகும்.

பயிர் ஊக்கிகள் தெளித்தல்

பீர்க்கன் போன்ற காய்கறி செடிகள், ஆண் மற்றும் பெண் பூக்கள் தனித்து பலரும் தன்மை கொண்டவை. பெண் பூக்களின் எண்ணிக்கை கொண்டே காயின் மகசூல் இருக்கும். எத்ரல் என்ற பயிர் வளர்ச்சி ஊக்கியை 250 பிபிஎம் (250 மி.லி. + 10 லிட்டர் நீர்) என்ற அளவில் விதைத்த 15 - ம் நாள் முதல் வாரம் ஒரு முறை வீதம், மொத்தம் 4 முறை தெளிக்க வேண்டும். இதனால் காய்பிடிப்பு அதிகரிக்கும்.

மேலுரம்

காய்கறி பயிரினை காட்டிலும் விதைப் பயிரினை வேறுவிதமாக கையாள வேண்டும். ஆதலால் உரங்களை 2 / 3 முறையில் பிரித்து இடவேண்டும். பூக்கும் தருணத்தில் ஒரு குழிக்கு 22 கிராம் யூரியாவும், பூத்தபின் 20 மற்றும் 40 - வது நாளில் ஒரு குழிக்கு 18 கிராம் யூரியா + 5 கிராம் பொட்டாஷ் இடவேண்டும். இதனால் காய்பிடிப்பு அதிகமாவதுடன், மகசூல் அதிகரித்து விதை உற்பத்தியும் அதிகரிக்கும்.

பயிர் பாதுகாப்பு

பயிரின் ஆரோக்கியம் மிகவும் அவசியம் என்பதால் வருமுன் காக்கும் பயிர் பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும்.

இலை வெட்டும் வண்டு, காய்துளைப்பான் மற்றும் பழ ஈ ஆகியவற்றினை கட்டுப்படுத்த மாலத்தியான் 50 ஈசி 1 மி.லி. (அ) டைமெத்தோயேட் 30 ஈசி 1 மி.லி (அ) பென்தியான் 100 ஈசி 1மி.லி / லிட்டர் நீர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.

சாம்பல் நோய் கார்பென்டசிம் 0.5 கிராம் (அ) டினோகாப் 1 மி.லி / லிட்டர் நீர் தெளிக்க வேண்டும்.

கலவன் அகற்றுதல்

விதை உற்பத்தியின் ஒரு முக்கிய பணி கலவன் அகற்றுதல் ஆகும். “கலவன் என்பது முக்கிய பயிர் இரகத்தின் தன்மைகளை மாறுபட்டு கொண்டிருக்கும்” ஒரு செடியாகும். கலவன் பயிர்கள் வயலில் இருந்தால் முக்கிய பயிரின் இனத் தூய்மையை குறைப்பதுடன் கிடைக்கும். விதையின் தரத்தையும் குறைத்துவிடும். கலவன் ஆற்றும் பணியே கலவின் அகற்றுதல் என்றழைக்கப்படுகின்றது. பொதுவாக வைரஸ் தாக்கதல் உள்ள செடிகளையும் இப்பணியின் மூலம் களைதல் வேண்டும்.

கலவன்களை எப்பொழுது அகற்ற வேண்டும் ?

பூக்கும் முன்னர் கலவின் அகற்றுதல் சிறந்ததாகும். ஏனெனில் பூத்தபின் பிற மகரந்த சேர்க்கைக்கான வாய்ப்புகள் அதிகம். செடிகளில் இலை விடும் காலம், காய்ப்பிடிப்பு தருணம் மற்றம் அறுவடைக்கு முன்னரும் கலவன் அகற்றுதல் வேண்டும்.

இலைவிடும் தருணத்தில் கலவன் அகற்றுதல்

முதல் 30 - 35 நாட்களில் இலை துளிர்க்கும் பருவத்தில், செடிகளின் உயரம், இலை அமைப்பு, அளவு மற்றும் மேற்புர தன்மை ஆகியவற்றை கொண்டு கலவன் அகற்றுதல் வேண்டும். அதிக பக்க கிளைகள் கொண்டும், அதிகமாக படரும் செடிகளும் அகற்றுதல் வேண்டும். செடியின் தண்டு மற்றும் இலைகளின் நிறங்களில் மாற்றம் இருந்தாலம் செடிகளை களைய வேண்டும். மஞ்சள் தேமல் நோயின் அறிகுறி கொண்ட செடிகளையும் அகற்ற வேண்டும்.

காய்பிடிப்பின் பொழுது கலவன் அகற்றுதல்

காயின் நிளம், அளவு, அமைப்பு மற்றும் நிறம் ஆகிளவற்றை கொண்டு கலவன் அகற்ற வேண்டும்.

காய் அறுவடையின் பொழுது கலவன் அகற்றுதல்

அறுவடைக்கு முன்னர் காயின் நிறம் மற்றும் பூச்சி, நோய் தாக்குதலை கொண்டு கலவன் அகற்ற வேண்டும். அறுவடையின் போது கிருமி தபக்குதல் கொண்ட காய்களை பரித்து, நல்ல காய்களையே விதை எடுக்க அனுப்ப வேண்டும்.


எச்சரிக்கை
அனைத்து கலவன்களையும் விதை நிலங்களிலிருந்து உடனடியாக அகற்றிய பின்னர் அழித்துவிட வேண்டும்.

 
அறுவடை


காய்கள் பழுத்த பின்னர் பழுப்பு நிறமாக மாறும் தருணமே பிர்க்கன் விதைப்பயிரிற்காக அறுவடை செய்ய வேண்டிய தக்க தருணம் ஆகும். இந்த நிலையில் தான் விதைகள் அதிக வீரியம் மற்றும் முளைப்புத்தன்மை கொண்டிருக்கும். காய்களின் விளிம்பில் மயிரிழை போன்ற விரிசல் ஏற்படும் பொமுது தாமதமின்றி அறுவடை செய்ய வேண்டும்.

அறுவடை பல சமயங்களில் செய்யப்படுவதால் முதல் மற்றும் இறுதி இரண்டு அறுவடைகள் காய்கறி பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளலாம்.

விதை உபயோகத்திற்கு காய்கள் முற்றிய பின்னர் 7 - 10 நாட்களில் அறுவடை செய்யலாம். இந்தப் பருவத்தில் விதைகள் முற்றும் நிலை அடைந்திருக்கும். காய்களும் பழுப்பு நிறமாக மாறியிருக்கும். அறுவடைக்கு பின்னர் காய’களை 1 (அ) 2 நாட்களுக்கு உலர்த்துவதால் விதை எடுப்பது சுலபமாக இருக்கும். இனத்தூய்மை பெற்ற நடுத்தரமான மற்றும் பெரிய அளவிளான காய்களே விதைகள் எடுக்க தேர்வு செய்ய வேண்டும். இதனால் விதைகளின் தரம், மகசூல் மற்றும் விதை மீட்பு அளவு ஆகியவை அதிகரிக்கும்.

விதை சுத்திகரிப்பு

காய் அறுவடைக்கு பின்னரும் விதைகள் எடுக்கும் முன்னரும், நோய் மற்றும் பூச்சி தாக்குதல் அற்ற காய்களையே விதைகள் எடுக்க தேர்வு செய்ய வேண்டும்.

சிறிய மற்றும் பிற இரக காய்களை அகற்றுதல்

விதை எடுக்கும் முறை


தேர்வு செய்யப்பட்ட காய்களை ஓரிரு நாட்களுக்கு உலர்த்த வேண்டும். பீர்க்கனில் விதை எடுப்பது சுலபமாகும். காய்களை வெட்டி அதன் நுனிப்பகுதியில் துவாரமிட்டு விதைகளை சுலபமாக பிரித்தெடுக்கலாம். பிரித்தெடுத்த விதைகளின் வெள்ளை மற்றும் வெளிர் மஞ்சள் நிறம் கொண்ட முழுமையடையாத விதைகளை கைகளால் களைந்து முன் - தூய்மை செய்யவேண்டும்.

விதை எடுத்தல்

         


இதற்கு பின்னர் விதைகளை 16/64” வட்டமான உலோக சல்லடை (அ) பிஎஸ்எஸ் 4 கம்பிவலை சல்லடை கொண்டு சலித்து சுத்திகரிப்பு செய்ய வேண்டும்.

முழுமையடையாத விதைகள்

ஈரப்பதத்தை குறைப்பதற்காக உலர்த்துதல்

மேல் கூறிய முறையில் எடுக்கப்பட்ட விதைகளில் 12 - 13% ஈரப்பதம் இருக்கமாதலால் சேமிக்கும் முன்னர் அவற்றை உலர்த்த வேண்டும். விதைகளை தார்ப்பாலின் மேல் பரப்பி 8 - 10 மணிநேரம் பகுதி நிழலில் உலர்த்த வேண்டும். இதன் பின் காலை 8 - 12 மணி மற்றும் மாலை 3 - 5 மணிக்குள் வெயிலில் ஊலர்த்த வேண்டும். மதியம் 12 - 3 மணி வரை புற ஊதாக் கதிர்கள் தாக்குதல் இருக்கும் என்பதால் அச்சமயம் உலர்த்துதல் கூடாது.

விதை தூய்மை படுத்துதல் மற்றும் சுத்திகரிப்பு

நன்கு உலர்த்திய பின்னர் விதைகளை அதிகரிப்பு செய்ய வேண்டும். முழுமையடையாத மற்றும் சிறிய விதைகளை களைந்தெதுப்பதால், விதையின் வீரியம் மற்றும் முளைப்புத்திறன் ஆகியவற்றை மேம்படுத்தலாம். பீர்க்கன் காயின் சுத்திகரிப்பிற்கு பி.எஸ்.எஸ் - 4 கம்பி வலை சல்லடை உபயோகிக்க வேண்டும். சலித்த பின்னர், உடைந்த விதைகள், பூஞ்சாண் தாக்கப்பட்ட மற்றும் விதையுறை சேதமடைந்த விதைகள் ஆகியவற்றை அகற்றுதல் வேண்டும்.

எச்சரிக்கை
கம்பி வலை சல்லடை (அ) வட்ட துவாரமுள்ள சல்லடைகளை உபயோகிக்கும் பொழுது சல்லடைகளை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். முன்னர் சலித்த பயிர் விதைகள் அவற்றில் தங்கியிருந்தால் விதைக் கலப்படம் ஏற்படும் வாய்ப்புண்டு. பொதுவாக விதைகள் சல்லடைகளின் துவாரங்களில் சிக்கிக் கொள்ளும் என்பதால் சலிக்கும் முன்னர் அவற்றை அகற்றி தூய்மைபடுதடத வேண்டும்.

சேமிக்கும் பொழுது விதைகளை பாதுகாத்தல்

விதை உற்பத்தியின் ஒரு பகுதி தரமான விதைகளை உற்பத்தி செய்வதே ஆகும். மீதிப் பகுதி அதனை நல்ல முறையில் சேமித்து வயலில் விதைக்கும் வரை அதன் தரம் கெடாமல் பாதுகாப்பதே ஆகும். விதையின் சேமிப்பு காலத்தை உயர்த்தும் முக்கிய காரணிகள், அதன் தரப்பதம், விதை நேர்த்தி, சேமிப்பின் பொழுது திருத்தப்படும் சூழ்நிலைகள் மற்றும் சேமிக்கும் கொள்கலன்கள் ஆகியவை ஆகும்.

விதை ஈரப்பதம்

விதை சேமிப்பு காலத்தை நிர்ணயம் செய்யும் ஒரு முக்கிய காரணி விதை ஈரப்பதமே ஆகும். விதையின் ஈரப்பதம் குறைவாக இருப்பது அதன் சேமிப்பு காலத்தை அதிகரிக்கும். 6 - 7 சதவீத ஈரப்பதம் சிறிய காலசேமிப்பிற்கும், 6 சதவீத ஈரப்பதம் நீண்டகால சேமிப்பிற்கும் உதவும். இப்படி சேமிக்கும் பொழுது, விதைகளை ஈரம் புகா பாலிதீன் பைகளில் (700 காஜீ அடர்த்தி) அடைந்து சேமிக்க வேண்டும்.

விதை நேர்த்தி

சேமிக்கும் பொழுது விதைகளை பூஞ்சாணக் கொல்லி நேர்த்தி செய்ய வேண்டும். கார்பென்டசிம் - 4 கிராம் / கிலோ விதைகள் என்ற அளவில் நேர்த்தி செய்ய வேண்டும். “ஹாலஜன் நேர்த்தி” என்ற புதிய முறைகளும் தற்போது உபயோகப் படுத்தப்படுகிறது. “ப்ளீசிங் பவுடர்” என்று வணிகமுறையில் அழைக்கப்படும் கால்சியம் - ஆக்ஸி     - க்ளோரைடு மற்றும் கால்சியம் கார்பனேட் (சுண்ணாம்பு கல்) ஆகியவற்றை சம அளவில் கலந்து 5 கிராம் / கிலோ விதை என்றளவில் நேர்த்தி செய்து சேமிக்கலாம்.

விதை சேமிப்பு கொள்கலன்

விதை நேர்த்திக்கு பின்னர் உள்ள முக்கிய பணி விதை சேமிப்பு கொள்கலனாகும். ஈரம் புகம் மற்றும் ஈரம் புகா கொள்கலன்கள் என்று இரு வகைகளாக பிரிக்கலாம். துணி, காகித மற்றும் சாக்குப் பைகள் போன்றவை ஈரம் புகும் வகைகளாகும். ஏனெனில் இவற்றில் வெளிப்புற ஈரப்பதமானது சுலபமாக உள்கொண்நு வெளி வரும். ஆதலில் விதைகள் தேவையான ஈரப்பதத்திற்கு உலர்த்தப்பட்டாலும், ஈரமான சூழலில் சேமிக்கும் பொழுது, விதைகள் ஈரத்தை இழுத்துக் கொண்டு வீரியத்தன்மையை இழந்நுவிடுகின்றன. எனவே, ஈரம்புகும் பைகளில் சேமிக்கும் பொழுது வெளிப்புற ஈரப்பதம் குறைவாக இருப்பதில் கவனம் தேவை. தமிழ்நாட்டின் பல மாதங்கள், அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதத்துடன் இருப்பதால், விதைகளை உலர்த்தல் பின்னர், ஈரம் புகாத அடர்த்தியான பாலிதீன் பைகளில் (700 காஜ்) (அ) டின் / ப்ளாஸ்டிக் கொள்கலனில் நன்கு அடைத்து சேமிப்பதே பாதுகாப்பான முறையாகும். குறைந்த கால சேமிப்பான 4 - 6 மாதங்கள் வரையில் துணி (அ) சாக்குப் பைகள் போதுமானது.

விதை சான்றிதழ்

விதை சான்றிதழ் சான்று விதையின் இன, புற, வினையியல் மற்றும் விதை ஆரோக்கிய தரங்களுக்கு உத்திரவாதம் அளிப்பதாகும். இனத்தூய்மை என்பது விதையிலிருந்து வளரும் செடி அந்த இரகத்தின் தன்மையை உறுதி செய்வதற்காக இருக்க வேண்டும். புறத்தூய்மை என்பது, விதைகள் கல், உடைத்த விதைகள், வைக்கோல், துண்டுகள், மற்றும் இலைத்துண்டுகள் ஆகியவை இருக்கக்கூடாது. வினையியல் முதிர்ச்சி என்பது முளைப்புத்திறன், நோய் மற்றும் பூச்சிகளின் தாக்குதல் இல்லாமை ஆகியவற்றை உறுதி செய்கின்றது.

விதை சான்றிதழ் என்பது பல்வேறு நிலைகளில் செய்ல் படுகின்றது. ஆதாரப்பூர்வமானவரிடமிருந்து விதை வாங்கியது முதல், பயிர்விலகு தூரம் மற்றும் பயிர்வளர்ச்சி, பூக்கம் தருணம், அறுவடை சுத்திகரிப்பு மற்றும் பையிரிடுதல் ஆகிய விலைகளில் ஆய்வு செய்வது வரையில் தொடரும். மேலும் விதைக்குவியல்களில் இருந்து பெற்ற விதை மாதிரிகளை விதையின் இனத்தூய்மை, பறத்தூய்மை மற்றும் முளைப்புத்திறன் ஆகியவற்றின் ஆய்விற்காக பின்னர் சான்றட்டை வழங்கப்படும். சான்று விதையின் அட்டை நிறம் நீலம்.

வயல் தரம் மற்றும் விதை தரங்களை உறுதி செய்யும் விதைகளுக்கு மட்டும் சான்றிதழ் வழங்கப்படும். இவ்விதைகள் விற்பனைக்கு ஏற்றதாகும். மேலும் விபரங்களுக்கு அருகிலுள்ள விதை சான்று அலுவலகங்களை அணுகவும்.

சான்று விதையின் குறைந்தபட்ச தரங்கள்

வயல் தரங்கள்:

 

கலவன் (அதிகபட்சம்)

0.2%

விதை தரங்கள்:

 

தூய விதைகள் (குறைந்தபட்சம்)

98.0%

தூசுகள் (அதிகபட்சம்)

2.0%

பிற பயிர் விதைகள் (அதிகபட்சம்)

எதுவுமில்லை

களை விதைகள் (அதிகபட்சம்)

எதுவுமில்லை

முளைப்புத்திறன் (குறைந்தபட்சம்)

60%

ஈரப்பதம்:

 

ஈரம் புகாத பைகள்

7.0%

ஈரம் புகும் பைகள்

8.0%

தகவலுக்கு
பேராசிரிய மற்றும் தலைவர்,
விதை மையம்
தமழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
கோயமுத்தூர்-641003.
தொலைபேசி எண்:0422-661232.

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016.

Fodder Cholam