Seed Certification
விதைச் சான்று :: ஆய்வு

வயலாய்வு

இனத்தூய்மை மற்றும் விதை நலத்தைப் பாதிக்கக்கூடிய காரணிகளை கண்டறிவதே வயலாய்வின் முக்கிய நோக்கமாகும்.

வயலாய்வு மேற்கொள்ளப்படும் பயிர்களின் பல்வேறு நிலைகள்

செடிகளின் வளர்ச்சி நிலைகளைப் பொறுத்து வயலாய்வுகள் எண்ணிக்கை ஒவ்வொரு பயிர்களுக்கும் மாறுபடுகிறது.

  1. பூக்கும் தருணத்திற்கு முன்
  2. பூக்கும் தருணத்தில்
  3. பூக்கும் தருணத்திற்கு பின் மற்றும் அறுவடைக்கு முன்
  4. அறுவடைக் காலத்தில்

மகசூல் கணிப்பு

விதைச்சான்று அலுவலர் தன்னுடைய இறுதி ஆய்வின் போது அறுவடை காலத்தில் தவறுதல் ஏதேனும் நடக்காமல் தடுக்க மகசூல் கணிப்பு மேற்கொள்ளப்பட்டு அறுவடை செய்ய அனுமதிக்கப்படும்.

மறுத்தொதுக்கு பரிந்துரை அறிக்கை

வயல்தரத்தில் ஏதேனும் ஒரு காரணிகள் அனுமதிக்கப்பட்ட அளவை பூர்த்தி செய்யவில்லையென்றால் விதைச்சான்று அலுவலர் உற்பத்தியாளர் கையொப்பமிட்ட மறுத்தொதுக்கு அறிக்கை ஒன்றை தயார் செய்து 24 மணி நேரத்திற்கும் விதைச்சான்று துணை இயக்குனருக்கு அனுப்ப வேண்டும்.

மறு ஆய்வு

தன்மகரந்தச் சேர்க்கை பயிர்களுக்கு மட்டும் தள்ளுபடி செய்யப்பட்ட விதைப்பண்ணைக்கு மறு ஓய்விற்கு விதைச்சான்று அலுவலர் ஆய்வு செய்த 7 நாட்களுக்குள் 50 சத வயல் ஆய்வுக் கட்டணம் செலுத்தி விதைச் சான்று துணை இயக்குநருக்கு உரிய வழியாக விண்ணப்பிக்க வேண்டும். மொத்தத்தில் இரு மறு ஆய்வுகள் அனுமதிக்கப்படும்.

அறுவடைக்குப்பின் ஆய்வு
சுத்த அறிக்கை பெறுதல்:

  1. அறுவடை ஆய்வு தேதியிலிருந்து 3 மாதங்களுக்குள் கொள்முதல் செய்து சுத்த நிலையத்தில் இருப்பு வைக்கப்பட வேண்டும். அறுவடை முடிந்ததும் நன்கு உலர வைத்து, முன் சுத்தி செய்து கள விதைகளை இருப்பு வைக்க வேண்டும்.
  2. சுத்தி அறிக்கை கோரும் விண்ணப்பம் 2 நகல்களில் உரிய விதைச்சான்று அலுவலருக்கு விண்ணப்பிக்கப்பட வேண்டும்.
  3. விதைக் குவியல் சீல் செய்த விபரத்தினை விதைச்சான்று அலுவலர் ஒரு நகலில் குறிப்பிட்டு அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
  4. நெல் குவியல்கள் சீல் செய்யும் போது விதைச்சான்று அலுவலர் பிற இரக கலப்பு ஆய்வு செய்து, அதில் 1% க்கு மிகும் விதைக்குவியல்களை தொடர்சான்றுப் பணியினைத் தவிர்க்க உற்பத்தியாளருக்கு தெரிவிப்பார்.
  5. உற்பத்தியாளர் மறுப்பு தெரிவிக்கும் பொழுது ஒரு விதை மாதிரி எடுக்கப்பட்டு விதைப் பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி பரிசோதனை செய்யலாம். தேறாத குவியல் தள்ளுபடி செய்யப்படும்.

விதை சுத்திகரிப்பு பணி

  1. வயல் மட்ட விதைகள், சுத்திகரிப்பு நிலையத்தில் பெறப்பட்ட தேதியில் இருந்து 3 மாதங்களுக்குள் சுத்தி பணியினை முடித்து விதை மாதிரி எடுக்கப்பட வேண்டும். தாமதம் ஏற்பட்டால் தாமதக் கட்டணம் செலுத்தி விதைச்சான்று உதவி இயக்குனரிடம் அனுமதி பெற வேண்டும்.
  2. விதைத் தரத்தை அறிய மாதிரிகளை விதை பரிசோதனை நிலையத்திற்கு விதைச் சான்று உதவி இயக்குநர் மூலமாக அனுப்ப வேண்டும். இதற்குரிய கட்டணத்தொகையை (å.15) விதைப்பண்ணை பதிவு செய்யும்பொழுதே செலுத்தப்பட வேண்டும்.

விதைமாதிரி எடுத்தல் மற்றும் ஆய்வு மேற்கொள்ளுதல்

ஒவ்வொரு குவியல்களிலிருந்தும் எடுத்த விதை மாதிரிகளை விதைச்சான்று உதவி இயக்குநர் விதைச் சான்று இயக்குநருக்கு அனுப்பப்படுவர்.  விதைகளின் இனத்தூய்மையை கண்டறிய உற்பத்தியாளரிடமிருந்து கட்டணம் å.200ஐ விதைச்சான்று உதவி இயக்குநர் வசூலிக்கப்படுவார்.

நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச விதைத்தரத்தில் தேறிய விதைக் குவியல்களுக்கு மட்டும் சான்றட்டை பொருத்த அனுமதி வழங்கப்படும். ஆதார நிலை விதைக்கு வெள்ளை அட்டையும், சான்று விதைக்கு நீல நிற அட்டையும் åபாய் 3 மற்றம் å.2/- முறையே விதைச்சான்ற உதவி இயக்குநரிடம் செலுத்திப் பெற வேண்டும்.

காலக்கெடு நிர்ணயம் (Vaidity Period)

1. பொதுவாக உரிய காலத்தில் பணி முடித்து தேர்ச்சிபெறும் குவியல்களுக்கு 9 மாதங்கள் காலக்கெடு நிர்ணயிக்கப்படும்.
2. காலக்கெடு முடிந்து சிறப்பு அனுமதி பெற்று தொடர் சான்றுப் பணி மேற்கொண்ட குவியல்களுக்கு அறுவடை ஆய்வு தேதியிலிருந்து 15 மாதங்கள் அல்லது பகுப்பாய்வு தேதியிலிருந்து குறைந்தபட்சம் 6 மாதங்கள் வழங்கப்படும்.

சான்றட்டை பொருத்துதல்

  1. தேர்ச்சி பெற்ற குவியல்களுக்கு பகுப்பாய்வு தேதியிலிருந்து 2 மாதங்கள் அல்லது இனத்தூய்மை பரிசோதனை தேதியிலிருந்து 1 மாதத்திற்குள் சான்றட்டை பொருத்தப்பட வேண்டும்.
  2. நீலநிற சான்றட்டைகளில் எண்ணிக்கை 50-க்கு மேல் இருந்தாலும் வெள்ளை நிற சான்றட்டை 1 இருந்தாலும் கண்டிப்பாக அச்சிடப்பட வேண்டும்.
  3. சான்றட்டைகளின்  ஒரு முறைக்கு மேல் தைப்பதை கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும்.
  4. சான்றட்டை பொருத்தும்போது 15X10 செ.மீ அளவுள்ள ஓபர் பச்சை நிற உற்பத்தியாளர் அட்டையும் பொருத்தப்பட வேண்டும்.
  5. உரிய காலத்திற்குள் சான்றட்டை பொருத்த இயலாத நிலையில் சிறப்பு அனுமதி பெற்று உறுதியாக்க மாதிரி எடுத்துத் தேறினால் முதல் பகுப்பாய்வு நாளிலிருந்து காலக்கெடு வழங்கி சான்றட்டை பொருத்தப்படும். தாமதக் கட்டணம் å.50/ம் விதைப் பரிசோதனை கட்டணம் å.30/ம் செலுத்த வேண்டும்.
Updated on: Feb, 2016
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016.

Fodder Cholam